நாளை மற்றுமொரு நாளே...

>> வியாழன், 19 ஜூலை, 2012



நாளை மற்றுமொரு நாளே....


              இருபதாம் நூற்றான்டின் தொடக்கத்தில் உலகம் தொழிற்சாலை,வருமானம் என்று ஓடிக்கொண்டிருந்தது.விளைவு  உலகத்தின் முக்கிய பிரச்சனையாக சுற்றுச்சூழல்.வனம் அழிந்தால் மனித இனம் அழியும் என்று புரிந்துகொண்டது உலகம்.வளர்ந்த நாடுகள்  வனத்தை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன.
             இயற்கையை வணங்கியும்,வனவிலங்குகளை தெய்வங்களாகவும் போற்றும் கலாச்சாரம்  நம்முடையது.இயற்கைக்கு விழா எடுத்து நன்றி சொன்ன தலைமுறை, இத்தகைய  வனச் செல்வங்களை காப்பாற்றினோமா என்றால் கேள்வி மட்டுமே பதிலாய் இருக்கிறது.

மனித இனத்திற்கு அடிப்படை உயிர் வாயு ஆக்சிஜன்.அதற்கு முக்கிய ஆதாரமான மேற்கு மலைத்தொடர் நாம் பெற்ற அரிய செல்வம்.இம் மலைத்தொடர் குசராத் மாநிலத்தின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே தொடங்கி கோவா, கர்நாடகம்,தமிழ்நாடு,கேரளா வழியாக சென்று கன்னியாகுமரியில் முடிவுருகிறது. நீளம் 1600 கி.மீ.பரப்பளவு 60,000 சதுர கி.மீ. இம்மலைத்தொடர் தனித்துவம் வாய்ந்தது.இமயமலையை விட வயதில் மூத்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதில் 5000 வகை பூக்கும் தாவரங்களும்,139 வகை பாலூட்டிகளும்,508 வகை பறவைகளும்,176 வகை இருவாழ்விகளும் உள்ளன.இது உயிர் வழமைமிக்க பகுதி என்று யுனெஸ்கோ அறித்துள்ளது.

மேற்கு மலையின் மறைவு பகுதியில் அமைந்தது தான் தமிழ்நாடு.நமது நீர் ஆதாரமான காவிரி ,பாலாறு,தென்பெண்னை ,வைகை ஆறுகள் இம்மலைத் தொடரில் தான் உற்பத்தியாகின்றன.நமது கண்முன்னே பல ஆறுகளும் சீரழிந்து போய்விட்டது.இதற்கு காரணம்  தேடினால் ஆறுகளுக்கும் வனத்திற்கும் உள்ள உறவு புரியும்.எல்லா அறுகளும் மலையில் உள்ள சோலை காடுகளிலில் தான் உற்பத்தியாகும்.தமிழ்நாட்டில் மழை நாட்கள் என்பது 35 முதல் 50 நாடகள் மட்டுமே.900 மில்லி மீட்டர்.குறைவான நாட்களிலில் பெய்த்த மழையை எப்படி சேமிப்பது?அதை தான் சோலா காடுகள் செய்கிறது.ஒருமுறை பெய்யும் மழையை 3 மாதம் வரை சேமித்து வைத்து தருகின்றன.காடுகளை கணக்கில்லாமல் அழித்து நமது நீர் ஆதாரங்களை சீரழித்துவிட்டோம்.சோலைகாடுகளை அழித்தன் விளைவு சுமார் 3000 ஓடைகள் வற்றிவிட்டன என்கிறது ஆய்வு.இந்த காடுகளில் நட்ட தைல ,சீகை மரங்களால் ஒரு பயனும் இல்லை.தைல மரம் பரவாது.நட்டால் தான் வ்ளரும்.ஆனால் சாயபட்டறை பயன் களுக்காக வைக்கப்பட்ட சீகை மரம் அதற்க்கும் பயன்படவில்லை.இந்த மரங்கள் பரவி சோலைகாடுகளை அழித்து விடுகிறது.

காடுகளின் ஆதாரமான வனவிலங்குகள் குறைந்ததும் கூர்ந்து நோக்க வேண்டிய விசயம்.40,000 புலிகள் இன்று 1411 குறைந்தது வேதனையானது.தமிழ் நாட்டில் சுமார் 50 புலிகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.வேகமாக அழிந்து வரும் புலி காடுகளின் வளமையின் குறியீடாக கருதப்படுகிறது.மத்திய அரசு புலிகளை காப்பதற்க்கு 2008-09 ல் 157 கோடியும் 2009-10 ல் 240 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது.இப்படியிருந்தும் கடந்த சனவரி முதல் நவம்பர் வரை 76 புலிகளை இழந்திருக்கிறோம் .இது வனத்தில் உள்ள புலிகளில் 7 சதவீதம்.26 புலிகள் வேட்டையில் கொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 2 புலிகள்.ஏற்கனவே நாம் சத்தியமங்களம் பகுதியில் இருந்த சிவிங்கி புலி,கொங்கு  பகுதியில் தங்க நிற பாண்டா என்ற் அரிய வகை ஆர்கிட்மலர்,அமராவதி ஆற்றில் கானபட்ட மயில் கெண்டை மீன் மற்றும் பல அரிய வகை இனங்களை முற்றிலும் அழித்துவிட்டோம்.இந்த மீன் காவிரியில் கொஞ்சம் இருக்கிறது.இதை தூண்டிலில் பிடிக்க பலநாட்டில் இருந்தும் வருகிறார்கள்.அழியும் தருவாயில் உள்ள சிலுவைமரம்,வரையாடு,கழுகு,தொட்ர்ந்து நடைபெரும் யானை மரணம் போன்றவை நம் அவலநிலைமையை உலகத்திற்க்கு உரக்க சொல்கிறது.

               மொரிஷியஸ் தீவில் கல்வேரியாமேஜர் என்ற 300 வருட பலமைவாய்ந்த மரம் 18 மட்டுமே உள்ளது.இதன் விதைகளிருந்தும் புதியதாக முளைக்கவில்லை. இதை ஆய்வு மேற்கொண்டதில் உலகம் ஒர் மிகப் பெரிய உன்மையை கண்டுகொண்டது. இங்கு வாழ்ந்து வந்த டோடோ என்ற பறவை முற்றிலும் அழிந்துவிட்டது.அந்த பறைவை உண்டு கழிக்கும் விதைகளுக்கு தான் முளைக்கும் ஆற்றல் உண்டு.இப்போது அந்த பறைவையும் இல்லை.புதிய மரங்களும் இல்லை. இந்த ஆய்வுலிருந்து தான் காட்டில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தின் பங்களிப்பும் வளமைக்கு முக்கியம் என்பதை உலகம் புரிந்து கொண்டது.முட்காடுகளில்  மான்கள் வாழாது.யானை முட்புதரின் வழியாக செல்லும் போது பாதை ஏற்படும்.யானைகள் இருக்கும் காட்டில் மான்கள் இருக்கும்.மான்களைத் தேடி புலிவரும்.யானைகளின் சானத்தின் மூலம் தாவரங்கள் எளிதாக பரவும்.சானத்தில் முழைக்கும் காளனை சாப்பிட ஆமைகள் வரும்.சானம் மக்கி காட்டிற்க்கு உரமாகிவிடும்.யானையை "ஆதார உயிரினம்"என்கிறார்கள்.காட்டுப்பன்றி கிழங்குக்காக குழி தோண்டுவது காட்டை நன்கு உழுவதற்க்கு சமம்.அந்த குழியில் விழும் விதைகள் எளிதில் முளைக்கின்றன.இறந்த விலங்கு எவ்வளவு பெரியதாக இருந்தாலும்  கழுகுகள் அதை உண்டு காட்டை சுத்தமாக வைக்கின்றன.இப்படி இந்த உலகில் வாழும் எல்லா உயிரினமும்  ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றன.

                  இன்று அழிவிலிருந்து உடனடியாக்  காக்க வேன்டியது தவளைகள் தான்.எங்கு திரும்பினாலும் காயச்சல் .கொசுவர்த்தி ஏற்றாத இரவுகள் இல்லங்களிலில் இல்லை. கொசுவின் லார்வா பருவத்திலேயே தவளைகள் அதை சாப்பிட்டு விடும்.ஒரு கட்டுக்குள் இருந்தது.தேயிலை தோட்டங்கலில் அடித்த பூச்சிக்கொல்லிகள் மழை நீர் மூலம் ஆற்றில் கலந்தன.நாம் பயன்படுத்தும் சானி பவுடர்,ஷம்பு மற்றும் பல ரசாயன பொருள்களும் தவளைகளுக்கு எமன் ஆகிவிட்டது.அழிவின் விழிம்பில் இருக்கிறது தவளை.

                  நமக்கு தேவையான காடுகள் 33 சதம்.ஆனால் இருப்பதே 17.5 சதம் என அரசு குறிப்புகள் தெரிவிக்கின்றன.ஆனால் செயற்கைகோள் படங்கள் அதை விட குறைவாகவே   சொல்லுகின்றன.காடுகளை அதிரிப்பது பற்றி யோசிப்பதற்க்கு முன்னால் இருப்பதை காப்பது மிக முக்கியம்.வன கொள்ளை கடுமையாக தடுக்கப்பட  வன சட்டம் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.மனித வனவிலங்கு மோதலை தடுக்க  நவின முறைகளை அமல் படுத்தலாம்.யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க கென்யாவில் பயனபடுத்தும்  தேனீக்கள் முறையை இங்கும் அமல்படுத்தலாம்.செலவு இல்லாமல் அதிக வருமானம்.  வனப்பகுதிக்குள் அத்துமீறி நுலைவதை தடுக்க வன பாதுகாப்பு அதிகரிக்கலாம்.சரனாலய பகுதியில் இருக்கும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் வீடுகள் அல்லது தகுந்த பொருள் உதவி.அவர்களையும் வன பதுகாப்பில் பயன்படுத்தலாம்.பல மாநிலங்களிலும் இது நடைமுறையில் உள்ளது.வனத்துறையை நவீன படுத்த வேண்டிய காலம்.

அதிகரித்து வரும் மக்கள்தொகை,உயரும் கால்நடைகள்,அதி வேக தொழிற்மயம்,காங்கிரிட் கட்டங்களாக மாறும் காடுகள் என்று  மிகப்பெரிய சவால்களுக்கு முன் முட்களுக்கு மத்தியில் பூத்த குறிஞ்சி மலராய் மிச்சமிருக்கிறது நம்பிக்கை.


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP