கங்கை சிறகுகள்!

>> வியாழன், 19 ஜூலை, 2012



கங்கை சிறகுகள்!



ஜோத்பூர் மகாராஜா அபய்சிங் 1731-ல் ஒரு புதிய மாளிகையை கட்ட ,பிஷ்னோய்கள் வாழும் ஜால்நாடி கிராமத்துக்குச் சென்று மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை அனுப்பினார்.ஆட்கள் மரங்களை வெட்ட முனைந்த போது,அம்ரிதாஎன்ற பெண்மனி மரத்தை கட்டித் தழுவினாள்.கோடாரிகள் அவர் தலையை பதம்பார்த்தன. .அடுத்து அவருடைய மூன்று மகள்களும்...அடுத்தடுத்து 359 பேர் வரிசையாக கொல்லப்பட்டனர்.அரசர்,தான் எதிர்பார்த்த அளவு மரங்கள் கிடைக்காத்தால், விசாரிக்க ,உண்மை வெளி வந்தது.அபய்சிங் நேரே கிராம மக்களிடம் வந்து மண்னிப்புக்கேட்டு ,இனி பிஷ்னொய்கள் மரப் பொருட்களை தருமாறு கோரப்பட மாட்டார்கள். அந்த கிராமங்களைச் சுற்றி வேட்டையாடுவது தடைசெய்யப்படும்என்றார்.இந்த வரலாற்று நிகழ்வின் பின்னனியில் இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றியதே..மர அணைப்பு எனப்படும்சிப்கோஇயக்கம்.

1978 லிருந்து அம்ரிதா தேவியின் கிராமத்தில் ,மரங்களை நேசிப்பவர்களின் திருவிழா நடைபெற்றது.கேளிக்கையும் கொண்ட்டாட்டமும் நிரம்பிய விழா அல்ல!.மரங்களை காப்போம் என்ற நம்பிக்கையை உறுதி செய்யும் விழா.

காடுகளை சார்ந்த மக்களின் பொருப்பிலிருந்த காடுகள் பிரிட்டிஷ் அரசால் எடுத்து கொள்ளப்பட்டன.பழங்குடி மக்களூக்கு அனுமதி மறுக்கப்பட்ட காடுகளின் வளங்கள் ஒப்பந்தக்கார்ர்களாள் சூறையாடப்பட்டன.சத்தியகிரக முறையில் காடுகளில் தங்களுக்குள்ள உரிமைகளுக்காகப் போராடிய ‘கொண்டுஇன மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.தேஷ்ரியில் 1930 களில் காடுகள் பற்றிய சட்ட்த்துக்கு எதிராக குரலெழுப்பிய கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்.

கங்கையும்,யமுனையும் உற்பத்தியாகும் உத்திரகண்டப்பகுதி இமயத்தின் வனப்பு நிறந்த பகுதியாகும்.பிரிட்டிஷ் அரசு இயற்றிய சட்டங்களை வைத்து இப்பகுதியில் வனத்துறையும் ,ஒப்பந்தக்கார்ர்களும் வனத்தை மொட்டையடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது மரத்தை தழுவியவாறு “முதலில் எங்களை வெட்டுங்கள்என்று இப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் குறிப்பாகப் பெண்கள் ஈடுபட்ட்தால் அன்று இமயமலை பாதுகாக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவிலும் ஆட்சியாலர்களின் கொள்கை மாறவில்லை.இமயமலை பகுதிகளில் பெருவாரியாக காடுகள் வெட்டப்பட அந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் மண் சரிவும் அதிகரித்தன..

1970 ம் ஆண்டு அலெக்நந்தா நதியில் பெரிய வெள்ளம்  ஏற்ப்பட்டது.ஆறு பெரிய பாலங்கள் இடிந்தன.16 கால்நடை பலங்களையும் 25 பேருந்துகளையும் வெள்ளம் சுருட்டி சென்ரதுடன் நூற்றுக்கனக்கான மக்களும் ஆயிரக்கனக்கான கால்நடைகளும் சேதமாயின.
இந்த சமயத்தில் தான் 1970 களில் ‘சிப்கோஇய்க்கம் பிறந்த்து.சிப்கோ என்றால் தழுவுதல் என்று பொருள.வெட்ட வரும் ஒப்பந்தகார்ர்களிடமிருந்தும்,அரசு அதிகாரிகளிடமிருந்தும் மக்கள் மரங்களை தழுவிக் காப்பாற்றினார்கள்.சுந்தர் பகுகுணா போன்ரவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.இவ்வியக்கத்தில் முக்கியமானவ்ர் இவர்.பகுகுணாவின் உண்ணாவிரத்த்தையும் ,மக்களின் எழுச்சியையும் கனட அப்போதைய பிரதமர் இந்திரகாந்தி , பேச்சுவார்த்தை நடத்தி “ பதினைந்து வருடங்களுக்கு உத்திரபிரதேசத்திலுள்ள இமயமலைக் காடுகளின் மரங்கள் வியாபார தேவைகளுக்காக வெட்டப்படமாட்டாதுஎன்று உறுதியளித்தார்..இந்த வெற்றியும் ,பதினைந்து வருட அவகாசமும் சிப்கோ இயக்கம் ஒரு மாபெரும் ச்கதியாக உருவாக வழிவகுத்தன்.
இவ்வாறே..1978 பிப்ரவரி மாதம் ஹென்லால் பள்ளத்தாக்கில் உள்ள அத்வானக்காடுகளை காப்பாற்றினர்.1978 டிசம்பர் மாதம் பாடியகட் காடுகளும் காப்பற்றப்பட்டன.20 ஆண்டுகளாக டூன் பள்ளத்தாக்கில் உள்ள குசிக்காலா பகுதியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்கப்பட்டு சுண்ணாமபுக்கல் தோண்டி எடுக்கப்பட்ட்து.1986 லில் சிப்கோ பெண்கள் பாதைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி இதை தடுத்து நிறுத்தினர்.

வளர்ச்சிஎன்ற போர்வையில் வனப் பகுதிகள் தொடர்ந்து பலியிடப்படுகிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்ட்த்தின் கீழ் அரசு மரங்களை நடும்போது 10 சதவீதம் கூட பிழைப்பது இல்லை.மாறாக மக்கள் பங்கேற்ப்பு அடிப்படையில் தாசோலி கிராம சுயராஜ்ய இயக்கம் மரங்களை நடும்போது  80 முதல் 95 சதவீதம் பிழைத்துவிடுகின்றன. இவ்வாறு இந்த இயக்கம் வனங்களை பாதுகாப்புடன் தங்கள் தேவைக்குரிய மரங்களைத் தாங்களே சாகுபடி செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது.

1981 ஆம் ஆண்டு இந்திய அரசு சுந்தர்லால் பகுகுணாவிற்க்கு பதமஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தபோது வேண்டாமென்று மறுத்துவிட்டார்.அதற்க்கு அவர் சொன்ன காரணம்இமாலயப் பகுதிகளில் தினம் தினம்  ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது.பாரத மாதவின் ரத்தமும் சதையும் ஆக நினைக்கிறோமே அந்த வளமான மண கடலை நோக்கி தினமும் போய் கொண்டு இருக்கிறது.இது என்று தடுக்கபடுகிறதோ, அன்று தான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும்என்றார்.சிப்கோவின் கொள்கையை பரப்புவதற்காக 1981 -83 களில் காஷ்மீர் முதல் கொஹிமா வரை 9070 கி.மீ நடையாகவே சென்றார்.

அறவழியோ ,அனுபோக வழியோ எதுவாக இருந்தாலும் வனம் எவ்வகையிலும் களங்கம் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு செழிக்க மனிதரது நிகரற்ற அறிவு, ஆற்றல்,புகழ்,பொருள் எல்லாவற்றையும் பயன்படுத்திப் பார்ப்பது வங்கியில் சேமிக்கும் முதல்போன்றதுகூட.

ஒரு 10 ஹக்டேர் வனப்பகுதி மனித தலையீட்டால் அழியும் போது 1500 வகை பூக்கும் செடி கொடிகளும்,700 வகை மரங்களும்,60 வகை நீர்நில வாழ்விகளும் அழிந்து போகின்றன என்றும் ,ஒரு மழைக்காட்டு மரம் 400 வகை பூச்சிகளுக்கு வாழிடமாக இருக்கிறது என்றும் ஜ.நா வின் சுற்றுச்சூழல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நாம் இன்னும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை.காண அஞ்சுகிறேம்.பொய்யும் ,சுயநலமும் ,மூட நம்பிக்கைகளும் மலிந்த மானுடம்.அவற்றுக்காக தமது முற்போக்கை பலியாக்கி வருவது புரியாத புதிர்.இது ஒரு பழத்திலே இருக்கும் புழுவைப் போலவாகும்.ஆனால் புழுவுக்கு பழம்தான் உணவு,மனிதர்க்கு ப்ணமே உணவு.
இயற்கை என்பது பொருள் உள்ளோரின் சொத்து அல்ல.பொதுமக்களின் வாழ்வின் ஆதாரம் எனப்து புரிபடவேண்டும்.இவற்றுக்காக பாடுபட நாம் அணியமாக வேண்டும்.
“காடுகள்தான் நமது கலச்சாரத்தை ,நாகரீகத்தை வளர்த்த புண்ணிய ஸதலங்கள்.அவற்றை அழிப்பது நம்மை நாமே அழித்து கொள்வதாகத்தான் அர்த்தம்”.. இந்த சொற்களின் வாசத்தை எப்போது நீங்கள் நேசிப்பது...?


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP