வனம் காப்போம்!

>> வியாழன், 19 ஜூலை, 2012



வனம் காப்போம்


மனித இனம் வாழ வனம் அடிப்படை தேவை.வனம் செழித்தால் நாடும்,மக்களின் வாழ்வும் செழிப்புரும்.நம் நாட்டிற்கு தேவையான வனம் 30 சதம்,ஆனால் இருப்பதோ 7 சதம் தான். தேவையான மரங்கள் 54 கோடி.!!? நிலமை  இப்படியிருக்க, இருப்பதும் வனக்கொள்ளையால் பறிபோவது மனதை வதைக்கிறது.
                                 உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு பகுதிகளில் மேற்குதொடர்சி மலைகளும் ஒன்றாகும்.இதில் 5000 வகை  பூக்கும் தாவரங்களும்,139 வகை பாலுட்டிகளும்,508 வகை பறவைகளும் 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.இம் மலைதொட்ர் மராட்டியம்,குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் வழியாக சென்று கன்னியாகுமா¡¢யில் முடிகிறது.பரப்பள்வு 60,000 ச.கி.மீ.சுமார் 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகள் தனிதன்மை வாய்ந்த புவியல் அமைப்பாகும்.கோதவா¢,கிருஷ்ணா,காவி¡¢  மற்றும் பல சிறு ஆறுகளின் பிறப்பிடமாகும்.
                                       மேற்கு மலைதொடா¢ன் வளமான பகுதி சத்தியமங்களதின் வனபகுதியாகும்.இதில் புலி,யானை உள்ளிட்ட அபூர்வ வகை மான்னினங்கள் வசிக்கின்றன.முக்கியமாக நம்க்கு ஆக்சிஜன் தொழிற்சாலையாக்வும் உள்ளது.இந்த வனப்பகுதியை மய்யமாக வைத்து தான் பிரச்சனை எழுந்துள்ளது. .நமக்கு வந்த சில தகவல்களை உறுதிபடுத்த புறபட்டது நமது பேனா படை.




                                     1993 லில் வீரப்பனை பிடிபதற்காக உருவாக்க பட்ட சிறபபு அதிரடிபடை வீரப்பனுக்கு பிறகு வனக்கொள்ளை ,தீவரவாதிகள் ஊடுருவலையும்  தடுத்துவருகிற்து.15 வருட  வன அனுபவத்தை இந்தியா முலுவதும் உள்ள சக காவல் அதிகா¡¢களுக்கும் பயிற்சி அளித்து வருகிற்து.அதிரடிபடை சமீபத்தில் நீண்ட் காலமாக பலமாநில வனத்துறைக்கும் தண்ணி காட்டிய பவுளோஸ் என்ற வனகொள்ளைகாரனையும், வெங்கட ராமன் என்னும் சந்தன மர கடத்தல்காரனையும் கைதுசெய்தது தேசிய அளவில் திரும்பிபார்க்க பட்டது.இதனால் வனத்துறை அதிகா¡¢களுக்கு மேலிடத்தில் இருந்தும், பல திசைகலிருந்தும் பல  கேள்விகள். சும்மா இருப்பார்களா!??  உடனே!...  மங்களபட்டியிலும் ,புதுபீர்கடவிலும் அமைந்திருக்கும்  அதிரடிபடையின் பயிற்சி இடம் வனவிலங்களுக்கு ஆபத்தாக இருக்கிற்து  என்று  பிரச்சனைக்கு முதல்மணி அடித்தார்கள்.


                                                   காராச்சிகொரை சோதனை சாவடியில் இருந்து 24 கி.மீ.தெங்குமராட்டா.இதில் இருந்து 9 கி.மீ. மங்களப்பட்டி.இந்த பகுதியில்   தான் கல்லம்பாளையம்,அல்லி மாயாறு போனற கிரமங்கள் உள்ளன.  இந்த பகுதி முலுவதும் சரனாலயபகுதியாகும்.தடை செய்யபட்ட பகுதி.  இங்கு தன் புலி,யானை,அழிந்து வரும்  வெளிர்மான்,சருகு மான்,கரடி மற்றும் பல அபூர்வ வகை தாவரங்களும் உள்ளன.சமீபத்தில் கூட புலி ஒன்றின் அ¡¢ய புகைபடம் இங்கு இருந்து தான் எடுக்கப்பட்டது.இங்கு பயிற்சி அளிபதற்கு என்று அதிரடிபடை கட்டிடம் எதுவும் கட்டவில்லை.மாதத்தில் 150 முதல் 180 மணி நேரம் மட்டுமே  பயிற்ச்சி.அதுவும் சிறிய துணியால் ஆன குடில் அமைத்து தங்குகிறார்கள்.பயிற்சி நோக்கம் மொளனத்தின் பலம்,இயற்கையோடு ஒன்றித்தல்,எளிமையான வாழ்வு.  இந்த பகுதியில் வனவிலங்கு வேட்டை நடக்காமல்  கடுமையாக தடுத்துள்ளனர்  என வன ஆர்வளர்கள் சொல்லுகின்றனர்.ஆனால் வனத்தை காக்கவேண்டிய வனத்துறையின் அனுமதியை சிலர் "வாங்க" வேண்டியமுறையில் வாங்கி வார இறுதிநாட்களில் நடக்கும் கூத்திறக்கு அளவே இல்லை என்கிறர்கள் ஊர் மக்கள்.சரணாலயத்தின் பல பகுதிகளில் மது பாட்டில்களும் பிலாஸ்டிக் டம்ளர்களும், சமைத்த இடங்களும் ஆக அலங்கோலமாய் இருக்கிறது சரனலாய பகுதி என்று அவலநிலையில் உள்ளது.வனகொள்ளையரும் இப்போது சத்தியமங்களம் வனத்தையே குறிவைத்துள்ளனரென்பது, தொடர்ந்து பர்கூர் பகுதியில் நடை பெரும் வனகுற்றங்கலே சாட்சி.தொடர்ந்து நடைபெரும் யானைகளின் மரனம் பலத்த கேள்விகளை எழுப்புகிறது. இந்த வனத்தில் சந்தன மரங்கள் அற்று விட்டது.!!??





                                              புதுப்பீர்கடவில் அமைந்திருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி இடம் சத்தியை ஒட்டியே அமைந்துள்ள இடம்.இடத்தை சுற்றி பட்டா நிலங்களும் ஒரு புறம் மலையும்  அமைந்துள்ளது.இந்த இடம் யானை பயனிக்கும் பாதை என்று சொல்வது யாருக்காக என்பது தான் பு¡¢யவில்லை.ஆனால் யானைக்காக இல்லை என்பது மட்டும் பு¡¢கிறது!!!இங்கும் கட்டிடம் எதுவும் இல்லை.யானை பாதைகளை காப்பாற்ற நினைக்கும் வனத்துறை ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவையின் 5 யானை பாதைகளையும் மீட்கலாமே.!!??
உலகத்தின் அதிநவீன  "கோஸ்ட் வாக்" போன்ற 21 உத்திகளை பயன் படுத்தும் அதிரடிபடை,இரவுகென்றே சில நவீன முறைகளையும் கருவிகளையும் பயன்படுத்துகின்றனர்   .இரவில் சத்தம் இல்லாமல் காட்டில் 1 கி.மீ நடப்பத்ற்க்கு 3-4 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.தீவிரவாதிகள் வனதின் வழியாக ஊடுருவதையும்,களமாக பயன் ப்டுத்துவதையும் த்டுத்துவ்ருகின்ற்னர். இதனால் தான் இன்று இந்தியா முழுவதும் குறிப்பாக நகசல்கள் அதிகம் உள்ள வட மாநிலங்களில் இருந்து  பல காவல் துறையினரும்  பயிற்ச்சி எடுக்க சத்தியம்ங்களம் வருகிறார்கள்.


தற்போது இங்கு 7 முதல் 8 புலிகள் இருக்கும் என்று வன ஆர்வளர்கள் தொ¢விக்கின்றனர்.புலிகள் இருப்பது உறுதிசெய்யபட்டதால் ஆபத்து மேலும் அதிகா¢த்து உள்ளது.உலகில் போதை பொருள் கடத்தலுக்கு அடுத்த இடத்தில் வனவிலங்கு கடத்தல் உள்ளது.ஒரு புலியின் தோல் மட்டும் சீனாவில் 20,000 டாலர் விலை என்றும் ஒரு புலி 35 லட்சம் விலை என்று ஐக்கிய நாட்டு சபை தகவல் .இதில் அதிகம் ஆபத்தில் உள்ளது இந்திய புலிகளே.40,000 புலிகள் இருந்த நம் நாட்டில் தற்போது 1400 மட்டுமே உள்ளது!!எதிர்கால தலைமுறை புலியை படத்தில் மட்டுமே பார்க்கும் அவல நிலைமை!!


தற்போது அதிகா¢த்து வரும் யானை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.இந்திய யானையின் தந்ததிற்கு ஜப்பான்,சீனா மக்களிடையே மிகுந்த ஈர்ப்பு உள்ளது.இதனால் தந்ததிற்க்காக யானை வேட்டை அதிகா¢த்து இருப்பது வன ஆர்வளா¢டையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.புலிகளின் நிலைமை யானைக்கும் வரக்கூடாது .புலி,யானை போன்றவற்றை கடவுளின் தூதுவர்களாக வாகனங்களாக வணங்கும் கலாச்சாரம் நம்முடையது.இயற்கையை போற்றும் சிறப்பு கலாச்சாரத்தை பெறற் நாம் அ¡¢ய இயற்கை செல்வங்கள் கொள்ளை போவதை தடுப்பது நமது அடிப்படை கடைமையாகும்.


                                          ஆட்கள் பற்றாகுறை,தகவல் ஒருங்கினைபில்லாமை,நவீன உத்திகளில் பா¢ச்சம் இல்லாமை,குறைவான ஆயுதங்கள் என்று பின் தங்கி இருக்கும் வனத்துறை தன்னையே   மீட்டுருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டிய காலம் இது .ஒரு வீரப்பனால் கையை சுட்டுக் கொண்டது போதும்.பல வீரப்பன்கள் உருவாகமல் தடுக்கவேண்டியது வனத்துறையின் தலையாய கடைமை.நவீன கருவிகள்,புது புது உத்திகள்,கடுமையான பயிற்சி முறைகள் மூலம் வனத்தையும்,வன விலங்குகளையும் காப்பதோடு மட்டும் இல்லாமல் தேசத்தையும் காப்பாற்றும் அதிரடிபடையை முன் மாதி¡¢யாக கொண்டு வனத்துறையும் வளர்ந்தால் நாட்டிற்கும்,நமக்கும் பெருமை!.25,000 க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் வாழம் இந்த பூமிப் பந்தில் மனிதனும் ஒர் உயி¡¢னம் மட்டுமே.!!.மனித சமுதயம்  வளமான  வாழ்வு பெற நிறைவான வனம் தேவை.இல்லையேல் ,விருச்சமாய் வளர்ந்த நாம் காலத்தின் மிச்சமாகி போன எச்சமாகி போவோம்.




0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP