காடு கொன்று நாடாக்கி.....

>> வியாழன், 19 ஜூலை, 2012


காடு கொன்று நாடாக்கி.....

தேசத்தின் தேர்தல் திருவிழா முடிந்து விட்டது.பழைய அரசு போவதும் புதிய அரசு வருவதும் காலத்தின் இயல்பு.மாறாமல் இருக்க வேண்டியது அரசின் குறிக்கோள் மட்டுமே!.அது மக்களின் நல்வாழ்வியல் குறித்த சிந்தனைகளும் செயல்களும் .சமுகத்தின் தினசரி   வாழவில் அங்கமாகிவிட்ட ஊழல் குறித்த செய்திகள் ஒரு தேசத்தை அர்த்தப்படுத்தும் கருவி ஆகிவிட்டது.
அறிவியலின் அற்புதத்தால் உந்தப்பட்ட ஊடக காலம் இது.நல்ல தலைமைக்கு தலைவனை தேடும் தலைமுறை,   ஊடகங்கள் உற்பத்தி செய்யும் உடனடி தலைவர்களால் தடுமாறுகிறது.கடந்த சில நாட்களாய் ஊடகங்கள் உச்சந்தலையில் வைத்து கொண்டாடுவது ஒரு யோக மாஸ்டரை!!நம்பாமல் நகைக்கிறார் என் முகநூல் நன்பியும் உலக் அரசியல் மாற்றம் மற்றும் மக்களின் வாழ்வியல் குறித்த சிந்தனையாளருமான  ஆக்னஸ் டோர!!
ஊழள் ஒழிக்கப் பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இல்லை.ஆனால் ஒரே நாளில் ஒழிக்க கடவுள் பூமியில் இல்லை.!!

ஒவ்வொரு நாளையும் உருவாக்குவது இன்று ஊடகங்கள் தான்.செய்திகள் தேசத்தின் நாயகர்களை உருவாக்குகின்றன.செய்திகளின் தன்மை ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும்  அழிவிக்கும் பங்கு உண்டு.
நிரந்திர வளர்ச்சிக்கு வித்திடும் சுற்றுச்சூழல் குறித்த செய்திகள் பெட்டிக்குள் சுருண்ட பாம்பை போல் இருக்கிறது.ஊடகத்திற்க்கு தெரிந்த சூழல் குறித்த வார்த்தைக்ள் "அட்டூழியம்,மிதித்து கொன்றது,ஆட்கொல்லி,யானைகள் அட்டகாசம்.... போன்ற் கலைசொற்களே!!!அதுவும் 4ம் பக்கத்திலோ அல்லது 6ம் பக்கத்திலோ.

ஜீன் 14ம் தேதி தலைப்பு செய்தி ஆக வேண்டியது யோக குருவின் புன்னியத்தால் பெட்டி செய்தியானது.ஒரே நாளில் 15 மயில்கள்  மர்ம்மான முறையில் பெருந்துறை அருகே இறந்து கிடந்த்து.மயில் நம்  தேசிய பறைவை!!தேசிய பறைவைக்கே இந்த நிலைமை என்றால் ...???.
மயில் அழிந்து வரும் ஆபத்தில் உள்ள பறவை. சரனாலயம் என்று அறிவித்து பல கோடிகளை செலவு செய்யும் அரசு மயிலை மட்டும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ?!வெப்பமண்டல பகுதியில் ஈரம் உள்ள பகுதியில் வாழ்பவை மயில்கள்.தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை ,நெல்லை,தென்காசி , ஈரோடு ,கோவை மற்றும் திருப்பூரிலும் அதிகமாக உள்ளது.கொங்கு பகுதியில் கோபியில் ஆரம்பித்து விஜயம்ங்கள்ம் வரை மயில்கள் அடர்ந்து காணப்படுகிறது.சுமார் 30 கி.மீ நீளமும் 10 கி.மீ அகல பரப்பும் இதன் பகுதி.இப்பகுதி புதர்களும் சிறு சிறு மலைகளும் நிரம்பிய பகுதி.

தராளமயமாக்கலின் விளைவாக இங்கு ஆரம்பிக்க பட்ட தொழிற்பூங்கா, நகரமயமாக்கலின் விளைவாய் உருவான கட்டங்கள் இதற்கு வினையாய் வந்தது.சுமார் 3000 ஏக்கரில் உருவான புதிய தொழிற்சாலைகள் மயில்களின் வாழ்வாதரத்தை நிர்மூலமாக்கியது.மயில்களின் உணவு நிலையில் மிகுந்த சிரமத்தை ஏர்படுத்தியது.விளைவு அவை பக்கத்தில இருந்த தோட்ட பகுதியில் உணவு தேட வேண்டிய நிர்பந்ததிர்க்கு ஆளாயின.அதன் உணவை அழித்தது, இப்போது அவை தோட்டத்தில் பயிர்களை நாசம் செய்கின்றன என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.
மயில்களின் இன பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த நரி, காட்டுப்பூனை, கீரி  இவைகளை அழித்துவிட்டு காரணம் சொல்கிறோம்.இயற்கை சங்கிலியை உடைத்ததின் விளைவு! வேளான்நிலங்களிலில் பூச்சிகளை கட்டுபடுத்துவதில் மயில்களின் பணியை யாரும் சிந்திப்பதில்லை.இதனால் நஞ்சு வைத்து கொல்லுகின்றனர் மயில்களை.இது தவிர உயிர்கொல்லி மருந்துகளால் இறக்கும் பூச்சி ,புழுக்களை உட்கொண்டு மடியும் மயில்கள் ஏராளம்.

1963 ம் ஆண்டு மயில்கள் இந்தியாவின் தேசிய பறவையாய் அறிவிக்கப்பட்ட்து.மியன்மாருக்கும் மயில் தான் தேசிய பற்வை.1972 ம் ஆண்டு  அமுலுக்கு வந்த வனசட்டத்தின் படி வேட்டையாடுதல் அல்லது துன்புருத்தல் தண்ட்னைக்குரிய குற்றம் .
மயில் எண்னையால் மூட்டு வலி சரியாகும்,மயில் இறகால் சலி குணமாகும் என்ற மூடதனத்தால் தினந்தேரும் பலியாகும் மயில்களின் எண்னிக்கை ஏராளம்.
கி.மு பத்தாம் நூற்றாண்டில் மயில் தோகை ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் உவரி துறைமுகம் வழியாக நடைபெற்றதற்க்கு ஏரளாமான வரலாற்று சான்றுகள் உள்ளது.முகமதிய மற்றும் நாயக்கர் ஆட்சியில் மயில் உருவம் பொரிக்கப்பட்ட நாணயங்கள் வழக்கத்தில் இருந்துள்ளன.
தமிழர்களின் தெய்வமான முருகனின் வாகனம் மயில். மயிலாட்டம் ,மயிலாசனம்  போன்ற கலைகள் மயிலின் பெயரால் நம்மிடையே இன்றும் உள்ளது.நாம் வைக்கும் பெயர்களிலில் கூட் மயில்சாமி, மயிலானந்தம், மயில்வாகனம் என்று கலந்திருக்கிறது.இவ்வாறே நம் ஊர் பெயர்களான மயிலாடுதுறை, மயிலாப்பூர், மயிலாடும்பாறை .....இப்படி சொல்லிகொண்டே போகலாம் தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்த எடுத்துக்காட்டுக்களை.

தேசியம் என்பது இப்போது மாறிவிட்டது.ஆம் இந்தியாவில் தேசியம் என்பது கிரிக்கெட்டில் உலக கோப்பையை ஜெயிக்க வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் போர்  வரவேண்டும் அல்லது ஆழிபேரலை வரவேண்டும்.
தேசிய பறவை மயிலுக்கு இன்னும் கண்க்கெடுப்பு கூட எடுக்கவில்லை என்பது நமது தேசிய பற்றை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் செயல்.8000ம் மயிலகள் இருந்த விராலிமலையை சரணாலாயமாக் அறிவித்தனர்.இன்று அங்கு விரல் விட்டு எண்ணி விடலாம் மயில்களை!! கோவையில் உருவான தொழிற்பூங்கா காரனமாக 300க்கும் அதிகமான மயில்கள் அழிக்கப்பட்டன.

சிறுமலைகளையும் புதர்களையும் அழிப்பதை தடுக்க வேண்டும். மயில்களுக்கான கணக்கெடுப்பு நட்த்தி அதற்கான வாழ்விடங்களை காப்பது நமது ஒவ்வொருவரின் கடைமை.
வேளான்மைக்கு முக்கிய்துவம் தராப்படும் என்று அறிவித்துள்ள புதிய அரசு முதலில் வேளான் தோழன் மயில்களை காக்க முன்வர வேண்டும். பெருந்துறையில் இருந்து சென்னிமலை வரை உள்ள பகுதியில் குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து மயில்களின் பாதுகாக்கபட்ட பகுதியாக அறிவித்தால் மயில்களை காப்பாற்றலாம்.
இளம்பிஞ்சுகள் வரையும் ஓவியத்தில் அதிகம் இட்ம்பெருவது மயில்களே.ஓவியம் சான்றாகும் நிலைமை வேண்டுமா?காடு கொன்று நாடாக்கிய பலிச்சொல் நமக்கு வேண்டாமே.

2 பின்னூட்டங்கள்:

உங்களோடு... 19 ஜூலை, 2012 அன்று AM 11:15  

//தேசியம் என்பது இப்போது மாறிவிட்டது.ஆம் இந்தியாவில் தேசியம் என்பது கிரிக்கெட்டில் உலக கோப்பையை ஜெயிக்க வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் போர் வரவேண்டும் அல்லது ஆழிபேரலை வரவேண்டும்.//....உண்மைதான். இதற்கு ஊடகங்களும் ஒருகாரணம்.

Unknown 19 ஜூலை, 2012 அன்று PM 4:36  

அய்யோ..எங்கையோ கைவைக்கறீங்க...

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP