லவுட்ஸ்பீக்கர்

>> திங்கள், 17 செப்டம்பர், 2012




லவுட்ஸ்பீக்கர்
இளிச்சவாயன்

தீ ஜூவாலைகள் சிவகாசியில் கோர தாண்டவம் ஆடியதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க இயலாது. அரசின் மிக மோசமான போக்கை வெளிபடுத்தும் துன்பியல் சமபவம் அது. ஆனால் அரசு விழித்துக்கொண்ட்தா என்றால் ..அட போங்கடா... உங்களைப்பற்றி எங்களுக்கு தெரியும் என்ற நினைப்பில் தான் இருக்கிறது. கணதுடைப்புக்கு இழப்பீடு...அவ்வளவே!! பணம் தந்தால் மக்கள் எல்லாத்தையும் மறந்துவிடுவார்கள் என்று அரசு மக்களை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.

அல்வா

சிவகாசி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் சிலர் முகனூலில் இருந்து கிளம்பினர். முதலில் ஏகோபித்த பாராட்டகளுடன் தொடங்கப்பட்ட பணி இறுதியில் இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சம் ஸ்டண்டு காட்சிகளுடன் முடிந்த்து. உதவும் ..உணர்ச்சி பூர்வமான மக்களின் உனர்ச்சிகளை தவறாக பயன்படுத்தி மக்களிடம் வசூலிக்கப்பட்ட நிதி என்ன ஆனதோ??? இதோ அதோ என்று இறுதியில் போய் சேர்ந்தா இல்லையா என்றே தெரியவில்லை. எவ்வளவு வசூலித்தார்கள் என்றும் தெரியாமல் அவசர அவச்ரமாக மூடி மறைக்கப்பட்டது.இனியாவது சூது வாது தெரிஞ்சு நடந்துக்க இது ஒரு பாடமாக இருக்கட்டும்
மலர்கொத்து

மத்திய அரசு அறிவித்துள்ள ஒளிபரப்பு துறையில் அந்நிய மூதலீடு என்னைப்பொருத்த வரை வரவேற்க்கப்பட வேண்டியதே. தற்போது இருக்கும் தமிழ் காட்சி ஊடகங்களுக்கு செம அடி.. இனியாவது திருந்துவார்களா என்று பார்ப்போம்.சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடால் தற்போது இருக்கும் தெருமுனை கடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் அவ்வளவு சீக்கிரம் புறகனிக்க மாட்டார்கள். மேலும் 10 லட்சம் மக்கள் வசிக்கும் நகரில் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி கொடுத்துள்ளது. மலைநகரங்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.நம்மூர் மக்கள் இன்னும் மேலைநாடுகள் போல் பொருட்கள் வாங்க அதிக தூரம் பயனிக்க தேவையில்லை.அவர்கள் போல் ஒரு சிஸ்டமெட்டிக் வாழ்க்கை நாம் வாழுவதும் இல்லை.. ஆதலால் வால்மார்ட்,டார்கெட் போன்ற கடைகள் வருவதால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை. மேலும் விக்கர விலைவாசி கொஞ்சம் குறையவே செய்யும்.இவனுங்க அடிக்கர கொள்ளைக்கும் ஆப்பு வைச்ச் மாதிரிதான்.
நீர்க்குமிழி

கூடன்குளம் போராட்டம் ஒரு பக்கத்தில் மதம் சார்ந்த பிரச்சனையாக மாறிக்கொண்டு இருப்பது வருத்தமே! ஆனால் போராட்டம் பரவினாலும் விரைவில் நீர்த்துவிடும். அணு உலையில் எரிபொருள் நிரப்ப வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது சத்தம் இல்லாமல்.. நிரப்பிவிட்டால் இந்த போராட்டம் அர்த்தம்ற்றதாக மாறிவிடும். ஊரை காலிசெய்வதை விட வேறு வழியில்லை.

மை இல்லாத பேனா

கருணா ஆட்சியில் பல குறைகள் சொல்லப்பட்டாலும் ஊடகத்தை பொருத்த வரை சுதந்திரமான காலமே!ஆனால் ஜெ. ஆட்சியில் அப்படி இல்லை. இன்று பெரும்பாலான ஊடகங்கள் ஜெ . மேல் இருக்கும் பயத்தில் அடக்கியே வாசிக்கின்றன. மாநில பிரச்சனைகள் அதிகம் இடம்பெருவதில்லை. பெரும்பாலும் உள்ளாட்சி பிரச்சனைகளே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன். காட்சி ஊடகங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது .ஏதோ லோக்கல் சேனல் போல நடந்துகொள்கின்றன்.அச்சு ஊட்கமோ அதை விட மோசம்.. மை தீர்ந்து போன பேனா போல அரைச்சமாவை அரைத்துக்கொண்டு ஜெ.வின் ஊதுகோலாக மாற்விட்ட்து. அது கூடன்குளம் விவகாரத்தில் நன்றாக தெரிகிறது.என்ன செய்வது எல்லாம் விளம்பரம் படுத்தும் பாடு. அனைத்தும் அரசின் விளம்பரங்களை நம்பியே பொழைப்பை ஒட்டுகின்றன. லம்பான அமொண்டை இழக்க யாரும் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP