புதிய தலைமுறை முதல் ஆண்டு-இறுதிப பகுதி

>> ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012


புதிய தலைமுறை முதல் ஆண்டு-இறுதிப பகுதி


பொதுவா தமிழில் செய்தி சேனல்கள் என்பது ஒரு ஸ்ட்டி கேமரா முன் ஒருவர் அமர்ந்து செய்தியை பிராம்டில் வாசிப்பதும், கொஞ்சம் பைட் இருந்த போதும் சுமார் 20 நிமிட்த்திற்கு செய்தியை ஒப்பேத்திடர மனநிலை தான் நிலவி வந்தது. நான் செய்தி பிரிவில் உதவி ஆசிரியரை பணியில் இருந்தால் நன்றாகவே தெரியும்..இதை மீறீ நீங்க ஏதாவது கிரியேட்டிவ்வா வேலை செய்யலாம் என்று நினைத்தாலும் ஒன்று நிர்வாகம் ஒத்துவராது அல்லது விசுவல் எடிட்டர் ஒத்துவரமாட்டார். இது நிதர்சனம்.இந்த சமயத்தில் பரவலா முக்க்கிய ஊர்களுக்கு நிருபரை போட்டு அவங்களும் கொஞ்சம் நாலேஜ் கூட இருக்கிர மாதிரி ஆளை போட்டாங்க புதிய தலைமூறை .இதிலையும் எல்லோரும் கொஞ்சம் சின்ன வயதா இருக்கிர மாதிரி பார்த்திட்டாங்க.. காரணம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிரவங்க.. எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையில் சொல்வ்தையும் கேடகமாட்டாங்க.. அதனால தேவையில்லாத பிரச்சனை என்று அதை முன்கூட்டிய தவிரத்த்து அழகானவிசயம் ..விவரமான விசயமும் கூட.

இதுவரை செய்தி மொழி பொதுவா எழுத்து நடையாக தான் இருக்கும் வழக்கு மொழியாக இருக்காது. வழக்கு மொழியும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொருவிதமாக பேசுவார்கள். இது கொஞ்சம் பிர்ச்சனையான விசயமும் கூட.. பலரும் சொல்வாங்க வழக்கு மொழியை செய்திக்கு பயனபடுத்தனும் .. ஆனால் எந்த பகுதி வழக்குமொழியை பயன்படுத்தரது என்பது குழப்பமான விசயம். பிரச்சனையான விசயமும் கூட.இதை ந்டைமுறை படுத்த முயற்சி செய்தவகையில் இவர்களை பாராட்டலாம். ஆனால் விவரமாக இவர்கள் தேர்ந்தெடுத்த்து பேச்சு வழக்கு மொழி அல்ல. மிடில்கிளாஸ் மக்கள் பேசும் பொது மொழியை.பொதுவாக் தமிழகம் முழுவதும் மிடில்கிளாஸ் மக்கள் பேசுவதை ந்னறாக கவனித்தால் பெரும்பாலும் ஒரே மாதிரியாக தமிழும் ஆங்கிலமும் கலந்த பேச்சு இருக்கும் . அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள். அதுதான் இவர்களின் ஆடியன்ஸ் என்பதையும் முதலியே முடிவு செய்துவிட்ட்தால் இவரக்ளுக்கு வசதியாக போய்விட்ட்து.ஆனால் நடைமுறை படுத்தும்போது அதில் கோட்டை விட்டார்கள் என்பதே உண்மை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மொழி உச்சரிப்பலும் தேவையில்லாத சொற்களையும் பயன்படுத்தரது இவங்களிடம் நல்ல தெரியும்.
காட்சி ஊடகத்தை பொருத்தவரை பயன்படுத்த கூடாத சொற்கள் என்பது தான் முக்கியம். அதை இவர்களின் செய்தியாளர்களால் தவிர்க்க இயல்வில்லை. இதற்கு முறையான பயிற்சி கொடுத்தால் அல்லது ஒரு சிஸ்டம் கொண்டுவந்தால் இக்குறையை போக்கலாம்.
இப்படி போய்கொண்டுருக்கும் போது இவர்கள் கண்ணில் பட்ட்துதான் பள்ளிக்கரனை சதுப்புநிலம் தீப்பற்றி எரிந்த்து. அதை நன்றாக கவரேஜ் செய்தார்கள். ஆனால் அதை நல்ல விதமாக காட்டுகிறேன் என்று செம சொதப்பல் சொதப்பினார்கள். அதைவிட அதன் முக்கியதனமை அறியாத இவர்கள் அதன் பாலோப் செய்தியும் மக்களுக்கு வழங்கவில்லை. அதை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது மட்டும் அல்ல. தமிழக மீனவர்களின் பிரச்சனையிலும் இவர்கள் போதுமான கவரேஜ் அளிக்கவில்லை. அவ்வப்போது மற்ற செய்தி சேனலகள் சொல்வதுபோலதான் ஆட்டைய போட்டார்கள்.இதே தான் ஜெயலலிதாவின் பெங்களுர் வழக்கிலும் செய்தார்கள்.
சமீபத்தில் லண்டன் ஒலிம்பிக்கை சிறப்பாக வழங்குவதற்கு ரம்யாவை லண்டன் அனுப்பினார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அட்டகாசமான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள். தற்போது தமிழகத்தை கலக்கி வரும் கிரனை வழக்கிலும் இவர்கள் இதே மாதிரி தான் மக்களுக்கு பாவ்லா காட்டினார்கள். மற்ற கிரானைட் குவாரிகளில் விதி மீறினார்கள் என்று சொல்லிவிட்டு முக்கிய குவாரி அதிபரை பற்றிய செய்தியை மலுங்கடித்தார்கள்...இப்படி இவர்கள் ஆட்டைய போட்ட கதை பல உள்ளது.




கட்டுரை நீண்டு கொண்டே போவதால் இதை முடிப்போம்.இந்த முதல் ஆண்டில் புதிய தலைமுறை பொருத்தவரை செய்தி சேனல்களின் எண்ணத்தை மாற்றியதில் முக்கிய பங்கிருக்கிறது.ஆங்கில ஊடகங்களின் ஸ்டைலில் தர முயற்சி செய்கிறார்கள். ஆனால் அழகா இருந்த பத்தாது.. ஆரம்பத்திற்கு நல்ல இருக்கும் .. மக்களும் பார்ப்பாங்க.. நீண்ட காலம் அல்லது மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமரனும் என்றால் தரம் இருக்க வேண்டும் மக்களின் பிரச்சனைகளை குறிப்பாக அடிப்படை மக்களின் பிரச்சனைகளை நீண்ட விவாத்திற்கு உள்ளாகவேண்டும் . ஏன்னொனில் இப்போது பல செய்தி சேனலகள் வர இருக்கிறது.. ஏற்கொனவே GTV ம்ற்றும் சத்தியம் போட்டி போட களத்தில் உள்ளது . சத்தியம் ஓரளவு விளம்பரமும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே நெருக்கடி உள்ளது புதிய தலைமூறைக்கு. விரைவில் பாலிமரும் செய்தி சேனலில் களம் இறங்குகிறது.. ஆகவே புதிய தலைமுறை விடியலா... இல்லை ஓணம் பண்டிக்கை போடும் அவியலா என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும்.. 

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP