இஷ்டமான இட்லி!!

>> வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

பொதுவாக தமிழர்கள் அதிகம் உண்ணக்கூடிய மற்றும் இல்லத்தில் செய்யக்கூடிய உணவு இட்லி. ஆனால் நிதர்சனம் என்னவோ பெரும்பாலான இல்லத்தில் குக்கர் இட்லிதான். பாவம்/!!!! இட்லி பானைகள் எல்லாம் பழைய சாமானுக்கு எடைக்கு போட்டாகிவிட்டது.
தற்போது மாவு அரைப்பது கைக் கல்லில் இல்லை. இப்போது கல் கொண்ட கிரையண்டரில். பலரும் சொல்வது இரண்டும் கல் தானே.அதெப்படி ருசி கிடைக்காமல் போகும் என்று... கிரைண்டர் கல்லில் ஏற்படும் வெப்பம் காரணமாக மாவின் ருசி மாறிவிடுகிறது.
இவ்வகை மாவில் இட்லியை அலுமினிய பானை பயன்படுத்திசெய்தால் ஒரளவுக்கு சாப்பிட நன்றாக இருக்கும். ஆனால் அதே குக்கர் என்றால் அவ்வளவுதான். சில சமயம் பானையிலே இந்த வகை மாவை பயன்படுத்தும் போது பல்லிழித்து விடுகிறது. குக்கரில் சொல்லவே வேண்டாம்!!
இக்காலங்களில் சில இல்லங்களில் சமையல் செய்வதே பெரிய விசயம். அத்தகைய சூழலில் கையில் மாவு ஆட்டுங்கள் என்று சொன்னால்..... அவ்வளவுதான். ஆதாலால் முடிந்த அளவு தரமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்துங்கள். அளவும் சரியாக பயன்படுத்தினால் ஒரளவு தரமான ருசியான இட்லியை பெற வாய்ப்பு உண்டு. கடைகளில் கிடைக்கும் மாவு பெரும்பாலும் ரேசன் அரிசி மற்றும் உளுந்து தான்.இதில் விதி விலக்கு உண்டு.
மாவு தரமாக கிடைக்கு ..இடலி ருசிக்க...அரிசியும் உளுந்தும் குறிப்பிட்ட அளவு நேரம் தண்ணீரில் ஊறுவதும் மிக முக்கியம். பெரும்பாலான பெண்கள் தங்களின் சமையலை பற்றி ஏதாவது மாற்றுக்கருத்து சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் வெளியே அதை காட்டிக்கொள்ள வில்லை என்றாலும் கூட உள்ளுக்குள் பொறுமி தள்ளிவிடுவார்கள்.கொஞ்சம் உணவு விசயத்தில் பெண்களை அனுகும் போது எப்போதும் ஜாக்கிரதையாகவே இருங்கள்.!!!
பெண்களை பொறுத்தவரை சமையல் மற்றும் அதன் அறை என்பது அதிகாரத்தின் குறியீடு.சமையளில் குற்றம் சொல்வது என்பது ஒரு நாட்டின் சர்வாதிகரியிடம் சென்று அவன் ஆட்சியை பற்றி கருத்து சொல்வது போல....... தலை எப்படி தப்பிக்கும்?????

இப்படி தமிழர்களை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் செட் ஆகும். மனிதர்களின் ருசிக்கு ஏற்றபடி சர்க்கரையில் இருந்து மிளகாய் பொடி வரை ஆள் ஆளுக்கு மாறும். இதன் ஒரே பலம் எளிதில் ஜீரனம் ஆவதே!! ஆனால் தற்போது இதிலும் குஷ்பு இட்லி என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் இட்லி கொடுமை. ஒரே நாற்றமாக இருக்கிறது. பாவம் எப்படிதான் மக்கள் சாப்பிடுகிறார்களோ???
கடைகளில் ஸ்டீமரில் வேக வைக்கும் இட்லிகள் சப்பையாக இருக்கும்.இவை உள்ள சிறு சிறு ரவை போல கொஞ்சம் கடினமாக இருக்கும். இதை தண்ணிர் குடிக்காமல் சாப்பிடவே முடியாது என்பது என் அசைக்க இயலாத அனுபவம்.
பெரும்பாலோர் உணவகத்தில் முதலில் வாங்குவது ..அல்லது உண்பது இட்லி தான்.ஏன்???? வீட்டில் நன்றாக இட்லி கிடைக்காதவர்கள் உணவகத்தில் ...முயற்சிப்பார்கள். பாவமாக இருக்கும்..அவர்களை பார்ப்பதற்கு!!! கொடுமை ..கொடுமை என்று கடைசியில் கொடுமையிடமே மாட்டுவது என்பது இதுதான்.!!
இட்லிக்கு நல்ல காம்போ என்றால் ..சூடான இட்லிக்கு பொதின சட்னி. இது உணவகத்தில் தருவது செம மொக்கை.அது பொதினா சட்னி என்கிற பயங்கரவாதம்!!இதிதவிர இட்லி குருமா எனப்படும் தக்களி குருமா.இதில் இட்லியை ஊறபோட்டு சாப்பிடனும்.
நான் என்றாவது ஒருநாள் உண்வகம் தொடங்கினால்...அதில் கண்டிப்பாக இடம் பெறும் உணவு இந்த இட்லி குருமாவில் ஊறிய இட்லி.  சாம்பார் இட்லி இதன் அருகில் கூட வர இயலாது.
இதுதவிர தேங்காய் சட்னியில் கெட்டி மற்றும் தண்ணிர் வகை... தக்காளி கடையல், கத்திரிக்க கடையல்(பருப்பு போட்டது)... பாசிபருப்பு போட்ட சாம்பார் அல்லது முருங்கை காய் அல்லது இலை போட்ட சாம்பார்..இப்படி இடத்திற்கு ..மக்களின் கலாச்சாரம் ..பழக்கம் இப்படி பல விசயங்களை சார்ந்து இடத்திற்கு இடம் இட்லியின் காம்போவும் மாறிக்கொண்டே இருக்கும்.

இட்லிக்கு சட்னி சாம்பார் இரண்டும் தான் ஆப்ட்.அல்லது கறிகுழம்பு .இதிலும் சூட்சமம் உண்டு.. சட்னி என்றால் கெட்டி ..மித தன்மை....தண்ணீர் போல இருப்பது செமியாக இருப்பது பல வகைகள் உண்டு.இடலியின் பதத்தை பொறுத்து சட்னி இருக்கவேண்டும் இதே குஷ்பு இட்லிக்கு கெட்டி சட்னி வைத்தால் விக்கி கொண்டு தான் சாகனும்.குக்கர் இட்லிக்கும் இதே போல தான். இடலி குண்டானில் கிடைக்கும் வீட்டு மெது மெது இட்லிக்கு காலையில் கெட்டி சட்னியை விட தாளித்த கொஞ்சம் லிக்வீடாக இருக்கிர சட்னி ஆப்டாக இருக்கும் இதே மாலை என்றால் கெட்டி சட்னி ஆப்டாக இருக்கும்.

இதுதவிர என் பால்ய வயதில் அதாவது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நாம் வசிக்கும் வீதியில் ஏதாவது ஒரு வீட்டில் இட்லி சுட்டு விற்பார்கள்.அவர்களின் இட்லிக்கு தேங்காய் சட்னி தருவார்கள். அது தண்ணிர் போல தான் இருக்கும் வெள்ளையாக...ஆனால் என்ன ருசி..அது போல இதுவரை எந்த உணவகத்திலும் சாப்பிட்டது இல்லை. அது ஒரு கனாக் காலம்.

 அசைவத்தில்..என்ன கேள்வி இது... குடல் கறி.இதில் இடலிக்கு அசைவ குழம்பு தண்ணீர் மாதிரி இருந்தால் ஊறபோட்டு அடிக்கலாம்...சாம்பார் என்றால் காயக்றிகள் போடாத சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் தான் செம காம்போ!! இது தவிர கத்திரிக்காய் போட்ட சாம்பாரும் நல்ல இருக்கும் ஆனால் இது போன்ற சிற்றுண்டிகளுக்கு சாம்பார் செய்யும் போது காய்களை சின்ன சின்னதாக நறுக்கி போட வேண்டும்.அது தனித்த அனுபவத்தை கொடுக்கும்!!

என் இல்லத்தில் இட்லியை பொறுத்த வரை பயன்படுத்துவது இட்லி பானை தான்.அத்திபூத்தார் போல குக்கர்!! இட்லி பானை இட்லிக்குதான் பாசிபருப்பு சாம்பார் கலக்கலாக இருக்கும் குக்கர் இட்லிக்கு முயற்சிக்க வேண்டாம்.இந்த சாம்பார் செய்யும் போது தேங்காய் சட்னியை தவிருங்கள். இரண்டையும் கலக்காதீர்கள். ருசி கிடைக்காது. மற்றவகை சாம்பாரையும் தேங்காய் சட்னியும் கலந்தால் இரண்டும் கலந்த கலவையில் இட்லி தொட்டு சாப்பிடுவது ...அலாதியான ருசி!!
அதே போல் பாசிப்பருப்பு சாம்பாரில் பூண்டு கருவேப்பிலை போன்ற வற்றை அப்படியே போடுங்கள். பூண்டை உரித்து தட்டிபோடாதீர்கள்.தக்காளியும் இதில் துண்டுகளாக போடுங்கள் .சீரகம் ,சிறிது பெருங்காயத்தூள் எல்லாவற்றிலும் கலந்த தக்காளி துண்டுகளை சாப்பிடுவது ....நாக்கில் உமிழ்நீரை சுரக்க வைக்கும்!!
அதுவும் ஒரு துண்டு இடலியுடன் அலவா துண்டு போல வெந்த முழுப்பூண்டும் தக்காளியும் பாசி பருப்பும் சேர்ந்த கலவை நாக்கில் விழுந்தவுடன்.......அந்த ருசி நாக்கின்பட்ஸிகளில் உணர்ந்து மூளைக்கு போகும் போது..அதை உணரும் தருனம்.....நீஙக்ள் ஜென் துறவியாய் இருப்பீர்கள்


Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP