மொளன வசந்தம்!

>> வெள்ளி, 20 ஜூலை, 2012

மொளன வசந்தம்!


ஜூன் 5,உலக சுற்றுச்சூழல் தினம். 1973 முதல் வருடந்தோரும் தவறாமல் உலக முழுவதும் கடைப்பிடித்து வரும் நாள்.சுற்றுச்சூழலில் அவசியத்தை வலியிறுத்தும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது.ஒவ்வொருவருடமும் ஒரு நாடு என்ற முறையில் கடந்த வருடம் இநதியா சிற்ப்பித்த்து. இந்த வருடம் பிரேசில் இதை ”பசுமை பொருளாதராம்” என்ற கருத்தில் முன்னெடுத்து செல்கிறது.

கண்காட்சிகள்,பரப்புரைகள்,போட்டிகள் போன்று பலவகையில் இதை முன்னெடுத்து சென்றாலும் மாறாத மனிதர்கள் முன் அவை உழக்கரிசி அன்னதானம் விடிய விடிய மேளதாளம் கதைதான்.

120 கோடி மக்கள் தொகை,உலகின் 7 வது மிகப்பெரிய நில அமைப்பு 3.28 மில்லியன் ச.கிலோ.மீ பரப்பளவை கொண்ட நம் நாட்டில் போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா என்றால் .. கேள்வி மட்டுமே மிஞ்சும்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் எல்லாம் சூழலியர்கள்!மிருக காட்சிசாலைக்கு பார்வையிடுபவர்கள் எல்லாம் இயற்கையின் மேல் பற்றுகொண்டவர்கள் என்ற சூழல் தான் இங்கே உள்ளது.

மூன்றில் ஒரு பங்கு காடு இருக்கவேண்டும் என்பதற்காக கண்படும் இடமெல்லாம் மரம் வைப்பவர்களுக்கு தெரிவதில்லை காடு என்பது உருவாக்கமுடியாதது என்பது!!.அதிகரித்து வரும் நகரமயமாக்கலில் மரம் நடுவதால் ஏற்பட போகும் விளைவுகளை இவர்கள் அறிவதில்லை.
நாம் பயன்படுத்தும் வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களில் இருந்து வெளியேறும் கரிமில வாயுவை குறைத்தாலே அதிக புண்ணியம் உண்டு இவர்களுக்கு.

கட்ந்த 10 ஆண்டுகளில் தமிழனின் அசராத கனவான வீடு என்பதன் உச்ச விளைவுதான் மணற்கொள்ளை.சாலை வராத கிராமம் எத்தனையோ உண்டு தமிழ்நாட்டில் .ஆனால் மணற்கொள்ளைக்கு வசதியாக சாலை போடாத ஆறு இல்லை இன்று.அண்டை மாநிலங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட இவ்விசயம் தமிழ்நாட்டில் மட்டும் சாதி மதம் கட்சி என்ற எந்த பாகுபடும் இன்றி கனஜோராக நடக்கிறது.
களிமண் தெரிய சுரண்டப்பட்ட ஆறுகளில் இனி எப்படி தண்ணீர் சுத்தமாக இருக்க போகிறது?? தண்ணீர் எப்படி இருப்பு இருக்கும்? 3 டன் நுண்ணியிர்கள் கலந்த மண் 1 டன் தண்ணீரை இருப்பு வைத்திருக்கும். தினம்தோரும் தாமிரபரணி ஆற்றில் 5 டன் மணல் எடுக்கப்படுகிறது. ஒரு ஆற்றுப்படுகையில் மட்டுமே!! தமிழ்நாட்டில் 33 ஆற்றுப்படுகைகள்!! மீதியை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்!!

தண்ணீருக்காக அணடை மாநிலத்தில் கையேந்திக் கொண்டிருக்கும் அப்ல நிலையில் ,பேராபத்தை நாமே விருந்து வைத்து அழைத்துக் கொண்டிருக்கிறோம். தாமிரபரணி ஆற்றோரம் மட்டும் 1 லடசம் தென்னை மரங்கள் பட்டுப்போய் 50,000 பேர் வாழ்வாதரத்தை இழந்துள்ளனர்.ஏற்கனவே மாத பட்ஜெட்டில் இடம் பிடித்து விட்ட குடிதண்ணீர் சத்தம் இல்லாமல் மக்களின் மனிப்பர்சை பதம்பார்த்து வருகிறது.

தேரைகள் திரண்டு பாம்பை வளைச்ச கதையாய் சாயப்பட்டறை அமிலத் தண்ணிரும் தோல் கழிவுகளும் கலந்து அத்தண்ணீரை எந்தப் பயனபாட்டுக்கும் உதவாதாக மாற்றுகிறது.நொய்யலும் ஆம்பூரும் சொன்ன சேதிகள் மனிதர்களுக்கு புரிவில்லை போலும்.வளரும் நாடுகளில் 37 வகையான உயிர்கொல்லி நோயகளில்21 தண்ணீர் சமப்ந்தப்பட்டவை.
செந்நிறமாய் கழிவு கலந்த நீரைப்பயன்படுத்தி வரும் விவசாய பொருட்களும் நஞ்சாகிறது. அதை உண்ணும் மனிதர்களுக்கு அது பரவி புதுப்புது வியாதிகளும் மலட்டுத்தன்மையும் அதிகரித்து வருகிறது.

இதுபத்தாது என்று நிருவனங்களும் போட்டி போட்டிக் கொண்டு மலைகளை உடைத்து காடுகளை அழித்து நீரின் ஆதாரத்தை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.சோலா காடுகளின் மகிமை தெரியாத அதிபர்கள்!!அதில் வாழும் உயிரின்ங்களையும் அழித்து மனித இனத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக சவப்பெட்டி செய்துகொண்டு இருக்கிறார்கள் நவயுக பொருளாதார நிபுனர்கள்!!

அறிவியல் நிபுனர்களோ புரட்சி என்ற பெயரில் வேதியியல் உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தில் புகுத்தி விட்டனர். அதன் நச்சுத்தன்மையை இப்போது எல்லா உணவுகளிலும். விளைவு இன்று நிரழிவு தேசமாய் மாறிக்கொண்டிருக்கிறது தேசம்.டைப் 1 என்ற வகை நிரழிவு நோய் இளைஞர்களை நோயாளிக்கியது தான் மிச்சம்.

இன்று ந்ம்மிடையே ஒன்றுகலந்துவிட்டன பூச்சி கொல்லிகள்.நாம் அறியாம்லே நாம் நஞ்சுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.இவ்வுல்கத்தில் படக்கப்பட்ட அத்தனை உயிர்களும் ஒர் அர்த்த்துடனே உள்ளது அச்சங்கிலி உடைபடும்போது அத்துடன் மடியப்போவது நாமும் தான்.. !
அதிகரித்து வரும் வெப்பம் ,உருகும் பனிக்கட்டிகள்,அதிகரிக்கும் கடல் நீர் மட்டம் எல்லாம் ஓசோனில் நாம் போட்ட ஓட்டையின் விளைவு.அடுத்த பத்தாண்டுகளில் அதிகரிக்கும் கடல்மட்ட்த்தால் நாம் பல கிலோமீட்டர் பரப்பை நாகப்பட்டினத்தில் இழக்க இருக்கிறோம். நிலத்தடி நீர் உப்பு நீரை மாறி எதற்க்கும் பயன் அற்றுப்போயவிடும். அம்மக்களின் வாழ்வாதரம்????
கட்ந்த 20 ஆண்டுகளில் அதிகரித்த பம்பு செட்களால் (சுமார் 18 ல்டசத்திற்க்கும் மேல்)நிலத்தடி நீர் நம்பிக்கையற்ற் தூரத்தில்!தமிழ் மன்னர்கள் வரலாற்றில் எத்த்னையோ போர் புரிந்துள்ளார்கள் .ஒரு மன்ன்ன் கூட ஏரிகளையோ குளத்தையோ அழித்த்தாக வரலாறு இல்லை. இக்காலமோ வேறு மாதிரியாக இருக்கிறது.

சோழர் காலத்தில் உருவான் வீராணம் ஏரியின் கொள்ள்லவு பல் நூற்றாண்டுகளாக குறையவில்லை.1000 ஆண்டுகாளில் நம் முன்னோர்களால் செய்ய முடியாத்தை நாம் 50 ஆண்டுகளில் செய்திருக்கிறோம்.1923 லில் வீராண்ம் ஆற்றின் கொள்ள்ளவு 41 மி.க.மீ. தற்போது.25 மி.க.மீ.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!!
நகர்புறங்களில் ஏதோ ஒரு காரணம் சொல்லி அதிகம் ஆக்கிரமிப்படுவது ஏரிகள் தான்.கேட்க யாரும் இல்லாதால்!!மதுரையில் மட்டும் 33 பெரிய மற்றும் சிறிய ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.!!
நிலமும் அதில் கிடைக்கும் நீரும்தான் அங்குள்ல உயிர்கலையும் அவற்றின் வாழ்வையும் முடிவு செய்கின்றன.இந்த அடிப்படையில் தான் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெயதல் ,பாலை என நிலத்தை ஜந்தினைகளாக பிரித்து இயற்கையோடு இனைந்து வளமாக வாழ்ந்தார்கள். இதை மறந்தால் வெறும் பாலையாக போய்விடும் தமிழகம்!!!


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP