நூற்றாண்டின் மனிதன்!

>> வியாழன், 19 ஜூலை, 2012

நூற்றாண்டின் மனிதன்!

க.நா.சுப்ரமண்யம்(1912-1988)

“உலக நாவல் பாரம்பரியம் மிகவும் பரவலானது.விரிவானது.அந்த நூல்களில் பலவும் தமிழ் மொழியில் நாவல் எழுத விரும்புவர்களுக்கு முன்னுதரனமாக மொழிபெயர்ப்பில் வரவேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.அப்போதுதான் தமிழ் நாவல் வளமும் பெருகும்”......க.நா.சு.
2012 ஆம் ஆண்டு நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஒர் இயக்கமாக செயல்பட்ட க.நா.சுவின் நூற்றாண்டு.நாம் போற்றிப் பெருமிதம் கொள்ள வேண்டிய மகத்தான் உழைப்பு இவருடையது.நவீன தமிழ் இலக்கியப் பிராந்தியத்தின் எல்லைகளை விருவுபடுத்திய சக்தி.தார்மீக உந்துதலோடும் சலிக்காத செயல் வேகத்தோடு மேன்மையான அக்கறைகளோடும் செயல்பட்டு தமிழ் இலக்கியச் சூழலின் இருபது ஆண்டுகளை (1945-65) நிர்மாணித்த மேதை இலக்கிய வாழ்வை கடும் தவமென மேற்கொண்ட ஞானி.

நவல்,சிறுகதை,கவிதை,விமர்சனம்,கட்டூரைகள்,அறிமுகங்கள்,கதைச் சுருக்கங்கள், மொழிபெயர்புகள்,சிறு பத்திரிகை இயக்கம் என அமைந்த முழுநேர இலக்கிய வாழ்வு இவருடையது.க.நா.சுவின் எண்ணமும் சிந்தனையும் அக்கறையும் உத்வேகமும் நோக்கமும் நம்பிக்கையும் எவ்வளவு மேலானதாக செயல்பட்டிருக்கினறன என்பதற்க்கு அவருடைய மொழிபொயர்ப்பு முயற்சிகள் மட்டுமே போதுமானவை.உலக இலக்கியத்தின் கணிசமான மொழிபொயர்ப்புகள் மூலம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்ததிலும் வாசக தரத்தை மேம்படுத்துவதின் மூலம் சூழலில் ஒர் எழுச்சியைத் தோற்றுவிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நவின படைப்புகள் பற்றியும் படைப்பாளிகள் பற்றியும் அயராது அறிமுகப்படுத்துவதில் காட்டிய முனைப்பிலும் இவருடைய பங்களிப்பு தனித்துவமானது.பிரமீப்பூட்டக் கூடியது.

“உலகத்துச் சிறந்த நாவல்கள்என்ற நூலில் பதினைந்து முக்கியமான நாவலகளைக் கதைச் சுருக்கத்தோடும்,அதன் சிறப்பு குறித்த அறிமுகத்தோடும் ,படைப்பாசிரியர் பற்றிய குறிப்போடும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.புகழ் பெற்ற நாவலகள்என்ற தலைப்பில் இரு நூல்களைத் தந்திருக்கிறார்.முதல் தொகுதியில் 33 நாவல்களும் இரண்டாம் தொகுதியில் 25 நாவலகளும் அறிமுகப் படுத்தப்பட்டுருக்கின்றன. “ஜரோப்பிய சிறுகதைகள்என்ற நூலில் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளோடு 18 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

இவை தவிர க.நா.சு இருபது நாவல்களைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.ஆந்திரோ ழீடு,ரோஜர் தூ,மார்டின் கார்டு,ஜார்ஜ் ஆர்வெல்,நட் ஹாம்சன்,ஸெல்மா லாகர்லெவ்,பேர்லாகர் குவிஸ்ட் போன்றொரின் மகத்தான படைப்புகளைத் தமிழுக்கு களம் சேர்க்கும் பொருட்டு தந்திருக்கிறார்...

  ஒர் இலட்சிய நோக்கோடு அவர் மேற்கொண்ட பிராயாசைகள் தமிழ்நாவல் பரப்புக்கு வளம் சேர்த்திருக்கினறன. க.நா.சு மொழிபெயர்க்க மேற்கொண்ட தேர்வுகளும் மிக முக்கியமானவை. அலாதியானவை. ஜரோப்பியாவில் உள்ளடங்கிய ஸ்காண்டிநேவியப் பிரதேசங்களான ஸ்வீடனும், நார்வேயும், இலக்கிய உலகில் ஒர் எழுச்சிமிக்க மாற்றுப் போக்கினை ,பிரான்ஸ் ,ஜெர்மணி,இத்தாலி,ஸ்பெயின் ஆகிய நாடுகள் உருவாக்கிய நவீன இலக்கிய போக்கின் மைய நீரோட்ட்த்துக்கு எதிராக உருவாக்கின. .அன்பு ,காதல்,ஆன்மா,வாழ்வின் அர்த்தம் குறித்த மனிதனின் தேடல் என வாழ்வின் நித்திய உண்மைகள் சார்ந்து நவீன செவ்வியல் படைப்புகளை உருவாக்கிய ஸ்வீடனின் ஸெல்மா லாக்ர்லெவ், போர்லாகர் குவிஸ்ட்,நார்வேயின் நட் ஹாம்சன் போன்ற படைப்பாளிகள் இவருடைய தேர்வில் ஆள்மை செலுத்தியிருப்பது மிகவும் விசேஷமானது.

க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர்.எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தெர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தவர்.

க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில்,பொய்த்தேவு,அசுரகணம் முதலான பல நூலகள் முக்கியமானவை.பிற நாவல்கள் பசி,ஏழு பேர்,ஒரு நாள்,வாழ்ந்தவர் கெட்டால்,ஆட்கொல்லி,பெரிய மனிதன்,அவரவர் பாடு,மாதவி,கோதை சிரித்தாள்,பித்தப் பூ,தாமஸ் வந்தார், அவதூர். .ஆகியன.

1986 ஆம் ஆண்டு சாகிதய அகதாமி பரிசு பெற்றவர்.தமிழக அரசின் விருது,குமரன் ஆசான் விருது போன்றவைகளால் கொளரவிக்கப்பட்டவர்.
1988 ஆம் ஆண்டு டிசம்பர் 16 இல தில்லியில் மறைந்தார்.
காலம் கட்ந்தும் எழுத்தால் வாழும் இப்படைப்பாளுமையின் நூற்றாண்டை நினைவுகோரும் விதமாக அவரது படைப்புகளை வாசிப்பதே, நாம்  அவருக்கு செய்யும் உச்சபடச மரியாதை என்றே கருதுகிறேன். 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP