சாம்பார் வடையும் ...தேங்காய் சட்னியும்!!

>> சனி, 7 பிப்ரவரி, 2015

உளுந்து வடை.. தேங்காய் சட்னி....உளுந்து வடை சைஸ் ரொம்ப முக்கியம் உள்ளங்கை அளவுக்கு தான் இருக்கவெண்டும்.அதைவிட எக்காரனம் கொண்டும் பெரியதாக செல்லத்தேவையில்லை.இதை விசேங்களின் போது தலைவாழை இலையில் வைத்தாலே அந்த இலைக்கு ராயl லூக் !. அதை பார்க்கும் போதே அந்த சாப்பாடு எப்படி இருக்கும் என்று தெரிந்துவிடும்.
நம்மூரில் இப்போது எல்லாம் இதன் சைஸை மிகவும் சிறியதாக்கி விட்டார்கள்.அதுவும் உளுந்து வடை வைக்காமல் ஏதே ஒரு பட்சனத்தை வைக்கும் போதே புரிந்து விடும். இன்னிக்கு வயிற்றுக்கும் நாக்குக்கும் துரோகம் செய்துவிட்டோம் என்பது.திருமணம் ஆகாதவர்கள் .மற்றும் .திருமண வயதில் குழந்தைகள் உள்ளவர்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சமையல் காரரிடம் குறிப்பாக கேளுங்கள். என்ன வகை வடை...என்ன சைஸ் ..இன்னபிற வடையின் அங்க லட்சணங்களை!!..

இதை படித்த பிறகாவது சாப்பிடவருகிறவரக்ளின் மனநிலையை தெரிந்துகொள்ளுங்கள் .புரிந்துகொள்ளுங்கள். கோடி புண்ணியம் கன்பார்ம்!!!

இப்போது எல்லாம் இல்லங்களில் உளுந்துவடைக்கு என்று மாவு அரைப்பதில்லை.எல்லாம் ரெடி மிக்ஸ் மயம் .செம கடுப்பாக இருக்கிறது,பார்க்கவே பாவமாக!! அதுவும் சமீபத்தில் உண்ட உளுந்துவடையை நினைத்தால் ...அய்யோ அது ஒரு கொடூர கனவு என்று என்னையே சமாளித்துக்கொண்டேன்!.
பெரிய வகை உளுந்துவடைக்கு  தேங்காய் சட்னி என்பது ரொம்ப கெட்டியாக இருக்ககூடாது . ஆனால் கரண்டியில் இருந்து எடுத்து வைக்கும் பக்குவத்தில் இருக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் ஊற்றும் பக்குவத்தில் இருக்ககூடாது.

பச்சைமிளகாய் கலந்து நேகாக அல்லது கொஞ்சம் ட்ரையாக இருந்தாலும் கூட அருமையான பக்குவம்.கூடவே மல்லி இலை பிளவரும் இருக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் சில இடத்தில் வைக்கும் இனிப்பான சட்னியாக இருந்தால் உளுந்து வடை அனுபவம் அன்று கர்ண கொடூரம் ஆகிவிடும்.இந்த வகை பெரிய வடைகளை பிட்டு பிட்டு தான் சாப்பிடனும் .அப்படியே எடுத்து அவசரத்தில் வாய்க்கு கொண்டு போயிராதீரக்ள்.அனுபவம் மிஸ்!!அதுவும் இல்லாமல் பக்கத்தில் இருப்பவர் பயந்து தெரிந்துவிடுவார்!
உளுந்து வடை சாப்பிடும் போது ஒரு வாய் தேங்காய் சட்னி...இன்னொரு வாய் சாம்பார் தொட்டு தொட்டு சாப்பிட ...அவ்வப்போது வடையை சாம்பாரில் துவைத்து சாப்பிடகொடுத்து வைத்திருக்கவேண்டும். முன் ஜென்மத்தில் பரம்பரையில் யாரோ செய்த புண்ணியம். அருகே யார் அமர்ந்திருந்தாலும் மறக்கப்படும். ஆம் சொர்க்கத்தில் இருப்பீங்க..!!

உளுந்து வடைக்கு சாம்பாரை தொட்டு சாப்பிடுவது ஒரு வகை என்றால் சாம்பாரில் ஊறப்போட்டு அடிக்கும் மஹா ஜனங்கள் இந்நாட்டில் பெரும்பாலோர் உண்டு.அதுவும் காலையில் உணவகம் சென்றால் சாம்பார் வடை கட்டாயம் உண்டே தீரவேண்டும் என்று வாழ்நாள் சபதம்  எடுத்தவர் பலர் உண்டு. அவ்வளவு பர்பக்ட் காம்போ இது.
சாம்பாரில் பல வகை உண்டு.அதை தனியே பார்ப்போம்.டிபனுக்கு வைக்கும் சாம்பாருக்கும் சாதத்திற்கு வைக்கும் சாம்பாருக்கும் வானமும் பூமியும் போல!!
டிபனுக்கு வைக்கும் சாம்பாரில் தான் வ்டையை போடுவாரக்ள். இதிலிரண்டு வகை உண்டு. ஒன்று உளுந்து வடையை சுடு தன்னீரில் ஊற வைத்து அது நன்றாக ஊறிய பிறகு அதை தண்ணிரில் இருந்து எடுத்து அதன் மேல் சாம்பாரை ஊற்றுவது.வடை ஏற்கனவே நன்றாக ஊரியிருக்கும் .சாம்பார் அதனுடன் இரண்டர கலக்க ..அந்த பிளாவர் இரங்க சுமார் 10 நிமிடம் போதும். வடை சும்மா பஞ்சு போல இருக்கும்..
இரண்டாவது வடையின் மேல் நேரிடையாக சூடான சாம்பாரை ஊற்றுவது. இதற்கு சாம்பாரில் வடை நன்றாக ஊற கொஞ்சம் நேரம் பிடிக்கும் .குறைந்த பட்சம் 30 நிமிடங்கள்விட்டால் தான் நன்றாக வடை சாம்பாரில் ஊறும் இல்லையென்றால் வெளிப்புறம் மட்டுமே சாம்பார் ஊறி உள்ளே வடயின் மைய்யப்பகுதி ஈரத்துடன் இருக்கும் . அதை சாம்பாருடன் கலந்து சாப்பிடுவது என்பது தொட்டு சாப்பிடுவதை போல தான்.
இதில் மிக முக்கியம் சாம்பாரின் பக்குவம்.அதிகம் தண்ணிர் போல் இல்லாமல் ..அதே சமயம் ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் மித தன்மையில் இருக்கவேண்டும்.அப்போது தான் வடை ஊறவும் வேண்டும் அதே நேரத்தில் வடை சாம்பாரில் உள்ள நீரை உறிஞ்சியபிறகும் சாம்பார் கெட்டியாகமல் இருக்கவெண்டும். அதுவும் சின்ன வெங்காய பிளைன் சாம்பார் அல்லது முருங்கை கீரை சாம்பார் அல்லது முருஙகாய் சின்ன சின்னதாக வெட்டி போட்டு சாம்பார் தான் ருசியாக இருக்கும் வடைக்கும் ஆப்டாக இருக்கும். இதன் மேல் பெரிய வெங்காய துண்டுகளை போட்டு சாப்பிடுவது சிலருக்கு பிடிக்கும்.கூடவே இரண்டு சொட்டு நெய் விட்டு சாப்பிடுவது மணமாக இருக்கும்.சிலருக்கு மட்டுமே இந்த பிளவர் பிடிக்கும். காரணம் நெய் விட்டால்...சாம்பாரின் உண்மையான ருசி கிடைக்காது.அந்த ருசி தனி!!
உணவகங்களில் பெரும்பாலும் வடையில் நேரடியாக சாம்பாரை ஊற்றி அதன் மேல் கொத்த மல்லி இலைகளை தூவி வைத்துவிடுவார்கள். அதே போல சாம்பார் வடை பெரும்பாலும் விசேஷஙக்ளில் இடம் பெறாது
இது காலையில் தான் பெரும்பாலும் விரும்பப் படுகிறது .மதிய நேரத்தில் சாததிற்கு பதிலாக லைட் டிபன் செய்பவர்கள் அல்லது 11 மணியளவில் சிறு சிற்றுண்டி சாப்பிடுபவர்கள் விருப்பத்திலும் இதற்கு இடம் உண்டு.
இது இப்படி என்றால்...உளுந்துவடையும் தயிரும்... என் ஆல்டைம் பேவரிட்....

தொடரும்...


Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP