வடை, போண்டா,பஜ்ஜி.

>> ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

வடை ,போண்டா ,பஜ்ஜி.... தென் இந்தியாவின் புகழ்மிக்க அடையாளஙக்ளில் ஒன்று.இதை உண்ணாதவர்கள் இருக்க இயலாது.எப்போது முதன் முறை இந்த வகை பலகாரஙக்ளை ருசித்தேன் என்று ஞாபகம் இல்லை.பெரும்பாலோருக்கும் இருக்காது .”வடை போச்சே” என்கிற வசனம் வரும் அளவுக்கு தமிழர்களின் வாழ்வோடு இரண்டர கலந்தது.


உண்மையில் வடைக்கு இயேசுக்கு நிகரான வரலாறு கொண்டது.ஆமாங்க 2000 வருட வாரலாற்றை கொண்டது.கி.பி.920-ஆம் வருஷம் தேதியிடப்பட்ட கன்னட புத்தகமான சிவகோட்யச்சர்ய என்ற நூலில் இட்லி மற்றும் வடை பற்றிய குறிப்பு இருக்கிறது. அதன் பிறகு கி.பி.1130-ஆம் ஆண்டில் சம்ஸ்கிருத புத்தகமான மானசலோல என்ற புத்தகத்திலும் வடை தயாரித்தல் குறித்த குறிப்பு இருக்கிறது. இடைச்சங்க காலங்களான கி.பி.100-300-ஆம் ஆண்டுகளில் இட்லி-வடை முதற்கொண்டு மீன் வகைகள் வரை சமைத்து உண்டதை பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன.
மிக முக்கியமாக "தேமல பட்டுவா" என்ற சிங்களத் தமிழர் உருவாக்கிய உணவென்றும் நம்பப்படுகிறது.

தமிழ்நாட்டின் தேசிய உணவாக அறிவிக்கலாம் வடையை. ஊருக்கு ஊர் பகுதிக்கு பகுதி என்று பலவெறு வகை வடைகள் உள்ளது.ஆனால் புகழ்பெற்றதோ ...உளுந்துவடையும் பருப்பு வடையும்.அனுமனுக்கு படைப்பதில் இருந்து கல்யாணம் காது குத்து என்ற தமிழனில் வாழ்வில் பின்னி பினைந்து உள்ளது.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் வடை என்பது ஐந்து பைசா ..பத்து பைசா. பெரும்பாலும் வடை கடைகளில் வாங்கமாட்டார்கள். வீட்டில் சுடுவார்கள்.என் நினைவு தெரிந்து அரிதாக சாப்பாடுக்கு தொட்டுக்கொள்ள வாங்கி வருவார்களே தவிர தற்போது போல சிற்றுண்டியாக உண்ணும் அளவுக்கு கிடையாது..

தேநீர்க்கடைகள் அதிகம் ஆக ஆக அக்கடைகளில் மக்களை கவர கூடுதலாக சில கடைகளில் மட்டுமே பலகாராம் போட ஆரம்பித்தாரக்ள்.அதுவும் வடையும் பஜ்ஜியும்.எனக்கு விவரம் தெரிந்து உருளைக்கிழங்கு போண்டா எல்லாம் பிற்பாடுதான்.
பள்ளி காலங்களில் அதாவது  எட்டாவது வரை பயின்ற காலங்களில் இரண்டு கடைகள் மிகப்பிரபலம். ஒன்று தாலுக்க ஆலுவலகத்தில் இருந்த கடை..பிறகு ராசி டீக்கடை.காலை வேளையில் பள்ளிகளின் டீ டைமில் ஆசிரியைகளுக்காக டி யூம் ஆணியன் போண்டாவும் வாங்கி வருவோம். அந்த தாலுக்க ஆலுவலக கடை செம கூட்டமாக இருக்கும் அப்போது அந்த போண்ட போட்ட பிற்கு தூள் இருக்கும்....அதை அந்த மாஸ்ட்ரிடம் கேட்டு இலவசமாக சாப்பிடுவது என்பதே பெரிய விசயம். அப்போது எல்லாம் 5 அல்லது 10 பைசா கிடைத்தாலே கொண்டாட்டம்.அதற்கு பிறகு சில ஆண்டுகளில் ஸ்டேட்பாங் ரோட்டில் உள்ள ராசி டீக்கடை பிரபலம். வடையும் கலக்கலாக இருக்கு இதே நேரத்தில் கச்சேரி ரோட்டில் இருக்கும் ஒரு கடையும் பிரபலம்..இன்னும் அந்த கடை பிரபலம் தான். ராசி டீக்கடை இப்ப்போது டிபன் எல்லாம் போட ஆரம்பித்துவிட்டர். தாலுக்க கடை தற்போது இல்லை.

இதில் ராசி டீக்கடை என்பது இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடம். ஆம மகளிர் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் இந்த வழியாக தான் செல்லுவார்கள்.காலையில் சைட் அடிக்க்க கூட்டம் கூடு நிற்கும்.தங்களின் காதலிகளை காண பல காளைகள் காலையில் தவம் இருக்கும்.பல கடிதஙள் கைமாறும்.இதில் அங்கே இருக்கும் பல பெரிசுகளுக்கு பிடிக்காது.அவ்வப்போது காவல்துறையில் போட்டுக்கொடுத்துவிடுவாரக்ள். திடிரென்று ஒருநாள் போலிஸ் மப்டியில் வரும்.கிடைக்கிர ஆளுக்கு அன்று செம மாத்தாக இருக்கும். இதில் என்ன பாவம் என்றால் காதலில் ..பெண்கள் விசயத்தில் கில்லாடிகள் ..காதலர்கள் மாட்டமாட்டார்கள். அவர்களுக்கு எப்படி தப்பிப்பது என்பது நன்றாக தெரியும்.எஸ்கேப் ஆகிவிடுவாரக்ள்.இந்த அல்லகைகள் ..இளிச்சாவாயன்கள் .....காதலிக்காதவர்கள்....ஆர்வக்கோளருகள் தான் மாட்டிக்கொல்லும் ...பாவமாக இருக்கும் ...தெரிவிலேயே அடி விழும். ராசி டீக்கடைகாரர் அவ்வப்போது போட்டுக்கொடுத்துவிடுவார்....சரி வடைக்கு வருவோம்...
பள்ளி காலங்களில் கருங்கல்பாளையம் காமராஜர் முனிசிபல் பள்ளிக்கு வெளியே பல கடைகள் இருக்கும். அதில் ஒரு கடையில் உருளைக்குழங்கு போண்டா போடுவாரக்ள் 50 பைசா என்று நினைக்கிறேன். சின்னதாக இருக்கும்.மேலும் டீ டைமில் போய் சாப்பிடுவோம்/ஆறிப்போனதாக இருந்தாலும் சுவையாக இருக்கும்.

பொதுவாக 20 ..25 வருடங்களுக்கு முன் இந்த பாக்கெட் மணி கலாச்சாரம் எல்லாம் இல்லை. எனக்கு விவரம் தெரிந்து எட்டாவது வரை கூட காசு தரமாட்டாங்க. மாதம் ஆனால் வீட்டில் சம்பாதிப்பவர்கள் சம்பளம் வாங்கிய கையோடு அந்த வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கு குழந்தைகளுக்கு தீனி வாங்கித்தருவார்கள்.அல்லது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ருபாய் தருவார்கள்.அதையும் நாம் போய் கடைக்கு பொருள் வாங்கி சாப்பிட முடியாது.தாத்தாக்கள் தான் கூட்டிப்போய் வாங்கித்தருவார். அதனால் அப்பொழுது எல்லாம் கடையில் போய் வாங்கிச்சாப்பிடும் அளவுக்கு ஒரு மண்ணாகட்டியும் தெரியாது. 9 வது 10 அபடிக்கும் போதுதான் வெளியில் சாப்பிடும் அனுபவம்.அதற்கு முன்னால் ஏதோ அத்தி பூத்தார்போல் வாய்ப்பு கிட்டும். அப்போதும் என்ன சாப்பிடவேண்டும் எல்லாம் தெரியாது.முன்ன பின்ன போய் இருந்தால் தானே!!

11 வது 12 வது படிக்கும் போது ஒரளவு வெளிப்பழக்கங்கள்..நண்பர்கள்..இப்படி அமைவதால் வெளியே உண்ணும் சாமார்த்தியம் கிடைக்கிறது .கையிலும் கொஞ்சம் கிடைக்கும்....இப்போது தான் பொதுவாக இந்த வகை சிற்றுண்டிகள் சாப்பிடும் பழக்கமும் தொடங்குகிறது

ஒரளவு ப்ரீயாக இருப்பது என்பது கல்லுரி காலம் தான் .கையிலும் காசு புழங்கும்.கொஞ்சம் ஊர் சுற்றவும் ஆரம்பிக்கும் காலம். இக்காலத்தில் தான் ஆண்கள் ரொம்ப எஞ்சாய் செய்யர காலம்.சரி மேட்டருக்கு வருகிறேன்.கல்லூரியில் எதிர்த்தாப்பில் மூன்று நான்கு கடைகள் இருக்கும் அதில் ஆயா கடைத்தான் எங்களுக்கு கலக்கல். அங்கே சமோசா கிடைக்கும். அதைவிட கல்லூரி கேண்டினில் பஜ்ஜி கிடைக்கும் .காலை நேரத்தில் வடை போடுவார்கள். அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இருக்காது.

 புகைப்படம் “இனையம்.
தொடரும்

Read more...

முகனூல் நாட்குறிப்புகள்.

ஊறுகாய் என்பது உண்மையில் உப்பு தண்ணிரீல் ஊறவைத்த காய் தான்.இன்னும் மேலை நாடுகள் பலவற்றில் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது.ஆனா எவன் கன்டுபிடித்தான் என்று தெரியவில்லை..அதில் மசாலா வைச்சேர்த்து நாக்கில் எச்சில் ஊறவைத்தது....இவனுக்கு வைக்கனும் சிலை!!!


தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நல்லது...யாருக்கு ஆப்பிள் விற்கரவனுக்குதான்!!
எவன் இந்த கட்டுக்கதையை தொடங்கி வைத்தானோ ...அவனை ஆளை வைச்சு அடிக்கனும். பொதுவாக நமது உடலானது நம்மை சுற்றியுள்ள காலநிலை இயற்கை இவற்றோடு நெருங்கிய தொடர்புடையது.அதனால் அந்த கால நிலையில் என்ன விளைகிறதோ அதையே உண்ணும் வகைகையில் இந்த பிரபஞ்சம்அமைந்துள்ளது.பலாப்பழம் கிடைத்த அதை சாப்பிடு... சீத்தாப்பழம் கிடைக்கும் அதை சாப்பிடு....அதை விட்டு விட்டு ஆப்பிள் கிடைக்காத நேரத்திலும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்து எல்லாம் சாப்பிட சொல்லலை.


ஒரு உணவின் ருசி என்பது எதை எதனோடு சேர்ந்து பரிமாறுகிறிர்கள் என்பதில் தான் உள்ளது சூட்சமம்.சமீபத்தில் இதை அவதனிக்கும் பெரும்பாக்கியம் கிடைததது.பெரும்பாலான டுமீல் இல்லத்து அரசிகள் டிப்ரண்டாக செய்கிறேன் என்ற பெயரில் உணவு வகைகளை கொலை செய்கிறார்கள். அதே போல் இவர்களின் சட்னியில் பாவம் தக்காளி... இந்த தக்காளி சட்னியேவே போட்டு கொல்ராங்க... எனக்கு என்னமோ ஒரு டவுட் இருக்கு..இவங்க சமையலை இவங்க சாப்பிடராங்களா என்று....நான் நினைக்கிறேன்..சமைச்சு வைச்சு புகைப்படம் எடுத்து முகனூலில் பதிந்துவிட்டு ஒட்டலுக்கு போய் சாப்பிடுவாங்கனு.
# பாவம் குடும்பத்தார்...


இட்லிக்கு சட்னி சாம்பார் இரண்டும் தான் ஆப்ட்.அல்லது கறிகுழம்பு .இதிலும் சூட்சமம் உண்டு.. சட்னி என்றால் கெட்டி ..மித தன்மை....தண்ணீர் போல இருப்பது செமியாக இருப்பது பல வகைகள் உண்டு.இடலியின் பதத்தை பொறுத்து சட்னி இருக்கவேண்டும் இதே குஷ்பு இட்லிக்கு கெட்டி சட்னி வைத்தால் விக்கி கொண்டு தான் சாகனும்.குக்கர் இட்லிக்கும் இதே போல தான். இடலி குண்டானில் கிடைக்கும் வீட்டு மெது மெது இட்லிக்கு காலையில் கெட்டி சட்னியை விட தாளித்த கொஞ்சம் லிக்வீடாக இருக்கிர சட்னி ஆப்டாக இருக்கும் இதே மாலை என்றால் கெட்டி சட்னி ஆப்டாக இருக்கும்.இருப்பதிலேயே இடலிக்கு பக்காவான துணை பொதினா சட்னி தான் சைவத்தில்.அசைவத்தில்..என்ன கேள்வி இது... குடல் கறி.இதில் இடலிக்கு அசைவ குழம்பு தண்ணீர் மாதிரி இருந்தால் ஊறபோட்டு அடிக்கலாம்...சாம்பார் என்றால் காயக்றிகள் போடாத சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் தான் செம காம்போ!! இது தவிர கத்திரிக்காய் போட்ட சாம்பாரும் நல்ல இருக்கும் ஆனால் இது போன்ற சிற்றுண்டிகளுக்கு சாம்பார் செய்யும் போது காய்களை சின்ன் சின்னதாக நறுக்கி போட வெண்டும்.அது தனித்த அனுபவத்தை கொடுக்கும்!!

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP