கலங்கிய நதி!!

>> வியாழன், 19 ஜூலை, 2012


கலங்கிய நதி!!
சில மாதங்களுக்குப் முன்,மலைப்பிரதேசத்தில் தான் ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செயத பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டான் கணவன்.செய்தி தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த விநோதமான சிக்கலுக்கு ஆரம்ப புள்ளி பேஸ்புக்!

வெளிவராத சமபவங்கள் ஏராளம்.இந்தப் பிரச்சனைகளுக்கு பேஸ்புக்கை நேரடியாக காரணம் சொல்லமுடியாது.ஆனால் இதனை அடிபடையாக் கொண்டு ஏகப்பட்ட புதுப்பிரச்சனைகள் உலகொங்கும் முளைத்துக்கொண்டிருக்கின்றன.இது பேஸ்புக்கு மட்டும் அல்ல எல்லா சமுக தளங்களையும் பற்றியும் பல சோக கதைகள் உண்டு.ஆனாலும் இன்றைக்கு இணையத்தில் காலபதிக்கிற பெரும்பாலோர் இத்தளங்களை தேடிதான் ஒடுகிறார்கள்.யாரும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல!!கல்லுரி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட இத்தளம் இன்று வயது வித்தியாசம் பாராமல் உலகையே கலக்கிக்கொண்டு இருக்கிறது.  அப்படி இதில் என்னதான் நடக்கிறது ?

கல்லூரி படிக்கும் பெரும்பான்மையோர் இதில் உறுப்பினராக இருந்தாலும் செலவலிக்கும் நேரம் என்பது மிக்க்குறைவுதான்.இதற்க்கு மிக முக்கிய காரணம் இனையச் செலவு.குறைந்தபட்சம் 450 ரூ இருந்து 2500 ரூ.வரை இன்று இணையத்திர்க்கு மாதக்கட்டணம் செலுத்தவேண்டி உள்ளது. இவ்வளவு செலவுசெய்யமுடியாதால் இவர்களின் பயன்பாடு குறைவுதான்.

மிக அதிகமாக இருப்பவர்கள் வேலைக்குச் செல்பவர்கள்.குறிப்பாக கனினி துறையில்! அலுவலகத்தில் கிடைக்கும் இலவச இணைய சேவையாலும் அதிகரித்த அலைபேசிகளாலும் இவர்கள் முகனூலில் கால்பதிக்கிறார்கல். இதற்க்கு அடுத்தார்போல் வீட்டில் உள்ள பெரும்பான்மையான பெண்கள்.குறிப்பாக மத்திய மட்டும் உயர் குடும்ப பெண்கள் பெரும்பானமையோர்..

பெண்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்ற மெகா தொடர்களின் இட்த்தை மெல்ல மெல்ல இந்த சமுகத்தளங்கள் சத்தம் இல்லாமல் கைப்பற்றியிருப்பது உண்மை. வாழ்வின் எச்சங்களில் தினசரி அழுத்தங்களில் இருந்து விடைபெற பெண் மணம் துடிப்பதால் கண்ணீர் தொடர்களில் இருந்து பெண்களை இங்கே வரவைக்கிறது என்கிறது உளவியல். தனிக்குடும்பம், வேலைக்கு செல்லும் கணவன், பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகள் என்று வாழும் இவர்கள் ப்கல் நேரங்கலில் தனது தனிமை உணர்வை தவிர்க்க முகனூல் இவர்களுக்கு கிடைத்துள்ளது.இவை அனைத்தையும் தாண்டி அடுத்தவர்களின் ரகசியம் தெரிந்து கொள்ள துடிக்கும் மனித மன்ங்களுக்கு முகனூல் நல்ல வந்து வாச்சது!!

முகனுலில் பெரும்பாலும் பலரும் பதிவு இடுவது கவிதைகளை. வெளிச்சத்திற்க்கு வராதவர்கள் ,ஏதாவது அங்கீகாரம் கிடைக்காதா என்பவர்களின் முதல் தேர்வு முகனூல் தான்.வினை விழைவான் என்ற பெயரில் எழுதுபவருக்கு அவரின் எழுத்தை பாராட்டி முகம் தெரியாத ஒருவர் அவருக்கென்றே தனியாக ஒரு இனையத்தளத்தை வடிவமைத்து கொடுத்துள்ளார் என்பது இதன்வீச்சை சொல்லும் நிகழ்வு. இவை போன்ற சம்பவங்கள் ஏராளம்.
இன்றைய காலம் ஊடகங்களின் காலம். அவை மக்களை நுகர்வுகலாச்சரத்திற்க்குள் உந்தி தள்ளுகின்றன. மனிதர்களின் படுக்கை அறை வரை புகுந்துவிட்ட்து.முகனூல் அதற்க்கான மிகப்பெரிய மாற்று.முகனூலில் இன்று விவாத்தங்கள் புகுந்து விளையாடுகிறது. இவர்களின் விமர்சனத்திற்க்கு எந்த அரசியல் தலைவரும் தப்பிக்க இயலாது.

கடைக்கோடியில் நடைபெறும் ஒரு சமபவம் நிமிடநேரத்தில் வெளி உலகத்திற்க்கு வெளிச்சத்திற்க்கு வருகிறது என்றால் முகனூலின் பலம் சொல்லி தெரியவேண்டியதில்லை. சமீபத்தில் தர்மபுரியில் ஒரு காவல்துறை அதிகாரி அத்துமீறி நடந்த நிகழ்வு சட்டம்ன்றம் வரை சென்றது .அதற்க்கு மிகமுக்கிய காரணம் முகனூல்.ஊடகத்தில் வருவதற்க்கு முன்பே நிமிடநேரத்தில் அது முகனூல் முழுக்க பரவி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நகசல்களால் கட்த்தப்பட்ட  அலெக்ஸ்க்காக தொடங்கப்பட்ட முகப்பு புத்தகம் இரண்டு மணிநேரத்தில் அவரது விடுதலையை கோரி சுமார் 3000 க்கும் அதிகமானோர் வேண்டுகோள் விடுத்த்து -மரனம் அடையவில்லை மனிதநேயம் என்பதற்க்கு சாட்சி இப்படி ஏராளமான சமபவங்கள். கோடுகள் அற்ற உலகத்தை இந்த முகனூல் சாதித்திருக்கிறது. ஒரே மொழி பேசும் மக்களை இனைக்கும் பாலமாக உள்ளது.இவை முகனூலின் மிகப்பெரிய பலம்
காமசூத்திரத்தை உலகுக்கு வழங்கிய நாடு.மக்கள் தொகையில் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இதே நாட்டில் தான் பாலியல் மற்றும் ஆண் பெண்  உறவுகள் குறித்த போதுமான விழிப்புணர்வு வளரவே இல்லை.. இது மூடன் கையில் கத்தியை கொடுத்த கதையாய்  இவர்கள் கையில் இப்போது முகனூல்.

ந்ம்மோடு கூடவே வசிக்கும் மனிதர்களை கூட நம்ப முடியாத காலத்தில் எங்கோ வசிக்கும் முகந்தெரியாத மனிதர்களை நடபின் அடிப்படையில் பழகுவது என்பது கொஞ்சம் ஆபத்தான விசயம். இதில் அவர் ஆணா அல்லது பெண்ணா என்பது தெரியாமல் அந்தரங்க  விசயங்கள் பரிமாறும்போது அது ஆபத்தில் தொடங்கிறது.

.முகனூலில் பெண்கள் சந்திக்க்கும் பிரச்சனைகள் அளவில்லாத்து. தனிப்பட்ட செய்திகளில் அலைபேசி எண்னை கேட்டு தொல்லைகள் வருவது பெரும்பாலான பெண்களின் அனுபவம்.அதே நேரத்தில் பெண்கள் பதிவு செய்யும் சொந்த புகைப்படங்கள் இநத் பிரச்சனைக்கு அடிப்படை. அதற்க்கு வரும் விருப்பம் மற்றும் பதில்கள் பதிய இயலாதவை..இது பற்றி பெண்களிடம் கேட்ட போது சொன்ன பதில்களும் நடைமுறை எதார்த்தமும் வேறு மாதிரி இருக்கிறது.பொதுவாகவே முகனுலில் பெண்கள் சொல்லும் காலை வணக்கத்திற்க்கு வரும் பதில்களே அவர்களின் மேல இந்த ஆண் சமுதாயம் வைத்திருக்கும் பார்வையை புலப்படுத்துகிறது. மேலும் இவர்களின் புகைபட்த்தை மற்ற இடங்களில் தவறாக பயன் படுத்துவது இங்கே தொடர்கதை. வெளியில் சொன்னாளாம் வெரதம்னு கையில நாறுச்சாம் கருவாடு கதையாய் இவை எல்லாம் தெரிந்தும் பெண்கள் படங்களை பதிவிடுவது ஒய்ந்தபாடு இல்லை!

பெரும்பாலன கணவர்கள் தனது செம்பாதி முகனூலுக்கு வருவதை விரும்புவதில்லை . சிலர் சில வரைமுறைகளுடன் அனுமதித்து இருக்கிறார்கள் என்பதும் பலர் முகனூலுக்கு வருவது அவர்களின் கணவர்களுக்கு தெரியாது என்பதும் அதிர்ச்சி !!  ஒற்றைப்ப் புள்ளியில் தொடங்கும் ஆண் பெண் நட்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அவை இல்லத்தில் உடபுகுந்து முடிவில் சமுக கோட்பாடுகளை உடைக்கும் ஒரு கலாச்சாரமாக உருவாகிறது! விசுவாசப் பூனை கருவாட்டை துக்கிட்டுப் போன கதைகள்  ஏராளம் உண்டு முகனூலில்!!


இயந்திரமயமாகிவிட்ட உரையாடல்கள்,பொருள் சார்ந்த உல்கம் என்று பாஸ்ட்புட் காலத்தில் ஒடிக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு உறவுகளுக்கு நேரம் செலவிட இயலவில்லை.இடுப்பு ஒடிஞ்ச் கோழிக்கு உரல் குழியே தஞ்சம்என்ற கதையாய் விரக்தியில் இருக்கும் பெண்கள் இன்று நாடுவது பொரும்பாலும் முகனூல் தான். பொழுதுபோக்க ஆரம்பிக்கும் இந்த விளையாட்டு சில நாட்களில் தீராத விளையாட்டாக மாறிவிடுகிறது. உரல்ல அகப்பட்ட்து உலக்கைக்குத் தப்புமா என்பதாய் உணர்ச்சிகளில் உந்தப்பட்டுருக்கும் ஆண்களுடன் நட்பாகும் போது பற்றி எரிகிறது பனிக்காடு!!

முகனூலில் கொட்டிக்கிடக்கும் பாலியல் சார்ந்த விசயங்களும்  பலரின் அந்தரங்கங்களும்  விரவிக்கிடக்கிறது. இது தனிப்பட்ட புகழுக்காக அலைபாயும் மனித மனதில் பல வக்கிரங்களை கிளரிவிடுகிறது.இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் வீட்டின் சமையலறை வரை !!

மனித மனம் விசித்திரமானது. அது எல்லாவற்றையும் ஒப்பிட்டு நோக்குவது. முகனூல் உறவுகளை ஒப்பிட்டு பார்த்து விரல் நுனியில் அதற்கான வாய்ப்பை தந்துள்ளது.இந்தப் போக்கு குடும்பம் என்ற உறவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. ஜெட் வேகத்தில் விவாகரத்து அதிகரித்து வரும் சூழலில் முகனூல் போன்ற கட்டற்ற சுதந்திரம் உள்ள தளங்கள் அதை இன்னும்  வேகமாக முன்நகர்த்தி செல்லும்.

அதிகரித்து வரும் கட்டற்ற பாலியல் சுதந்திர போக்கு, மதிப்பு இழந்து வரும் குடும்பம் ,உறவு அமைப்பு,அதிகரித்து வரும் நுகர்வுகலாச்சாரம் போன்றவைகளை முகனூல் மேலும் துரிதப்படுத்துகிறது. புதிய நாகரிகங்கள் வரும்போது பலரும் கண்விரியப் பார்கிறார்கள்-அவர்கள் பார்க்காதது காலில் மிதிப்பட்டும்போன சில வயிறுகளையும் ,வாழ்க்கைகளையும்!! வெகுவிரைவில் இதற்க்கு கடிவாளம் இடவில்லை என்றால்

 “அல்லி பூ பூக்கும்னு நினைச்சேன்
அரளி பூத்துக் கெடக்கு என்ற சொலவடை கதையாய் மாறிப்போயிடும் இந்த மனிதர்களின் வாழ்வு!!

4 பின்னூட்டங்கள்:

பெயரில்லா,  22 செப்டம்பர், 2012 அன்று PM 7:26  

அருமை பிரதீப். ஆழமான தெளிவான கருத்துக்கள்.

பெயரில்லா,  22 செப்டம்பர், 2012 அன்று PM 7:27  

அருமை பிரதீப். ஆழமான தெளிவான கருத்துக்கள்.

Maruthani மருதாணி 6 மே, 2014 அன்று PM 7:27  

மிக்க நன்றி.தெளிவான கருத்துக்கள்.

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP