லைப் ஆப் பை-ஒரு காட்டுயிர் –மனித உறவு திரைப்படம்

>> சனி, 24 நவம்பர், 2012





லைப் ஆப் பை-ஒரு காட்டுயிர் –மனித உறவு திரைப்படம்

கடந்த 100 ஆண்டுகளில் சாதி மத மேதமின்றி மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அசைக்க முடியாத சகதியாக இருப்பது திரைப்படம் என்னும் கலை.1967 முதல் 5 முதல்வர்களை தமிழகத்திற்கு தாரை வார்த்த அற்புதவிளக்கு.முதல் இருவர் வசனகர்த்தாக்கள் மற்ற மூவரும் நட்சத்திரங்கள்.திரைப்படத்தின் வலிமை அப்படி.
 
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெறவேண்டுமானால்,பெருவாரியான மக்களின் விருப்பங்களையும் ரசனைகளையும் எதிர்கொள்பவைகளாக இருக்கவேண்டும்..100 ஆண்டுகள் வ்ரலாற்றில் காட்டுயிர் குறித்த திரைப்படம் என்றால் விரல்களின் எண்ணிக்கையில் அடங்கிவிடும். விலங்குரிமை அமைபுகள் போன்ற பல அமைப்புகளின் கடும் கட்டுப்பாடுகளால் இத்த்கைய திரைப்படங்கள் விளிம்புநிலையில் உள்ளன என்றால் மிகையில்லை. அத்தகைய எண்ணத்திற்கு மருந்தளிக்கும் விதமாக தற்போது வந்திருக்கும் திரைப்படம் தான் “லைப் ஆப் பை 

இத்திரைப்படம் இரண்டு விதத்தில் முக்கிய கவனம் ஏற்படுத்துகிறது.ஒன்று கட்டுயிர் குறித்த திரைப்படம்  மற்றொன்று இது ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.கனடாவை சேர்ந்த யான் மார்டல் என்பவர் எழுதி 2001 லில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.புக்கர் பரிசு உட்பட பல விருதுகளை அள்ளியது.இக்கதை யார்ன் மார்டலின் சொந்தக் கதையும் அல்ல. பிரேசில் எழுத்தாளர் சிக்லியர் என்பவரின் “மேக்ஸ் அண்ட் தி கேட்ஸ்என்ற கதையின் பிரதிபலிப்பு.தற்ப்போது ஆங் லீ என்பவரின் இயக்கத்தில் டேவிட் மேகி என்பவரின் திரைக்கதையில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

படத்தின் மையக் கரு காட்டுயிருக்கும் மனிதருக்கும் உள்ள உறவு. அதாவது காட்டுயிருக்கு ஆன்மா உள்ளதா இல்லையா என்பது தான்.ஆனால் இதை சரியாக திரைபடமாக மாற்றினார்களா ...அந்த கருத்தை பார்வையாளரை வசிகரிக்கும் வகையில் தந்தார்களா என்பதை பார்ப்போம்.
திரைப்படத்தின் கதையை அப்படி விமர்சனம் என்ற போர்வையில் சொல்வது இதன் நோக்கம் அல்ல. ஆதலால் கதையை சொல்லப்போவது இல்லை
.
கதைப்படி ஒரு குறிப்பிட்ட காரணத்தால் ஒரு சிறுவனும் வங்காளப் புலியும் நடுக்கடலில் ஒரு படகில் உயிரை காப்பாற்றிக்கொள்ள தத்தளிக்கிறார்கள்.இரு உயிருக்கும் நடக்கும் அந்த சுவரசியமான சம்பவங்களின் கோர்வையே இத்திரைப்படம்.அந்த காட்சிகள் சாதரன திரையிலேயே அபாரமாக செய்திருக்கிறார்கள். நான் இந்தப்படத்தை 3 dயில் பார்க்க இயலவில்லை. உண்மையில் அந்த காட்சிகளை 3-Dயில் பார்க்க வாய்த்திருந்தால் இன்னும் அருமையாக் இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த குறிப்பிட்ட காட்சிகளின் மேக்கிங் வெகு சிறப்பு.. 

ஒரு வழியாக இருவரும் கரையை அடைந்த பிறகு அந்த சிறுவனும் புலியும் பிரியும் இடத்தில் ஒரு முக்கியமான விசயத்தை காட்சி வடிவில் பார்வையாளனுக்கு உணர்த்துகிறார்கள். நான் தியேட்டரில் பார்த்தவரை அது பார்வையாளனுக்கு சென்று சேரவில்லை. பெரும்பாலோர் எப்படா படம் முடியும் என்ற நிலையில் தியேட்டரில் கமெண்ட் அடித்துக்கொண்டே இருந்தார்கள். சிலர் படம் முடியும் முன்னே எழுந்து சென்றுவிட்டார்கள்.

படத்தை அத்துடன் முடித்து இருந்தால் உண்மையில் நன்றாக இருந்திருக்கும் .ஆனால் அதற்குப் பிறகும் சில சீன்களை வைத்துள்ளார்கள் . அது இந்த ப்டத்தின் போக்கையே மாற்றிவிடுவது மட்டும் அல்லாமல் கருப்பொருளை பார்வையாளனுக்கு புரியாமல் செய்து விடும் என்பதை எப்படி இவர்கள் இத்தனை செலவு செய்து எடுத்தபிறகும் யோசிக்காமல் விடுகிறார்கள் என்று இன்னும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!!.

இது என் பார்வை மட்டுமே. நீங்கள் படம் பார்க்க செல்லும் போது தியேட்டர் ஆப்ரேட்டர் இந்த சீன்களை கத்திரி போட்டு விடலாம்.கண்டிப்பாக குழந்தைகளுக்கு குதுகலமான திரைப்படம்.ஆனால் கண்டிப்பாக 3-D யில் பார்க்க அழைத்துச்செல்லுங்கள். அது முக்கியம்.
பெரும்பாலான விமர்சகர்கள் லைப் ஆப் பை திரப்படத்தை விஸுவல் ட்ரீட் என்கிறர்ர்கள். விஸூவல் ட்ரீட்க்கு சினிமா எடுக்க தேவையில்லை.சினிமாவின் மொழி என்பது வேறு. அது ஒரு கலை. ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கனுமே தவிர டெக்கனிக்கல் விசயங்களை மக்களிடம் கொண்டு செல்ல திரைப்ப்டம் அதற்கான மீடியம் இல்லை.

காட்டுயிர்களை பழக்குவது எனபது ஒருவகையில் மனித மணத்தின் 
வக்கிரம் . இது அதை ஒருவகையில் மனிதனுக்கு அடிமைப்படுத்தி, தான் மட்டுமே இந்த பூவுலகில் உய்ர்ந்தவன என்பதின் அடையாளம்.அதை இந்த படத்தில் காட்டிவிட்டு அதற்கு பிறகு மனிதனும் காட்டுயிர்களும் ஒரு சமரச ஒப்பந்ததில் வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழமுடியும் என்ற உண்மையை காட்சி படுத்தியிருப்பது ஆகச் சிறப்பு. ஆனால் இந்த விசயம் எத்தனை பார்வையாளர்களை சென்றடையும் என்பது கேள்விக்குரியே!!

இப்படி சில தத்துவார்த்த கேள்விகளை இந்த படம் முன்வைக்கிறது. ஆனால் அவை சாதரன பார்வையாளனை அந்த அளவுக்கு சிந்திக்க வைக்குமா எனபது கடலில் கரைத்த பெருங்காயம் கதை தான்.

இதுபோன்ற காட்டுயிர் மனித உறவுகள் குரித்த திரைப்படம் வரவேற்க்கப்படவேண்டியது. இந்த பூவுலகின் மிகப்பெரிய பிரச்சனையாய் உருவெடுத்து மனித குலத்தையே ஆட்டிப்படைத்திருக்கும் சூழல் குறித்த பிரச்சனையை முன்னிட்டு வந்திருப்பதால் இவை நம் வருங்கால் சந்ததினருக்கு அவசியம் காட்டப்பட வேண்டும். இத்திரைப்படம் காட்டுயிர் குறித்த சொல்லாடல்களை பெருமளவில் உருவாக்கும் போது சூழல் குறித்த அக்கறை இன்னும் மெருகேரும்..

ஆனால் குத்துப்பாட்டு ,மஞ்சல் பாட்டு ,ரத்த சிதறல்கள் ,என்று கற்பனையில் இருக்கும் தமிழக சம்கால ரசிகர்களுக்கு இப்ப்டம்

லைப் ஆப் பை...... ஓட்டை பை!!




Read more...

ஒருவேளை உங்களைப்பற்றி தெரிந்திருந்தால்.......

>> திங்கள், 19 நவம்பர், 2012


 ஒருவேளை உங்களைப்பற்றி தெரிந்திருந்தால்.......

நீண்ட காலத்திற்குப் பிறகு சமீபத்தில் பணி நிமித்தமாக மேற்குமலைத்தொடர் நகரங்களுக்கு செல்லவேண்டிய வாய்ப்பு கிட்டியது.நகரங்கள் நவீனத்துவம் என்ற பெயரில் மக்களால் கொல்லப்பட்டு வருகிறது என்பதை நிதர்சனத்தில் உணர்ந்து மனசுக்கு வலியை ஏற்படுத்தியது.சுற்றுலா என்ற பெயரில் மக்கள் நகரங்களை விரைவாக அழித்துக்கொண்டிருப்பது வரப்போகும் பேராபாத்தை அறிந்தா? அறியாமாலா?
சுமார் 15 வருடங்கள் முன் வரை சுற்றுலா என்பது கல்வி சுற்றுலா மற்றும் ஆன்மீகச் சுற்றுலா மட்டுமே!பள்ளிகளில் அழைத்துச்செல்லும் கல்வி சுற்றுலாவும் வருடத்து ஒரு முறை குடும்பத்தினர் அழைத்துச்செல்லும் ஆன்மீக ஆலயங்களுக்கு  என்றும் இருந்தது.
90 களில் திறந்துவிடப்பட்ட பொருளாதாரா சந்தை அந்நிய நிருவணங்களை மட்டும் அழைத்து வரவில்லை. அவை புதிய பல சந்தைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.கூடவே மேலைநாட்டு கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் இங்கே புகுத்தியது.
திறந்துவிடப்பட்ட சந்தை கூடவே பொருளீட்டு வாய்ப்பையும் ஒரு சாரருக்கு அள்ளி கொட்டியது.எந்திரமயமான வாழ்வு,ஆதீத நுகர்வு கலாச்சாரம், உரையாடல் அற்ற வாழ்க்கை முறை போன்றவை இவர்களை இருகிய வாழ்வு நிலைக்கு உந்தி தள்ளியது.கடல் தாண்டி பயணம் செய்துவர்களின் சமீபத்திய தலைமுறை ஒற்றை நாற்காலியில் அமர்ந்து நாள் தோறும் வேலை செய்யவேண்டிய நெருக்குதல். இந்த அதீத நெருக்கடியை தவிர்க்க இந்த தலைமுறை வித்விதமாக சுற்றுலாக்களை தொடங்கியது.  ஆனால் இவை சுற்றுச்சூழலை மட்டுமட்டும் அல்ல சமுக நலத்தையும் மனித சூழலியலையும் குலைக்கப்போகிறது என்று யாரும் அறியவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் எல்லா “இஸங்களில்லும் மோசமானது “டுரிஸம்என்றார் ஜக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் பிரதிநிதி சத்ரூதீன் ஆகாகான்.1989லில் கூடிய உலக சுற்றுலா மாநாடு சுற்றுலாவின் மறுபக்கத்தை உலகிற்கு மனிலா அறிக்கையில் சுட்டிகாட்டியது.

சுற்றுலாவின் மூலம் அதிக அள்வில் சீர்கெடுவது மலைவாஸ்தலங்கள் தான். உதகையில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் தான்.அதுவும் சரணலாயங்களின் கதை கண்ணீர் கதைதான்!!ஒரு சரணலாயத்தில் இத்தனை விலங்குகள் தான் வாழ இயலும் என்று ஒரு கணிப்பு உண்டு.காட்டியிரியாளர்கள் இதை கேரியிங் கெப்பாசிட்டி என்பர்.இது அந்த வனத்தில் உள்ள தாவரங்கள்,இரைவிலங்குகள்,நீர் ஆதாரம் ஆகியவற்றை பொருத்த்து.இதைப்போலவே இத்தனை மனிதர்கள்தான்  ஒரு சமயத்தில் ஒரு சரணலாயத்தின் உள்ளே இருக்க முடியும் என்றொரு கணக்கும் உண்டு.இதன் அடிப்படையில் தான் உருவானது ஈகோ டூரிசம்.ஆனால் நம்மூரில் நடப்பது ஈகோ டூரிசமா?
ஒரு காட்டுக்குள் போகும்போது அடிப்படையில் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பளிச்சிடும் வண்ண உடைகளை அணியக்கூடாது இத்தகைய வண்ணங்களை பார்த்து வனவிலங்குகள் அச்சப்படும். இதுதவிர எந்த வாசனை திரவியங்களையும் பயன்படுத்த கூடாது.காட்டியிர்கள் அதீத மோப்ப சகதியின் மூலம் அறிந்து உங்களை விட்டு வெகுதொலைவில் சென்றுவிடும்.
சமீபத்தில் முதுமலையில் நான் பார்த்த சுற்றுலா குழுவினர் ஏதோ ஆடை அணிவகுப்பில் வரும் அளவுக்கு ஒப்பனைகளுடனும் வாசனை திரவியங்களுடனும் வலம் வந்தனர்.ஒரு வேளை அவர்கள்  வனவிலங்களுக்காக நடந்திருப்பார்களோ என்ற ஜயம் எனக்கிருந்த்து!!
வனத்திற்குள் பயணம் செய்யும்போது சத்தம் எலுப்பாமல் அமைதியாக சென்றால் தான் வனவிலங்களை தொந்திரவு செய்யாமல் காணமுடியும்.நம் மக்களோ அப்போது தான் வாகனத்தில் உச்சபடச சத்த்தில் இசையை ரசிக்கிறார்களாம்.. இதில் நடுவழியில் நிறுத்தி நடனமும் உண்டு!!உண்மையில் வ்னத்தில் வாகனத்தில் இருந்து இறங்கவே கூடாது. மேலும் கைகளை கூட வெளியே நீட்டக்கூடாது. ஆனால் நாம் இறங்குவதுதோடு மட்டும் அல்லாமல் நம் அத்தனை கழிவுகளையும் வனத்தில் இற்க்கிவைக்கிறோம். பிளாஸ்டிக் குப்பிகளில் ஆரம்பித்து உணவுப் பொட்டலங்கள் மலம் கழிப்பது வரை அனைத்தும். அது என்னவோ தெரியவில்லை இவர்களுக்கு  வனத்தை பார்த்தாலே அத்தனையும் செய்ய தோனுகிறது.!!இதன் அடிப்படை சகல உயிரின்ங்களும் தமக்கு ஏதோ ஒரு வகையில் பயனளிக்கவே வாழ்கின்றன என்ற திமிர் எண்ணம்.
பெரும்பாலோருக்கு எந்த இட்த்தில் எப்படி நடக்கவேண்டும் அல்லது வேறுபாடு என்ன என்றே தெரிவதில்லை. உல்லாசப் பயணம் ,சுற்றுலா,வரலாற்றுச்சின்ன்ங்கள், விடுமுறையைகளிக்கும் இடம், ஆன்மீகத்தலங்கள் ,சரணாலயம் ஆகியவற்றிர்க்கு வேறுபாடு உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வதில்லை.
பல நாடுகளிலும் இப்போது சுற்றுலா குறித்து தீவிர நிலைப்பாடு எடுத்துள்ளனர். ஈகோ டூரிசம் வழியாக காட்டிற்கோ அல்லது காட்டுயிர்களுக்கோ சிறிதும் பாதிப்பின்றி சுற்றுலாவை முறைப்படுத்தியுள்ளனர். நம்மூரில் இதை எளிதாக சரணாலயங்களில் நட்த்தப்படும் சுற்றுலாவிற்கு ஈகோ டூரிசம் என்ற பெயரிட்டு சுற்றுச்சூழலை அழித்த்து தான் மிச்சம்.
நம்மவர்கள் ஈகோ டூரிசம் என்றால் கண்டிப்பாக சில வேலைகளை செய்வார்கள். அது முதலில் அங்கு இயற்கையாக உள்ள தாவரங்களை அழித்து ஒரு பூங்கா உருவாக்குவார்கள். அது சில வாரத்தில் தவறான நபர்களின் சொர்க்கபுரியாக மாறும். அடுத்து அந்த சூழலுக்கு ஒவ்வாத சில காட்டுயிர்களை கொண்டு வந்து காட்சிசாலை அமைப்பார்கள். மறக்காமல் ஒரு குட்டி ரயில் விடுவார்கள். அதை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பார். பிற்கு அந்த பகுதியில் ஒரு படகு குழாம்!!!இதில் பணியாளர்கள் எவரும் அப்பகுதியின் பூர்வகுடிகளோ அல்லது ஆதிகுடிகளோ இருக்கமாட்டார்கள்.!!!இது இல்லாமல் இறுதியாக ஒன்று செயவார்கள். அது கோடைவிழா நட்த்துவது. ஒரே நாளில் லடசக்கனக்கான மக்களை கூட வைத்து அந்த பகுதியே நாறடித்து விடுவார்கள்.விரைவில் அந்த பகுதி எதற்கு புகழ்வாய்ந்த்தோ அது எதுவும் அங்கே இருக்காது. இது தான் நமது நடைமுறை!!!
ஈகோ டூரிசம் இங்கேயும் மலர வேண்டுமானால் அனைத்து அரசு துறைகளும் இணைந்து பணியாற்றவேண்டும் . உள்ளூர் மக்களுக்கே பணியில் முதன்மை வாய்ப்பு அளிக்கவேண்டும். குறிப்பாக ஆதிகுடிகளின் அபாரமான இய்றகை அறிவை பயன்படுத்த வேண்டும்.சரணாலயங்களில் குறிப்பிட்ட பருவத்திற்கு மட்டுமே ஒரு அளவிற்குள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.இவைதவிர சரணாலயப்பகுதியில் தனியார் வாகணங்களை அனுமதிக்காமல் அரசே வாகன்ங்களை இயக்கவேண்டும்.மேலும் வாகனக்களுக்கு குறிப்பிட்ட தகுதிச்சான்றிதல் இன்றி அனுமத்திக்க கூடாது.சரணாலயங்களுக்கு பார்வையாளர்கள் முன் அனுமதியின்றி நுழைவதை முற்றிலும் தடுத்துவிடவேண்டும்.சிக்கிமிலுள்ள கஞ்ஜூன் ஜங்கா  சரணாலயத்தில் இகோ டூரியசத்தை சிற்ப்பாக கையாள்கிறார்கள். அவர்கள் செய்யும் போது நம்மால் இயலாதா??



1603 லில் கள்ளிக்கோட்டையிலிருந்து இங்கு வந்த ஜேம்ஸ் ஃபினினிசியோ என்ற சேசு சபைத் துறவி ஒருவர் தான உதகை என்னும் சொர்க்கபுரியை வெளியுலகிற்கு முதன் முதலில் தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்தே கோவையின் அப்போதைய ஆட்சியர் ஜான் சல்லிவன் பவானிகருகே இருந்த டணாயக்கன் கோட்டையிருந்து உதகைக்கு புறப்பட்டார். இந்த சொர்க்கபுரியை பார்த்து அதிசியத்தே தாமஸ் மன்றோவிற்கு கடிதம் எழுதினார்.சிறிய பாதையையும் அவரே முதன் முதலில் எற்படுத்தினார். அவருக்கு உங்களைப்பற்றி தெரிந்திருந்தால்.....கண்டிப்பாக பாதை அமைத்திருக்கமாட்டர்!!! 
மதிப்பு போன நிலையைப் பூட்டி வைத்துக்காப்பாற்றவும் முடியாது.பிறர் பார்வையில் இருந்து மறைக்கவும் முடியாது.எல்லாம் ஒரு நாள் வீதிக்கு வரும்.வரும்போது அவரவர் கைத்தராசு எடுத்து எடைபோடும்.
கத்தரிக்க முத்துனா
சந்தைக்கு வந்துதான் தீரும்!!
சொற்களின் தாக்கத்தில் மயங்கிப்போவதும், சிந்தனை செய்! சிந்தனை செய்!! என்கிற அறைகூவளிலும் காலத்தை களித்தது போதும்... இது சிந்திக்க வேண்டிய நேரம் அல்ல... செயல்படுத்த வேண்டிய நேரம்!!இன்றே செய் நன்றே செய்!! 

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP