அழிவின் விழிம்பில்..-20

>> ஞாயிறு, 22 ஜூலை, 2012


கரடி.
(sloth bear-melursus ursinus(shaw))

இதற்கு நீண்ட பறட்டையான கருவண்ண முடியும் மார்பில் ‘ V ' வடிவமான வெண்ணிற குறியும் இருக்கும்.தலை பெரியதாகவும் மூஞ்சி துறுத்திக் கொண்டும் இருப்பதால முகம் முக்கோன வடிவமாக தெரியும்.காலகளில் தட்டையான பாதங்களும் அவ்ற்றின் முன்புறம் நீண்ட வெண்ணிற வளை நகங்களும் இருக்கும்.கரட்டியின் பாதச்சுவடுகள் பார்ப்பதற்க்கு மனிதனின் பாதச் சுவடுகள் போன்றே தெரியும்.

பாறைகள் மிகுந்த இடங்கள் நீர் நிலைகளுக்கு அருகேயுள்ள காடுகள் ஆகிய இடங்கலில் ஏறக்குறைஉ இந்தியா முழுவதும் காணப்படும்.இது இரவில் இஅரை தேடும் பழக்கம் கொண்டது.பழங்கள் பூக்கள் வேர்த் தண்டுகள் தேன் எறும்புகள் பற்வைகள் மற்றும் முட்டைகளே இஅதன் ஆகாராமாகும்.  

Read more...

அழிவின் விழிம்பில்..-19


இமயமலை பழுப்பு கரடி
(himalayan brown bear-ursus arcotos isabellinus(horsefield)


இமயமலை பழுப்பு கரடிக்கு குளிர்காலத்தில் தடித்த பறட்டையான பழுப்பு நிறத்திலும் ,வெயில் காலத்தில் மெல்லிய கருவண்னத் தோழும் காணப்படும்.தோலில் பழுப்பு அல்லது செந்நிறமான பழுப்பு அல்லது  வெள்ளிச் நிறச் சாமபல் ஆகிய லேசான நிறமாற்றங்கள் நடைபெறுவதுண்டு.இமயமலையில் உள்ள மரங்களற்ற பனிப் பகுதிகளிலும் வட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் வாழம் இது,காட்டுப் பழங்கள், சதைப்பற்றுள்ள கனிகள் எலிகள் பூச்சிகள் மற்றும் சில நேரங்களில் பெரிய விலங்குகள் ஆகியவ்ற்றை உணவாக உடகொள்ளும்.

Read more...

அழிவின் விழிம்பில்..-18


இந்திய செந்நாய்
(indian wild dog-cuon alpinus(pallas))

காட்டில் வசிக்கும் இந்திய செந்நாய் பார்பதற்க்கு வீட்டு நாயைப்போன்றே இருக்கும்.உடல் முழுவதும் செந்நிறமாகவும் வயிற்றும் பகுதியில் மஞ்சள் கலந்த வெண்ணிறமாகவும் காணப்படும்.குறிகிய வாலின் நுனையில் சாமபல் மற்றும் கருப்பு நிற முடிக் கொத்து இருக்கும்

சிறுகுழுக்களாக திரியும் செந்நாயக்ள் சில சமயங்களில் ஒன்றாக இனைந்து பெரிய விலங்குகளை தாக்கும் திறன் உடையவை.சம்பார்,நிலகை,சிட்டல்,பிளாக் பக் போன்ற மான்களையும் பன்றிகளையும் இஅவை வேட்டையாடும்.காட்டுச் செந்நாயகள் இன்றாக இணைந்தால் காட்டெருமைகள் சிறுத்தைகள் மற்றும் புலிகளை கூடத் தாக்க வல்லவை.

Read more...

அழிவின் விழிம்பில்..-17


இந்திய குள்ள நரி.
indian fox-vulpes bengalensis(shaw))

பழங்கதைகளிலும் கட்டுக் கதைகளிலும் நரி தந்திரமும் புத்திசாலித்தன்மும் மிக்க விலங்காக சித்தரிக்கப்பட்டுள்லது.பகை விலங்கிடமிருந்து தப்பித்துக் கொள்லவும் இரை விலங்குகளை தேடிவேட்டையாடவும் இவை திறமைபெற்றுள்ளன.பகலில் தூங்கிவிட்டு இரவில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ வேட்டையாடும்.எழுப்பும் ஒலியாலும் தந்து உடல் வாசனைஅயாலும் பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்கின்றன.

இந்திய குள்ள நரி,சாம்பல் நிறமும் ஒல்லியான் காலக்ளும் கருப்பு முஅனை கொண்ட வாலும் முக்கோண வடிவான காதுகளும் கொண்டது.இந்த வகை வடமேற்கு பகுதிகள் நீங்கலாக இந்திய முழுவதும் கணப்படுகிறது.புதர்ப பகுதிகளிலும் விவசாய நிலப் பகுதிகளிலும் வசிக்குமிவை. 

எலிகள்,ஊர்வன்,ந்ண்டுகள்,கரையான் மற்றும் பழங்களை ஊண்டு வாழ்கிறது.தோல் ம்ற்றும் இறைச்சிக்காக வேட்டையாடுதல் விவசாய நிலங்களில் அதிக அள்வில் பூச்சி மருந்து தெளித்தல் போன்ற செயலகளால் இதன் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. 

Read more...

அழிவின் விழிம்பில்..-16


லிங்க்ஸ் பூனை
(lynx-felis lynx(isabellina blyth))

குறுகிய வால்,நீண்ட காலகள்,பனிக் கட்டிகளில் நடப்பதற்கேற்ற பாதங்கள்,கதுகளில் கொத்தான முடி,மற்றும் முகத்தில் மீசை போன்ர முடிக் க்ற்றைகள் ஆகியவற்றை கொண்டது லிங்க்ஸ் பூனை.உஅடல் மங்கிய பழிப்பு அல்லது சாமபல் நிறமுடையாதாக் இருக்கும்.ஆங்காங்கே பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.இவ்வகை புள்ளிகள் கால்க்ளிலும் வயிற்றின் பக்க வாட்டுப் பகுதிகளிலும் குறிப்பாக காணப்படும்.

உயரமான இடங்க்ளில் உள்ள காட்டுப் பகுதிகளில் குறிப்பாக புதர்கள்,நாணற் செடிகள் மற்றும் புற்கள் நிறைந்த அடர்த்தியான பகுதிக்ளில் இந்த வலிமைமிக்க லிங்க்ஸ் பூனை காணப்படும்.ந்ன்கு மரமேறவும் நீந்தவும் தெரிந்த இது வேட்டையாடுவதோ தரையில் மட்டுமே.பெரும்பாலும் பற்வைகளையும் சிறிய வகை பாலுட்டிகளையும் வேட்டையாடினாலும் அவ்வப்போது செம்மறியாடு ,வெள்ளாடுகளையும் பதம் பார்க்கும்.இது பூமியின் வடபகுதியில் குறிப்பாக வட அமெரிக்கா ,கனடா மற்றும் ஜரோப்பாவில் வாசம் செய்கிறது.இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் மட்டுமே லிங்க்ஸ் பூனை காணமுடியும்.

இது பெரும்பாலும் தமிமையாகவே காணப்படும்.ஆயினும் அவ்வப்போது குழுக்களாக சிறிய மரக்கட்டைகள் அல்லது முறிந்து  விழுந்த கிளைகள் ஆகியவற்றில் உள்ள பொந்துகளில் வசிக்கும்.ஒரு ஈற்றில் பெண் லிங்க்ஸ் பூனை 2 முதல் 4 குட்டிகள் வரை ஈன்றேடுக்கும்.

மென்மயிர் படர்ந்த அழகிய தோழுக்காக வேட்டையாடப்படுவதால் இந்தியாவில் லிங்க்ஸ் பூனை அரிய ஆபூர்வ விலங்காகிவிட்டது.

Read more...

அழிவின் விழிம்பில்..-15


கறகால் பூனை
(caracal-felis caracal(schmitizi matschie))

அளவில் வீட்டுப் பூனையை விட் பெரியதான் கறகால பூனைக்கு நீண்ட காலக்ள்,குறுகிய வால்,முக்கோன வடிவில் கூர்மையான காதுகள்,,முனையில் கொத்தான முடி ஆகியன காணப்படும்.உடல் முழுவதும் செந்நிற சாம்பல் நிறமும் வயிற்றும் பகுதியில் மங்கலான மஞ்சள் அல்லது வெள்ளை நிறமும் கொண்டிருக்கும்.கற்கால் பூனை இந்தியாவின் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதிகளில் உள்ள வறண்ட அல்ல்து ஒரளவு வறண்ட பகுதிகளில் காணப்படும்.புதர்க் காடுக்ளிலும் வாசம் புரியும்.விரை திற்னுடைய கறகால் பூனை பறக்கும் பறவைகளை கூட வேட்டையாடக் கூடியது.இது பெறும்பாலும் சிறிய வகை பாலுட்டிகளையும் பறவைகளையும் தின்று வாழ்கிறது.





Read more...

அழிவின் விழிம்பில்..-14


பளிங்குப் பூனை
(marbled cat-felis marmovata(charltoni gray))

வீட்டுப் பூனையை விட அளவில் சற்று பெரியதாகவும் உடல் நிறத்திலும் தோஇல் உள்ள குறிகளிலும் புள்ளிச் சிறுத்தையை ஒத்தும் உள்ள பளிங்குப் பூனை குளிர்ப் பிரதேச காடுகளில் வசிக்கிறது.இதற்கு நீண்ட அட்ர்ந்த்தியான வால் உள்ளது.பழுப்பு கலந்த சாமபல் அல்லது காவி நிறமுடைய தோழும் அதன் மீது நீட்டும் போக்காக அமைந்த ஒழுங்கற்ற திட்டுக்களும் காணப்படுவதால் பளிங்குப் பூனை எனப் பெயர் பெற்றது

இது சிக்கிம் டார்ஜிலிங்,நாகலாந்து மற்ரும் வட கிழக்கு இந்தியப் பகுதிகளில் காணப்படுகிறது. பறவைகளையும் சிறிய வகை பாலுட்டிகளையும் பளிங்குப் பூனை உண்ணுகின்றது.

Read more...

அழிவின் விழிம்பில்..-13


மீன்பிடிப் பூனை
(fishing cat-felis viverrina(bennett))

தோழுக்காக வேட்டையாடப்படும் சிறிய வகைப் பூனைகளில் மீன்பிடிப் பூனையைவிடச் ச்ற்றுப் பெரியதாக இருக்கும்.மீன்பிடிப் பூனைக்கு பழுப்பு நிறம் கலந்த சாம்பல் நிறமான உடலும் அதில் கரும்புள்ளிகளும் குருகிய வாலும் உண்டு.கன்னத்தில் காணப்படும் ஒரு சோடிப் பட்டைகளும் நெற்றிப் பகுதியில் உள்ள 6 முதல் 8 வரை எண்ணிக் கையிலான கருங்கோடுகளும் ,இதனை  மற்ற பூனைகளிருந்து வேறுபடுத்தி காட்டும்.கால் விரல்களுக்கிடையே தோலடி இருப்பது இதன் சிறப்பம்சமாகும் இந்த தோலடி விரலகளின் உதவியால் இது நீருக்குள் இறங்காமலே எளிதாக மீன்களைப் பிடித்து உண்ணும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள் நீரோடைகள் ஆறுகள் சதுப்பு நிலங்கள் போன்றவற்றுக்கு அருகே உள்ள காடுகளில் இது வாசம் செய்யும் .மேலும் மேற்க்குவங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகள் ,ஒரிஸ்ஸாவில் உள்ள் சிலகா ஏரி,கேரளாவில் உள்ள உப்பங்கழிக்காயல் ஆகிய இடங்க்ளிலும் இதனைக் காணலாம்.

தோலுக்காக வரைமுறையற்ற விதத்தில் வேட்டையாடப்பட்டதால்  மீன்பிடிப்பூனையின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது.மென் மயிர் கொண்ட தோலாடை மேலக்கி ஒன்று செய்ய 30-35 பூனைக்ளின் தோலகள் தேவைப்படுகின்றன.இதன் தோழுக்காக ந்டைபெறும் வியாபரமே இந்த விலங்கினை ஆபத்துக்கு இலக்காகி இருக்கிறது.

Read more...

அழிவின் விழிம்பில்..-12


இந்திய பாலைவனப் பூனை
(indian desert cat-felis silvestris ornata(gray))

இந்திய பாலவன பூனை ,உருவ அள்வில் வீட்டுப் பூனையை போன்று தோற்றமளிக்கும்.இதற்க்கு மங்கிய மஞ்சள் கலந்த உடலும் அதன் மீது கரும்புள்ளிகளும் காணப்படும்.இதன் நீண்ட வாலின் பின்பகுதியில் கருவளையங்களும் இரண்டு கருப்பு பட்டையங்களும் காணப்படும்

ராஜஸ்தான் கட்சு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள புதர்காடுகளில் இந்திய பாலைவன பூனை வாழ்கிறது.அழகிய தோழுக்காக பெருமளவு வேட்டையாடப்பட்டதால் இது அரிய அபூர்வ விலங்காகிவிட்டது.

Read more...

அழிவின் விழிம்பில்..-11


பல்லாப் பூனை
(pallas cat-felis manul(pallas))

அளவில் வீட்டுப் பூனையைப் போன்றே காணப்படும் பல்லாப் பூனைக்கு அடர்த்தியான நீண்ட வாலும் வால் முழுவதும் கருப்பு வளையங்களும் முனையில் கொத்தான கருப்பு முடியும் இருக்கும்.இதன் காதுகள் சிறியன்.உடலின் பின்புறம் காணப்படும் மங்கிய கருநிறப்பட்டைகளும் முகத்தில் உள்ள ஒரு சோடி பட்டைகளும் இதனை வேறுபடுத்தி காட்டும் அடையாளங்களாகும்.

இந்த பூனையின் உறுமலில் ,நாயின் குரைப்பும் ஆந்தையின் அலறலும் கல்ந்து கேடகும்.லடாக்,ஜம்மு மற்றும் காஷ்மீரில் காணப்படும் பல்லாப் பூனை பாறை மிகுந்த பகுதிகளில் வாழ்கிறது.சிறிய பாலூட்டிகள் மற்றும் பறவைகளை உண்ணும் .பாறைபகுதிகளில் உருமறைப்புடன் வாழுவதற்க்கு இதன் உடல் வண்ணம் பெருமளவில் உதவி புரிகிறது. 

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP