லவுட் ஸ்பீக்கர்

>> புதன், 5 செப்டம்பர், 2012




லவுட் ஸ்பீக்கர்
கரம் மசாலா
சஹானா விவகாரம் கடந்த வாரம் முழுவது பட்டைய கிளப்பியது.50 பேரை கலயாணம் செய்திட்டாங்க.. 100 பேரை ஏமாற்றிட்டாங்க என்று திசைக்கு ஒரு வதந்தி இறக்கை கட்டி பறந்த்து. இறுதியில் சஹானாவும் பிடிபட்டு விட்டார்..விரைவில் அவர் எப்படியும் ஊடகத்திற்கு பேட்டி தருவார்..அல்லது ஜி டிவியில் வந்து எல்லாத்தை பற்றியும் வண்டவாலங்களை அவிழ்ப்பார் என்றே எண்ணுகிறேன்
அதிரடி
மதுரையை..திருப்பூர் என்று கலக்கிய புயல் ஆஸ்ரா கார்க் அதிரடியாக தர்மபுரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு பின்புலமாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தர்மபுரி பகுதியில் ந்டைபெற்று வரும் குவாரி பிரச்சனையில் சரியாக செய்ல்படாதால் தான் அவரின் மாற்றம் என்று பட்சி சொல்கிறது. எனிவே... அதிரடிகள் அங்கேயும் தொடரட்டும்..
அடாவடி
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட்து பரவலான ஒரு பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. நீதிமனறத்தின் முடிவை எதிரபார்த்து காத்துக்கொண்டிருந்த எதிர்பாளர்களுக்கு தலையில் இடி. இனி அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் அன்று அரசும் மக்களும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அதிரடியை எதிர்பாளர்கள் எதிர்பார்க்கவில்லை.
அடி மேல் அடி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதமாக குறைந்துள்ளது.கட்ந்த ஆண்டில் இதே காலகட்ட்த்தில் 8 சதவீதமாக இருந்த வளர்ச்சி இப்போது அதளபாதலத்தில்.உற்பத்தி துறையில் ஏற்பட்ட பின்னடைவே பொருளாதார வளர்ச்சி குறைய முக்கிய காரணம்.விலைவாசி இன்னும் எகிறப்போகிறது.
அதிர்ச்சி
97 பேரை கொன்ற குஜராத் இனக் கலவர வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு வந்துள்ளது பெண் மந்திரிக்கு 28 ஆண்டுகளும் பஜ்ரங் தளத் தலைவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்ட்னை கிடைத்துள்ளது. இது தேசிய அளவில் மிகமுக்கிய நிகழ்வு. தேர்தல் வர இருக்கும் நிலையில் இது காங்கிரஸ்க்கு செம அதிர்ஷ்டம்!!மேடிக்கு பின்னடைவு.ஆனால் அப்பீல் அப்பீல் என்று இவர்கள் அனைவரும் செத்த பிறகும் வழக்கு நடக்கும்!!

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP