அழிவின் விழிம்பில்..-35

>> வெள்ளி, 27 ஜூலை, 2012


கஸ்துரி மான்
Musk deer-moschus moschiferus(Linnaeus)
ஆண் கஸ்தூரி மானுக்கு வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்புலுக்கு அருகே தோலுக்கடியில் ‘மஸ்க்’ சுரப்பி இருப்பது அதன் சிறப்பு.இனச் சேர்க்கை பருவத்தில் பெண் மானைக் கவரும் பொருட்டு ,இந்த மஸ்க் சுரப்பியிலிருந்து நல்ல மணம் வீசும்.இனச் சேர்க்கை நேரங்களில் மட்டும் ஆண் கஸ்தூரி மான்கள் பெண் மான்களுடன் காணப்ப்டும்.பிற சமயங்களில் தனியாகவே தென்படும்.பக்லில் ஒளிந்து கொண்டிருந்துவிட்டு இரவில் உணவை தேடி திரிந்து உண்ணும் .கூர்மையான தலை,பெரிய காதுகள்,சிறிய வால்,கொம்புகள் இல்லாமை ஆகியவை கஸ்தூரி மானின் சிறப்புக்களாகும்.ஆன் மானுக்கு ஒரு சோடி தந்தங்கள் உண்டு.இதன் தோலில் பழுப்பு மற்றும் தங்க நிறம் கொண்ட மென் மயிர் காணப்படும்.இப்போதுள்ள மான்க்ளுக்கு எல்லாம முன்பே தோன்றி கஸ்தூரி மான்,காஷ்மீர் முதல் அருணாசலப்பிரதேசம் வரையிலான உயர்ந்த மலைகளில் வாசம் செய்கிறது.இது மரப்பாசிகள்,பெரணிகள்,பூக்கள்,இலைகள்,மற்றும் புற்களை உண்டு வாழ்கிறது.தோள்பட்டை உயரம் 50 செ.மீ உயரம் வரை இருக்கும்.இவற்றின் உடலமைப்பு கச்சிதமாகவும் காலகள், பனி படர்ந்த வழுக்குகின்ற பாறைகள் நிறைந்த இடங்களில் நடப்பதற்கேற்றவாறு வலுவுடன் குளம்புகளைக் கொண்டிருக்கும்.
வாசனைத் திரவியங்களை தயார் செய்ய உதவும் மஸ்க் சுரப்பிகளைப் பெறும் பொருட்டு கஸ்தூரி மான்கள் இரக்கம்ற்ற முறையில் கொல்லப்படுவதால் இவற்றின் என்ணிக்கை வெகுவாக குறைந்து பேரழிவிற்கு இலக்காகி இருக்கின்றன.  

Read more...

அழிவின் விழிம்பில்..-34


கறுப்பு மான்.
Black buck-antilope cervicapra (Linnaeus)
உலகில் காணப்படும் மான்களிலேயே மிகவும் நேர்த்தியானது கறுப்பு மான் ஆகும்.நன்கு முதிர்ச்சியடைந்த ஆண்மானுக்கு கருமையான அல்லது கருமை பட்ர்ந்த பழுப்பு நிற உடல் இருக்கும்.உடலின் கீழ்ப்பகுதிகள் வெண்மையாகவும் கண்களைச் சுற்றிலும் வெண்மையான திட்டுகளும் இருக்கும்.இதர்கு 50 முதல் 60 செ.மீ.நீளமுள்ள ஒரு சேடிச் சுருட்டைக் கொம்புகள் உண்டு.பெண்மான் அள்வில் சிறியதாகவும் மஞ்சள் பழுப்பான உடலும் ,கீழ் பகுதிகளில் வெண்மையாகவும் ,கொம்புகள் அற்றும் காணப்படும்

ராஜஸ்தான் ,குஜராத்,மகாராஷ்டிரம்,கர்நாடகம்,மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சமவெளிப் பிரதேசங்களிலும் திறந்த வெளி புதர்க்காடுகளிலும் இவை வசிக்கின்றன.ஒரு மந்தையில் 10 முதல் 30 க்கும் அதிகமான எண்ணிக்கையில் காணப்படும் இவ்வகை மான்கள்,உலகிலேயே மிகவேகமாக ஓடக் கூடியவை.புற்கள்,இலைகள்,பழங்கள் மற்றும் வேலமரங்களின் காயகள் இவற்றின் ஆகாரமாகும்.
இறைச்சி,தோல் மற்றும் பொழுது போக்கிற்க்காக வேட்டையாடப் பட்ட்தாலும் ,உறைவிடம் அழிக்கப் பட்ட்தாலும் இவற்றின் எண்ணிகை வெகுவாக்க் குரைந்துள்ளது.இவற்றில் பொரும்பாலனவை பாதுகாக்க்ப்பட்ட வன்விலங்கு சரணாலயங்களிலும் தெசிய பூங்காக்களிலும் உயிர் பிழைத்து வருகின்றன.மத அடிப்படையில் பல் நூற்றாண்டுகளாக இம்மான்களை பாதுகாத்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிஷ்னோ ப்ழங்குடியினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.இம்மாநிலத்தில் ‘கெஜார்லி’ பகுதியில் மக்கள் குடியிருப்புகளிடையே கருப்பு மான்கள் சுதந்திரமாக நடமாடுவதை இன்றும் காணலாம்

Read more...

அழிவின் விழிம்பில்..-33


காஷ்மீர் மான்
Kashmir Stag or hangul-Cervus Elaphus hanglu(Wanger)
ஹங்கல் என்றழைக்கப்படும் காஷ்மீர் மான் உருவத்தில் சற்றும் பெரியதாகவும்,பிளவு பட்ட கொம்புகளைக் கொண்டும் காணப்படும்.ஒவ்வொரு கொம்பிலும் 5 முதல் 6 வரை கிளைக் கொம்புகள் இருக்கும்.உடலின் நிறம் இலேசான அல்லது திண்ணிய பழுப்பு நிறமுடையதாகவும் பிட்டத்தில் வெள்ளைத் திட்டும் காணப்படும்.உடம்பின் இரு புறமும் கால்களிலும் நிறம் மங்கித் தோன்றும்.முகவாய்க் கட்டையும் காதுகளும் வெண்ணிறத்தில் காணப்படும்.

காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் வடபகுதி மற்றும் இமாசலப் பிரதேசத்தின் வடக்கு சம்பா பகுதியில் உள்ள ஆற்றும் படுகையை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் காஷ்மீர் மான்கள் 2 முதல் 18 வரை எண்ணிக்கையுள்ள குழுக்களாகத் தென்படுகின்றன.காஷ்மீரில் 10 ,000 அடி உய்ரமுள்ள ‘தாட்சிகாம்’ பகுதியில் இவை இருக்கின்றன.வெயிற்காலங்களில் மந்தைகளாகச் சேர்ந்து கீழ்நோக்கி வ்ந்துவிடும்.துரதிர்ஷ்டமாக இம்மானகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.நடப்பு நூற்றாண்டின் ஆரம்பத்தில் 5000 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை தற்போது இரட்டை இலக்கத்தில் குறைந்துவிட்டது  

Read more...

அழிவின் விழிம்பில்..-32


தாமின் மான்
Thanmin or Brow antlered deer-crevus eldi eldi –(m’clelland)
சாமபார் மான போன்று தோற்றமளிக்கும் தாமின் மான்.உருவத்தில் சற்றுச் சிறியது ஆனால் அழகு வாயந்தது.இதன் கொம்புகள் ஏறக்குறைய வட்ட வடிவாக இருக்கும்.இரண்டு முதல் பத்து சிறிய கிளைக் கொம்புக்ளை பெற்றிருக்கும்.மான் கொம்பின் முதற்கிளை நீளமாக அமைந்து முக்கிய கொம்புடன் சேர்ந்துவிடுவதால் இதற்கு வட்ட வடிவம் கிடைக்கிறது.இது புருவத்தின் மேல் அமைந்திருப்பதால் இம்மான் “புருவ கொம்பு மான்” என்றும் அழைக்கப்படுகிறது.இதன் உடல் செற செறப்பாக இருக்கும்.ஆண்மான் குளிகாலத்தில் திண்ணிய நிறத்துடனும் காட்சியளிக்கும்.பெண்மான்களும் குட்டிகளும் இளம்ஞ்சள் நிறம் கொண்டிருக்கும் .குட்டிகளூக்கு உடலில் புள்ளிகள் உண்டு.

திறந்த வெளிப் புதர்காடுக்ளை விரும்பும் தாமின்மானகள்,தற்போது மணிப்பூரில் லோக்டாக் ஏரில் கரையருகேயுள்ள “கெய்புல் லம்ஜா தேசியப் பூங்காவில்” காண்ப்ப்டுகின்றன.இவை மந்தைகளாகச் சேர்ந்து புற்களை மேயும்.சில சமயங்களில் காட்டோரப் பகுதியில் உள்ள பயிர்களையும் மேய்வதுண்டு.

Read more...

அழிவின் விழிம்பில்..-31


நாலு கொம்பு மான்
Four-Horned Antelope-Tetraccrous quadricornis(blain ville)

நாலு கொம்புமான்கள் ,பிளவுபட்ட குளம்புகள் கொண்ட அசை போடும் பாலூட்டி வகையைச் சார்ந்தவை.இவற்றுக்கு நன்கு வளர்ச்சியுற்ற கண்பார்வை ,நுகர்ச்சி மற்றும் கேட்கும் செவித்திறன் இருப்பதால்,மிகவும் வேகமாக செல்லக்கூடியவை.


கொம்பு மான்க்ளில் இந்த வகை நாலு கொம்பு மான் மிகவும் வித்தியசமானது.ஆண் மாண்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த நான்கு குறுகிய கூர்மையான கொம்புகள் இருக்கின்றன.முன்புறமாக அமைந்துள்ள முதல் சோடி கொம்புகள் 5 முதல் 6 செ.மீ நீளம் கொண்டு குமிழ் போன்று குறுகி இருக்கும்.பின்புறமுள்ள 2 வது சோடி கொம்புகள் நீளம் 12 செ.மீ இருக்கும்.இதன் உடல் 1 மீட்டர் நீள்மும்,தோள்பட்டை உயரம் 60 செ.மீ வர இருக்கும்.உடலில் காணப்படும் மெல்லிய குறுகிய மென்மயிர், மேற்பகுதியில் செம்பழுப்பாகவும் ,கீழ்ப்பகுதியில் வெண் பழுப்பாகவும் தோன்றும்.ஒவ்வொரு காலுக்கு முன்புறமும் கருநிறப் பட்டை காணப்படும்.முன்னங்கால்களில் இப்பட்டை அகலமாக இருக்கும்.
தீபகற்ப இந்தியாவில் மேடு பள்ளங்கள் நிறைந்த மலை பகுதிகளில் நாலு கொம்பு மான்கள் தென்படுகின்றன்.இவை அடர்ந்த காடுகளில் வசிப்பதில்லை.நீரைப் பருகும் பொருட்டு இவை ஒற்றையாகவோ சோடிகளாகவோ நீர் நிலைகளுக்கருகில் காணப்படும்.  


Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP