முகமூடி-புது பலகாரம்...ஒரு முதல் பார்வை...

>> வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012



 முகமூடி-புது பலகாரம்...ஒரு முதல் பார்வை...


இந்தப் படம் அறிவிப்பு வெளிவந்த்தில் இருந்தே எதிர்பார்பு எகிறிவிட்டது.ஜிவாக்கு வேறு கோ பட்டைய கிளப்பியதில் மக்களிடம் இன்னும் எதிர்பார்ப்பு.பத்தாதிற்கு நரேன் வேறு வில்லன் வேடம் வேறு..சொல்லவா வேண்டும்.. ஏகத்திற்கு எதிர்பார்ப்பு...சரி பட்த்திற்கு போவோம்...முதல் நாள் முதல் காட்சி.. யுத்தம் செய் படம் வெகுவாக எனக்கு பிடித்துப்போனதால்... ஆவோலோடு படம் பார்க்கப்போனேன்.
மிடில்கிளாஸ் ஜாலி இளைஞன்...திருட்டு கும்பலை பிடிக்க முயற்சிக்கும் போலிஸ்... குங்குபூ மாஸ்டர் பின்பலம்...மூன்றையும் இனைத்தால் கதை...அதுதாங்க படம்.சத்தியமா கதையை சொல்லமாட்டேன். அதை சினிமா தியேட்டரிலோ..அல்லது திருட்டு சிடியீலோ பாத்துக்குங்க..
நான் ஈரோடு சண்டிகா தியேட்டரில் படம் பார்த்தேன்.. தியேட்டர் சரியில்லையா.. அல்லது பின்ன்னி இசை மிக்ஸிங்க் தவறா என்று தெரியவில்லை... பல வசன்ங்களை இசை தின்றுவிட்ட்து.அடுத்து எதிர்பார்ப்போடு சென்றது பாடலுக்கு காட்சி கொடுத்த வடிவம் ..பொதுவா மிஸ்கின் அதில் சிறப்பா செய்வார்... ஆனால் இந்த வாயமுடி சும்மா இரு பாட்ல் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.. ஜிவா எப்போதும் காஸ்ட்டுயூம் விசயத்தில் நன்றாக கவனம் எடுப்பார்.. இந்த பாட்டுக்கு சொதப்பல் காஸ்ட்டுயூம். ஆனால் பார் பாட்டை கலக்கிட்டார் மிஸ்கின்.. அதுவும் அந்த பாட்டின் நடுவே வரும் வய்லீன் பீஸ்க்கு செம கலக்கல் டான்ஸ்.. செம அழ்கு!!!
சண்டை காட்சி.. டைட்டிலேயே புரூஸ் லீக்கு என்று போட்டுவிட்டார்கள்...அதற்க்கு ஏற்றவாரே சண்டை காட்சிகளில் கொஞ்சம் அதிகம் கவனம் எடுத்திருக்கிறார்கள்.மீன் மார்க்கெட் சண்டை அருமை!!அதை தொடர்ந்து வரும் கதாநாயகன் கதாநாயகி காட்சி சூப்பர்... இன்றை பெண்கள் வண்டியில் என்ன எல்லாம் பாதுகாப்புக்கு வைத்திருக்கிறார்கள் என்று அட்டகாசமாக் சொல்லியிருக்கிறார். அது ஒரு வகையில் நிதர்சனமான காலத்தை சுட்டிகாட்டுகிறது.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை..
முதல் பாதியை கொஞ்சம் இலுக்கிர மாதிரி போனாலும் நல்லா தான் இருக்கு. இரண்டாம் பாதியில் எப்போதும் போல எப்படி முடிக்கிறது என்று தெரியாமல் அவச்ரமாக முடித்த மாதிரி இருக்கிறது.
இது ஹிரோசம் படம். அதனால் வில்லனை எவ்வளவு ஹைப் ஏத்தனுமோ அவ்வளவு ஏத்தியிருக்கலாம்.. ஆனால் அது பட்த்தில் வெகு குறைவு. கடைசி சீன்ல தான் நரேன் பட்டு பட்டுனு சிக்ஸ்ர் அடிக்கிறார். அதுவரைக்கும் அவருக்கு பேட்டிங்க் செய்ய சேன்ஸே தரலை பட்த்தின் கேபடன் மிஷ்கின்.
ஆமா எதுக்கு இந்த பட்த்திற்கு தேவையில்லாம ஒரு ஹிரோயின் ??? அதுவும் பயங்கர மொக்கை பிகர்!!
நிறைய எழுதலாம்.. ஆனால் இன்னும் நிறைய் பேர் விமர்சனம் எழுதனும்லா.. அதுனால் முடிச்சுரேன்..
முகமூடி.-புது பலகாரம்
பலநாள் சாப்பிடாம இருக்கிரவனுக்கு தேவாமிர்தம்!!
சாப்பாட்டு ராமன்களுக்கு இதுவும் ஒரு அயிட்டம் மட்டுமே!!!

Read more...

கொடுமையிலும் கொடுமை.......



 கொடுமையிலும் கொடுமை.......

2000 வருடத்தின் தொடக்கத்தில் சுமார் 4 ஆண்டுகள் என் பணி முழுவதும் காடு சார்ந்தே இருந்தது.வீட்டுக்கு வருவது என்பது மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை. அதுவும் சில மணி நேரங்கள் மட்டுமே. பெரும்பாலும் சத்தியமங்களம் மற்றும் மேற்கு மலைத்தொடரிலே பெரும்பாலான நேரம் என் வாழ்வு கழிநத்து. அப்போதுதான் காடு மற்றும் காட்டியிர் பற்றிய புரிதல் ஏற்பட்ட்து.அது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அரிய பொக்கிசமே.சுமார் 500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சேமித்து வைத்துருந்தேன்.. என் நன்பன் சிவா எல்லாத்தையும் ஒரு நாள் லவட்டி விட்டான். அப்போது தெரியாது இப்படி தமிழுக்கு சோதனை தரும் வகையில் நான் எழுத ஆரம்பிப்பேன் என்று.
அந்த அனுபவம் அந்த பணியில் இருந்து 2004 வெளிவந்த பிறகும் எனது ஆர்வம் தொடர காரணமாக இருந்த்து. புத்தகங்கள் வேறு முழுவீச்சில் படிக்க ஆரம்பித்து இருந்தேன். இந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ்நாடு மட்டும் அல்ல பல புதிய நன்பர்கள் அறிமுகமாக ஆரம்பித்தனர்.அப்போது அறிமுகம் ஆனவர் தான் ரிச்சட்.சென்னை கஸ்டம்ஸில் உயர் பணியில் இருப்பவர்.அருமையான மனிதர்..ஏதாவது இந்த இயற்கையை காப்பாற்ற நம்மால் முடிந்த்தை செய்யவேண்டும் உந்துதலோடு இருப்பவர்.அவரின் தொடர் முயற்சியால் காட்டுயிர் குறித்து ஒரு இதழ் ஆரம்பிக்க வேண்டும் என்னும் சொல்லாடல் நன்பர்களின் மத்தியில் உருவானது. மிகுந்த விவாத்திற்கும் தொடர் அலசல்களுக்குப் பிறகும் ரீடர்ஸ் டைஜிஸ்ட் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டுயிர் குறித்த செய்திகளை ஒரே இட்த்தில் கிடைக்கும் வித்த்தில் டைஜிஸ்ட் இதழ் ஆரம்பிக்க முடிவு செய்தோம். மிகுந்த ஆலோசனைக்கு பிறகு அதன் பெயர் “மழைக்காடு “ என்று பெயரும் மழைக்காட்டுக்கே உரித்தான் தவளை அதன் லோகவாகவும் தேர்ந்தெடுக்கப் பட்ட்து.

வணிகரீதியலான பத்திக்கையாக இருக்க்கூடாது என்பது விவாதத்தின் போது முடிவு செய்யப்பட்ட்தால் விளம்பரம் வாங்கவோ பிரசரிக்கவோ கூடாது என்பதையும் முடிவு செய்தோம். உடனடியாக பத்திரிக்கையை முறைப்படி பதிவு செய்ய அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது.

பத்திரிக்கைக்கான வேலைகள் அனைத்தும் பகிர்ந்தழிக்கப்பட்டு அவரவருக்கு வேலைகள் ஒப்படைக்கப்பட்ட்து. முழுவீச்சில் வேலைகள் நடைபெற்றது. பணத்திற்கு ரிச்சட் முழு பெருப்பேற்றுக்கொண்டார். அதுபோக ஒவ்வொருவரும் அவர்களால் ஆன உதவியும் செய்ய முடிவுசெய்யப்பட்டது.இதழ் தனி இதழாகவும் வருட சந்தா அடிப்படையில் விநியோகிக்கலாம் என்றும் முடிவுசெய்யப்பட்ட்து.
2006ம்வருட்த்தின் இறுதிப்பகுதியில் முதல் இதழ் தயாரானது. நான் எடிட்டோரியல் குழுவில் இடம் வகித்தேன்.முதல் இதழ் வந்த போது பலராலும் பாராட்டப்பட்டது.இந்திய டுடே மற்றும் தமிழின் பல இதழில் எங்களின் இதழைப்பற்றி எழுதி பரவலான கவனத்திற்கு வித்திட்டது.தொடர்ந்து காலாண்டிதழாக வெளிவரத்தொடங்கியது. இந்திய் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சந்தாவும் பல பக்கம் இருந்தும் வர ஆரம்பித்தது.
இந்த சமயத்தில் அத்தனை ஊடகங்களுக்கும் நமது இதழ் போய் சேரவேண்டும் என்று கருத்து வலுப்பட்ட்து. அதற்குரிய பணிகளை முழுவீச்சில் எடுத்து செல்லப்பட்ட்து. அதற்கான பணியில் அத்தனை ஊடகங்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் முகவரிகளை சேகரிக்கும் பணியை நான் ஏற்றேன்.
ஒருநாள் காலையில் தின்மலர் அலுவலகத்திற்கு சென்றேன் ..அவர்களின் அத்தனை முகவரிகளையும் வாங்குவதற்காக!அப்போது ஈரோடு அலுவலகத்தில் அவரிகளின் உரிமையாளர் மஞ்சுளா மேடம் இருந்தார்.நான் வரவேற்பு ஊழியரிடம் விசயத்தை சொல்ல அவர் எம்.டியிடம் கேட்க .,அவர் என்னை அவரின் கேபினுக்கு வரவழைத்து என்ன விசயம் என்று கேட்க ..பேச ..பேச சுமார் 2 மணிநேரங்கள் இயற்கையை பற்றி உரையாடிக்கொண்டு இருந்தோம். அவர் எங்களின் பணியைப் ஒரு நேர்முகம் ஒன்று கொடுங்கள்.. நாங்கல் பிரசரிக்கிறோம். என்றார். அதற்கு நான் எங்களை பற்றி வேண்டாம் இயற்கையின் அவசியத்தை பற்றி தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பத்திரிக்கையில் பதிவு செய்யுங்கள் என்றேன். அதற்கு அவர் நீங்களே எழுதுங்கள்.. அதை நாங்கள் பிரசரிக்கிறோம். என்று சொல்லிவிட்டார்..
அட..இது என்னடா புள்ளையார் பிடிக்க போய் புலியை பிடித்த கதையாய் ஆயிற்றே என்று கருதி உதவி ஆசிரியர் கல்பானா அவர்களிடம் என் சூழ்நிலையை சொல்ல அவர் நீங்கள் எழுதிக் கொடுங்கள் நான் எடிட் செய்து மாற்றிக்கொள்கிறேன் என்றார். அப்படி எழுதினது தான் என் முதல் பத்தி யானைகளை பற்றி....அது ஆச்சு நடந்து 5 வருடம்..அப்ப எழுத ஆரம்பித்தவுடன்.. கலபானா தொடர்ந்து எழுதுங்க சார் என்று சொல்ல எழுத ஆரம்பிச்சது தான்.. இப்ப இங்க வந்து இப்படி உங்களிடம் எழுதிக்கொண்டு இருக்கிறேன்....

குறிப்பு:இடையில் SWG ஆசியாவிற்கான கான்பிரன்ஸ் கலந்துகொண்ட வாய்ப்பு ம்ற்றும் அனுபவம்..பசுமைதாயகத்திற்கு எழுத வந்த சுவரசிய கதை எல்லாம் அடுத்த பதிவில்...

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP