மெர்குரி பூக்கள்!

>> வியாழன், 19 ஜூலை, 2012



 மெர்குரி பூக்கள்




உலக சுகாதார நிறுவனம் ஏப்ரல் 7 ம் தினத்தை உலக உடல் நல நாளாக கடைபிடிக்கிறது.பருவநிலை மாற்றங்கள் உடல்நலத்தை பாதிக்காமல் தடுப்பது எப்படி என்பது தான் இந்த ஆண்டின் மையக் கருத்து.2003 கோடையில் வெப்ப நிலை கூடியதின் விளைவாக ஐரோப்பாவில் 70,000 பேர் இறந்தனர்.காற்று மாசுபடுவதின் முலம் ஒவ்வோர் ஆண்டும் 8,00,000 மரணங்கள் நிகழ்கின்றன. அசுத்தமான   நீரினால் ஏற்படும் வயிற்றுபோக்கினால் ஆண்டுதோரும் 18 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.சூழல் மாசுபடுதலின் விளைவு அனுகுண்டின் வீரியத்தை விட அபாயகரனமானது என்பதை மினமாட்டா முலம் உலகம் கற்றுக்கொண்ட பாடம்.

ஜப்பானின் கியூஷு தீவின் கரையோரத்தில் உள்ள ஒர் சிறுநகரம் மினமாட்டா.இந் நகர் ஷிரானுயி கடலையும் மினமாட்டா குடாவையும் ஒட்டி அமைந்துள்ளது.வசிப்பவர்களிலில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தலிலும் விவசாயத்திலும் வாழ்க்கையை ஒட்டுபவர்கள்.

1953 லில் நகரத்தின் குடாவிலும்,கரையோரங்கலிலும் கடல் மீன் களும் ,நீர் வாழ் விலங்குகளும் இறந்து தரை ஒதுங்கின.பறைவைகள் வானத்தில் இருந்தும் மரத்திலிருந்தும் விழுந்து இறந்தன.பூனைகள் வாயில் நுரை தள்ள ,எந்த நேரமும் சிரிப்பது போன்ற சத்தத்தை எழுப்பின.தள்ளாடி தள்ளாடி இறக்கும் வரை வட்டமடித்தன.பல பூனைகள் மினமாட்டா குடாவில் விழுந்தும்,உயரமான மாடிகளிலிருந்து குதித்தும் தற்கொலை செய்துகொண்டன.இது ஒரு வகை பைத்தியம் என்றும் அதற்க்கு "நடனமாடும் நோய்"என்று பெயரும் சூட்டப்பட்டது.

மீனைகடித்து ,பூனையைகடித்து ,இறுதியில் மனிதனை கடித்த கதையாய் 1956லில் மக்களும் பாதிப்புக்கு உள்ளாயினர்.உறுப்புகளிலில் உணர்ச்சி மரத்துபோயின.பேச்சு இழந்து,கண்கள் வீங்கி பார்வை பறிபோயிற்று.மூளை பாதிக்கப்பட்டு நிறுத்த முடியாமல் உடல் நடுங்கி பூனைகளை போல தள்ளாட தொடங்கி ,மயங்கி 50 க்கும் அதிகமானோர் பலியாகினர்.குடும்பம் குடும்பமாக ஆயிரக்கனக்கில் பாதிக்கப்பட்டனர்.கர்ப்பிணிபெண்கள் கருச்சிதைவுக்கு ஆளாகினார்.உடல் உருப்புக்கள் சீர்குழைந்த,   மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளை பெற்றெடுத்தனர்.பூனைகளை கண்டு நகரமே நடுங்கிற்று.இந்நோய் ஊரின் பெயரால் "மினமாட்டா நோய்"என்றே அழைக்கப்பட்டது.

புரியாத இந்த புதிருக்கு விடை கண்டு பிடித்தவர் டாக்டர் ஹஜிமி ஹொசோகாவா(dr.hajime hosokawa).இது தொற்று நோய் அல்ல என்றும் மீன் உணவின் மூலம் உடலில் சேரும் நச்சுக்களால் மனிதர்களின் மைய நரம்பு தொகுதி பாதிக்க படுகிறது என்று சோதனைகளின் மூலம் கண்டுபிடித்தார்.இதன் மூலம் இவர் பணிசெய்த சிஸ்ஸோ கூட்டுத் தாபனமே உலோக நச்சுகளின் பிற்ப்பிடம் என்பதும் உறுதி ஆனது.

மினமாட்ட நகரில் 1907.ஆம் ஆண்டு சிஸ்ஸோ தனது உரத்தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை ஆரம்பித்தது.சிஸ்ஸோ என்றால் ஜப்பானிய மொழியில் "நைட்ரஜன்" என்று பொருள்.1925 முதல் தனது கழிவுகளை கால்வாய் மூலம் நேரடியாக கடலுக்குள் அனுப்பியது.சிஸ்ஸோ உர உற்பத்தியை நிறுத்தி விட்டு 1932 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் தயாரிப்பில் இறங்கியது.பிளாஸ்டிக்கின் மூலபொருளான "அசட்டல்டிகைடு(acetaldehyde)வேதிப்பொருளை அதிக அளவில் உற்பத்தி செய்தது.பிளாஸ்டிக்கின் கடினத்தை குறைக்கும் "டீ.ஓ.டி"(d.o.t.diothyl phthalate)என்னும் இரசாயனத்தின் ஒரோ தயாரிப்பு நிருவனமாகவும் இயங்கியது.தொடர்ந்து  கழிவுகளையும் கடலுக்குள் அனுப்பியது.

சிஸ்ஸோவிலிருந்து வெளியேரும் கழிவுகள் தான் மினமாட்டவின் தள்ளாடும் நோய்க்கு காரணம் என்பதை 1959 ல் ஜப்பானின் குமோமோட்டோ விஞ்ஞானிகள் விளக்கினர்.சிஸ்ஸொவின் கழிவுவின் மூலம் வெளியேரும் பாதரச அயன் கள் கடல்சேற்றில் உள்ள பாக்டீரியாக்களால் "மெதையில் மெர்குரி"என்னும் ஆபத்துமிக்க நச்சாக மாருகிறது.இது மீனகளின் உணவுகளிலில் கலந்து மீன்கள் மூலம் பறைவைகள் ,பூனைகள்,மனிதர்களுக்கும் போய் சேருகிறது.இந்த நச்சு உடற்கழிவுடன் வெளியேறாது.சிறுக சிறுக உடலில் தங்கி பெருகிய பிறகு நரம்பு தொகுதியை மோசமாக பாதிக்கிறது.1932 முதல் 1968 வரை சிஸ்ஸோ வெளியிட்ட பாதரச கழிவு 20 டன்கள்.!!!இவற்றின் விலைவுகள் தொடர்ந்தன.


1971 வாக்கில் அமொ¢க்காவின் "லைப்"பத்திரிக்கையின்  புகழ்பெற்ற புகைப்பட இதழியாளர் "இயூஜீன் சிமித்", உடல் ஊனங்களுடன் 1956ல் பிறந்த டொமோக்கோ இமூரா என்னும் பெண்குழ்ந்தையை அதன் 16 வயதில் தாயார் குளியல் தொட்டியில் நீராட்டியபோது எடுக்கப்பட்ட படம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.அப்போது சூடுபிடிக்க தொடங்கிய மக்கள் போராட்டம் பல நீதிமன்றங்களிலும் ஏறி இறுதியில் 2004 அக்டோபர் 15 ஆம் தேதி ஜப்பானின் உச்சநீதிமன்றத்தில் முடிவுக்கு வந்து பாதிப்படைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.மார்ச்  2001 நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களிலில் 1784 பேர் இறந்து விட்டதாகவும்,பத்தாயிரத்திற்க்கும் அதிகாமானோர் இழப்பீடு பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தொ¢விக்கின்றன.2004 வரை சிஸ்ஸோ தந்த இழப்பீடு தொகை மட்டும் 86 மில்லியன் டாலர்கள்.!!!

நம்தமிழ் நாட்டில் காவிரி நதிக்கரையில் மட்டும் 4156 தொழிற்சாலைகள் இருப்பதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது.28 பெரும் தொழிற்சாலைகள் பவானி நதியில் மட்டும் ஆண்டிற்கு 6 கோடி கனமீட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவிக்கிறது.பவானியில் முன்பிருந்த சாம்பாமுதலை,நீர்ப்பசு,பரிசல் ஆமை போன்றவை அழிந்துவிட்டது.நம்மண்ணுக்கே உரித்தான அவுரி,வாளை,நன்னீர் இரால்,அயிரை,கொறவை,கெண்டை.உளுவை போன்ற மீன் இன்ங்கள் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளது என இயற்கை ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.


"விழித்துக்கொண்டோரொல்லாம் பிழைத்துக் கொண்டார் "என்றார் பட்டுக்கோட்டையார்.விழித்துக் கொள்வோம்.!!

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா,  22 செப்டம்பர், 2012 அன்று PM 7:57  


நம்தமிழ் நாட்டில் காவி¡¢ நதிக்கரையில் மட்டும் 4156 தொழிற்சாலைகள் இருப்பதாக மாசு கட்டுப்பாடு வா¡¢யம் தொ¢விக்கிறது.28 பெரும் தொழிற்சாலைகள் பவானி நதியில் மட்டும் ஆண்டிற்கு 6 கோடி கனமீட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளதாக பொதுப்பணித்துறை தொ¢விக்கிறது.பவானியில் முன்பிருந்த சாம்பாமுதலை,நீர்ப்பசு,பா¢சல் ஆமை போன்றவை அழிந்துவிட்டது.நம்மண்ணுக்கே உ¡¢த்தான அவு¡¢,வாளை,நன்னீர் இரால்,அயிரை,கொறவை,கெண்டை.உளுவை போன்ற மீன் இன்ங்கள் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளது என இயற்கை ஆர்வளர்கள் தொ¢விக்கின்றனர்.//mika thelivaana katurai.vizhiththukkolvoom.

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP