விலக மறுக்கும் இருள்

>> வியாழன், 19 ஜூலை, 2012



விலக மறுக்கும் இருள்

ஒருநாள் அதிகாலையில் கடவுள் பக்கதனுக்கு தோன்றி இன்று மாலை சூரியன் மறையும் வரை எவ்வளவு தூரம் நீ கடக்கின்றாயோ, அவ்வளவு இடமும் உனக்குச் சொந்தம்என்றார் .பக்தனும் மிக மகிழ்ச்சியுடன் தன்னால் முடிந்த அளவு தூரத்தை அன்றைய மாலைக்குள் கடந்து விட முடிவு செயதான்.நடந்து சென்றால் குறைந்த தூரமே கடக்க முடியும் என்பதால் , காலையிலிருந்தே ஓட ஆரம்பிக்கிறான்.. இடையில் தண்ணீர் அருந்தாமல் மதிய உணவு கூட உண்ணாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தான்.கடைசியில் மாலையில் சூரியன் மறையும் வேலையில் உடலில் உள்ள அனைத்துச் சக்க்திகளும் இழந்து மூச்சு திணறி தன் பேராசையால் கட்ந்து சென்ற அதே நிலத்தில் இறந்து கிடந்தான்.இதே நிலைமையில தான் இன்றைய மனிதர்களும். வளர்ச்சிஎன்ற போர்வையில் பூமியின் செல்வங்கள் சூறையாடப்பட்டு பூமி வறுமைப்பட்டு கிடக்கிறது.
ஆண்டுக்கு 60,000 சதுர கி.மீ புமியின் பரப்பளவு பாலைவனமாக மாறி வருகிறது.1970 லில் இருந்து சுமார் 200 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இது ஆண்டுக்கு சுமார் 17 மி. ஹெக்டேர் காடுகள். இந்தியாவின் மொத்த நிலப்பரப்பான் 326 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 179 மி.ஹெக்டேர்கள் பல வித அழிவிற்க்கும் பாதிப்பிற்க்கும் உள்ளாகியுள்ளன.இதில் 90 மி.ஹேக்டேர்கள் காடுகள் அழிப்பினாலும் மண் அரிப்பினாலும் பாதிக்கப்பட்டுள்ளன.ஆண்டுக்குக் சுமார் 1.5 மி.ஹெகடேர் பரப்பளவு காடுகள் அழிக்கப்படுகிண்றன.இன்னும் முப்பது ஆண்டுகளிலில் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியக் கூடிய நிலையில் உள்ளது.இதில் 70 சதவீதம் இந்தியா போன்ற வெப்ப நாடுகளை சார்ந்திருக்கும்.

பழைய ஆவனங்களின் படி இந்தியாவில் 52 சதவிதம் காடுகள் இருந்தன்.ஆனால் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் 35 முதல் 40 சதவீதமாக  குறைந்த்து.1952 -ல் வெளியான் விவசாய அறிக்கையின் படி ஒரு நாட்டிற்கு 33 சதவீதம் தேவை. இன்றைய கனக்கு படி 11.5 சதவீதமே உள்ளது. ஓர் ஆண்டில் நிமிட்த்திற்கு 2.8 ஏக்கர்கள்-நாள் ஒன்றுக்கு 10,000 ஏக்கர்கள் என 37 லட்சம் ஏக்கர்கள் அழிக்கப்படுகின்றன.அப்படி அதிகம் அழிப்பது இமய மலையின் அடிவாரத்திலும் மேற்க்கு தொடர்ச்சி ம்லைகளிலிலும்  மட்டும் தான்.வெள்ளம் ,வறட்சிக்கு முதலாம் ஜந்தாண்டு திட்டத்தில் செலவிட்ட தொகை வெறும் 5.64 கோடி தான்.அதே இப்போது 1500 கோடிகளுக்கும் மேல்! காடுகள் அழிந்து விட்டதால் பெய்யும் மழையைப் பிடித்து வைக்கும் திறன் இழந்து திடீர் வெள்ளம்!!.அந்த ஈரத்தன்மையும் காக்கும் திறன் நிலத்தில் இல்லாமல் வறட்சி.

ஆண்டு தோறும் புத்தாண்டு வாழ்த்து அட்டை தயாரிக்க மட்டும் சுமார் 15 லட்சம் மரங்கள் பலியாகி வந்தன்.இது தவிர தடுப்பு அனைகள் நீர்த்தேக்கங்கள் அணைக்கட்டுகள் கட்டுவதற்காக சுமார் 450 ஆயிரம் ஹெக்டேர் காடுகளும் விவசாயத்திற்க்கு சுமார் 2500 ஆயிரம் ஹெக்டேர்களும் சாலை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகாக சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர்களும் தொழிற்சாலைகள் கட்ட சுமார் 125  ஆயிரம் ஹெக்டேர்கள் என்று கடந்த 25 ஆண்டுகளில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இத்தகைய காடு அழிப்பினால் மண் அரிப்பு ஏற்பட்டு விவசாய உற்பத்தியை பெரிதும் பாதிக்கிறது.சத்துள்ள மண், மழை நீரால்,வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நிலம் வளம் இழந்து பயனற்றதாய் மாறி விடுகிறது.ஒரு அங்குளம் மண் உறுவாக ஏறக்குறைய 500 முதல் 600 வருடங்க்கள் ஆகின்றன.ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள மேல் மண் ஆண்டுக்கு 1.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கிறது. 25 நபர்கள் ஓரு ஆண்டுக்கு உண்ணத் தேவையான் உணவு தாணியங்களை ஊற்பத்தி செய்ய முடியும்.பத்து லிட்டர் மழை நீரை சுத்தம் செய்யும். ஓர் ஆண்டுக்கு இந்தியாவில் மண் அரிப்பினால் 30 லிருந்து 50 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி இழப்பு..ஆண்டுக்கு விளை நிலத்திலிருந்து ஆறு மில்லியன் டன்  பயிர் வளர்வதற்கு தேவையான் சத்துக்கள் அடித்து செல்லப்படுகின்றன்..இது செயற்கையாக நிலங்களிலில் கொட்டப்படும் ரசாயன் உரங்களை விட அதிகாமானது.
காடுகள  அழிக்கப்படுவதால் பெரிதும் பாதிக்கப் படுவது ஏழைகளும் பழங்குடி மக்களுமே.பழங்குடி மக்கள் இன்று அழிந்து வருவதற்க்கு முக்கிய காரண்மே காடுகள் அழிக்கப்படுவதால தான்.ஏழை மக்கள் சுள்ளி முறிக்கும் சத்தத்தை கேட்கும் வனத்துறை அதிகாரிகளின் செவிகளுக்கு மரங்களை சாய்க்கும் கோடாரி சத்தம் மட்டும் கேட்காமல் போய விடுகிறது..தமிழ்னாட்டில் மீனவர்களுக்கு கட்டுமரங்க்கள் செய்ய தேவையான் மரங்கள் க்டுமையான் தட்டுப்பாடில் உள்ளது.ஆனால் கொடைக்கான்லில் மலையை அரசாங்கமே தாரைவார்த்து விட்டது .கார்வால் மலைபகுதியில் விவசாயிகளுக்கு 'ஆஷ்' மரத்திற்க்கு பதிலாக அரசாங்கம் 'பைன்' மரத்தை தான் தர முடியும் என்றது .மறுக்கப்பட்ட மரம் விளையாட்டு கருவிகள் செய்யும் நிறுவனத்திற்க்கு !!இதே நிலைமை தான் தீப்பெட்டிக்கும் ஊதுவத்திக்கும்!!உத்திரபிரதேச அரசு பாபார் புல்லை கைத்தொழில் செய்யும் மக்களுக்கு வழங்கி கொண்டிருந்தது.அந்த புல் திடீரென்று காகித தொழிற்சாலைக்கு அனுப்பட்டது.விளைவு அதை நம்பி வாழ்ந்த 40,000 குடும்பங்கள் பட்டினியில்!! 1980க்ளிலில் ஆரம்பிக்கப்பட்ட் தரிசுநில மேம்பாடு  திட்டத்தில் 50 லடசம் ஹெக்டேர் பரப்பை வனபகுதியாக்க முடிவு செய்யப்பட்ட்து ஆனால ஆண்டுக்கு 15 ஆயிரம் சதுர கி.மீ அள்வில் தான் காடுகள் வளர்க்கப்படுகின்றன்.

2009 நவம்பரில் உதகையில் 7 நாட்கள் விடாது பெயத மழை, உதகை வரலாற்றில் மிக பெரிய பேரழிவு.190 இடங்க்களிலில் மண் சரிவு. குன்னுர் தனித்தீவானது.        5 நாட்கள் மின்சாரம் இல்லை.44 பேர் பலி .பெருளாதாரா இழப்பு மட்டும் 1000 கோடிக்கும் மேல்.1992லில் கன்னியகுமாரி கனமழையில கரைந்து போனவர்கள் 211.இந்த நூற்றாண்டில் இந்தியாவின் வட மானிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1039 பேர் பலியாயினர் .24 ம்ணிநேரத்தில் பெயத மழையின் அளவு 940 மி.மீட்டர்.காடுகள் அழிப்பு ,அழிவின் பிரம்மாண்டத்துக்கு அழைப்பு!

காடுகள்தான் தமது கலாச்சாரத்தை நாகரீகத்தை வளர்த்த புன்னிய தளங்கள்.அவற்றை அழிப்பது நம்மை நாமே அழித்து கொள்வதாகத்தான் அர்த்தம்என்று கூறிய சுந்தர்லால் பகுகுணா,1981 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்த போது வேண்டாமென்று மறுத்து விட்டார்.அவர் சொன்ன காரணம்இமாலயப் பகுதிகளில் தினம் தினம் ஏரளாமான மரங்கள் அழிக்கப்படுகின்றன.காடுகள் அழிப்பதால் மண் அரிப்பு ஏற்படுகின்றது.பாரத மாதவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த வளமான மண் கடலை நோக்கி தினமும் போய கொண்டு இருக்கிறது. இது என்று தடுக்கப்படுகிறதோ அன்று தான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும்என்றார்
தம்மையே நமக்கு தானமாக்கும் இந்த பூமிக்குக் நாம் தரும் பரிசு அழிவு.மனிதரின் முதல் நன்பன் மரம்.மரத்தின் முதல் எதிரி மனிதன்.மனித குலம் வாழ புவி வாழ வேண்டும்.எதிர்கால சந்தியினர் இம்மண்ணில மலர நாம் வாழும் இப்பூமி பாதுகாகப்பட வேண்டும்.
       செக்களவு பொன் ஆனாலும் செதுக்கித் தின்றால் எத்தனை நாள்?”

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP