டாஸ்மார்க் மூடுவிழாவும் பிரதமர் நாற்காலியும்...

>> புதன், 29 ஆகஸ்ட், 2012





டாஸ்மார்க் மூடுவிழாவும் பிரதமர் நாற்காலியும்....

இன்று தமிழ்நாட்டில் மக்கள் மனதில் பரவலாக எதிர்பார்க்கும் ..ஆவோலோடு உள்ள விசயம் டாஸ்மார்க் மூடுவிழா காணுமா ...இல்லையா என்பதே..

முதலில் பூரண மதுவிலக்கா அல்லது டாஸ்மார்க் முடுவிழா என்பதே கேள்விக்குறி. பெரும்பாலும் பூரண் மதுவிலக்கு இருக்காது. மூடினால் டாஸ்மார்க்கு மட்டும் தான்.

இரண்டாவது விசயம் .. தற்போது ஜெ .அரசு முன்னை காட்டிலும் பரவாயில்லை என்பது தான் பரவாலான கருத்து. அரசு பணியாள்ர் தேர்வு மற்றும் மக்களின் பிரச்சனைக்கு உடணடியாக ஆலோசிப்பது என்று கொஞ்சம் மக்களின் பல்ஸ் பார்த்துதான் நட்ந்துகொள்கிறார் ஜெ. ஆனால் ஒரு விசய்த்தை தவிர... அது அவரை தூங்க்விடாமல் செய்யும் மின்வெட்டு!!

இப்பிரச்சனை ஜெ அரசு என்னதான் நல்லது செய்தாலும் இப்பிரச்சனை அனைத்து மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் இதில் சரியான தீர்வு காணாவிட்டால்.. கருணா கதி தான் இவருக்கும் ....நாடாளுமன்ற தேர்தலில்...

தற்போத நிலையில் திமுக அரசு மத்தியில் ஆட்சி வகிப்பதால் அதிமுக ஆரசால் பலவிசயங்களில் நினைப்பதை செய்ய முடிவதில்லை என்பது நிதர்சனமே!கூடங்குளம் கூட ஜெ வின் கணக்கு வேறு. முதலில் கூடங்குள மக்களை ஆதரித்தார். பிறகு தமிழ்க மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்க கூடங்குளம் பிரச்ச்னைக்கு மத்திய அரசுக்கு ஒரு பல்டி அடித்தார்.அது ஒரு சிறந்த யோசனை... நல்ல அரசியல் தான். இப்போதும் கூடங்குள முழு மின்சாரத்திற்கும் ஆட்டைய போட காத்திருக்கிறார்..முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார். அது கிடைக்காத படசத்தில் ஜெ .எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும் மீண்டும் கூடங்குள மக்களோடு இரண்டற கலந்து கூட போஸ் கொடுப்பார்.

இப்படிப்பட்ட மின்வெட்டால் கிடைக்கும் கெட்ட பெயர் தொடர்ந்தால் நாடாளுமன்ற தெர்தலில் கனிசமான இடங்களை இழக்க நேரிடும் என்பதையும் ஜெ தெளிவாக் உணர்ந்துள்ளார். கருணாவிற்கு தாரை வார்க்க நேரிடம் அந்த கணிச்மான இடங்களை.. மற்ற யாரும் ஆட்டைய போட முடியாது.

ஜெ.வின் கையில் இருக்கும் பிரும்மாஸ்திரம் தான் இந்த டாஸ்மார்க் மூடுவிழா. இதை சும்ம காந்தி பெயருக்கு எல்லாம் அவர் வேஸ்டா விட்டு சும்ம சிம்பிள் தீபாவளி கொண்டாட் விரும்பவில்லை.மேலும் மின்வெட்டு பிரச்சனை ஒருவேளை நாடாளுமன்ற தேர்தல் வரை இருந்தால் .. தேர்தலுக்கு முன் இந்த திட்டத்தை அறிவிக்கவே அமைதியாக இருக்கிறார்.

ஜெ.வுக்கு எப்போது டெல்லி நாற்காலியின் மீது ஒரு கண் உண்டு. ஏன் ஆசையும் உண்டு. காங்கிரஸ் தற்போது மிகுந்த ஆட்டம் கண்டு படுத்து கிடக்கு. ஆனால் அதற்கு எதிராக அரசியல் நடத்தும் பாரதிய ஜனதவோ சரியான பிரதம் வேடபாளர் இல்லாமல் கோமா ஸ்டேஜில் இருக்கிறது என்பதை ஜெ .நன்றாக அறிந்து வைத்துள்ளார். அதனால் தான் ஜெ . த்ற்போது மத்தியில் அடக்கி வாசிக்கிறார். ஆனால் காங்கிரஸ்க்கு பிரதம் வேட்பாளர் ரெடி.. ராகுல்.. அப்படி இல்லையென்றால் கூட  சிதம்பரம் ரெடியாக உள்ளார்.. ஒரு வேளை சோனியா கூட ஆகாலாம்.. ஆனால் காங்கிரஸ் இவ்வளவு பிரச்சனையிலும் தில்லாக இருக்க காரணம் சிறுபான்மை ஓட்டுகள் தான். அவர்கள் எக்காரனம் கொண்டும் ப்.ஜ.காவிற்கு ஒட்டு அளிக்க மாட்டார்கள் எபதுதான். அதற்காக தான் சச்சார் கமிட்டி அறிக்கையை கூட திட்டமிட்டு அப்படியே அமுக்கிவிட்டார்கள். அது வெளிப்பட்டு இருந்தால் சிறுபான்மை ஓட்டுகள் விசயத்தில் கொஞ்சம் மாற்றம் நட்ந்திருக்கும் .

இந்த சூழலை தான் ஜெ .திடமாக நம்புகிறார். தேசிய கட்சிகள் பலம் இழந்துள்ள சூழலில் மாநில கட்சிகள் பலமாகி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் கை ஓங்கும் என்று.அப்படி ஓங்கும் படசத்தில் ஒரளவு இடங்களை கைப்பற்றும் நிலையில் நிதிஷ் மற்றும் சில முதல்வர்களின் ஆசியோடு பிரதம நாற்காலியில் அமரும் ஆசையுண்டு ஜெ.விற்கு.அதனால் தான் டாஸ்மார்க்கு மூடுவிழாவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அறிவித்து 40 சீட்டையை அள்ள் அநினைக்கிறார். ஒரே கல்லில் பல மாங்காய்... திமுக் அவுட்,பிரதம்ர் பத்வி, தேசிய அரசியல்.. உலகாளாவிய அரசியல்.. வரலாற்றில் இடம் பிடிப்பது.. மற்றும் இன்ன பிற...

குறிப்பு:இந்த சீனை எதிர்பார்த்தே தமிழக அரசியலில் பல தலைகள் ஆவலோடு திராட்சை பழத்திற்கு ஆசைப்பட்ட நரி போல் காத்திருக்கிறார்கள். ஆம் ஒருவேளை ஜெ .மத்தியில் அமரும் போது ஜெ வின் சுட்டு விரல் நீட்டும் கைநாட்டு தான் தமிழக முதல்வர்  (தலையெழுத்து .. என்ன செய்வது)..இதற்கு காத்து தான் சரத்,சீமான்... பலர் உள்ளனர். இந்த லிஸ்டில் அதிமுக வில் முன்னனியில் உள்ளவர் நீங்கள் நினைக்கிர மாதிரி பண்ணீர் செல்வம் இல்லை... செங்கோட்டையன் தான் இருக்கிறார். ஏன்னென்றால் . செங்கோட்டையன் நீக்கம் என்பதே ஒர் அரசியல் பக்க ஸ்டண்ட்!!!

இதில் ஸ்டாலினும் சந்தோசமாக இருக்கிறார்... ஆமா ஏன்னா திண்ணை காலியான் சரி..... என்ற மன்நிலையில்...

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP