நீலகண்டப் பறவையைத் தேடி......

>> வியாழன், 2 ஆகஸ்ட், 2012


முத்தமிழை வளர்த்த என் மூதூராம் மதுரையில் பிறந்த என் இனிய தமிழ் தோழியே...ஒரு அந்திமாலையில் முகனூலில் தொடங்கியது நமது நட்பு என்னும் ஒரு பூ!! நந்தவனத்தில் பூத்த  பூக்களுக்கு மத்தியில் மூக்குத்தி அணிந்த அழகிய பூ..நமக்குள் பால் வேறுபாடு இருக்கலாம்... அதை புறங்கையால் ஊதிதள்ளிய ஊதாமலர்!.

ஒவ்வொரு நாளிகையிலும் மறக்காமல் நினைவுபடுத்தினாய் ....பதிவுகளாய்!மனதில் படட்தை துணிந்து சொன்னாய்!தெரியாததை தெரிந்து கொள்ள முனைப்புடன் முனைந்தாய்!

பலர் முயற்சித்தும் பெறாத  “விருப்ப”த்தை விரைவில் பெற்றாய்.கண் அயர்ந்த இரவுக்குள் ஆயிரம் நட்பு பூக்கள்-உன்னோடு!!மலைத்து நின்றேன்...

கடலை கடப்பது போல் பக்கங்களை கடந்து நின்றாய்...!பூரித்துப்போனேன்!!

அப்போது தெரியவில்லை....நீ குறிஞ்சி மலர் என்று!!
கால இடைவெளியில் பூப்பது இயற்கை!அந்த இயற்கையை தான் கொஞ்சம் மாற்றேன்??-என் கடவுளே!

எனக்கு பிடித்தது மூக்குத்தி!!நீ அனிந்தாதாலோ... அல்லது நம் ரசனை ஒத்துப்போனதாலோ!!யார் அறிவார்? 

அதற்காகவாது பதில் சொல்லி விட்டுப் போ!!

பெயர் கேட்டு அறியாத தேசத்தில் இருந்து ஒரு தோழி சொல்கிறாள்.. நீ என்னைப் பற்றி சொன்னதை ..எனக்கே தெரியாததை!!

எழுத்தாளனாவதை என் எழுத்து பார்த்துக்கொள்ளட்டும்!

மனம் சோம்பி அமர்ந்த தருணங்களில் உன் தமிழ் வேண்டும்! 

 தலர்ந்த நிலையில் உன் நேசம் வேண்டும்!

ஆண்டுகள் ஆயிரம் காத்திருந்தால் அகழிகை!!அது இதிகாசம்..

 அஃதென்றால் நம் நட்பும்.....!

எனக்காக வேண்டாம்... உன் நிகழ்வுகளை நினைத்திருக்கும் அயலகத்து தோழிக்காவது ஒரு சொல் தூது விட்டுப்போ!!!

அந்த சொல் கேட்டு விலகட்டும் என் ஜென்ம சாபம்!!

முகனூல் தோழி அலிசா சர்மிளாவுக்காக....

Read more...

நினைவின் தாழ்வோரங்கள்.


சுமார் 13,14 வருடம் இருக்கும்.ஏதோ ஒரு நாள்..இருந்துவிட்டு போகட்டும். அதா முக்கியம்..அந்த நாட்களில் நான்,நனபர்கள் ஈஸ்வர்,மகேஷ், பாலாஜி,.இவர் கருரில் மிகப்பெரிய எக்ஸ்போர்ட் நிருவனத்தின் தலைவர்.இப்போது அவர் உயிருடன் இல்லை.அது தனிகதை. தனிக்கட்டூரையே எழுதவேண்டும்.நான் என் வழ்க்கையில் இழந்த ஈடு செய்யமுடியாத நட்பு. ம்ம்ம்.அப்பொழுது எங்கள் முழுநேர வேலையே புத்தகம் படிப்பது தான்.தனிப்பட்ட செல்வுகளுக்காக மார்கெட்டிங் வேலையில் இருந்தேன்..வேலை முடிஞ்ச எங்காயவது நொருக்கு தீனி சாப்பிட்டே புத்தகங்களை பற்றி பேசுவது தான் முழுநேர பணி.தேடி தேடி படித்த காலம்.அப்பொழுது ராகுல்ஜியின் புத்தகங்களை படித்து விட்டு மணிக்கணக்காக கதைப்பது என்பது அன்றாட கடமை.அப்பொழுது எல்லாம் அலைபேசி கொஞ்சம் காஸ்ட்லி சமாச்சாரம். புத்தகங்களை பற்றி  பாலாஜியிடம் பேசுவதற்க்காகவே அலைபேசி வாங்கிய காலம்.
அப்ப கருரில் புத்தக கடை இல்லை.ஒன்று புத்தகம் வாங்க கோவை செல்லவேண்டும் அல்லது ஈரோடு.நான் ஈரோட்டில் இருந்து அப்பொழுது தினந்தோரும் கருர். தொடர்வண்டியில் செல்வேன்.ஆகவே புத்தகம் என்றால ஈரோடு தான் .புத்தகம் வாங்க ஈரோடு பாரதி புத்தகாலயம் செல்வது வழக்கம் ஆயிற்று.ஒட்டு மொத்தமாக புத்தகம் வாங்கிவிட்டு மாதம் ஒருமுறை பணம் தருவது வழக்கம்.அங்கே போக புத்தக வாசிப்பாளர்கள் வட்டம் விரிவடைந்தது.புதிய புத்தகங்களை இன்னும் அதிகமாக தேடுவதும்,வாசிப்பு பழக்கம் அதிகம் அடைந்த்தும் அந்த காலம் தான் .தேவையான புத்தகங்கள் உடனடியாக கைக்கு வரும்.சுட சுட இரவு முழுக்க படித்து விட்டு அடுத்த நாள் காலையில் பாலாஜிக்கு போய் சேரும். அவர் காலையில் இருந்து படித்து விட்டு மாலையில் கருத்து பரிமாற்றம்.சூடாக சுவையாக... நாக்கு ருசிக்க .. நேரம் போவது தெரியாமல் நடக்கம் கதை கால்ட்சபவம்.

இப்படி இருக்கும் போது தான் எழுத்தாளர் வாமுகோமு பாரதி புத்தகாலயம் மூலம் பழக்கம் ஆனார்.முதலில் மெதுவாக ஆரம்பித்த நட்பு ..வெகு விரைவில் ஜெட் வேகத்தில் பயனிக்க ஆரம்பித்த்து.ஒரு பக்கம் விமரிசன பார்வை,மறுபுறம் வாமுகோமுவின் மூலம் புதிய பார்வைகள் திறந்துவிடப்பட்டது.படைப்பாளி பாரபட்சம் பாரமல் புத்தகங்கள் வாங்கப்பட்டது!வாசிக்கப்பட்டது!.விவாதிக்கப்பட்டது!.புதிய் தரிசன்ங்கள் .புதிய பார்வைகள்..துலக்கப்பட்ட பாத்திரம் போல...எண்ணங்கள் எளிமையாக்கப்பட்டன.பல படைப்பாளிகளுடன் அறிமுகம் ஏற்பட்டது. கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
ஏதோ ஒருநாள் வாமுகோமு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ்..அப்பொழுது தான் காவ்ய பதிப்பகம் தஞ்சை பிரகாஷின் கட்டூரைகளை தொகுப்பாக வெளியிட்ட்து.வருடம் 2003..அதை முதலில் படியுங்க என்றார் வாமுகோமு.. அடித்துப்பிடித்து புத்தகத்தை வாங்கி படித்தால் எல்லாம் அக்மார்க் ஹைதரபாத் பிரியானி.பசியா போனவனுக்கு தலைவாலை இலை போட்டு விருந்து வைத்த்து போல. அத்தனையும் அறிவின் சுரங்கம்.கிளம்பினோம் அத்தனைக்கும் ஆசைப்படு என்று. ஒரே நோக்கம் புத்தகதை பிடி,உடனே படி ,.அத்தனை புத்தகங்களையும்.அதில் எல்லா புத்தங்களையும் படித்தோம் முடிந்த வரை. ஆனால் அவர் சொன்ன ஒரு முக்கியமான ஒரு புத்தகத்தை முடியவில்லை.அப்ப சமகால எழுத்தாளர்.,மிக சிறந்த படைப்பாளர் எஸ்,ராமகிருஷ்ன்ன் பழக்கம்.அவர் ஒரு ந்டமாடும் புத்தக களஞ்சியம். அவரிடம் அந்த புத்தகத்தை பற்றி கேடகலாம் என்று கேட்டால் அவரும் அதை படிக்க வில்லை .ஆஹா இது என்ன பூச்சாண்டி வேலை காட்டுதே என்று .. இன்னும் அதிகம் ஆவல் ஆனது அந்த புத்தகத்தை படிக்க..சரி பார்துருவோம் ஒரு கை..தேடல் தீவிரமானது.
எங்களிடம் இருந்த்தோ சில தகவல்கள் மட்டுமே...அந்த நாவலின் பெயர்”கடிதியே கின்லாம்”..”சோழிகள் தந்து வாழ்க்கையை பெற்றேன்”ஆசிரியர் பீமல்மிசரா. 1920 க்கு பின்னால் வ்ந்த நாவல்களில் மிக பிரம்மானடமானது.2500 பக்கம்!வங்காள நாவல்.கலகத்தா பற்றி. 700 கதா பாத்திரங்கள்.இவ்வளவு பிரம்மாண்ட தனமை இருந்தாலும் ஒரு பக்கத்தையும் தவிர்க்க இயலாது என்ற தஞ்சை பிரகாஷின் விமர்சனம் நாவல் பற்றிய எதிர்ப்பு எகிறியது.இதுமட்டுமா..தமிழின் மூத்த விமரிசகர் க.நா.சு 1967 லில் இந்த நாவலை பற்றி சிறந்த விமர்சனம் ஒன்றை தமது “இலக்கிய வட்டம்”இதழில் வெளியிட்டுள்ளார்.அதில் இந்திய நாவலக்ளில் அளவிலும் தரத்திலும் இது மறுபடி மறுபடி படிக்க வேண்டிய சிறப்பு தன்மை கொண்ட்து என்பது இன்னும் கூடுதல் ஆர்வம்! இன்ன பிற எல்லாம்!சரி நாவல் கிடைத்த்தா.. ம்ம்ம் இல்லை.. என்ன முயற்ச்சி செய்து பார்த்தாலும் முடியவில்லையோ அல்லது ஏதோ காரனத்தால தடுங்கி போய்கொண்ட இருந்த்து. அவ்வப்போது ஏற்படும் ஆவல் திரும்ப முயற்ச்சி செய்தாலும் இடையில் வண்டி மக்கர் செய்து நிற்பது போல நின்று நின்று போனது. இத்தனைக்கும் இது இந்தியாவில் 18 மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆனால் தமிழில் இல்லை.கொடுமை!!
காலம் கரைந்துபோனது.கால ஓட்ட்த்தில் நானும் புத்தகத்தை சற்றே மறந்து போனேன். நேற்று மாலை முகனூலுக்கு வந்த போது எப்போதும் போல ஒருவர் சேட்டில் வ்ந்தார்.எப்போதும் எல்லோரும் ஆரம்பிக்கும் முறையில் ஆரம்பிக்காமல் தொடக்கமே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.அதனால் இலகுவாக பேச ஆரம்பித்தோம். அவர் பெயர் மகேஷ் நந்தன்.வன உயிர் ஆர்வலர். என் கட்ந்த அழிவின் விழிம்பில் பதிவுகலை படித்து விட்டு பேச வ்ந்திருக்கிறார். துணி வியாபாரம் செய்கிறார்.அடுத்த சொன்னது தான் சிறப்பு. நான் கல்கத்தா என்றார்.எங்கோ ஒரு மூலையில் அடைந்து கிடந்த அந்த ஆவல் பீறீட்டு கிளம்பிற்ற. சூடு பிடித்த்து பேச்சு.அவர் பெங்காலியில் விளக்கம் சொல்ல.. துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாக்கள் போல கிளம்பிற்று இருபக்கமும் சொற்கள.70 ,80 வருடங்களுக்கு முன்னால் கலகத்தா சென்று அங்கயே செட்டில் ஆகிவிட்ட இந்த ந்ம்முர்கார்ர் கல்கத்தா பற்றி சொன்ன தகவலகள் ஆர்வத்தை கிளப்பி விட்டது. இந்த நாவல் பற்றி கேடக... பேச்சு நாவல் பற்றி கட்டற்ற ஆற்று வெள்ளம் போல ..அந்த புத்தகத்தின் மேல் உள்ள காதலை புரிந்து கொண்ட அந்த அற்புத மனிதர் புத்தகத்தை பெங்காளி மொழியில் அனுப்பட்டுமா அல்லது ஆங்கிலத்திலா என்றார்.உருகிபோனேன் சூடான சாதத்தில போடப்பட்ட வென்னைகட்டியாய்...
பீமல் மிசரா இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்த போது வங்க வாசகர்கள் இந்த நாவலுக்காக புத்தக கடைகளில் அலையடித்த கூட்டமாய் நின்று வாங்கினார்கள்.நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்த போது இதன் ஆசிரியர் பீமல்மிச்ரா கண்கோளாறு ஏற்பட்டு ஆப்ரேஷ்ன் செய்து கொள்ள தனியார் மருத்தவரிடம் சென்ற போது,அந்த மருத்துவர் இவரின் கையை பிடித்துக்கொண்டு”பீமல் மிச்ரா சாஹிப்,வாழ்க்கையையே சோழிகள் கொடுத்து வாங்குகிற திறன் படைத்த ,தரம் படைத்த உங்களிடம் நான் பணம் வாங்கமாட்டேன்.பல்லாயிரக்கனக்கான ரூபாய் தரவேண்டிய ஆப்ரேஷ்னை நான் சோழிகளுக்காகவே(நாவலுக்காக) நான் தங்கள் எழுத்தின் வாசகனாக ,ஒரு வங்காளி! ஒரு கல்கத்தாகாரனாக நான் செய்து தருவேன்” என்று கூறி ,அவிந்துபோக இருந்த பீமல்மிச்ராவின் கண்களை அறுவை சிகிச்சை மூலம் ஒரு பைசா செலவில்லாமல் செய்து கொடுத்தார் என்பதை இந்த நாவல் மூன்று பாகங்களாக புத்தகமாக வெளிவந்தபோது பிமல் மிச்ரா நன்றியுடன் நினைவுகூர்ந்து ,இது என் கதை!உங்கள் கதை!ஏன்?நம் ஒவ்வொருவரின் கதை .ஆனால் இது கலகத்தாவின் கதை!உலகில் ஒவ்வொரு மூலையிலும் காணப்படும் நகரங்களின் ,நாடுகளின் ,சிற்றூர்களின் அனு தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கிற...அழிந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதனின் கதை! என்றாராம்.நெகழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் இந்த காலம் சென்ற அறிய பொக்கிசம் தஞ்சை பிரகாஷ்.
எத்தனை ஆண்டுகள்!எவ்வலவோ புத்தகங்கள்!. இத்தனை நாடகள் தேடி அலைந்த புத்தகம் இந்த முகனூல் மூலமாக ,ஒரு முகம் தெரியாத,முன்பின் அறியாத ஒரு மனிதர் மூலமாக என்னை அடைய்வேண்டும் என்பது ஏதோ ஒன்றாக இருந்துவிட்டு போகட்டும்.என்னை பெருத்தவரை பைபிளில் வரும் உதரான கதையில் மைந்தனுக்காக காத்திருக்கும் தந்தையின் நிலையில். எஸ்ரா சொல்வது போல் ஒவ்வொரு புத்தகமும் அதன் வாசகனுக்காக எங்கோ காத்துகொண்டிருக்கிறது போலும்..

நான் மருத்துவன் அல்ல. தஞ்சை பிரகாஷ் போன்ற மிக சிறந்த அறிவாளியும் அல்ல. சாதரனமானவன். ஒரு வாசகன் . அவ்வளவே.இத்தகைய சிறப்பான படைப்பை தந்த படைப்பாளிக்கு மரியாதை ,கொளரவம் என்ற வார்த்தைக்குள் அடக்காமல் அந்த படைப்பை வாசிப்பதன் மூலம் என்னுள் அந்த படைப்பாளியை உள்வாங்குவதன் மூலம் ஏதோ ஒன்றை ..இழந்த ஒன்றை அடைய முற்படுகிறேன்

.என் புத்தக அலமாரியில் உறையும் அச்சுத்தாள்கள் அல்ல அவை. ....

என்னுள், என் நினைவின் தாழ்வாரங்களில், நன்பன் பாலாஜி நினைவாக...





Read more...

அழிவின் விழிம்பில்..-53


கறுப்புக் கழுத்துக் கொக்கு
Black necked crane-grus nigricollis(przevalski)

கருப்பு கழுத்து கொக்கு ,லடாக் பகுதியில் ஏப்ரல்/மே முதல் அக்டோபர் வரையிலான இனச் சேர்க்கை கால்ங்களில் தென்படும்.அருணசாலப் பிரதேசம் மற்றும் பூடானில் செப்டம்பர் முதல் மார்ச் வரை காணப்படும்.பழுப்பு கலந்த கருமையான நீண்ட கால்களும் கன்ன்ங் கரேலென்ற கறுப்பு நிறக் கழுத்தும் கொண்டு ஒரு மீட்டர் வரை உயரம் இருக்கும்.பொதுவாக உடல் மங்கிய சாம்பல் நிறத்துடன் வாலில் தொங்கிய நிலையில் கருமையான இறகுகளுடன் இருக்கும்.


தானியங்கள் ,வேர்கள்,கிழங்குகள் பூச்சிகள் மற்றும் சிறிய முதுகுத் தண்டுள்ள பிராணிகளை ,கருப்பு நிறக் கழுத்து கொக்கு உணவாக்க உட்கொள்ளும். லடாக்கில் இனச் சேர்க்கை பருவம் முடிந்த்தும் தனது குஞ்சுகளுடன் ,குளிர் காலத்தில் வெப்பக் பகுதிகளை நோக்கி புறப்படும்.
அழிவுக்கு இலக்காகி இருப்பதால் இப்பறவை வன உயிர் பாதுகாப்பு சட்டம் அட்டவனை -1 ல் பாதுகாக்ப்பட வேண்டிய பறவையாக அங்கரீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏறக்குறைய 2100 க்கும் அதிகமான பறவைகளின் உயிரின வகைப்பிரிவுகள்/துணைப் பிரிவுகள், மற்றும் இங்கே குறிப்பிடப்படாத பறவைகள் பேரழிவுக்கு இலக்காகி உள்ளன.வெண்சிறகு மரவாத்து, பெருஞ்சீட்டி நன்னீர் வாத்து.அந்தமான் நன்னீர் வாத்து,இமயமலை கழுகு,நிக்கோபார் பெரும்கால் பறவை,மலபார் இருவாட்சி ஆகியன குறிப்பிட்த்தக்கவை.

Read more...

அழிவின் விழிம்பில்..-52


சைபீரிய
Siberian crane-grus leucogeranus(pallas)
குருயிஃபார்மிஸ்” எனப்படும் இனத்தொகுதியின் கீழ் வரும் சைபீரிய கொக்கு ,ஒரு சதுப்பு நிலப் பறவை ஆகும்.பறப்பதற்கேற்ற உடலைப்பு இல்லாவிடினும்,நீரிலும் நிலத்திலும் நன்கு வாழும் திறம் கொண்ட்து.வடக்கு சைபீரியாவிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வருகிறது.பீஹாரின் வடபகுதி ,உத்திரப் பிரதேசத்தில் பிரயாக்பூர் ஜீல் மற்றும் பரத்புரில் உள்ள “கிலாடியோ கானா தேசியப் பூங்கா” ஆகியவற்றுக்கு நவம்பர் மாத இருதியிலும் டிசம்பர் மாத தொடக்கத்திலும் சேர்கிறது. பின்னர் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் பகுதியில் மீண்டும் சைபீரியா நோக்கிப் புறப்படுகிறது.

சைபீரியா கொக்கு ,பனிபடர்ந்த  வெண்ணிறமான இறகுகளையும் ,தலையின் முன் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் சிவப்பு நிறத்தையும் கொண்டிருக்கும்.இறக்கையின் சில இறகுகள் கருமையாக இருக்கும்.உலகில் உள்ள சைபீரியா கொக்குகளின் எண்ணிக்கை சில நூறுகளே என்பதால், இதனை காகும் பொருட்டு அகில உலக அளவில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


1950 முதல் 1970 வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் பரத்பூர் பகுதிக்கு குளிர்காலத்தில் 100 சைபீரியா கொக்குகள் வருவதுண்டு.நாளாவட்டத்தில் இவற்றின் எண்ணிக்கை குறைந்து 1989,90,91 ஆண்டுகளில் முறையே 22,14,7 சைபீரிய கொக்குகளே வந்து சென்றன.பருவ மழை சரிவரப் பெய்யாமையும் ,அவ்வப்போது தோன்றும் வறட்சியும் இதற்குக் காரணமாக தெரிகிறது.பரத்பூர் தேசியப் பூங்காவில் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதால் நீர்த்தாவரங்கள் அதிகமாகி இப்பற்வைகளால் நீரின் கீழிறுக்கும் கிழங்குகளை எட்டி தின்ன முடியவில்லை.இப்பூங்கவிற்க்கு  வரும் சைபீரிய கொக்குகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

Read more...

அழிவின் விழிம்பில்..-51


சீர் ஃபெசண்ட்
Cheer pheasant-catreus  wallichii (Hardwicke)

நீண்ட வால் ,நீளமான குறுகிய கருமை படர்ந்த பழுப்பு நிற பின் நோக்கி வளைந்த கொண்டை ஆகியவை இதன் அடையாளங்களாகும்.இதன் இறகுகள் மங்கிய மஞ்சளில் வெள்ளை மற்றும் அழுக்குப் படிந்த வெண்மை நிறத்தில் கருப்பு கோடுகளுடன் காணப்படும்..பெண் பறவை உருவத்தில் ஆண்பற்வையை விட சிறியதாயினும் மற்ற அடையாளங்கள் அதனைப் போன்றே இருக்கும்.



இப்பறவை ஒரு சமயத்தில் காஷ்மீர் ,பஞ்சாப்,,இமாசலப் பிரதேசம்,உத்திரப்பிரதேசத்தில் கார்வல்,குமான் பகுதிகளில் வாசம் செய்தது.தற்போது இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது  

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP