அழிவின் விழிம்பில்..-30

>> புதன், 25 ஜூலை, 2012


சதுப்புநில மான்
Swamp dear-cervus duvaceli(g.cuvier)
கிளைகள் கொண்ட கொம்புகளுடன் அழகாக காணப்படுவதால் சதுப்பு நில மான் ,இந்தியில் பாரஹ் சிங்கா என்றழைக்கப்ப்டும் சிறப்பு வயந்த விலங்காகும்.இதற்கு அழகிய உரோமம் நிறைந்த தோல் இருப்பதால் இதன் உடல் மினுமினுப்பாக காணப்படுகிறது,வெயில் காலத்தில் இதன் நிறம் மங்கிவிடும். அவ்வப்போதுகொம்புகள் உதிர்க்கப்படுவதால் புதிய கொம்புகள் வெல்வெட் துணி போன்ற மென்மையான தோலுடன் தோன்றும். முதிர்ச்சி அடைந்த்தும் கொம்புகள் கெட்டிப்படுவதால் இனச் சேர்க்கை காலங்களில் தோலுறைகள் உதிர்ந்து விடும்.

இம்மான்கள் அடர்ந்த புற்களை உண்டு வாழும் பொதுவாக ஒரு மந்தையில் 30 முதல் 50 மான்கள் வரை காணப்படும்.ஆயினும் சிலவற்றில் நூற்றுக்கணக்கிலும் இருப்பதுண்டு .ஆண்மான்கள் இனச் சேர்க்கையின் போது மட்டும் பெண் மான்களுடன் சேர்ந்து காணப்படும். இனச் சேர்க்கை முடிந்தவுடன் ஆண்மான்கள் பெண் மான்களை விட்டு விட்டு வெளியேறி இதர ஆண்மான்களுடன் மந்தை அமைத்துக்கொள்ளும்.சில மான்கள் ஏகாந்த வாசிகளாக மாறிவிடும்.பெண் மானகள் தமது குட்டிகளுடன் சேர்ந்து மந்தை அமைத்து கொண்டு நன்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் சுற்றிகொண்டிருக்கும். வயதான இன்னும் இனச்சேர்க்கை செய்யவல்ல ஒரு பெண்மானே இம்மந்தையின் தலைவர்.
வடக்கு மற்றும் கிழக்கிந்திய பகுதிகள் ,உத்திரப்பிரதேசம் ,அஸ்ஸாம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சதுப்பு நிலங்கள் அல்லது வறண்ட புலநிலங்கள் நிறைந்த பகுதிக்ளில் சதுப்புநில மானகள் வாசம் செய்கின்றன. 

Read more...

அழிவின் விழிம்பில்..-29


இந்திய காடு எருமை(கார்)
Gaur-Bos gaurus-(h.smith)

”கார்” என்ற்ழைக்கப்படும் இந்திய காட்டெருமை,மிகப் பெரியதும் கரிய நிறமுடையதுமாகவும்.அமெரிக்க காட்டெருமையுடன் ஒப்பிடும்போது இதற்க்கு குறுகிய கால்களும் வெள்ளையான பாதங்களும் இருக்கும்.இஅதன் முடி குறுகியும் திண்ணிய பழுப்பு அல்லது கருஞ்சிவப்பு அல்லது கருப்பு நிறத்துடன் இருக்கும்.வால் குறுகி கரிய குஞ்சத்துடன் காணப்படும் .ஆண்-பெண் என் இருபால்களிலும் கொம்புகள் நன்கு வள்ர்ந்திருக்கும்.

இவை 6 முதல் 12 எண்ணிகை கொண்ட மந்தைகளாக அடர்ந்த வெப்ப மண்டல காடுகளில் காணப்படும்.குறிப்பாக அருணாசலப் பிரதேசம்,நாகலாந்து,அஸ்ஸாம்,மிசோராம்,மேற்கு வங்காளம்,பீஹார்,ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம்,தமிழ்நாடு,கர்நாடகம்,கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள காடுகளில் இவை காண்ப்படுகின்றன.இவை புறகள் ,மூங்கில் தழைகள்,இலைகள் மற்றும் மரப்பட்டைகளை உண்டு வாழ்கின்றன,

Read more...

அழிவின் விழிம்பில்..-28


காட்டெருமை
Wild buffalo-bubalus bubalis (Linnaeus)

காட்டெருமை பெருமபாலும் வீட்டெருமையைப் போன்றே காணப்படும்.கரும்பலகை நிறத்தை கொண்ட இதன் காலகள் நேராக்க் கருமையாக இருக்கும்.முட்டிக்கு கீழே அழுக்குப்படிந்த வெண்மை நிறம் காணப்படும்.கொம்புகள் தட்டையாகவும் அரச்சுற்றுப் போல மேல் நோக்கி வளைந்தும் இருக்கும்.ஆண்-பெண் இருபாலுக்கும் கொம்புக்ள் ந்ன்கு வளர்ந்திடுக்கும், ந்ன்முடைய வீட்டு எருமைகள் இவற்றிலிருந்து தோன்றியவையே.

சதுப்பு நில புற் காடுகள் ,அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா அருணாசலப் பிரதேசம் ,மத்திய பிரதேசத்தில் சில பகுதிகள் ,மேற்கு ஓரிஸ்ஸா கிழக்கு மஹாராஷ்டிரா ஆகிய பகுதிக்ளில் உள்ள ச்ம்வெளிப் பகுதிக்ளில் இவை வசிக்கின்றன.இவை சிறிய மந்தைகளாக புல் மேய்வதையும் குளம் குட்டைகளில் பகலில் அடிக்கடி புரள்வதையும் காணலாம்  

Read more...

அழிவின் விழிம்பில்..-27


சடை  மாடு
wild yak-bos mutus-(prze walski)

பசுவுடன் தொடர்புடைய சடைமாடு ,உருவத்தில் பெரியதாகும் .இது 20,000 அடி(6000மீட்டர்)உய்ரமுள்ள பகுதிகளில் காண்படுகிறது.நீண்ட தாழ்வான உடலமைப்புடைய இது தொங்கிய தலை குறுகிய காலகள் உடல் முழுவதும் செற செறப்பான  நீண்ட கருமை பட்ர்ந்த பழுப்பு நிற முடி ஆகியவற்றை கொண்டிருக்கும்.ந்னாகு முதிர்ச்சியடைந்த ஆண் சடை மாடு 1800 பவுண்டு(816 கிலோ)எடை கொண்டிருக்கும்.பெண் சடை மாடு சிறியதாகவும் குறுகிய கொம்புகளுடனும் இருக்கும்.இமய மலையில் உள்ள பனிபடர்ந்த பகுதிகளுக்கேற்ற மிகக் குளிரான சூழ்நிலையில் பிழைத்து வாழ இதனால் முடியும்.

 ச்டைமாடுகள் புற்கலையும் புதர்களையும் உண்டு பிழைக்கும்.தந்து மூஞ்சியினாலும் குளம்புகளாலும் பனிக்கட்டிகளை அகற்றி அவர்றின் கிழே இருக்கும் புற்கலையும் மேய வல்லவை.அருந்த நீர் இல்லாவிடில் பனிக்கட்டிகளையே உண்டு விடும்.இந்தியாவில் லடாக் மற்றும் குமான் மலைகளில் காட்டுச் ச்டை மாடுகள் காணப்படுகின்றன்.இமய மலையின் உச்சிப பகுதிகளில் வாழும் மக்கள் பல நூற்றாண்டுகளாக  சடை மாடுகளை வீட்டு உப்யோகத்திற்கு ப்யன்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு வீட்டுச்  சூழலுக்கு பயிற்றுவிக்கப்பட்ட சடை மாடுகள் அள்வில் சிறியதாகவும் உடலில் வெண்மையான அல்லது செந்நிற திட்டுக்களுடன் கானப்படுகின்றன.பொதி சுமக்கும் விலங்களாகவும் ச்டை மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

Read more...

அழிவின் விழிம்பில்..-26


ஆசிய காட்டுக் கழுதை
asiatic wild ass-asinus hemionus khur(lesson)

ஆசிய காட்டுக் கழுதை குதிரையை விட சிறியதாகவும் வீட்டுக் கழௌதையை விட பெரியதாகவும் இருக்கும்.உடலின் நிறம் சாமபல் அல்லது மஞ்சள் பழுப்பு நிறமாகவும் வயிற்றின் அடிப்பாகத்தில் வெண்பட்டையாகவும் இருக்கும்.கருப்பு முனையுடன் கூடிய நீண்ட கூர்மையான காதுகள் உண்டு.திண்ணிய பழுப்பு நிறம் கொண்ட பிடறிமயிரும்,இதனை தொடர்ந்துவரும் கறுப்புக் கோடு ,முதுகில் சென்று வால் முனை வரை காணப்படும்.

‘கட்சு ராண்’ பகுதியில் உள்ள உவர்நில பகுதிக்ளில் காணப்படும் ஆசிய காட்டுக் கழுதை புதர்களையும் புற்களையும் வறட்டுச் செடிக்ளையும் உண்டு வாழவல்லது.ஒரு காலத்தில் வட்மேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காண்ப்பட்ட ஆசியக் காட்டுக் கழுதை த்ற்போது மனிதனின் குறுக்கீடுகளாலும் ஆடுமாடுக்ளின் மேய்ச்சலாலும் இஅவை மூலம் பரப்படும் நோய்களாலும் எண்ணிக்கையில் மைகவும் குறைந்து விட்டன.

ஆசிய காட்டுக் கழுதையுடன் நெருங்கிய உறவுள்ள மற்றொரு கழுதை திபேத் காட்டுக்க்ழுதை ஆகும்.ஆபத்துக்கு இலக்காகி இருக்கும் இஅந்தக் கழுதை திபேத் .லடாக் மற்றும் சிக்கிமில் தென் படுகிறது.ஆசியக் காட்டுக்கழுதையை விஅட் அள்வில் பெரியதாகவும் நிறத்தில் கறுமையாகவும் இருக்கும்.

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP