புதியதலைமுறை முதலாம் ஆண்டு...-2

>> சனி, 25 ஆகஸ்ட், 2012


 புதியதலைமுறை முதலாம் ஆண்டு...


பொதுவா காட்சி ஊடகத்தில் தனக்கான இடத்தை தக்க வைப்பது கொஞ்சம் சிரமான காரியம் அல்ல அது ரத்தம் வடியும் காரியம். மக்கள் போரடிக்குது நினைத்தவுடன் சேனலை மாற்றிவிடுவார்கள். மிண்டும் அவர்களை பார்வையாளரா கொண்டு வருவது மலையை கட்டி இழுப்பது போலத்தான். அதனால் எப்போது மக்களுக்கு புதுப்புது செய்திகளை கொடுத்து தான் ஆகனும்.. அதைத் தான் மக்களும் எதிர்பார்க்கிராங்க.. இது ஒரு வகையில் ஒரு சேடிஸ்ட் மனநிலை தான்.. என்ன பன்றது மக்கள் அப்படி ஆயிட்டாங்க...சரி மீண்டும் நம்ம விசயத்து வருவோம்... ஆட்சி மாற்றத்தால் சன் அமைதியா இருக்க .. அதே சமயம் மேக்ஸிஸ் பிரச்சனை.. ஸ்பெக்டராம் பிரச்சனையில் திமுக பம்மி கொண்டு இருந்தால் பிரதர்ஸ் அவங்களை காப்பாத்திக்க்வே ரொமப கூர்மையா இருந்தாங்க.. இது பத்தாது என்று சாக்ஸ் வேற ஒரு பக்கம் நாறிட்டு இருந்தார்.. அப்ப அவங்களின் சேனலின் கதி ரொம்ப சிக்கல் தான்.. பத்தாதுக்கு எஸ் சி வி வேற டப்பா டான்ஸ் ஆடிருச்சு.. சுமார் அதில் மட்டும் 1100 கேடி (வருட வருமானம்) அவுட்.. என்னத்தை தின்ன பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்தாங்க...அது இவங்களுக்கு நல்ல வாகா அமைஞ்சது ..இல்லை என்றால் இவங்களை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுருப்பாங்க... ஜி டிவி க்கு ஆன கதி தான் இவங்களுக்கும் ஆயிருக்கும்.

சரி ஒரளவு நல்ல பெயர் கிடச்சிருச்ச்சு.. புதுப் புது அர்த்தங்கள், கொஞ்சம் சோறு, என்கவுண்டர் மேட்டர் என்று லைம் லைட்டுக்கு வந்தவங்க அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிச்சு இருந்தப்ப ஜல்லிக்கட்டை நேரடியா லைவ் செய்தாங்க... இது இவங்களை தொடர்ந்து நேயர்களை தக்க வைக்க உதவுச்சு. இதே நேரத்தில் ஆரம்பித்த யெப்பிஸ்க்கு மட்டும் தான் நிகழ்ச்சி ..உள்ள ஒரு மேட்டரும் இல்லை என்றாலும் இரண்டு விசயம் மக்களுக்கு பிடிச்சது .. ஒன்று இது செய்தி சேனலில் புதுசா இருந்த்து ..மற்றொன்று அந்த குண்டு பையனும் ஒல்லி பொண்ணும். அடிக்கிர செம ரகளைகள்.. மக்களின் மனதில் பச்சக்குனு ஒட்டிக்குச்சு.. அப்பறம் என்ன அந்த நிகழ்ச்சியும் நல்ல ஹிட்.. குறிப்பா இளையவர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ்..இதை தொடர்ந்து இவங்க அரம்பிச்ச நேர்பட பேசு,களம் இறங்கியவர்கள், ரொளத்திரம் பழகு போன்ற நிகழ்சிகளில் ரொளத்திரம் பழகு தி பெஸ்ட்.. சமுகத்தில் நடக்கும் பல குறைபாடுகளை அட்டகாசமா வெளிப்படுத்தினாங்க.. அதிலும் குறிப்பா தாமிரபரணி மணல் திருட்டை வெளிப்படுத்தினப்ப பொது தளத்தில் அனைவராலும் பாராட்டப்பட்ட்து . அருமையா பதிவு அது. துணிந்து அடிச்சாங்க.. அதற்கு உண்மையில் இவர்களை பாராட்டித்தான் தீரனும். குட்.பாய்ஸ்.. இதற்கிடையில் இவர்களுக்கு அலவா மாதிரி ஒரு பிரச்சனை கிடைச்சுது... அது கூடங்குளம் அணு உலை பிரச்சனை.. கிடைச்ச வாய்ப்பை நல்ல பிடிச்சுகிட்டு சும்ம பிச்சு உதறினாங்க.. போட்டு லைவ்வா தாக்கிட்டாங்க.. அந்த பிரச்சனை எட்டுத்திக்கும் பரவ் இவங்கதான் காரணம்.. நல்ல எடுத்திட்டு போக போக மத்த சேனலகள் எல்லாம் மார்க்கெட்டில் அவுட்டாக ஆரம்பிச்சுட்டாங்க...அப்ப தான் முதலிடம் என்று பேச்சு கிளம்பிச்சு .. உடனே சன் அட்டா .. நாம தூங்கிட்டோம்.. விழித்துக்கொள்ள ஆரம்பிச்சுது.. 

ஆனால் இதே நேரத்தில் இவங்க ஆட்டைய போட ஆரம்பிச்சுட்டாங்க.. கூடங்குளம் பிரச்சனை ஓரளவுக்கு லைம் லைட்டுக்கு வந்தவுடன் இவங்களுக்கு எங்கிருந்து பிரசர் வந்துச்சுனு தெரிய்லை.. இவங்க அப்ப அப்ப பல்டி அடிக்க ஆரம்பிச்சாங்க.. இதே நேரத்தில் புதிய தலைமுறையில் பல உள்ளடி பிரச்சனைகளால் பலரும் வெளியே போக ஆரம்பிச்சாங்க..சொதப்பல் ஆரம்பமாக ஆரம்பிச்சு....
எல்லாரும் போல இவர்களும் ஈழம் பிரச்சனையை கையில் எடுத்தாங்க.. ஆமா தமிழன் உணர்ச்சிக்கு அடிமை என்பதை தெள்ளத்தெளிவா புரிஞ்சுகிட்டு இலங்கைக்கு பயங்கர பிலடப்போடு கிளம்பினாங்க... பலவிளம்பரங்கள் போட்டு தாக்கினாங்க.. உண்மை நிலவரம் என்று கிளம்பினவங்க  சத்தம் இல்லாம திரும்பி வந்தாங்க.. உண்மை நிலவரம் என்று இவங்க அடிச்ச பலடி மெக பல்டி... உட்டாலக்கடி வேலை... நன்றாக ஜிங் ஜிங் அடிச்சாங்க... இலங்கை அரசுக்கு.முதல் முறைய மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி மக்களை ஏமாற்றினாங்க.. இவங்களுக்கு அது இறங்கு முகம்.. செம் அடி ..பார்வையாளர்களை பொறுத்த வரை. அதற்கு பதில் இவங்க அந்த அசைன்மெண்டை தொட்டுருக்கமா இருந்தால் இருந்த ஆடியன்ஸை காப்பாத்தியிருக்கலாம்.. இது மற்ற சானலுக்கு ஒரு பாடம் .. அடவாண்டேஜ்.. தேவையில்லாதில் மூக்கை நுழைத்து அடிவாங்கினாங்க்.....இது மட்டுமா...

இன்னும் தொடரும் இவங்க.. அடி பட்ட...கதை.. 

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP