அழிவின் விழிம்பில்..-40

>> ஞாயிறு, 29 ஜூலை, 2012


நீலகிரி வரையாடு
Nilgiri tahr-hinitragus hylocrius-ogilby


இமயமலை வரையாட்டுடன் தொடர்புள்ள நீலகிரி வரையாடு தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே வகை மலை வெள்ளாடு ஆகும்.திண்ணிய உடலமைப்புடைய இது நல்ல விரை திறனும் கொண்டது.பாறை மலைப் பகுதிகளில் வாழத் தன்னை தகவமைத்து கொள்ளும் திறமை படைத்தது.இளமையில் சாமபல் அல்லது பழுப்பு நிறமாகவும் இருக்கும் உடல் நிறம் வயது முதிர்ந்த்தும் கருமையாகி விடும்.பெட்டை மட்டும் குட்டி ஆடுகள் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.நன்கு வளர்ச்சியடைந்த வரையாட்டிற்க்கு முதுகில் நரைத்த திட்டு போன்ற அமைப்பும் கழுத்தில் குறுகிய பிடரி மயிறும் காணப்படும்.தலையின் பின்புறம் தோன்றும் ஒரு சோடிக் கொம்புகள் இணையாக எழும்பி பின்பக்கம் வளைந்து நெருக்கமாக குறுக்கு வாட்டில் செல்லும் திரைவுச் சுருக்கங்கள் கொண்டு தோற்றமளிக்கும்.

தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளிலும் கேரளாவில் உள்ள ஆனைமலை பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 1300 முதல் 2600 மீட்டர் உயரமுள்ள சில தனிபடுத்தப்பட்ட பகுதிகளிலும் நீலகிரி வரையாடுகளை காணலாம்.இவை 5 முதல் 50 எண்ணிக்கை கொண்ட மந்தைகளாக குட்டிகளுடன் காணப்படும்.இவற்றுக்கு இனச் சேர்க்கையென்று குறிப்பிட்ட பருவம் கிடையாது.ஒரு பெண் வரையாடு ஒரு ஈற்றில் இரண்டு குட்டிகள் ஈனும்.

இறைச்சிக்காக வேட்டையாடுவதாலும் ,ஊண் உண்ணும் விலங்குகள் இவற்றை கொன்று தின்று விடுவதாலும் ,உறைவிடங்கள் மாறுதலுக்கு ஆளாவதாலும் இவ்வரையாடுகள் அழிவுக்கு இலக்காகி இருக்கின்றன.ஓரினக் காடு வளர்ப்பு,தோட்ட பயிர்கள் சாகுபடி ஆகிய செயலகள் ,வரையாடுகளின் இயற்கை உறைவிடங்களை மாற்றிவிடுகின்றன்.எனவே இவற்றுக்கு தேவையான பசும்புல் நிலங்கள் மாற்றத்துக்குள்ளாகி இவற்றின் வாழ்வையே நாசமாக்கி விடுகின்றன. 

Read more...

அழிவின் விழிம்பில்..-39


இமயமலை வரையாடு
Himalayan tahr-hermitragus Jemlahicus(h.smith)

இமயமலை வரையாடு ஒரு மலி வெள்ளாடாகும்.கழுத்திலிருந்தும் தோள்பட்டையில் இருந்தும் தொங்கும் நீண்ட முடி முட்டி வரை காணப்படும்.இதன் பிடரி மயிர் பறட்டையாக தோற்றமளிக்கும்.திடமான தேகம் வலுவான கால்கள் குறுகிய விரைப்பான் காதுகள் மற்றும் பின்னோக்கி வளைந்த கொம்புகள் கொண்டு விளங்கும்.உடல் செந்நிறம் சார்ந்த பழுப்பு நிறமாக்க் காணப்படும்.
இதன் பெயருக்கேற்ப கஷ்மீர் முதல் பூட்டன் வரையிலான இமய மலை பகுதிகளில் 3000 முதல் 4000 மீட்ட்ர் உயரமான இடங்களில் ஓக் மற்றும் இதர மரங்கள் மூடிய பாறைச் சரிவுகளில் வாசம் செய்கிறது.குளிர் காலங்களில் இது தாழ்வான பகுதிகளுக்கு சென்று வருகிறது

Read more...

அழிவின் விழிம்பில்..-38


திபேத்திய சிறுமான்
Tibetan Gazelle-procapra picticaudata(hodgson)

அளவில் வெள்ளாட்டை ஒத்திருக்கும் திபேத்திய சிறுமான திண்ணிய நிறமும் பின் நோக்கி கூராக வளைந்த கொம்புகளும் கொண்டு விளங்கும்.வால் குறுகியும் முனையில் கருமையாகவும் இருக்கும்.பெண்மானுக்கு கொம்புகள் கிடையாது.
திபேத் பீடபூமி வடகிழக்கு லடாக் பகுதி ,குமான் மலைகள்,சிக்கிம் ஆகிய பகுதிகளில் திபேத்திய சிறு மான்கள் காணப்படுகின்றன

Read more...

அழிவின் விழிம்பில்..-37


சிங்கார மான் (அ)இந்திய சிறுமான்
Chinkara-gazella dorcas (Linnaeus)

சிங்கார மான் என்று அழைக்கப்படும் ,இந்திய சிறுமான் பேரழகு வாய்ந்த ஒன்றாகும்.மெல்லிய தேகம்,லேசாக வலைந்த கொம்புகள்,அவற்றில் நெருங்கி அமைந்த வளையங்கள்,லேசான செக்கர் நிறம் ஆகியவை இம்மானின் சிறப்பு அம்சங்களாகும்.முகவாய்க்கட்டை மார்பு மற்றும் கீழ்ப் பகுதிகள் வெண்மையாக இருக்கும்.பெண்மானின் கொம்புகள் சிறியன.
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் உள்ள சிறிய வகை காடுகள்,புதர்க்காடுகள், மற்றும் மித வறண்ட பகுதிகளில் 10 முதல் 20 எண்ணிக்கையுள்ள சிறு சிறு மந்தைகளாக இவை காணப்படுகிண்றன.இவை புற்கள்,இலைகள் மற்றும் கனிந்த பழங்களை உட்கொள்ளும்.இஅவை விரை திறம் கொண்டு வெகு வேகமாக ஓடக்கூடியவை

Read more...

அழிவின் விழிம்பில்..-36


எலி மான்
Mouse deer-Tragulvs Meminna-erxleben
எலி மானின் தோள்பட்டை உயரம் 25 முதல் 30 செ.மீ வரை இருக்கும்.மிகச் சிறியதாக உருவம் படைத்த இதற்க்கு கொம்புகள் இல்லை.ஆனால் சிறிய வால் உண்டு.நிறம் ஆலிவ் பழுப்பாகவும் ,உடலில் மேற்பகுதிகளில் இதுவே வெண்மையாக மாறியும் காணப்படும்.ஆண்மானுக்கு  கோரைப் பற்களே ஒரு சோடி தந்தங்களாக மாறிக் காணப்படும்.மருள்கின்ற குண்முடைய எலிமான் ,தென்னிந்தியா,மத்திய பிரதேசம்,ஒரிஸ்ஸா, மற்றும் பீஹார் மாநிலங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் 1800 மீட்டர் உயரமுள்ள இடங்களில் காணப்படுகிறது.இது புற்களையும் இலைகளையும் உணவாக கொள்கிறது.
குறிப்பு:இது சத்தியமங்கள  காடுகளில் திம்பம் பகுதியில் காணப்படுகிறது.அந்த பகுதியில் நான் தங்கியிருந்த போது இரவு நேரங்களில் வெகு அருகிலேயே வந்துவிடும்.வாழிடம் மற்றும் உணவு பிரச்சனையால் இவை எங்களின் மீந்து போன உணவுகளை உண்பதற்க்காக வரும்.
இதை வெகு சுலபமாக கையால் பிடித்து விடலாம்


Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP