பட்டைய கிளப்பும் புட்டு

>> ஞாயிறு, 1 மார்ச், 2015

நம்மிடையே வழக்கத்தில் இருந்து மறைந்துவரும் உணவு வகை புட்டு.அலுமினிய குழாயில் வேக வைத்து புட்டும் துருவி போட்ட தேங்காய் துருவலும் நாட்டுச்சர்க்கரையும் கனிந்த பழமும் கலந்த கலவைக்கு நிகர் ஏதும் இல்லை. கேரளாவில் அவர்களின் கலாசாரத்தோடு ஒன்றிவிட்ட உணவு.ஆனால் தமிழ்நாட்டில் கிடைப்பது இல்லை. உணவ்கங்களும் இதை செய்வதில்லை.

சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் ஒருவர் இரண்டாம் தலைமுறையாக புட்டு வணிகம் செய்து வருவதாக தகவல் கிடைத்தது.ருசிக்க வேண்டும் என்ற ஆவலில் கடைக்காரரையும் தொடர்பு கொண்டு இடம் எல்லாம் விசாரித்து விட்டேன்.ஆனால் ஏனோ நேரம் உகந்து வரவில்லை.

இன்று அதிகாலையிலே முடிவு செய்தாகி விட்டது. இன்றைய இலக்கு புட்டு என்று. என் இல்லத்தில் இருந்து தோராயமாக ஏழு ..எட்டு  கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.இடம் திருநகர் காலனி மெயின் ரோட்டில்.ஒரு இளைஞர் வண்டி கடை போட்டுள்ளார்.சுத்தமாக செய்கிறார்.

காலையில் தேடிப்போய் வாங்கினேன். கண்டுபிடிக்க கொஞ்சம் கடினமாக இருந்தாலும் எடுத்த இலக்கில் வெற்றி தான். மக்கள் வந்து வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.நான் சுமார் 15 நிமிடம் காத்திருந்து தான் வாங்கினேன். இதில் நடுவே எனக்கு பிறகு வந்த ஒரு பெண்...அவசரத்தில் பிறந்திருப்பார் போல.. ஒரு பொது இடத்தில் பலரும் காத்திருக்கும் நேரத்தில் தனக்கு உடனே கட்டவேண்டும் என்று நச்சரித்து கொண்டே இருந்தார். எனக்கோ செம க்டுப்பு. கடைக்காரருக்கு அதைவிட கடுப்பு.இதில் எல்லாத்திலும் அதிக்மாக கொடுங்க என்று ஆர்டர் வேறு. இந்த அம்மா வீட்டுக்காரன் செத்தான்!!

வண்டியிலே சூடாக பாத்திரம் வைத்து கண்முன்னாலே சுத்தமாக மாவை குழாயில் அடைத்து வேக வைத்து புட்டாக்கி தருகிறார்.புட்டை பொருத்தவரை மாவு நன்றாக நைசாக இருக்கவேண்டும் இல்லையின்றால் புட்டு சொதப்பி விடும். இவரின் மாவு நன்றாக நைசாக குருனை இல்லாமல்  உள்ளது. புட்டை ருசித்தவுடன் அந்த பக்குவம் நன்றாக தெரிகிறது.புட்டின் மேல் தேங்காய் துருவல் தூவி வெள்ளை சர்க்கரை போட்டு இலையில் வைத்து கட்டித்தருவதே தனி அழகு. அதுவும் புட்டு நன்கு வென்மை நிறத்தில் அழகோ அழகு!!

 கூடவே வெல்லைத்தை உருக்கி காய்ச்சி தண்ணிர் போல பாகும் தருகிறார். சிலருக்கு புட்டு கொஞ்சம் ஈரப்பதமாக இருந்தாலும் தான் சாப்பிட வாக இருக்கும் .நன்றாக இருக்கும் .அதனால் இதனை கொஞ்சம் ஊற்றி சாப்பிட்டால் இன்னும் கொஞ்ச இனிப்பு சுவை கூடுகிறது.குழந்தைகளுக்கு கொடுத்தால்...அவ்வளவுதான்..தினமும் புட்டு தான் வேனும் என்பார்கள்.அவ்வளவு பிடிக்கும்.

நான் அங்கே இருந்தபோது ஒரு குழந்தையுடன் வண்டியில் வந்த தம்பதியிடம் அந்த குழந்தை அப்பவே வேண்டும் என்று அடம்பிடித்துகொண்டு இருந்தது.

விலை..முழுப்புட்டு ரூ.40. அரை புட்டு .ரு 20 ரு


Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP