நொருக்குத்தீனி..... பானி பூரி.

>> வியாழன், 29 ஜனவரி, 2015

மிகத்தரமான பொருட்கள்..சுகாதார முறையில் உணவை தயாரித்தாலும் பெரும்பாலான உணவகங்களில் ஏன் ருசியாக இருப்பதில்லை...இதற்கும் மீறி ஒரு விசயம் உண்டு.....அது சமைப்பவரின் மனநிலை.

பெரும்பாலும் உணவகங்களில் சமைப்பவரின் மனநிலை....எவனோ சாப்பிடரான் என்கிற விட்டோத்தியான மனநிலை....
ஆனால் வீட்டிலோ....பாட்டி கிள்ளிப்போட்டு வைக்கும் ரசம் ருசியில் பட்டைய கிளப்பும்...காரணம் என் புள்ளை சாப்பிடரான் என்கிர அன்பின் கரிசனத்தின் அக்கறையின் வெளிப்பாடு!!

வயது வித்தியாசமின்றி அனைவரும் உண்பது என்பது மிக குறைவான உணவு பொருட்களே. அதில் ஒன்று வடநாட்டு சிறு தீனிகள் என்படும் சாட் வகைகள். அதாவது பானிப்பூரி ,பேல்பூரி,சன்னா கட்லெட்,தைய் புரி,மசால் பூரி இப்படி சில.
முதலில் ஊரில் ஒன்றோ இரண்டோ என்று இருந்த சேட்களின் வண்டிக்கடைகள் இன்று பெரும்பாலும் ஊரின் பல பாகங்களிலும் கடை பரப்பியுள்ளன. காரணம் .இத்தொழில் வெகு எளிது.எளிதான காரணம் மாலை மட்டும் தான் வேலை. சிறிய நிற்கும் அளவுக்கு இடம் இருந்தால் போது. இன்னொன்று மக்களின் ஷாப்பிங் எண்ணம் அதிகரிக்க அதிகரிக்க சிறிய ஊர்களில் உள்ள சின்ன பல்பொருள் அங்காடி முன்பு கூட இதுபோன்ற தீனிக்கடைகள் வந்துவிட்டது.
 தொடக்கத்தில் வட இந்தியாவில் இருந்து இங்கே புலம்பெயர்ந்த மக்களுக்காக அவ்ர்களால் தொடங்கப்பட்ட வணிகம். வீட்டில் இருந்தே அவர்களின் கைவண்ணத்தில் அனைத்துப் பொருட்களையும் செய்து கொண்டு வந்து சிறிய வண்டி கடையில் வைத்து வணிகத்தை தொடங்கினார்கள். ருசியும் கலக்கலாக இருந்தது. அப்பறம் என்ன வந்தாரை வாழவைக்கும் தமிழகம்......சைனாவின் நூடுல்ஸை பிரைட் ரைசையுமே தன் சொந்த உணவு கலாச்சாரமாக ஏற்றுக்கொண்டவர்கள்..அருகில் வசிக்கும் மனிதனை கைவிட்டுவிடுவானா என்ன?? இருக்கி அனைத்து ஒர் உம்மா கொடுத்து துக்கி கக்கத்தில் வைத்துக்கொண்டான்.
போக போக பார்த்தார்கள் இங்குள்ளவர்கள்... பானிபூரியும் கச்சோரியும் சேட் கலந்தால் தான் சன்னாவுடன் குடுமப்ம் நடத்துமா...நாமளே கல்யாணம் செய்து வைத்துவிடுவோம்....என்று ..ஆங்காங்கே நம்மாட்களே கடை பரப்ப ஆரம்பித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் முதலில் கொஞ்ச நாள் போய் சேட் கடையில் தட்டு கழுவி சத்தம் இல்லாமல் அவன் என்னடா செய்யரான் என்று அனைத்தையும் கற்றுக்கொண்டு சில நாளில் சேட்...நம்க்கு உன் சம்பளம் கட்டுபடியாகல...அது இது என்று சொல்லிவிட்டு ..அடுத்த பத்தாவது நாளில் ..அதே சேட் கடைக்கு எதிரே கூச்சமே இல்லமால் வண்டியை கடையை தெளிவாய் போட்டவன் தான் சுத்த அக்மார்க் தமிழன்.

இப்போது இதற்கு தேவையான அனைத்தும் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது . சின்ன பூரியில் இருந்து பானி பூரிக்கு ஊற்றும் பானி வரை.வெறுமனே சுண்டல் அல்லது பட்டாணி வேகைவைத்தால் போதுமானதாக இந்த வணிகம் எளிதாக மாறிவிட்டது. விளைவு இப்ப தெருக்கு ஒன்றாக முளைத்துக்கொண்டு இருக்கிறது.
இதைப்பார்த்த நம்மாளுங்க...சும்மா இருப்பாங்களா... ஆனான பட்ட சைனிஸ் உணவுகளை லோக்கல் ருசிக்கு மாற்றி ரைஸும் நூடுல்ஸ்ம் தேசிய உணவாக அறிவிக்கும் அளவுக்கு கொண்டு போன ஆளுங்கள் ஆச்சே...விடுவாஙக்ளா... இறங்கினாங்க இதிலையும்... இப்ப பெரும்பாலான  இடங்களில் நம்மூர் ஆட்கள் தான் இந்த கடையை நடத்தராங்க.ஆனால் வந்த சேட்கள் சாப்பாட்டை நம்ம கையில் கொடுத்துவிட்டு சூப்பரான டெக்ஸ்டைல் வணிகத்தை நம்மிடம் இருந்து அவர்கள் எடுத்துக்கொண்டது தனிக்கதை.நம்மாளுங்க இதை கையில் எடுத்த விளைவு பல இடஙக்ளில் செம் சொதப்பலாக இருக்கிறது.
அதுவும் பாணிபூரியில் ஊற்றும் பாணி கர்ண கொடூரமாக இருக்கும்.எல்லாம் ரெட்மேட்  மசாலா. கடைகளில் விற்கிறது..தண்ணிர் கலந்தால் போதும்.இப்போது அதில் இருந்த தனித்துவமான ..அதுவும் கச்சோரியில் இருக்கும் தனித்த ருசி இப்ப கிடைப்பதில்லை.வெகு அரிது தான்.!!!

சில ஆண்டுகள் முன் வரை மாலையில் சிறு தீனி என்றால் எங்களின் நண்பர்க்ள் பட்டாளத்திற்கு தகுந்த ..பிடித்த இடம் பானி பூரி வண்டி கடைகள் தான். இதற்காகவே பல ஆண்டுகளுக்கு முன் சுமங்கலி சில்க்ஸ் எதிர்புறம் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதியில் இரண்டாவது திருப்பத்தில் ஒரு சேட் டவுசர் போட்டுட்டு இந்த வண்டி கடை வைத்திருந்தார். அப்போது அவ்வளவாக இந்த கடைகள் இல்லை. இந்த கடையில் ருசி கலக்கும்.நாங்க போன ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு சமோசா மசால்..அல்லது கச்சோரி.. பேல் பூரி..இறுதியில் பானி பூரி...அதுவும் பானிபூரி அசத்தும் .இப்ப அவரை கானவில்லை.அங்கே வேறு சேட் கடை போட்டு ரொம்ப காலம் ஆகுது. ஆனால் அந்த ருசி கிடைக்கவில்லை.
சமீபத்தில் ஒருநாள் கொல்லம்பாளையும் சுகுமார் பல்பொருள் அங்காடிக்கு முன் ஒரு பையன் இந்த வகை சிறிய கடையை ஆரம்பித்திருந்தார். ஒரு நாள் போய் ருசிப்போம் என்று எதேச்சையாக போனேன்.தயிர் பூரி சாப்பிட்டேன். அருமையான காம்பினேசன். உருளைகிழங்கு மசால் ..அதில் காரம் இனிப்பு.. கேரட் வெங்காய் துண்டுகள்..தயிர்....கலைவை அருமை.ஆடிப்போய்ட்டேன். அதில் இருந்து ரெகுலர். அடுதத முறை குடும்பத்தோடு போயிருந்தேன்.அனைவரும் ருசி நல்லாயிருக்கு என்று சொல்லிவிட்டார்கள்.அதுவும் என் குழந்தைக்கு ரொம்ப பிடித்துவிட்டது.
பெரும்பாலும் நான் பானிபூரி அல்லது தயிர் பூரி தான். வீட்டில் தான் மற்றது எல்லாம் சாப்பிடுவாரக்ள். நேற்றுஇரவு வீடு திரும்பும் போது தயிர் பூரி சாப்பிட ஆசை..சரி என்று தயிர் பூரி கேட்டால்...முடிந்தாயிற்று சார்ர் என்றார். ஒரு மாற்றாக பாணி பூரி சாப்பிட்டால் அருமையான பாணி!!!!!!!!!!
பானியிண் சிறப்பே அந்த பிளவர் நாக்கில் இருக்கனும்...அதுவரை சாப்பிட்டதே மறக்கனும்...வயிற்றில் உள்ளதை சீக்கிரம் டைஜிஸ்ட் செய்யனும் இதுதான் அதன் சிறப்பு. அந்த சிறப்பு வேலை செய்ய... ஒரு மசால் பூரி கொடுங்க என்றேன். டிவைன்!!நன்கு வெந்த வெள்ளை சுண்டல் வாயில் கரைக்கிரது...அருமையான மசால் கலவை. அந்த மசாலும் சுண்டலும் பக்க மிக்ஸிங்க். அருமையான சிகப்பு வெங்காய்ம் பொடியாக துண்டுகள். க்லந்து சாப்பிட சாப்பிட ....ஆஹா!!!பேஸ் ..பேஸ்..பட்டைய கிளப்புது. 
அந்த பையனிடம் சொல்லி விட்டு வந்தேன் இதே குவாலிட்டையை மெயிண்டய்ன் செய்தால் நல்ல வந்திருவா... கூட்டம் வருதுனு ஏதும் வேலை தனம் செய்திராதப்பா..

இன்னும் சுவைப்போம்...

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP