நாவூரும் மீன் குழம்பும் கலக்கல் குடல் குழம்பும்!!

>> சனி, 21 பிப்ரவரி, 2015

இட்லிக்கு சைவம் ஒரு செம்பாதி என்றால் அசைவம் இன்னொரு துனைவி!!அசைவத்தை பொருத்தவரை இட்லிக்கு கொங்கு பகுதியில் அசரவைக்கும்  செம்பாதி குடல்கறி குழம்பு தான்.திக்காக வைக்காமல் தண்ணீர் போல வைக்கும் குழம்புக்கு கொங்கு பகுதி மக்கள் தீவிர ரசிகர்கள்!.

சின்ன வாழை இல்லையில் நான்கு இட்லியை வைத்து குடல் குழம்பை அதன் மேல் ஊற்றி அந்த குழம்பு இலை முழுவதும் ஓட ...அதனை வழியாமல் இலையை ஆங்காங்கே சரி செய்து அதற்குள் ...ஒடும் குழம்பின் மேல்.... அவசர அவசரமாக இட்லியை பிட்டு ....குழம்பின்.. மேல் போட்டு இட்லியை குழம்போடு சேர்ந்து குழைத்து முதல் விள்ளல் வைக்கும் போது நாக்கில் நார்த்தனம் ஆடும் ருசி ...........முகத்தில் நவரசங்களை கொண்டு வரும்.!! அந்த முகத்தை பார்ப்பதே அழகு!!

கொஞ்சம் அனுபவசாலிகள் இட்லி வைத்து குழம்பு வருவதற்குள் ....இட்லியை துண்டு துண்டாக ..கையில் உள்ள ஆள்காட்டி விரைலையும் கட்டை விரலையும் பயன்படுத்தி ஒரு டிஸ்கோ டான்ஸ் ஆடி சின்ன துண்டுகளாக இலையில் பரப்பி நடுவில் இடம் வைத்து பாத்தி காட்டிவிடுவார்கள்.
பரிமாறுபவர் நல்ல அனுபவத்தில் இருந்தால் அவருக்கு தெரியும் அந்த இட்லியில் எங்கே குழம்பை ஊற்றவேண்டும் என்பது. மிகச் சரியாக இட்லிக்கு துண்டுகளுக்கு நடுவில் குழம்பை ஊற்றுவார். அது வட்டத்தின் சுற்று வட்டாரத்தில் இருக்கும் துண்டுகள் வரை செல்வதற்குள் உள் வட்டத்தில் இருக்கும் இட்லி துண்டுகள் ஊறிவிடனும். அப்பதான் அந்த இட்லி குட்!! இல்லை என்றால் பேட் இட்லி!!

அவுட்டர் ரிங் ரொடில் செல்லும் வாகனம் போல அதீத வேகத்தில் செல்லும் குடல் குழம்பை தடுப்பதற்கு கொஞ்சம் அனுபவம் தேவை.குழம்பு இலையை விட்டு வெளியே போகாமல் அதை தடுப்பதற்காக இட்லியை கொண்டு அதற்கு ஒரு தடுப்பனை போல இட்லி துண்டுகலை வைத்து பிசைந்து சாப்பிடுவது .....அனுபவம்!!! ..இல்லை...இல்லை... அது இட்லிக்கும் குழம்புக்கும் செய்யும் கல்யாணம்!!! லிங்காவில் என்னப்பா டேம் கட்டினாங்க... இதில் கட்டர டேம் ...பக்கா பயன் உள்ள செம கலக்கல் டேம்.
இட்லியும் குடல் குழம்பும் சாப்பிடும் போதும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. காரணம் குடலை நன்கு சுகாதாரமாக கழுவே வேண்டும்.கரணம் தப்பினால்..பின் வயிறு அவ்வளவு தான்.உணவு நஞ்சாகிவிடும்.பெரும்பாலும் நம்பகமான உணவகத்தில் மட்டும் இதை சாப்பிடுங்கள். இல்லையென்றால உணவகத்தில் தவிர்த்துவிடுங்கள்.
இடலிக்கு அசைவத்தில் சிக்கனும் சரி மட்டனும் சரி குழம்பு வடிவத்தில் பாத்தி கட்டப்படும்.இந்த வகை காம்போ தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் ருசிக்கப்படுகிறது.

பெரும்பாலும் விடுமுறை நாட்கள் அல்லது விழாக்கால நாட்களில் கன்டிப்பாக அன்றைய காலை வேளை இப்படித்தான் ஆரம்பமாகும். எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து என் பாட்டி வீட்டில் விழாகால நாட்களில் காலை இந்த மெனு தான். அதுவும் என் பாட்டி மசாலவை அம்மிக்கல்லில் அரைப்பார். குழம்பு பட்டைய கிளப்பும். இந்த வருடம் கூட கிறித்துமஸ் அன்றும் புத்தாண்டு அன்றும் காலை உணவு பாட்டி கையில் தான்.

இதுதவிர இட்லிக்கு குழம்பில் உள்ள சிக்கன் துண்டுகளை தோசைக்கல்லில் பிச்சிப்போட்டு அதனோடு கொஞ்சம் வெங்காய்ம் மற்றும் மிளகு தூள் தூவி அதே குழம்பை கொஞ்சம் ஊற்றி கொஞ்சம் செமி கிரேவியாக இடலிக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமாக இருக்கும் இது ஈரோட்டில் மரப்பாலம் முதலியர் மெஸ்ஸில் பிரபலம். இதன் பெயர் பிச்சுப்போட்ட கறி…அட பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்…நமக்கு பெயரா முக்கியம்…ருசி !!



இதுதவிர இருக்குது மீன் குழம்பு. பெரும்பாலும் கடல் மீன் ,டேம் வகை மீன் குழம்புகள் அனைவரும் உண்டு இருப்பர். ஆனால் ஆற்று மீன் குழம்பு தான் இட்லிக்கு கலக்கலாக இருக்கும் ஆற்று மீனின் குழம்பே தனி பிளவர் . அதிலும் விரால் மீனின் குழம்புக்கு ஈடு வெறு எதுவும் இல்லை. உண்மையில் மீன் குழம்பு பழையதாக பழையதாக ருசிக்கும் என்பது பொதுவான வாக்கு. நிதர்சன் என்ன்வென்றால் விரால் மீன் குழம்புக்கு தான் அந்த மகிமை அட்சரமாய் பொருந்தும்.சிலருக்கு மத்தி மீன் என்றாலும் உயிர். எனக்கு அதன் வருவல் மட்டும் நெருக்கம் அதிகம்.


இன்னும் ருசிப்போம்..

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP