பொது சொத்தின் சோகம்'

>> வியாழன், 19 ஜூலை, 2012


.'பொது சொத்தின் சோகம்'


காரட் ஹார்டின் என்கிற அமெரிக்க கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் எழுதிய ஒரு கட்டூரை 1968 ஆம் வருடம் 'சயின்ஸ்' பத்திரிக்கையில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.'இயற்கை என்பது உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானது' என்கிற நல்லென்ன நம்பிக்கையை நசுக்கி போட்டது அந்தக் கட்டுரை..'உலகில் உள்ள இயற்கை வளங்களுக்கு கணக்குகள் உண்டு..அவற்றை உபயோகிக்கும் மக்கள் தொகைக்கும் ஒரு வரைமுறை உண்டு.ஆனால் அதை ஏழை மக்கள் உனராமல் வதவதவென்று பெற்றுப் போடுகிறார்கள்.பொறுப்பற்ற இந்த மக்களை கண்கானித்து தண்டிக்க வேண்டும்” என்று கர்ஜித்த ஹார்டின் 'பொது சொத்தாக இயற்கை வளங்கள் இருப்பதால தான் இந்த நிலைமை.பொறுப்பில்லாத மக்கள் கூட்டம் இந்தப் பொது சொத்தை வீணாக்கி அழிக்கிறது.அதனால ஆறு குளம்,காடு,கடல்,ஏரி,.மலைகள் போன்ற இயற்கை பொது சொத்துக்களை தனியார்களுக்கும் ,செலவம் படைத்த நிருவனங்களுக்கும் விற்று விடவேண்டும் .தனக்கு சொந்தமில்லாத எதையும் மனிதன் கண்காணித்துப் பாதுகாப்பதில்லை.அதனால் இயற்கையைத் தனிச்சொத்தாக்குவது மட்டும் தான் அதை பாதுகாப்பதற்கான ஒரே வழி' என்று பெரிய போடாகப் போட்ட  சிந்தனைகளை கப்பென்று பிடித்துகொண்டன மேலை நாடுகள்.

உலகெங்க்கும் உள்ள இயர்கை வளங்களை எப்படிக் கொள்ளையடிக்கலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஹார்டினின் கட்டூரை வேதப்புத்தகமாக காட்சியளித்தது..அந்த நாடுகள் உடனே ஹார்டினின் யோசனையை வேகமாக அமல்படுத்த ஆரம்பித்தன்.இன்று உலகம் முழுவதும் ”தாராளமயமாக்கல்” என்கிற போர்வையில் குடிதண்ணீர் முதல் குழந்தை பிறப்பு வரை எல்லாமே வியாபாரமயமாக்கப் பட்டதற்கான அடிப்படையே இந்த புதிய பொருளாதார சிந்தனை தான்.வேறுவழியின்றி மேற்கு நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின்  பொருளாதார நிர்பந்தங்களுக்கு 'ஜாலரா'அடித்த ஏழை நாடுகள்  இன்று தங்க்களுடைய இயற்கை வளங்களெல்லாம் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இரையாகி கொண்டுருப்பதை கண்டு கைகளை பிசைந்து கொண்டு நிற்கினறன .அப்படி விழித்துக் கொண்டிருக்கும் நாடுகளிலில் இந்தியாவும் ஒன்று.
 பூமியில கிடைக்கும் தனிமங்க்களுக்கு உலகாலாவிய ஈர்ப்பும் பயன்பாடும் அதிகம்.அதில் பிலாட்டினம்,தங்கம்,தாமிரம்,இரும்பு,நிலக்கரி,எண்னெய் போன்றவை மிக முக்கியம்.இதில வரும் வருமானம் அதிகம் என்பதாலும் பல முன்னனி நிருவனங்களும் போட்டி போட்டு கொண்டு மானிட சமுகத்துக்கு சொந்தமான சொத்தை பின்விளைவுகள் தெரிந்தும் பணத்தாசையால் வஞ்சித்து அபகரித்து வருகின்றன.

90 களிலில் திறந்து விடபட்ட பொருளாதார பின்பக்க கதவுகளின் வழியாக இநத வியாதி இந்தியாவிலும் பரவியது.வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப்ப கட்டமைப்பு வசதிகளும் அதிகரித்து வருகின்றன.இதில சாலை,கட்டட்ம்,அணைகள போன்றவற்றிற்க்கு மிக முக்கிய மூல பொருள் கற்கள் .அதை சார்ந்து கட்ந்து 10 வருடங்க்களாக அதிகரித்து வரும் கல குவாரிகள் இந்தியாவின் மிக முக்கியமான் சுற்றுச்சூழல் பிரச்சனையாக உருவடுத்துள்ளது. தற்போது இந்தியாவில மட்டும் சுமார் 25000க்கும் அதிகமான கல குவாரிகள் உள்ளது.வருடத்திற்க்கான சந்தை மதிப்பு 15000 கோடி ரூபாய்.தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது புற்றுநோய் போல்..இத்துறையில் நேரடியாக சுமார் 15 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். இதில  அதிகம் வேலை செய்வோர் பழங்ககுடி மக்கள்,கிராம மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியோர் .அதனால கிராமம் நகரம் என்று வேறுபாடி இல்லாமல் தேசம் முழுவதும் பரவியிறுக்கினறன கல்குவாரிகள்.

குவாரிகலில்,கற்களை உடைக்கும்போது வெளிபபடும் தூசுக்கள் காற்றில கலந்து பெரும் ஆபத்தை விலைவிக்கிறது.அப்பகுதிகளிலில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்சனைகளான ஆஸ்மா மற்றும் நுரையிரல் புற்று நோய் ஏற்படுகிறது. கல்குவாரிகளிலில் பயன்படுத்தும் அமிலங்கள் மூலம் அவை நிரில கலந்து அங்கு உள்ள நீரை மாசுபடுத்துகிரது.அந்த நீரினால் தோல வியாதிகள் மர்றும் வயிறு சம்பந்தமாகன நோய்களும் ஏர்படுகிறது.நிலத்தில கலக்கும் நீரினால் நாலைடைவில் நிலம் மாசுபட்டு பயனற்றதாகிறது.குவாரிகளிலில் வேலை செய்வோர் படிப்பறிவு குறைவாக உள்ளதால் அவர்களுக்கு நோய் பற்றிய விளிப்புனர்வும் கிடையாது.அதனால நோயினால ஏற்படும் இறப்பு எண்ண்க்கை அதிகம்.இவர்களுக்கு முறையான ம்ருத்தவ வசதியோ அல்லது கழிப்பிட வசதியோ கூட கிடையாது என்பது தான் மனதை வருத்தும் உண்மை.குவாரிகளுக்கு தேவையான கற்கள் பெரும்பாலும் மலைகளை உடைத்தே எடுக்கப் படுகிறது. அம்மலைகள் பெரும்பாலும் வனம் சார்ந்த பகுதிகளே. அதை சார்ந்துள்ள வன உயிரினங்களின் உயிர் சூழல் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.அவை கட்டாயமாக இடம் பெயரக்கூடிய் சூழல்.அதனால வனவிலங்க்குகள் மற்றும் மனித மோதல்க்ளும் ஏற்படுகிறது. காடுகளை பூர்வீகமாக கொண்ட பழங்குடி மக்களின் வாழ்வு ஆதாரம் மிக கடுமையாக பாதிக்கப் படுகிறது.அரசின் அனுமதி பெற்று வரும் தனியார் நிருவன்ங்க்கள் முதலில் ஆசை வார்த்தை சொல்லி மக்களிடம் காரியம் சாதித்த பிறகு ஆப்பு வைத்த கதைகள் ஏரளாம்.மக்களை மீள்குடியம்ர்த்தும் அரசும் இதில் இன்று வரை ஒரு சரியான கொள்கைகளை பின்பற்றாததும் உண்மை.மேலும் மலைகளை குடையும் போது ஏற்படும் அதிர்வினால ம்லைகளிலில் உள்ள் வீடுகள் பாதிகக்ப படுவதும் கண்டு கொள்ள்பப்டுவதில்லை.இவைகள் தான் மண சரிவிற்க்கும் முக்கிய காரணம்.
 
தரையில் தவித்து கொண்டிருந்த தவளை ஒன்று  தண்ணீர் நிறைந்த  ஒரு பாத்திரத்தில் குதித்து விழுந்தது.குளிர்ந்த நீரை கணட தவளை ஆன்ந்தமாய் அக்களித்தது.தண்ணீர் இருந்த பாத்திரம் மிக மிக மெதுவாக சூடேற்றபபட்டது.. தவளைக்கு நல்ல இதமாக சுகமாக இருந்த்து.தண்ணீர் மிக மெதுவாக சூடேற்ற்ப்படுவதால் தவளையால் முதலில்.எதையும் உண்ரமுடியவில்லை.சில மணி நேரம் சென்றது.ஏதோ ஒன்று நடப்பது போல் தவளை உணர ஆரம்பித்தது.ஆனால அதனுடைய உலகை விட்டு வெளியேற வேறு இடம் இல்லை.சில மணி நேரத்திற்க்குப் பின் தவளை தண்ணீரில் செத்து மிதந்தது.இந்த நிலைமை தான் இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் குறிப்பாக மனிதருக்கும் ஏற்பட்டுள்ளது.ஆம்..நமக்கு தெரிந்தே அழிந்துகொண்டிருக்கிறோம்.  அழியும் உலகைப் பற்றிய அறிவும் ,அதைச் சீர்செய்யும் வழியும், நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டிய ஒன்று.அதை தான் இராயிரம் ஆண்டுக்கு முன்னே சொன்னான் பொய்யாமொழிப் புலவன்..

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்”


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP