”ஒளியின் நிழல்”

>> வியாழன், 19 ஜூலை, 2012



”ஒளியின் நிழல்”

படங்கள்:மு.சுதாகர்

ஒரு நாட்டின் மக்கள் நலவாழ்வுக்கு நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று டாகடர் மாலின் என்ற ஸ்வீடன் நாட்டு நீரியல் வல்லுனர் கணக்கிட்டுள்ளர்.இதன் அடிப்படையில் வெப்ப பகுதியில் உள்ள நாட்டின் மக்கள் நல்வாழ்விற்க்கு நபர் ஒருவருக்கு 2000 க.மீட்டர் தண்ணீர் தேவை. 1700 க.மீ விட  குறைந்தால் அவ்வாப்போது அந்த நாட்டில் பலவேறு பகுதிகளில் வறட்சி நிலவும்.அதுவே 1000 க.மீ குறைந்தால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மக்களின் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்படும்.இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளபபட்டது.இந்த கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் தற்போது நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 900 க.மீ மட்டுமே கிடைக்கிறது.இதானால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும் சூழலில் உள்ளது.

தமிழ் நாட்டில் ஆண்டு தோரும் சராசரியாக 925 மி.மீ மழை பெய்கிறது.தென்மேற்குப் பருவ காலத்தில் 307.60 மி.மீ,வடகிழக்குப் பருவ காலத்தில் 438.70மி.மீ,குளிர்காலத்தில் 42.20மி.மீ,கோடைகாலத்தில் 136.50 மி.மீ மழை பெய்கிறது.இவை சராசரி அளவுகள். இந்த மழை தமிழ்நாடங்கும் ஒரே மாதிரியாக பெய்வதில்லை.கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு 600மி.மீ  க்கும் குறைவாகவும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 2000 மி.மீ க்கும் அதிகமாகவும் மழை பெய்கிறது. சென்ற நூற்றாண்டில் 1709 முதல் 1735 வரை 7 முறையும் 1770,1811,1847,1877 ஆண்டுகளிலும் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. லட்சக்கனக்கானோர் மாண்டனர்.1947 க்கு பின் பஞ்ச்சம் இல்லை.ஆனால் மழை குறைந்து வறட்சி நிலை பல முறை நேர்ந்தது.தமிழ் நாட்டில் வறட்சிக்கு இலக்காகும் பரப்பு 64 விழுக்காடு .கடந்த 46 ஆண்டுகளில் பெய்த மழை அளவுகளை ஆராய்ந்தால் 60 விழுக்காடு ஆண்டுகளில் சராசரியைவிடக் குறைவாக மழை பெய்திருக்கிறது

தமிழ் நாட்டில் 33 ஆற்றுப் படுகைகள் உள்ளன.இந்த ஆறுகளில் ஓடும் தண்ணீரில் தமிழ் நாட்டு எல்லைக்குள் பெய்யும் மழையால்  கிடைப்பது 24,000 மி.க.மீ.பிற மாநிலங்களில் இருந்து கிடைப்பது12,000மி.க.மீ.மொத்தம் ஆண்டுதோரும் 36,000 மி.க்.மீ மேற்பரப்பு நீர்வளம் கிடைக்கிறது

நிலத்தடி நீர்வளம் எனபது மழை நீர் மண்ணுக்குள் சென்ற பகுதியே.விவசாய நிலங்களில் பாய்ச்சப்படும் நீரின் ஒரு பகுதியும் மண்ணுக்குள்  தான் செல்லும்.இதற்கு ஏற்ற வகையில் மண்ணின் தன்மை இருந்தால்தான் நிலத்தடி நீர்வளம் பெருகும்.தமிழ் நாட்டின் பெரும்பகுதி சுமாராக 73 விழுக்காடு கடினப்பாறைப் படிவங்களால் ஆன நிலப்பகுதி.ஊற்று பெருக  வாய்பிலலாத குறைந்த நீர் வளம் உள்ளவை.நீர்வளம் கிடைக்கும் மணற் பகுதி 27 விழுக்காடு மட்டுமே.இதில் 19 லட்சம் கிணறுகள் உள்ளன.18 லட்சம் கிணறுகளுக்கு பம்ப்செட் வசதி உள்ளது.இந்தியாவிலே அதிக அளவு பம்ப்செட் பயன்படுத்தும் மாநிலம் தமிழ் நாடு.ஊறும் அள்வைவிடவும் அதிகமாக நீரை இரைத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையும்.நிலத்தடி நீர் வளத்தைச் சுரண்டுவதைக் கட்டுப்படுத்த 2003 ஆம் ஆண்டு தமிழ்க அரசு ஒரு சட்டம் கொண்டு வந்த்து.ஏராளாமான ஓட்டைகளைக் கொண்ட அந்தச் சட்டத்தை இன்னும் நடைமுறைபடுத்தவில்லை.ஆண்டுதோரும் தமிழ் நாட்டில் ஊற்றுப் பெருகும் நில நீர் அளவு.23,000மி.க.மீ.மேற்பரப்பு நீர்வளம்  , நிலத்தடி நீர் இரண்டும் சேர்ந்து ஆண்டுதோரும் கிடைக்கும் மொத்த நீர் வளம் 59,000மி.க.மீ.

கிடைக்கும் தண்ணிரில் கிட்டதட்ட 75 விழுக்காடு விவசாய தேவைகளுக்கு பயன்படுகிறது.உலகெங்கும் இதே நிலைமை தான்.இதானால் தண்ணீரின் அளவை குறைக்க குறைந்த கால பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டன.தமிழ் நாட்டில் அதிகம் பயிரிடபடும் நெல ரகங்கள் 1950-60 லில் 180 நாள்கள் சாகுபடிக்காலம்.1960 க்குப் பின் 105 நாள ரகங்கள் பயிரிடபட்டன.சாகுபடி காலமும் அதிகரிக்கவில்லை.சாகுபடி பரப்பும் அதிகரிக்கவில்லை.பின் எங்கே போனது தண்ணீர்?உண்மையை சொல்ல போனால் வேளான்மையில் நேர்ந்த மாற்றங்கள்  விவசாயத்திற்கான தண்ணீர் தேவையை அதிகரித்தது.நிலத்தடி நீர் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்தது.

1960-80 வரையாலான பசுமை புரட்சி காலத்தில நெல் விளைச்சல் எக்டேருக்கு 600 கிலோ மட்டுமே உயர்ந்தது.அந்த காலகட்டத்தில் ஏரளாமான நீர்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டன.பாசன பரப்பு பன்மடங்கு விரிவடைந்தது.ஒரு போக நிலங்கள் இரு போக நிலங்களாக மாறின.மொத்த உணவு உறபத்தி 2  முதல் 3 மடங்கு வரை அதிகரித்தது.ஆனால உயர் விளைச்சல் ரகங்களும் ரசாயன உரங்களும் வானம் பார்த்த பூமியில் பசுமை புரட்சியை ஏற்படுத்தவில்லை. தண்ணீர் முக்கிய இருபொருளானது. கால்வாயில் உரிய நேரத்தில் தண்ணீர் வரவில்லை என்றால பயிர் விளைச்சல் பாதிக்கும்.போட்ட முதல் கிடைக்காது.இந்த நிலைமையில் விவசாயிகள் பெருமளவில கிணறுகள் தோண்டினர்.கடன் கொடுத்து கிண்று வெட்டத் தூண்டப்பட்டது.1960லில் 4300 இறைவை எந்திரங்கள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது சுமார் 19 லட்சம் இறைவை எந்திரங்கள்.!!இறைக்க இரைக்க ஊருவதர்க்கு நிலத்தடி நீர் என்ன வற்றாத சுரங்காமா?பணவசதி படைத்தவர்கள் மேலும் மேலும் ஆழமாக தோண்டினார்கள்.ஏழைகள் தங்கள் கிணறு வற்றியதும் நிலத்தை விற்றனர்.

விடுதலைக்கு பின் ஏரளாமான நீர்பாசன் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு ஆற்றுப் பாசன பரப்பு 1.59 மி.எக்டேராக விரிவடைந்தாலும், ஆற்று பாசன கால்வாய்கள் மூலம் ஆண்டுக்கு பாசனம் பெறும் பரப்பு 0.9மி .எக்டேரை தாண்டவில்லை. தமிழ் நாட்டு ஆற்று நீர்வளம் அந்த அளவுக்கு தான்..கிணற்றுப்பாசனம் பெரும்பாலும் பணப்பயிர்களான கரும்பு , வாழை ,புன்செய் பயிர்களான நிலக்கடலை பருத்தி ஆகியவற்றுக்கே பயன்படுகிறது.தமிழர்களின் உணவு முறையில் நிகழ்ந்த மாற்றங்கள் தமிழ்னாட்டின் பயிர் வகைகலிலும் மாற்றங்களை ஏற்படுத்தின.புன்செய் தானிய பயிர்கள் குறைந்தன்.நல்லெண்ணெய் கடலை எண்ணெய் போய் பாமாயில் வந்தது.நெல் சாகுபடி பரப்பும் 1979-80 ஆம் ஆண்டில தான் அதிகபட்சமாக 29,06,000 எக்டேரை எட்டியது.ஆனால் நெல் சாகுபடி பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது.கர்னாடகப் பொன்னியும்,ஆந்திரப் பொன்னியையும் வாங்கி சாப்பிட வேண்டிய நிலை !.1960லில் இருந்த நிலப் பயன்பாட்டையும் தற்போதைய நிலையையும் ஓப்பிட்டால 8.35 லட்சம் எக்டேர்கள் விவசாயம் அல்லாத  பிற பயன்பாட்டிற்கு மாறிவிட்டன.மேய்ச்சல் நிலங்கள் 2.5 லட்சம் எக்டேர்கள் குறைந்துவிட்டது.1.08 லடஸ்ம் எக்டேர் தரிசாக மாறிவிட்டது.

உணவு உற்பத்தியிலும் 1960லில் எக்டேருக்கு 1413 டன்னாக இருந்த நெல் உற்பத்தி திறன் 1970 லில் உயரத் தொடங்கி 1990லில் 3000 டன்னை தாண்டியது.தற்பொது 3000-3300 டன் அளவிலேயே தங்கிவிட்டது.1960லில் நபருக்கு ஆண்டுக்கு 114 கிலோ நெல் உற்பத்தி தற்போது  94 கிலோவாக குறைந்து விட்டது.தமிழ் நாட்டில விளை நிலங்களோடு நாம் நீராதரங்க்களையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

உலக மக்கள் நல்வாழ்வு அமைப்பு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 150 லிட்டர் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.ஆனால தமிழ் நாட்டில் நகர்ப்புற மக்களுக்கு ஒரு நாளுக்கு 140 லிட்டரும் கிராமப்புற மக்களுக்கு 40 லிட்டரும் வாழங்க திட்டமிடப்பட்டாலும் பெரும்பாலான கிராமங்களுக்கு திட்டமிட்ட படி வழங்க்கபடுவதில்லை.மாநகராட்சிகளுக்கு 70-100 லிட்டர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படுகிறது.கிராமங்களுக்கு அதுவும் இல்லை.

தமிழ் நாடு முழுவதுமே குடி நீர்ப் பிரச்சனையால் வாடும்போது சென்னைக்கு மட்டும் மீண்டும் மீண்டும் புதிதாகத் திட்டங்கள் கோடி கோடியாகப் பணம் கொட்டப்படுகிறது.சென்னையில் பெய்யும் மழை ஆண்டுக்கு 1260 மி.மீ.கடந்த 20 ஆண்டுகளில் 1000மி.மீ குறையாமல் மழை பெய்துள்ளது.இந்தியாவில் இதை விட குறைவாக் மழை பெய்யும் நகரங்களில் 'தண்ணீர் பஞ்சம்' என்ற கூக்குரல் எழவில்லையே?இதுவரை 5000 கோடி செலவிட்டும் 20 விழுக்காடு மக்களுக்குமட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது.வீராணம்,கிருஷ்னா என்று பெரிய திட்டங்கள் தீட்டியும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை..சென்னையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கிண்றுகளை உறுஞ்சி அங்குள்ள விவசாயிகளை அகதிகளாகச் சென்னைக்கு அனுப்பியது தான் இந்த திட்டங்களின் பயன்.

மா நகராட்சிகள் குடிதண்ணீர் வழங்ககுவதை தனியாரிடம் ஒப்படைக்கலாம் எனத் தமிழக அரசு முடிவெடுத்து ஆணை பிறப்பித்துள்ளது.அதில் திருப்பூருக்கு ஒதுக்கப்பட்ட தொகை 1273 கோடி.2002-03 முதல்  30 ஆண்டுகள் ஒப்பந்தம்.நாளொன்றுக்கு 185 மில்லியன் லிட்டர்.இதன் விலை 1000 லிட்டருக்கு 45 ரூபாய்.மக்களுக்காகவே இவ்வளவு செலவில் அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டது.இந்த திட்டப்படி நாளொன்றுக்கு சாயப்பட்டறைக்களுக்கு 115 மி.லிட்டர் வழங்கப்படும்.ஆனால் திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள 800 கிராமங்களுக்கு குடிதண்ணீருக்காக 70.மி.லிட்டர் மட்டுமே வழங்கப்படும்.யாருக்காக திட்டம்  மக்களுக்காகவா ? சாயபட்டரைகளுக்காகவா?
கோவை தனியார் குடி நீர் 'தயாரிப்பு' நிருவனத்திற்கு நாள்தோரும் ஒரு மில்லியன் லிட்டர் பவானி ஆற்றிலிருந்து எடுத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது.அரசுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் கட்டணம் !உண்மையில் இந்த நிருவனம் த்ண்ணீரை வேறு ஒரு நிருவனத்திறக்கு விற்கிறது.சிவகங்கையில் சக்தி சர்க்கரை ஆலை நாள்தோரும் 75000 லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி'கோக கோலா' நிறுவனத்திற்க்கு விற்கிறது.இதே நிருவனத்திற்க்கு அரசு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் தாமிரபரணி ஆற்றிலிருந்து நாள்தோறும் ஜந்து லட்சம் லிட்ட்ர் தண்ணீர் எடுத்து 6250 ரூபாய்க்கு விற்கிறது.ஆனால் 'கோக கோலா ' நிறுவனம் ஒரு லிட்டர் தண்ணீரை 15 ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய்க்கு விற்கிறது!

சட்டீஸ்கர் அரசு சியோநாத் ஆற்றினை 22 ஆண்டுகளுக்கு தனியாரிடம் குத்தகைக்கு விட்டுள்ளது.இந்த போக்கு தமிழ் நாட்டிலும் தொடங்கிவிட்டது.தண்ணீர் வணிகத்தில்.  தமிழ் நாட்டில்  புழங்கும் பணத்தின் மதிப்பு 10 ஆயிரம் கோடி!இதை பற்றி கவலைபடாமல் ,பிற மாநிலங்களிலிருந்து தண்ணீர் வரும் என்ற கனவில் ,உள்ளதையும் இழந்து கொண்டிருக்கிறான் தமிழன்.


2 பின்னூட்டங்கள்:

மருதம் 19 ஜூலை, 2012 அன்று PM 3:04  

மிகச்சிறந்த‌ பதிவு --‍ கு. கதிரவன், செஞ்சி‍‍

Unknown 19 ஜூலை, 2012 அன்று PM 4:31  

மகிழ்ச்சி. மிக்க நன்றி

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP