அழிவின் விழிம்பில்..-50

>> திங்கள், 30 ஜூலை, 2012


இமயமலை மோனால் ஃபெசன்ட்
Himalayan Monal pheasant-lophophorus impejanus(latham)


ஆண்பறவைக்கு ,மினுக்கு பச்சை இறகுகள்,நீள்வடிவமான பச்சை நிறக் கொண்டை ,நீல வண்ணக்கழுத்து மற்றும் கொண்டை ஆகியன் இருப்பதால் பார்ப்பதற்க்கு மிக அழகாக தோன்றும்.பெண் பறவைக்கு பழுப்பு வண்ண இறகுகள் இருக்கும்.

இமயமலை மோனால் ஃபெசன்ட் பறனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால் தற்போது இமாசலப் பிரதேசத்தில் சில இடங்களில் மட்டுமே தென்படுகிறது. 




Read more...

அழிவின் விழிம்பில்..-49


மேற்கத்திய டிராகோபன்

Western Tragon-tragopan melanocephalus(j.e.gray)



வண்ணமிகு இப்பறவை.கோழி வகையை சேர்ந்த்து.குறிப்பாக ஆண்பறவை செந்நிறத்தில் வட்ட வடிவ வெண்புள்ளிகள் கொண்டு அழகாக இருக்கும்.முகத்தோல் இறகுகளற்ற நல்ல் செந்நிறத்திலும் ,தொண்டைப் பகுதி திண்ணிய நீல நிறத்துடனும் அமைந்திருக்கும்.பெண் பறவை சாம்பல் நிறத்தில் கருப்பு வெள்ளைப் புள்ளிகளுடன் இருக்கும்.ஒரு காலத்தில் இமயமலைப் பகுதி முழுவதும் நிறைந்திருந்த இப்பறவை ,உறைவிட அழிப்பால் இகவும் குறைந்து விட்டது.தற்போது இமாசலப் பிரதேசத்திலும் ,காஷ்மீரின் சில பகுதிகளிளும் மட்டுமே தென்படுகிறது.  

Read more...

அழிவின் விழிம்பில்..-48


லிக் ஃபுளோரிகான்
Likh florican –sypheotides indica (j.f.miller)
லிக் ஃபுளோரிகான் பறவை இந்தியாவில் உயர்ந்து வளர்ந்த புற்பகுதிகளிலும் ,புதர்களிலும் காணப்படுகிரது .உறைவிட அழிப்பாலும்,இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டதாலும் இது அபூர்வ பறவையாகி விட்ட்து.இனச் சேர்க்கை காலங்களில் இப்பறவைக்கு தலை,கழுத்து,கீழ்ப்பகுதிகளில் கறுமை படர்ந்த மங்கிய மஞ்சள் நிறத்திலும் பக்கவாட்டு பகுதிகள் வெண்மை நிறத்திலும் கொண்டை இறகுகள் கறுமையாகவும் இருக்கும்.பெண் பறவை சற்றுப் பெரியதாகவும் ,கருமை படர்ந்த இள மஞ்சள் நிறத்திலும் இருக்கும்



Read more...

அழிவின் விழிம்பில்..-47


பெரிய இருவாட்சி
Great Pied Hornbill-Buceros Bicornis Homrai(Hodgson)
அள்வில் கழுகை ஒத்திருக்கும் பெரிய இருவாட்சிக்கு கொம்பு போன்ற அலகும்,பெரிய ‘V’ வடிவமான தலைகவசமும் கொண்டு ,குழிவான வடிவத்தில் காணப்படும்.உடல் கருமையும் வெண்மையும் கல்ந்திருக்கும்.முகமும் கீழ்ப்பகுதிகளும் கருமையாகவும் ,கழுத்தும் வயிற்றின் கீழ்ப்பகுதியும் வெள்ளையாகவும் இருக்கும்.வால் பகுதி வெண்மையான வரிகளை கொண்டிருக்கும்.
கேரளா வரை செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி,அருணாசலப் பிரதேசத்தில் உள்ள கீழ் இமய மலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருவாட்சி வாசம் செய்கின்றன.இது பழங்கள்,பெர்ரிகள் அத்தி பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளும் ,பல்லி வகைகள் ,பாம்புகள் ,எலிகள் மற்றும் கூட்டிலிருக்கும் சிறு பறவைகள் ஆகியவற்றையும் உண்ணும்

Read more...

அழிவின் விழிம்பில்..-46


மாபெரும் இந்திய பஸ்டர்டு
Great Indian Bustard-Ardeotis Migriceps(vigors)
இளம் நெருப்பு கோழி போன்ற அளவுடைய பஸ்டர்டு பறவை நிலத்தில் வாழும் பெரும் பற்வையாகும்.திண்ணிய மஞ்சள் நிறமுடைய சிறகுகள் ,அவற்றின் ஓரத்தில் கறுப்பு வண்ணம்,கருமை நிறக் கொண்டை,வெண்மையான நீண்ட கழுத்து,வெள்ளை நிறம் உடைய உடலின் கீழ்ப்பகுதிகள் ஆகியன இதனை வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்களாகும்.ஒரு காலத்தில் வங்காளம் ,அஸ்ஸாம் ,தென்மைசூர் நீங்கலாக ,இந்தியா முழுவதும் காணப்பட்ட இப்பறவை ,தற்போது ராஜஸ்தானின் வறண்ட் பகுதிகள்,குஜராத் மற்றும் மகராஷ்டிராவில் அகமது நகர் மாவட்டம் ஆகிய இடங்களில் மட்டுமே தென்படுகிறது.. 

Read more...

அழிவின் விழிம்பில்..-45



ஜெர்டன் கோர்சர்
Jerdon’s courser-cursorius bitorquatus(blyth)
உலகில் காணப்படும் அரிய பறவைகளில் ஜெர்டன் கோர்சர் ஒன்றாகும்.1900 ஆம் ஆண்டு முதல் எவர் கண்ணுக்கும் தென்படாத்தால் இப்பறவை முற்றிலும் அழிந்து விட்ட்தாக்க் கருதப்பட்டு வந்த்து.ஆயினும் 1986 ஆம் ஆண்டு பம்பாய் இயற்கை வரலாற்று மையம் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கோதாவரிப் பள்ளதாக்கில் இப்பறவை உயிருடன் இருப்பதை கண்டறிந்தது.


இப்பறவைக்கு இளச்சிவப்பான பழுப்பு வண்ண இறகுகளும் ,திண்ணிய பழுப்பு நிறக் கொண்டையும் அகன்ற வெள்ளி மாலை சூட்டிய கழுத்துப் பகுதியும் இருக்கும்.முகவாய்க் கட்டையும் ,தொண்டைப் பகுதியும் வெண்மையாக காணப்படும்.வயிற்றுப் பகுதி சாம்பல் வெண்மையாக தோன்றும்.வால்பகுதி இறகுகள் கருமை படிந்த வெண்ணிறத்தில் இருக்கும்.இப்பறவை ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனந்தபூர்,கடப்பா,நெல்லுர்,மற்றும் கோதாவரிப் பள்ளதாக்கிலுள்ள பத்ராசலத்திலும் ,மகாராஷ்டிராவிலுள்ள சிரோன்கா பகுதியிலும் தென்படுகிறது.

Read more...

அழிவின் விழிம்பில்..-44


பறவைகள்

சுமார் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு “மிசோசாயிக்” இடையுயிர் மண்ணூழிக் காலத்தில் ஊர்வனத்திலிருந்து தோன்றி பூமியெங்கும் பற்வைகள் பரவின.இவை பல்வேறு அளவுகள் உருவகங்கள் வண்ணங்கள் மற்றும் பழக்கங்கள் கொண்டு திகழ்கின்றன.எல்லாக கண்டங்களிலும் காணப்படுகின்றன.எங்கெல்லாம் ஒதுக்கிடங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வாழும் திறன் படைத்தவை.தற்போது 8600 உயிரின் வகை பிரிவுகள் உள்ளன.இன்னும் கண்டு பிடிக்க வேண்டியவை சில டஜன்களே.
இம்மாபெரும் பறவை கூட்ட்த்தை பற்வை முறைமையாளர்கள் 27 இனக் குழுமங்களாகவும் 155 குடும்பங்களாகவும் வகைபடுத்தியுள்ளனர்.
மனிதனுக்கு தெரிந்த முதல் பறவை “ஆர்க்கியோடீரிக்ச்” எனப்படும் மிகப் பழமையான ஊர்வன்வற்றுக்கும் பறப்பன வற்றுக்கும் இடையிலான ஒரு விலங்காகும்.இது பவேரிய புதைப் படிவத்திலிருந்து தெரியவருகிறது. பறவைகள் உலகம் என்பது பத்து பைசாவை விட எடை குறைந்த ஹம்மிங் பறவை முதல் 135 கிலோக்கும் அதிக எடை கொண்ட நெருப்பு கோழி வரை அடங்கும்.
இந்திய பற்வை உயிரினத் தொகுதியில் சிறப்புமிக்க பல்வகை பறவைகள் உள்ளன.தற்போது உலகில் காணப்படும் 27 பற்வைகள் இனக்குழுமங்களில் இந்தியாவில் 21 இனக் குழுமங்கள் 1200 உயிரின வைகை பிரிவுகள் தென்படுகின்றன. இது உலகில் கானப்படும் 8600 வகைபிரிவுகளில் 14 விழுக்காடு. பறவைகளின் துணை வகைக்ளையும் நீர் மற்றும் நிலப் பறவைகளையும் சேர்த்து இந்தியாவில் உள்ள பறவைகளின் வகைப் பிரிவுகள் 2060 என்று கொள்ளலாம்.இதில் 1750 வகை பிரிவுகள் இந்தியாவில் வாழ்பவை.
ஆயினும் மனிதனின் நடவடிக்கைகள் உறைவிட ஒழிப்பு காடுகள் அழிப்பு மற்றும் மாசுபாடுகளினால் பல பற்வைகள் ஆபூர்வமாகி அழிவுக்கு இலக்காகி உள்ளன.தற்போது தேவை பற்வைகளை காக்கும் கடுமையான பாதுகாப்பு முயற்சிகளே. அதில் ஆபத்தின் விழிம்பில் உள்ள பற்வைகளை வரும் பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.


Read more...

அழிவின் விழிம்பில்...-43


ஹிஸ்பிட்டு காட்டு முயல்
Hispid gare-caprolagus hispiddus(pearson)

ஹிஸ்பிட்டு காட்டு முயலுக்கு தடித்த குட்டையான முள் மயிர் இருக்கும்.இது பொதுவாக திண்ணிய பழுப்பு நிறமும்,கீழ்ப்பகுதிக்ளில் வெண்மை நிறமும் இருக்கும்.கருங்காட்டு முயலுடன் ஒப்பிடுகையில் இதன் காதுகள் சிறியவையாகத் தோன்றும்.
ஒரு காலத்தில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள டெராய்ப் பகுதி அஸ்ஸாம்,மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் காணப்பட்ட ஹிஸ்பிட் காட்டு முயல் தற்போது ஒடுங்கி விட்டது.சற்று மெதுவாக ஓடக் கூடிய இம்முயல் வேர்கள், மரப்பட்டைகள் சிறுசெடி கொடிகள் ம்ற்றும் இலைகளை உண்டு வாழ்கிறது.ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை ஈனும்.உண்ணும் உணவில் உள்ள சத்துப்பொருட்களை கிரக்கிப்பதற்காக இதற்கு சிறப்பான செரிமான தொகுப்பு உறுப்புக்கள் உண்டு.இது தனது சாணத்துடன் ஓரளவே செரிக்கப்பட்ட உண்வையும் வெளியேற்றுகிறது. புழுக்கைகள் என்றழைக்கப்படும் ஓரளவே செரிக்கப்பட்ட ஆகாரத்தை இது மீண்டும் உட்கொள்ளுகிறது.இவ்வாறு உட்கொள்ளப்பட்ட ஆகாரம் மீண்டும் செரிக்க்ப்படுவதால் இதிலிருந்து முக்கிய வைட்டமின்கள் உடலுக்கு கிடைகின்றன.
குட்டிகள் ஈன்ற் உடனேயே பெண் முயல் மீண்டும் இனச் சேர்க்கைக்கு தயாராகிவிடுவதால் ஈனும் திறம் மிக அதிகம்

Read more...

அழிவின் விழிம்பில்..-42


மார்க்கோர் காட்டு ஆடு
Markhor-capra falconeri(wagner)

மார்க்கோர் காட்டு ஆடு பருத்த உடல் மற்றும் அடர்ந்த மென் மயிர் கொண்ட்து.கிடா ஆட்டிற்கு முட்டி வரை தொங்கும் சாம்பல் நிற பிடரி மயிர் இருப்பது குறிப்பிட்த்தக்கது.பெட்டை ஆட்டிற்க்கு இந்த பிடரிமயிர் முவாய்க் கட்டை வரை மட்டுமே தொங்கி காணப்படும்.கிடாவிற்கு நீண்ட தட்டையான முறுக்கப்பட்ட ஒரு சோடி கொம்புகள் காணப்படும்.பெட்டை ஆட்டின் கொம்புகள் குறுகியவை.
நீண்ட முடியுடைய மார்க்கோர் ஆட்டின் உரோமம் குளிர் காலத்தில் அழுக்குப்படிந்த சாம்பல் நிரத்திலும் வெயில் காலத்தில் நீளம் குறைந்து செம்பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
மார்க்கோர் காட்டு ஆடுகள் 12 முதல் 50 எண்ணிக்கை கொண்ட மந்தைகளாக மேயும்.இவை காஷ்மீர் உள்ளிட்ட மேற்கு இமயமலை பகுதிகளில் 600 முதல் 3600 மீட்டர் உய்ரமுள்ள இடங்களில் வசிக்கினறன. 

Read more...

அழிவின் விழிம்பில்..-41


இபெக்ஸ் காட்டாடு
Ibex-cabra ibex)linnaeus)

இமய மலை பகுதிகளில் தென்படும் இபெக்ஸ் காட்டு வெள்ளாடு கட்டுடல் கொண்ட நேர்த்தியான விலங்கு .ஆண் ஆட்டிற்க்கு நீண்ட தாடியும் நீண்ட தட்டையான வளைந்த கொம்புகளூம் இருக்கும்.பெண் ஆடுகளின் கொம்புகள் சிறியன.இதன் நிறம் பருவ காலங்களைப் பொருத்து அமையும்.குளிர்காலத்தில் சாமபல் பூசிய மஞ்சள் நிறமும் வெயில் காலத்தில் கிடாவிற்கு வெண் திட்டுக்கள் நிறைந்த திண்ணிய பழுப்பு நிரமும் பெட்டைக்கு மஞ்சள் பழுப்பு நிரமும் காணப்படும்.
இபெக்ஸ் காட்டு வெள்ளாடு 2500 முதல் 7000 மீட்டர் வரை உயரமுள்ள இடங்களில் வசிக்கும்.இந்த ஆட்டிலிருந்து கத்தரிக்கப்படும் உரோமம் மிகவும் உயர்தரமானது.புகழ்மிக்க “பாஷ்மினா” சால்வைகள் ,காலுறைகள் மற்றும் கையுறைகள் செய்ய பயன்படுகிறது


Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP