லவுட்ஸ்பீக்கர்

>> திங்கள், 24 செப்டம்பர், 2012



 லவுட்ஸ்பீக்கர்


அபத்தம்
தமிழக அரசு மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகிறது. அது மின்வெட்டு பிரச்சனையில். ஒவ்வொரு முறையும் அடுத்த ஆறு மாத்த்தில் மின்வெட்டு சீராகும் என்று நப்பாசை காட்டியே நாளை தள்ளிப்போடுகிறதோ ..ஆனால் விடை கண்டு கொண்ட்தாக தெரியவில்லை.பல திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டும் அரசு தமிழக முழுவதும் இருக்கும் தெரு மின்விளக்குகளை சோலார் பவருக்கு மாற்றினால் ஒரளவு மின் வெட்டை சமாளிக்கலாம்.. ஆனால் அரசு ஏனோ மவுனம் காக்கிறது??

தேசத்தின் மதம்
T20 உலக கோப்பை ஆரம்பித்துவிட்ட்து.ஆனால் கட்ந்த காலங்களில் இருந்த பரபரப்போ ..ஒரு எதிர்பார்ப்போ இல்லை. மக்கள் தங்களின் அன்றாட பல பிரச்சனைகளில் தான் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.இது ஒரு நல்ல சைன். இன்னும் 20 வருட்த்தில் மக்கள் உண்மையில் திருந்திடுவாங்க போல?? அப்பறம் இந்த அரசியல்வாதிகளின் நிலை?? அம்போ தான்!!

புஷ்வாணம்
 கூடன்குளம் பிரச்சனை முன்னரே சொன்னது போல் வெடிகாத பட்டாசாக மாறிவிட்ட்து.கூடன்குளம் ,இடிந்தகரை தவிர பல்வேறு கடல்கறையோற கிராமங்கள் மீண்டும் சக்ஜநிலைக்கு திரும்பியுள்ளது வரவேற்க்கப்படவேண்டிய விசயம்.ஆனால் அந்த பகுதி மக்கள்? உதயகுமாரின் நிலை அன்னா நிலை தானா??உசரான உளவுத்துறை பிற்பகுதியில் இந்த பிரச்சனையை நன்றாகவே கையாண்டார்கள்.



சங்கு
கேஸ் மற்றும் டீசல் விலைஏற்றத்தை கண்டித்து எதிர்கடசிகள் அழைப்பு விடுத்த பந்த் ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ். இது மக்களின் மன்நிலையை வெளிகாட்டுகிறது மத்திய அரசு அடுத்தவருடம் தேர்தலை சந்திக்கும் நிலையில் இது தன்க்கே ஊதிய சங்கு.

ரத்தம் வடியும் ரோஜக்கள்.
இப்போது காதல்களும் அன்புகளும் கொலையில் முடிவது சாதரனவிசயமாகிவிட்டது.மக்களிடம் பழகுவதே பயமாகி விட்டது.இந்த நிலையில் சென்றால் குடும்பங்களின் நிலை? ஒருவேளை குடும்பம் என்ற கட்டமைப்பு நிலை குழைந்து வருகிறதா?

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP