என் பிரியமான தோசை!!!

>> ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

என் பால்ய கால பருவத்தில் நான் ஒரு ரோஸ்ட் பிரியன்.ஏன்... இன்றும் கூட ரோஸ்ட் பிரியன் தான் நான்.அப்படி சொல்வதில் எனக்கு ஒன்றும் எந்த இழுக்கும் இல்லை. அப்படி வந்தாலும் கவலைபடபோவதுமில்லை. அது ஒரு ரோஸ்ட்க்கு செய்யும் ஒரு மறியாதையாகவே இருந்து விட்டுப்போகட்டும்.

இன்றும் கூட வயது வித்தியாசமின்றி ரோஸ்ட் மனிதர்களின் மனங்களை வென்று ஆட்சி புரிகிறது.இது ஒரு உளவியள்ரீதியான காரணம்...வீட்டில் இட்லி மற்றும் தோசை என் இத்யாதிகளை அனைத்தும் கிடைக்கும் .ஆனால் உணவகங்களில் கிடைப்பது போல அந்த மிகப்பெரிய ரோஸ்ட் வீட்டில் கிடைப்பதில்லை. காரணம் பெரும்பாலான இல்லங்களில் அவ்வளவு பெரிய தோசைக்கல் மற்றும் அடுப்பு இல்லை.அதனாலோ என்னவோ.
இன்றும் கூட உணவங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது என் முதல் ஆர்டர் ரோஸ்ட் தான். சில சமயங்களில் ரோஸ்ட் சிற்ப்பாக இருந்தால் இரண்டாவது ஆர்ட்ரும் அதுவாக இருக்கும்!!!என் குழந்தையும் அவ்வாறே.அதே சமயத்தில் என் இல்லாள் குன்னூரை சேர்ந்தவர். அங்கே இட்லி சூடாக சாப்பிட முடியாதோ என்னவோ ..எங்கே சென்றாலும் இட்லி. !! இது ஒரு வகை வளர்ப்பு சூழல் காரணமாக கூட இருக்கலாம் என்பது என் எண்ணம்.
யாரிடமாவது தோசைக்கும் ரோஸ்ட்டுக்கு வித்தியாசம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ஒரு நிமிடம் முழிப்பார்கள்!! என்ன..... தோசையை இருபக்கமும் வார்க்கவேண்டும் ..ரோஸ்ட்க்கு அப்படி அல்ல. ஒரு பக்க வார்ப்பு மட்டுமே!! திருப்பி போடமாட்டார்கள்.உணவகங்களில் கிடைக்கும் நைஸை கூட திருப்பி போட மாட்டார்கள்.

தோசைக்கு மாவு கரைக்கும் போது மிக முக்கியம் அதில் சேர்க்கும் உப்பு. பல இல்லங்களில் உப்பை சரியாக போடமாட்டார்கள். எனக்கு உப்பு மட்டும் சரியாக இருக்கவேண்டும் ..அது என்ன உணவாக இருந்தாலும். அதிகம் போனாலும் சரி...குறைந்தாலும் சரி.. இந்த சிறப்பு உப்புக்கு மட்டுமே உண்டு.

அடுத்து தோசை எப்படி இருக்கவேண்டும்... என்னைப்பொருத்தவரை தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னிக்கு நார்மலாக எண்ணை அல்லது நெய் ஊற்றி சுட்டால் போதும் . சாம்பாருக்கு தோசை கொஞ்சம் மித மொத்தமாக இருக்கவெண்டும்.மெல்லியதாக் இருந்தாலும் சரி...நன்றாக இருக்கும் .
காரணம்.. சாம்பாரை ஓரு ஒரத்தில் அதாவது தோசையில் 35 சதவீதம் நனைந்த மாதிரி ஊற்றிவிட்டு அது ஊர ஊர சூடான தோசையை வெறும் சாம்பாரில் தொட்டு தொட்டு விள்ளல் போட்டால்.... அதற்கு முன் தோசை பிட்டு வாய்க்கு அருகில் செல்லும் போது நாசியில் நெய் வாசம் உணரவேண்டும்.அது மூளைக்கு போய் நெய் தோசை வரப்போகிறது என்று நாக்கின் ருசி அரும்புகளுக்கு செய்தி அனுப்ப... நாக்கும் மனது ஆவலுடன் காக்க ஒரு விள்ளல் தோசை சரியாக வாய்க்குள் போக முதலில் நெய்யின் உப்பு சுவை உணர பிறகு வெந்த மாவின் சுவை உணர..... ஆஹா பேஷ் ..ஆஹா பேஷ் என்று மனது சொல்லனும்.

சாம்பாரில் பொதுவாக எல்லா வகை சாம்பாரும் தோசைக்கு ஆப்டாக இருக்கும் . காய்களை மட்டும் சின்னதாக அறிந்து போட்டால் போதும். பெரியதாக போடக்கூடாது.

உணவகங்களில் கிடைக்கும் நைஸ் போன்ற பதத்தில் வீட்டில் வார்க்கப்படும் தோசைக்கு தக்காளி கடையலும் நன்றாக இருக்கும். அதுவும் கிராம்பு பட்டை எல்லாம் போட்டது தளித்து வைத்தால் அன்று எப்போதும் உள்ளே போகும் தோசை உடன் இரண்டு சேர்த்துப்போகும்.

எல்லா வகை சட்னிகளும் சாம்பாரும் செட் ஆனாலும் வேளாங்கன்னியில் ரோட்டு ஓரத்தில் தோசை மற்றும் ஆப்பம் சுட்டு அதனை அரச இலை தட்டுகளில் வைத்து தருவார்கள்.அதற்கு வெங்காயம் பிளஸ் கார சட்னி தருவார்கள் பாருங்க.... அது போல இதுவரை எங்கும் நான் அவ்வளவு ருசியாக சாப்பிட்டதில்லை.

நம்மூரில் வெங்காயத்தை வணக்கி செய்யும் சட்னிகள் இனித்துக்கொண்டு இருக்கிறது.எனக்கு அதை பார்த்தாலே தோசை இன்று சாப்பிட்ட மாதிரி தான் என்கிற எண்ணம் வந்துவிடும்.

ரோஸ்டை பிய்ப்பது என்பதே பலருக்கு கைவராத கலை. பலரும் ரோஸ்ட்டை அமுத்தி ஏதோ பல்துளக்கும் பேஸ்ட்டை பிதுக்குவது போல அமுத்தி பிய்த்து அதை கையிலேயே இட்லி ஆக்கிவிடுவார்கள்.

 ரோஸ்ட்டை ஒரு பூவின் இதழை கொய்வது போல அதன் பதம் மாறாமல் அதன் மெல்லிய தேகம் காயம் படாமல் கொய்யவேண்டும்.அப்போது தான் அது மெல்லியதாக ஒரு லேயராக கைக்கு வரும்.

கைக்கு வந்த ஒரு துண்டு ரோஸ்டை வெள்ளியாய் மின்னும் கெட்டி தேங்காய் சட்னியின் ஓரத்தில் உடலை போர்த்தும் பெட்ஷீட் போல போட்டு கொஞ்சமே சட்னி அந்த துண்டுக்குள் இருக்குமாறு எடுத்து வாய்க்குள் போட்டால் முதலில் ரோஸ்டின் ருசி...அதனை தொடர்ந்து அது பற்களுக்கு போகும் போது கடிப்பட்டு உள்ளே இருக்கும் தேங்காய் சட்னியோடு வார்க்கப்பட்ட பதமான மாவும் கலந்து கிடைக்கும் ருசி... இனிப்பு துவர்ப்பு காரம் மணம் எல்லாம் கலந்த கலவை.இந்த ருசிக்கே மணம் மீண்டும் மீண்டும் சட்னிக்கே போகும்!!
அடுத்த விள்ளல் பொதினா சட்னிக்கு... பச்சையும் மிண்டும் காரமும் க்லந்த கலவை கலக்கல் காம்போ!! அடுத்த துண்டு புளிப்பும் இனிப்பும் காரமும் கலந்த தக்காளி சட்னி...!!

இப்ப கை தானாகவே சாம்பார் பக்கம்போகும்....குளமாய் நிற்கும் சாம்பாரில் ரோஸ்டின் துண்டு அப்படியே மீனை பிடிக்கு வலை விசுவது போல வீசி சில வினாடிகள் கழித்து தான் அந்த துண்டு எடுக்கவேண்டும். காரணம் அப்போது தான் ரோஸ்டு துண்டும் சாம்பாரும் இரு உடல் ஒர் உயிராய் கலந்து இருக்கும்.நாக்கில் முதலில் பட போவது சாம்பாரின் ருசி... மணம் அதற்கு முன் நாசிக்கு போயிருக்கும்!! தூக்கலாய் மணக்கும் சாம்பார் மனதை தென்றலாய் வருடும்.. !

இதில் அடுத்த ரவிண்டில் ரோஸ்டின் துண்டு தேங்காய் சட்னியும் சாம்பாரையும் ஒரு சேர தொட்டு சாப்பிடுவது ..சொர்க்கம்.
இப்படி ரோஸ்டை பாதி உண்ணும் போது ரோஸ்டின் மீது ஊற்றிய சாம்பாரால் ரோஸ்ட் நன்றாக ஊறி இருக்கும் .இப்பதான் கிளைமேக்ஸ்..அந்த ஊரிய ரோஸ்டை அதிகம் அமுத்தாமல் மெல்லிய கிள்ளல்...அந்த துண்டு தான் ரோஸ்டின் உச்சபடச சுவையின் உச்சம்.
இப்படி ருசித்தால் ..அடுத்து ...மனம் சொல்லும் ..............ஒன் மோர் ரோஸ்ட் என்று!!


இன்னும் ருசிப்போம்

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP