பசித்த மானிடம்"

>> வியாழன், 19 ஜூலை, 2012



 


"பசித்த மானிடம்"
படங்கள்:மு.சுதாகர்


”ஒவ்வொரு முறை லீவர் இழுக்கப்படும் போதும் விவாவின் உடல் துடித்து துடித்து அவரது உயிர் மிச்சமிருப்பதைக் காட்டியது.அதனால் மறுபடி மறுபடி ஜந்து முறை தூக்கில் போடப்பட்டார் விவா.கடைசியாக வேதனையுடன் அவர் 'கடவுளே என் உயிரை தயவு செய்து எடுத்துக்கொள்.போராட்டம் மட்டும் தொடரட்டும்!'-ஒரோண்டோ டகளஸ் ,விவாவின் வக்கீல்,ஒரு அமெரிக்க வானேலிக்கு தந்த பேட்டியில்.

நைஜர் நதி பாயும் நைஜீரியா அழகான வளமான நாடு.இயற்கை வளம் கொழிக்கும் நாடு.விவசாயமும் மீன் பிடித்தலும் நாட்டின் முக்கிய தொழில்.ஆப்பிரிக்காவில், நைஜீரியாவில் தான் புன்னைமரக்காடுகள் அதிகம்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு,மண் வளம்,மீன்வளம்,மருத்துவம்,இயற்கை எரிசகதி,வனவிலங்கு பாதுகாப்பு என  இக்காடுகளின் பயன் அதிகம்.நைஜர் நதிபாயும் வளமான பகுதிகளிலில் 'ஒகோனி' என்கிற கறுப்பின் மக்கள் அதிகம் .அப்பகுதிகளிலில் ஏராளாமான எண்ணெய் வள்ம் இருப்பதை அறியாமல் விவசாயத்தில அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

1950 களில் அதை மோப்பம் பிடித்தது டச்சு மற்றும் பிரிட்டிஷ் எண்ணெய் நிருவனங்கள். நைஜீரியாவில நிலையான அரசு கிடையாது.அப்போது இருந்தது சர்வாதிகார ரானுவ ஆட்சி.ஆரம்பித்தது கேடுகாலம்! .கொடுக்க வேண்டியதை கொடுத்த எண்ணெய் நிருவணங்கள் அவசரகதியில் எண்ணெய் எடுக்க ஒப்பந்தங்களை நிறைவேற்றியது.1958 ஆம் வருடம் நைஜர் நதிபாயும் வயல்வெளிகளை அசுரத்தனமாக தோண்டித் துளையாட்டு எண்ணெய் எடுக்க ஆரம்பித்து விட்டது ஷெல் நிருவனம்.காற்றில் கரைந்து போயின சுற்றுச்சூழல் சட்டங்கள்!.கண்காணிப்புக்கும் யாரும் இல்லை!!.விளைவு ஏராளாமான எண்ணெய் கழிவுகள் நைஜர் பூமியில்!எண்ணெய் கிணறுகளிலிருந்து மாபெரும் 'சிம்னி'களின் வழியே வெளியேரும் இயற்கை வாயுவின் பிரும்மாண்ட தீ ஜ்வாலைகள்!.இதை  வின்வெளியிலிருந்து பூமியின் மேற்பரப்பில் தீ ஜ்வாலைகள் தெரிவதாக வின் வெளிவீரர்கள் குறிப்பிட்டார்கள்! துப்பாக்கிகளின் முனையில் 10 லட்சம் ஒகோனி மக்கள்,கண்ணீருடன் மொளனமாக  ரத்தம் சிந்தும் வயலவெளிகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.எண்ணெயை கொண்டு போவதர்க்கு போடப்பட்ட குழாய்கள் துருப்பிடித்து ஓட்டை விழுந்தால் எண்ணெய் வழிந்து விவசாய நிலங்களில் பரவி மெல்ல மெல்ல ஏரி,குளம் என அனைத்திலும் எண்ணெய் கழிவுகள் கலந்து நைஜர் டெல்டா நரகமாகி போனது.இதை சுத்தபடுத்த தீயிட்டது ஷெல் நிருவனம்.நிரந்திர வடுவாய் எண்ணெய் படிவங்கள் நிலத்தில் அழுத்தமாக படர்ந்தன. பாழ்பட்டது பாவப்பட்ட பூமி.அவ்வப்போது வரும் எதிர்ப்பு குரலுக்கு தகுந்த மாதிரி அடி,உதை,ஆள் கானாமல போகுதல் .இப்படி இன்னபிற போனஸும் உண்டு அம்மக்களுக்கு!.

தட்டி கேட்க ஆள் இல்லாத நிலையில் கண்ணில பட்ட இடத்தில் எல்லாம் துளையிட்டு துளையிட்டு எண்ணெயை உறிஞ்சி தள்ளின 'ஷெல்'லும் அதன் கூட்டாளி'செவ்ரான்'ம்.விளைவு அமில மழை. மிச்சம் இருந்த விவசாய நிலமும் மடிந்தது.மீன் வளம் சொல்லவே தேவையில்லை.. சுத்தம்!கடுமையான சுற்றுச்சூழல்  பாதிப்பால் மக்களுக்கு முச்சுத்திணறல், ரத்தவாந்தி ,தோல் வியாதிகள்,கட்டிகள் ,புற்று நோய் என வரிசை கட்டி அடித்தது. 'க்வாஷியோரோர்' என்னும் சத்துகுறைவு நோயால் மடிந்த குழந்தைகள் ஏராளாம்.நிலமை மோசமானதால் ஒன்று திரண்ட மக்கள் தங்களின் ஆழ்வுரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.அவ்வளவு தான் நைஜீரிய ரானுவம் கொலைவெறியோடு புறப்பட்டது.பெண்கள், சிறுமிகள் என்று பாராமல் பாலியல் பலத்காரம்.இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.நிறைந்தன சிறைகள்.பயத்தில மக்கள் நாட்டுக்குள்ளே அகதிகளாய் காட்டுக்குள் வசிக்க ஆரம்பித்தனர்.நைஜர் டெல்டாவில ஷெல் நிருவனத்தின் கொடுமைகள் உச்ச கட்டத்தை அடைந்தன.கண் எதிரே நடக்கும் படுகொலைகளையும் சித்திரவதைகளையும் சகிக்க முடியாமல் நேரடியாக போராட்ட களத்தில குதித்தார் எழுத்தாளர்,கவிஞர்  கென்-சரோ-விவா!

'ரிவர் ஸ்டேட்' என்று இன்று அழைக்கப்படும் நைஜீரிய டெல்டாவில் 1914-ம் வருடம் பிறந்தவர் விவா.தந்தை ஒகோனி இனக் குழு தலைவர்.தாய் விவசாய பெண்மணி.கல்லூரி பருவத்திலே எழுத ஆரம்பித்த விவா ஒகோனி மக்களின் துயரங்களை அதிகம் பதிவுசெய்துள்ளார்..எழுதுவது  மட்டும் இல்லாமல் ”ஒர் எழுத்தாளன் நிகழ்கால மற்றும் எதிர்கால மாற்றங்களை உருவாக்கும் நிகழ்வுகளிலில் நேரடியாக பங்கு பெருவது அவசியம்” என்ற சிந்தனை உள்ளவர்.'சரோ பப்ளிஷ்ங்” என்ற புத்தக நிருவனத்தையும் தொடங்கி தன் எழுத்துக்களைம் வெளியிட்டு வந்தார்.அவர் எழுதிய 'டிரான்ஸிஸ்டர் ரேடியோ' நாடகம் சூப்பர் ஹிட்.தொடர்ந்து நைஜீரிய மொழியான 'பிட்கின்' மொழியில் எழுதிய ”சோஸாபாய்”(ராணுவ பையன்) என்கிற போர் எதிர்ப்பு நாவல் ஆப்பிரிக்க இலக்கியத்தில் புகழ் பெற்றது.தொடர்ந்து விவா எழுதிய எழுத்துக்கள் ஒகோனி ம்க்களிடையே புத்துனர்ச்சியையும் ,போராட்ட உத்வேகத்தையும் சேர்த்தது.ராணுவமும் ஓரக்கண்ணால் விவாவை கவனித்த படியே தான் இருந்தது.உச்சகட்டமாக பொருத்தது போதும் என்று முழுமையாக நேரடியாக போராட்ட களத்தில குதித்தார் விவா.1990.ம் வருடம் ”Movement for the survival of the ogoni people"(Mosop)  இயக்கத்தை தொடங்கினார்.ஒரே குறிக்கோள் 'ஷெல்' ம்ற்றும் பிற எண்ணெய் நிருவணங்களை நைஜீரியாவை விட்டே துரத்துவது.வன்முறை இல்லாமல்.காந்தி அளித்த அகிம்சை முறையில் மக்களை ஓன்று திரட்டி அறப்  போராட்டத்தை தொடங்கினார்.'ஷெல்லை புறக்கனியுங்கள்” என்கிற ஒகோனி மக்களுக்கான அவரின் குரல் ஆப்பிரிக்காவை தாண்டி ஜரோப்பா,ஆசிய,அமெரிக்கா அரசியல் வட்டாரங்களில் ஒங்கி ஒலிக்க தொடங்கியது.'நைட் ரைட்' என்கிற அவரது நாவல் ஒகோனிய மக்களின் வேதனைகளை வாழ்வை உலக இலக்கிய மேடைகளில் வலிமையாக முன்வைத்தது.பல தடைகலையும் தாண்டி விஸ்ரூபம் எடுத்த விவாவின் போராட்டத்தால்.,நைஜீரிய மக்களின் கொடுமையான வாழ்வு அப்பட்டமாக உலககுக்கு தெரியவந்தது.ஒகோனிய மக்கள் வாழ்வின் விடியலின் நம்பிக்கையாக முன்வைக்க பட்டார் விவா.

நைஜீர்யாவில் அனைத்து கரங்களும் இனைந்தன.எழுத்தாலர் கலைஞர்,விவசாயி,தொழிலாளர்... இப்படி வேறுபாடு பாராமல்!. நம்பிக்கைகள் உயர்ந்தன!!.மக்களின் எழுச்சையை அடக்க முடியவில்லை ராணுவ அரசால்.உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பு ..இறுதியில் விழ்ந்தது ஷெல்லும் ராணுவ அரசும்.1993 ம் வருடம் ஷெல் தனது ஓயாத இயக்கத்தை நிறுத்தியது.தீ ஜூவாலைகல் அனைந்தது.காற்றும் கனிந்தது.இரக்கம் இல்லாத இயந்திரங்க்களின் இரைச்சல் நிண்று போனது.மகிழ்ச்சியின் உச்சியில் விவா ஆப்பிரிக்க மக்களால் கொண்டாடப்பட்டார்.எல்லாம் ஓய்ந்தது என்று நினைத்தார்கள் அந்த அப்பாவி ஒகோனி மக்கள்..இந்த தோல்வியை ஷெல்லும் ராணுவ அரசாலும் பொருத்துக் கொள்ள முடிய்வில்லை.தீட்டப்பட்டது சதிதிட்டம் லண்டனில்.1993ம் வருடம் மே மாதம் 21 ஆம் தேதி நைஜர் டெல்டாவில் நுழைந்த ராணுவம் கண்ணில பட்டவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளி ஒரு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.அதில் நான்கு ஒகோனி அரசியல் தலவர்கள் ராணுவத்தால வெட்டிக் கொல்லப்பட்டனர்.அப்பலி விவா மீதும் அவரின் நன்பர்கள் மிதும் போடப்பட்டது.உடனடி கைது!.சிறை!!.உலகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தன் திட்டங்களை நிறைவேற்ற தொடங்கியது ராணுவ அரசு.கொடுமையின் உச்ச கட்டம் அது.சிறையில் கை காலகளில் இரும்பு சங்க்கலிகள் பூட்டப்பட்டு அடித்து துவைக்கப்பட்டார் விவா.யாரையும் சந்திக்க அனுமதியில்லை.குரல் கொடுத்த ஒகோனி மக்களின் மீது கொலை வெறி தாக்குதலை தொடுத்தது ராணுவம்.பாலியல் வன்முறை,கொலை,கொள்ளை,கிராமங்களை சூறையாடுதல்,திருட்டு .இப்படி ஒன்று விடாமல் அனைத்தும் செவ்வன செயதது ராணுவம்.மக்களை ஓட ஓட காட்டுக்குள் விரட்டி டெல்டா முழுவதும் மயானமாக்கிய பிறகு தான் ஓய்ந்தது .

1995 பிப்ரவரி மாதம் வக்கீலை சந்திக்க விவாக்கு அனுமதி அளிக்கப்பட்டது.அப்போது அவர் வெளியிட்ட கடிதம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.கடும்பாதுகாப்புடன் ரகசியமாக நடந்த கொலை வழக்கு விசாரனையின் தீர்ப்பு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.திட்டமிட்ட படி விவா மற்றும் எட்டு நன்பர்களுக்கும் மரண தண்டனை.உலகமே இதை கேட்டு குழுங்கியது.காமன்வெல்த் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.கடும் எதிர்ப்பு உலகம் முழுவதும்.அசராத அரசு, 1995ம்வருடம் நவம்பர் மாதம் பத்தாம் தேதி விவா என்கிற  மகத்தான் மனிதருக்கும் அவரது எட்டு நன்பர்களுக்கும் போர்ட் ஹர்ர்கோர்ட் சிறைக்குள்ளே தூக்கில் போடப்பட்டார்கள்.விவாவின் உடல் கூட அவரது குடும்பத்திற்க்கு தராமல் ரகசியமாக புதைக்கப்பட்டது.நைஜீரியாவின் காட்டுமிராண்டி தனமான ஊழல் ஆட்சியால் காமன்வெல்த் அமைப்பிலிருந்து தூக்கியெரியப்பட்டது.விவாவின் கல்லறை காயும் முன் எண்ணெய் நிருவனங்கள் மீண்டும் ஒகோனி நிலங்கலில் ஆதிக்கத்தை ஆரம்பித்து விட்டது.சுற்றுச்சூழலுக்காக உயிர் தியாகம் செயது லடசக்கனக்கான ஒகோனி ம்க்களின் மனதில் வாழ்கிற விவா நீதிமன்றத்தில் முழங்க்கியது..

”நானும் எண்து நன்பர்களும் மட்டும் குற்றவாளிகளாக இந்த விசாரணைக் கூண்டில் நிற்கவில்லை 'ஷெல்' நிர்வாகமும் நிற்கிறது.பாரபடசமான இந்த விசாரனையில் அந்த நிர்வாகம் சாமார்த்தியாமாக தப்பிக்கிறது.ஆனால என் மக்களின் மீது அந்த நிர்வாகம் நடத்திய சுற்றுச்சூழல் யுத்தத்தின் கேள்விகள் என்றாவது ஒரு நாள் அதன் முகத்துக்கு நேரே வரும் .அந்தக் கேவலமான யுத்ததின் கடும் குற்றங்க்களுக்கு தண்டனையை அது அனுபவித்தே தீரும்....”  என்னும் விவாவின் ஆன்மாவின் குரல் உலகத்தின் சூடான காற்றில் கலந்து ஒலித்தபடியே இருக்கிறது.

3 பின்னூட்டங்கள்:

பெயரில்லா,  22 செப்டம்பர், 2012 அன்று PM 7:49  

து.ஆனால என் மக்களின் மீது அந்த நிர்வாகம் நடத்திய சுற்றுச்சூழல் யுத்தத்தின் கேள்விகள் என்றாவது ஒரு நாள் அதன் முகத்துக்கு நேரே வரும் .அந்தக் கேவலமான யுத்ததின் கடும் குற்றங்க்களுக்கு தண்டனையை அது அனுபவித்தே தீரும்....” என்னும் விவாவின் ஆன்மாவின் குரல் உலகத்தின் சூடான காற்றில் கலந்து ஒலித்தபடியே இருக்கிறது.//unmaiyin kuranroo?

Kamaraj 14 பிப்ரவரி, 2013 அன்று PM 2:54  

பணம் பத்தும் செய்யும் என்பதே நிதர்சனம்,தர்மம் ஒரு நாள் வெல்லும்...

Unknown 15 பிப்ரவரி, 2013 அன்று AM 3:44  

உங்கள் நம்பிக்கைகள் வெல்லட்டும்!!

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP