லவுட்ஸ்பீக்கர்

>> திங்கள், 27 ஆகஸ்ட், 2012


 லவுட்ஸ்பீக்கர்

கொசுக்கடி
எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்தவாரம் மின்வெட்டை தமிழகம் சந்தித்த்து. ஒரு நாளை 12 மணி நேரத்திற்கும் மேல மின்வெட்டு மக்களை என்ன சேதி என்று கேட்டு விட்ட்து.வெகுண்ட மக்கள் ஆங்காங்கே மறியல் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அரசும் மக்களின் கோபத்தை கண்டு அரண்டுவிட்ட்து. தெய்வீனமாக காற்று கண் அசைக்க மக்களும் அரசும் கொஞ்சம் பிழைத்துக்கொண்டனர்.இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மின்வெட்டை தவிர்க்க இயலாது என்கிறது ஒரு அரசு பட்சி!!

ஆப்பு
சில வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் தடுக்கிவிழுந்தால் இஞ்ஜினியர்களை பார்க்கும் அவலம் ஏற்பட்ட்து. அதே போல் ஆசிரியருக்கு நல்ல சம்பளம் என்பதாலும் வருட்த்திற்கு சுமார் 180 நாட்கள் தான் வேலை என்பதால் மக்களின் கவனம் ஆசிரியர் வேலை பக்கம் சமீப ஆண்டுகளில் திரும்பியது. விளைவு பெரும்பாலோர் பி.எட் படிக்க ஆரம்பித்தார்கள். இன்று திரும்பியபக்கமெல்லாம் பி.எட் தான். இதனால் ஆசிரியர் வேலைக்கு தயாராய் இருப்பவர்கள் சுமார் 5 ல்டசத்திற்கும் மேல். இவர்களுகான தகுதி தேர்வில் இவர்களின் ல்டசனம் வெளிப்பட்ட்து சுமார் 6 ல்டசம் பேர் எழுதிய தேர்வில் தேர்ச்சியுற்றவர்கள் வெறும் 2 ஆயிரம் சொச்சம் தான். இவர்கள் கையில் குழ்ந்தைகள் எதிர்கால்ம்... தமிழ்நாடு உருப்பிட்டாப்பில மாதிரி தான்...

ஊடகம்
புதிய தலைமுறை முதல் வருட்த்தை கடந்திருக்கிறது. வாழ்த்துகள். துள்ளிய காட்சிகள்,அதிகம் லைவ்கள் என்று புதிய தட்த்தில் பயணிக்கிறது. ஆனால் இவை மாநில அளவிலான செய்திகளை முன்னிலை படுத்தவில்லை.இது ஜிம்கி வேலை.அரசுக்கு எதிர்ப்பு இல்லாதவகையில் காய் நகர்த்துகிறது. இன்னும் செய்யவேண்டிய வேலை அதிகம் உள்ளது. அப்போதுதான் நிலையாக ஒரு நல்ல சேனலாக இருக்கமுடியும் இல்லையென்றால் விரைவில் பத்தோடு பதினொன்றாக மாறிவிடும்.

அல்வா
ஈமு கோழி விவகாரம் விஸ்ரூபமெடுத்து அது நாட்டுக்கோழி, கொப்பரைத்தேங்கா என்று பலவகையில் இன்னும் ஆட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறது. அரசோ இன்னும் கண்டும் காணத்துமாதிரி  போய்கொண்டு இருக்கிறது.ஈமு மோசடியின் சூத்திரதாரி குருவை இன்னும் பிடிக்க முடியாத்து அரசின் மேல் அவந்மபிகையை ஏற்படுத்துகிறது.

கதகளி
கேரளாவை சேர்ந்த சகானா என்ற பெண் 50 ஆண்களை ஆட்டைய போட்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் ஒர் எச்சரிக்கை மணி. தமிழகத்தில் என்ன பெண்களுக்கு அவ்வளவு டிமேண்டா?? ஒவ்வொரு ஆண்களும் சொல்லும் காரணம் எல்லாம் சின்ன புள்ளை தனமாக உள்ளது. கல்யாணம் செய்தாங்களாம் பிறகு இரண்டு வாரத்திலேயே போய்ட்டாங்களாம்... அந்த அளவுக்கு கல்யாணம் டம்மியாகி விட்ட்தா???

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP