கடல்

>> திங்கள், 4 பிப்ரவரி, 2013

கடல்





கூட்ட நெரிசலில் அந்த பதற்றத்தில் உங்கள் குழந்தை உங்களின் கையை பிடித்த்தை மனப்பூர்வமக உணர்ந்திருக்கிறீர்களா?

அதீத பதட்டமான சூழ்நிலையில் உங்களின் குழந்தை பயந்து உங்களை பற்றும் போது அதை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறீர்களா?

உங்களின் இக்கட்டான சூழ்நிலையில் அன்பாக அனுசரனையாக உங்கள் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்கள் உங்களுக்கு தார்மீகமாக தோலோடு தோழ் கொடுத்த்தை உணர்ந்திருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட துல்லியமான மனநிலையை நீங்கள் கட்ந்த காலத்தில் அனுபவித்தவர்கள் மட்டுமே மேலே படியுங்கள். இல்லையென்றால்.. உங்களுக்கு சுறா...போன்ற மொக்கை படம் தான் சரி.. நீங்கள் கிளம்பலாம்!

மக்களின் கலாச்சாரத்தை மாற்றக்கூடிய , நிர்னயிக்க்கூடிய மிகப்பெரிய சக்தி சினிமா. சுமார் 100 ஆண்டுகள் நீண்ட வரலாறு கொண்ட சினிமா தமிழ் மக்களிடம் மிகப்பெரிய மாற்றங்களை சத்தம் இல்லாமல் செய்துகொண்டு வருகிறது.சினிமா குறித்த அதன் உண்மையான வீச்சு குறித்து தமிழில் எழுதியவர்கள் வெகு குறைவு. இத்தகைய நிலையால் சினிமாவைப்பற்றிய புரிதல்கள் மக்களிடம் சேராமல் போய்விட்ட்து வருத்ததிற்குரியது.

சினிமா ஒரு காட்சி ஊட்கம். காட்சிகள் மூலம் அதன் தாக்கத்தை ..உங்கள் கனவுகளை மாற்றக்கூடியது. எ.காட்டாக.. சில நேரங்களில் நீஙக்ள் பார்க்கும் படங்களின் விளைவாக அவை கனவுகளில் பிரதிபலிப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

கனவுகள் உங்கள் மேலோட்டமான எண்ணங்களை உருவாக்கும். காலம் ஆக ஆக அவை உஙக்ளின் ஆழ்மனதில் பதிந்து உஙகளை அதன் பிரதிபலிப்பாக உணர ஆரம்பிப்பீர்கள். இது தான் சினிமாவின் வீச்சு!! அப்படி உருவாணவர்கள் தான் நமது அரசியல் தலைவர்களும் என்பதையும் உங்களுக்கு நினைவு கூற ஆசைப்படுகிறேன்.

2000 ஆண்டுகள் பழமையான கோட்பாடு கிறிஸ்த்தவம்.அதன் மைய்ய நோக்கம் பைபிள்.அதன் செய்தி மன்னிப்பு. மன்னிப்பின் மூலமே மனிதர்கள் இவ்வுலகில் தொடர்ந்து இயங்கமுடியும். இல்லையென்றால் மனித இனம் அழியும்.

கடல் எப்போதும் பிரமிப்பும் ஆச்சர்யமும் நிறைந்த்து. இத்தினை சார்ந்த மக்கள் வாழ்வு நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டது.வலுவான உடல் அமைப்பும் உணர்ச்சி மயமான வாழ்வும் வெள்ளேந்தி மனசும் கொண்டவர்கள்.இவர்களின் வாழ்வை பிரதி பலிக்கும் திரைப்படம் தான் “கடல்
இத்திரைப்படம் சுமார் 20 வருட வரலாற்றை சொல்கிறது. திரைப்பட்த்தில் கண்டியுனிட்டி எனப்படும் உத்தி மறைந்து நிகழ்வுகளை மையப்படுத்தி காட்சிகள் மூலம் ஒரு விசயத்தை முனவைப்பது என்னும் முறையில் வெளிவந்துள்ள படம் .இதை சரியாக புரிந்து கொள்பவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு அருமையான திரைப்படம்.

மணிரத்தினம் போன்றவர்கள் தான் இது போன்ற உலக யுத்திகளை தமிழில் முதலில் பயன்படுத்தி முன்னகர்த்தி உள்ளார்கள்.களம் இன்றைய நவீனகாலத்தில் பெயருக்கு மற்றும் நாகரீகம் என்ற பெயரில் புறத்தோற்றத்தில் மாறி வரும் தலைமுறை அகத்தில் பழையகாலமான கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற முறையில் வரும் நிலையில் மன்னிப்பு ஒன்றே மனித இனம் நிலைக்க மையம் என்பதை காட்சிகள் முலம் உறுதி செய்யும் திரைப்படம்.

இதுவரை பாட்ல்கள் என்பது திரைப்படங்களில் துருத்திக்கொண்டு இருக்கும் பாடல்களுக்கு  வெளிநாடுகளில் கனவுகளில் அறபத்தனமாக நிஜத்தித்திற்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் நடனம் ஆடும் பழைய மரபை உடைத்து பட்த்தோடு டிரவல் செய்யும் முறை.

நாவல் என்பதில் படைப்பாளிக்கு பக்கங்களில் தடை எதுவும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளாலாம். ஆனால் திரைப்பட்த்தில் சுமார் 2 அல்லது கூடுதலாக அரைமணி நேரத்தில் ஒருவனின் வாழ்க்கையை சொல்லவேண்டும் என்றால் அதனை முக்கிய நிகழ்வுகளின் முலம் தான் சொல்லவேண்டும்.இதனை “வாரணம் ஆயிரத்தில்கவுதம் பிளாஷ் பேக் உத்தி முலம் சொல்லுவார். இதில் மணி ரத்னம் நாலு கதாபாத்திரங்கள் மூலம் காட்சிப்படுத்துகிறார்.

கடல்...அதை நம்பி போகிறவர்களுக்கு இது வரை அளப்பரிய செல்வங்களை வாரி கொடுத்திருக்கிறது. ஆம் இதிலும் முத்துகளும் உண்டு..சுறா மீன்களும் உண்டு..அளவிடாத செல்வம் உண்டு......ஆனால் நம்பிக்கை உள்ளவர்களுக்கு...அத்னைப் புரிந்துகொண்டவ்ர்களுக்கு மட்டும்!!  இப்படம் அப்படியே... புரிந்துகொளவர்களுக்கு மட்டுமே!!! 
   

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP