வீடு கட்டலையோ வீடு ...வீடு....

>> வியாழன், 30 ஆகஸ்ட், 2012



 வீடு கட்டலையோ வீடு ...வீடு....


இன்றைய நாள்  எனக்கு அந்த்ரங்கமாக மகிழ்ச்சி நாள்.அதே நேரத்தில் ஒரு சமுகத்தின் உறுப்பினர் என்ற முறையில் மிகுந்த வருத்தமான நாளும் கூட.
தமிழனாய் பிறந்த அத்தனை பேருக்கும் ஒர் கனவு உண்டு. அது சொந்தமாக வீடு கட்டுதல்.அதுவும் மிடில்கிளாஸ் குடும்பம் சொல்லவே தேவையில்லை..அதுவும் அரசு உத்தியோகத்தில் இருந்தால் அவ்வளவு தான்!!மேற்குரிய எல்லார் மனநிலையும் எப்படியாவதுசொந்தமா வீடு கட்டனும் ..அவ்வளவு தான்.. அது தலையை அடமானம் வைச்சாவது ...கடன் வாங்கியாவது வீடு கட்டனும் அவ்வள்வே...
இந்த மனநிலையை  நச் என்று பிடித்துகொண்டார்கள் தனியார் வங்கிகள். இதில் இவர்கள் அடிக்கும் கொள்ளை... மெகா கொள்ளை..கொஞ்சம் நஞ்சம் அல்ல!!!
நானும் மிடில்கிளாஸ் வகைதான். என் அம்மாவும் அரசு ஊழியர் தான் .. அப்பறம் மீதி கதை எல்லாம் மேற்கூரிய கதைதான். 1999 வாக்கில் சொந்த வீடு கட்ட ஆர்ம்பித்தோம். அப்பொது .பெரியதாய் ஒன்றும் தோன்றாத வயது. ஆனால் அப்போதே சொன்னேன் ...பொருள் நாம் வாங்கி கொடுத்து வீடு கட்டுவோம் என்று.. ஆனால் என் அம்மா கேட்கவில்லை. பிளானில் ஆரம்பித்து அனைத்தும் ஒரு இஞ்சினியரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட்து.வீடும் கட்டி முடிக்கப்பட்ட்து . ஒரு பகுதி பணம் லோன் போடலாம்..அப்போது டேக்ஸ் ரிடெக்ஸ்சன் கிடைக்கும் என்ற ஆசையில் லோனும் போட்டர்கள்.. எல்.ஜ.சியில் லோன் போட்டோம். நியாமான வட்டி .. ஆனால் அவர்கள் பாலிஸி கம்பல் சரியா புதுசாக போடச் சொல்லி தலையில் இரண்டு பாலிஸிகளை கட்டிவிட்டார்கள். வீட்டின் லோனுக்கும் பணம் கட்டனும் மாதம் ..மாதம்.. அதே நேரத்தில் பாலிஸிக்கும் பணம் கட்டனும் ..இது ஓவர் பணச்சுமை...இந்த சமயத்தில் தான் உள்ளே புகுந்தார்கள்... தனியார் வங்கி.. ஜசிஜசிஜ... ஜெகஜ்ஜால கில்லாடிகள்...எதுவும் நீங்க செய்யவேண்டாம்.. லோனுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும். என்ற வார்த்தை என் அம்மாவின் காதில் தேனாய் பாய்ந்த்து விளைவு .. மாற்று லோனை.. ஜசிஜசிஜக்கு.. சூப்பர் பிரய்ன்வாஸ் செய்து ..அழகா மாற்றிவிட்டார்கள்... அப்பறம் தான் தெரிந்த்து.. காலை விட்ட்து முத்லை வாய்க்குள் என்பதை... பணம் கட்டரம் கட்டரம்.. சுமார்.. 5 வருடங்கள் கட்டியும் முதல் குறைந்த்தா என்றால் குறையவில்லை.. சும்மா சொல்லக்கூடாது.. சும்மா குத்து குத்துனு குத்தராங்கப்பா...

சில மாதங்களுக்கு முன்  என் அம்மாவிடம் எதேச்சையாக பேங்க லோன் எவ்வளவு முடிந்திருக்கு என்று கேட்டேன்.. அவங்களுக்கும் சரியாக தெரியாத்தால் வங்கிக்கு சென்று எவ்வளவு கட்டியிருக்கிறோம் ..என்று கேட்டால்.. அதை தருவதேற்க்கே இரண்டு நாள் ஆகும் என்கிறார்கள்.. பிறகு அதையும் வாங்கிப் பார்த்தால்.. மயக்கம்  வராத குறை... மீதி பணத்தை உடனடியாக கட்டி விடுகிறோம்.. எவ்வளவு என்று பணத்தை கேட்டு கடந்த இருபது நாட்களுக்கு முன் மீதி பணத்தை கட்டி விட்டோம்..தலைப்பாகையோடு போகட்டும் என்று... விட்ட்தா சனியன்.. விடாது கருப்பு போல.. தொடர்ந்து வருகிறது.. டாக்குமெண்ட் வந்து விட்ட்து வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள் வங்கியில்.. போனால் அரசு கொடுத்த சான்றுகளுடன் வந்தால் தான் டாக்குமெண்டை தருவார்களாம்.. எவன் வீட்டு டாக்குமெண்டை எவன் தருவது... எனக்கோ செம கோவம்.. சரி என்று அவர்கள் கேட்ட அத்தனை சான்றுகளையும் கொடுத்து டாக்குமெண்ட் கைக்கு வரட்டும் என்று இருந்தேன்.. இன்று அனைத்தும் கைக்கு வந்த்து.
வங்கி மேனஜரிடம் சென்று கேட்டேன்.. “ லோன் கொடுக்கரதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் கேட்க வேண்டியது தானே.. இப்ப இத்தனை டாக்குமெண்டு கேட்கறீங்க.. பணம் கைக்கு வந்துவிட்ட்தால் .. “இத்தனைக்கும் நான் ஊட்கத்தில் இருக்கிறேன் என்று தெரிந்தும் முடிந்த வரை லேட் செய்கிறார்கள்...
நான் டாக்குமெண்ட் வாங்க அமர்ந்திருக்கும் போது ஒரு பெண் .மத்திய வயது  ..வரின் லேன் ஸ்டேட்மெண்ட் கொடுங்க என்று கேட்டு வாங்கினார்... எவ்வளவு மீதி பணம் கட்ட வேண்டும் என்று கேட்டார் ..அந்த பணியாளர் சொன்னவுடன்.. அந்தம்மாவிற்கு மயக்கம் வராத குறை.. இத்தனைக்கும் அந்த் அம்மா லோனை பிக்ஸிட் வட்டியில் போட சொன்னதை ப்ளோட்டிங்கில் போட்டு இருக்கிறார்கள்.. லோன் போடும் போது 8 சதவீதம் இப்போது 15 சொச்சம் சதவீதம்...அந்த அம்மா கேட்டுச்சு பாருங்க கேள்வி...ஆள் கிடைச்ச போதும்.. உங்கிட்ட மாட்டிட்டா ஆளை கொனுட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க.. இப்படி நான் மாசம் மாசம் பணம் கட்டிட்டு இருந்தேனா... நான் செத்த பிறகும் கட்ட வேண்டியது தான்.... நீங்க எல்லாம் உருப்பிடுவீங்க...

நாளை இதே கேள்வியை நீங்களும் கேட்காமல் இருக்க... லோன் போடும் ஆயிரம் முறை அல்ல... பத்தாயிரம் முறை யோசிங்க.. டாக்குமெண்டை நல்லா படியுங்க....

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP