ஏற்காடு எனக்கு பிடிக்காது-2

>> சனி, 31 ஜனவரி, 2015

ஏற்காட்டில் மிகப்பெரிய பிரச்சனை உணவுப்பிரச்சனை. நல்ல உணவகங்கள் இங்கே கிடையாது ..ஏற்கனவே சொன்ன இரு உணவகங்கLளை தவிர்த்து சரவண பவன் இங்கே உள்ளது.ஒரளவு பரவாயில்லை.சைவம்.விலை அதிகம். இது தவிர சேர்வராய்ஸ் மற்றும் இரண்டு  ஸ்டார் கேட்டகிரி விடுதி மற்றும் உனவகங்கள் உள்ளன. பர்ஸ் ஜாக்கிரதை…!!சொத்தை எழுதி கேட்பார்கள். ஒரு வேளை உணவு என்றால் பரவாயில்லை.ஆனால் பல வேளைக்கு என்றால் இதற்கே பெரிய பட்ஜெட் ஆகும். இதுதவிர தமிழ்நாடு உணவகம் உள்ளது வார இறுதியில் பப்பே நடத்துகிறார்கள்.குறைந்த விலை.ஒரளவுக்கு தரமான உணவு.. எக்னாமிக்காவும் இருக்கும். சிறப்பாக வெரைட்டியாகவும் இருக்கும்.விடுதி அறைகளும் நன்றாக இருக்கும். பட்ஜெட்டில் தங்கலாம்.காம்பிளிமெண்டாக காலை உணவு கொடுத்தார்கள் தற்போது அவ்வசதி இல்லை .

இதுதவிர ஏற்காட்டில் மின்சார பிரச்சனையும் உள்ளது .பெரும்பாலான விடுதிகளில் ஜெனரேட்டர் இருந்தாலும் டீசல் இருக்காது. அல்லது ரிப்பேராக இருக்கும். அப்படியே இருந்தாலும் அதை போடமாட்டார்கள். இயக்க முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். கடைசி வரை இயக்க மாட்டார்கள்.அப்ப்டியே இயக்கினாலும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஆன் செய்துவிட்டு ஆப் செய்து விடுவார்கள். காரனம் போதுமான கெப்பாசிட்டி உள்ள ஜெனரேட்டர் பெரும்பாலோரிடம் இல்லை.. அதே போல் ஹீட்டர் வசதி இருக்கும் என்பார்கள் ..கடைசி வரை கண்ணில் காட்டமாட்டர்கள். குழந்தைகளை எடுத்து செல்லும் போது ஜாக்கிரதையாக இருங்கள்.

மிக மிக்கியமான இன்னொரு பிரச்சனை….தண்ணீர் பிரச்சனை.ஏற்காட்டில் பிப்ரவரியில் ஆரம்பிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏப்ரல் மே மாதங்களில் உச்சத்தில் இருக்கும்.எல்லா விடுதிகளும் தண்ணீர் விலைக்கு வாங்கியே  தீரவேண்டும்.ஆகையல் விடுதியில் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் இல்லாமல் போய்விடும். அதுவும் அனைத்து அறைகளும் நிர்ம்பிய நேரத்தில் காலையில் தண்ணீர் தீர்ந்து அரசின் மிக முக்கிய அதிகாரியே கழிவறையில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்ட அனுபவத்தின் நேரடி சாட்சி நான். ஆகையால் ஜாக்கிரதை. அதே போல் ஏற்காடின் அத்தனை கழிவு நீரும் ஏரிக்கே போகிறது/.அதே மீண்டும் உங்களுக்கு  குடிதண்ணிராக திரும்புகிறது.வேறு வழியே இல்லை. ஆகையால் எங்கும் தண்ணிரை குடித்து விடாதீர்கள் அல்லது தண்ணிரை சூடாக்கி குடியுங்கள். அல்லது ஐந்து அல்லது இருபத்துதைந்து லிட்டர் கேன்களை வாங்கிக்கொள்ளுங்கள்..
ஏற்காடில் நிறைய விடுதிகள் உள்ளன. இரண்டு குடும்பங்கள் இனைந்து சென்றால் வீடு போல எடுத்து சமைத்தீர்கள் என்றால் அருமையாக இருக்கும்.நல்ல எஞ்சாய்மெண்டாகவும் இருக்கும். பணத்திற்கும் அருமையான மதிப்பாக இருக்கும்  அசைவ அயிட்டங்களை பொருத்தவரை  வாரத்தில் புதன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் தான் மட்டன் கிடைக்கும்.தபால் நிலையம் அருகில் ஒருவர் மட்டன் கடை போடுவார்.அருமையாக இருக்கும். நம்பி வாங்கலாம். மற்ற இடங்களை பொருத்த வரை ரிஸ்க்!! சிக்கன் பல கடைகள் உண்டு.வாரம் முழுவதும் கிடைக்கும். மீன் ஞாயிறு மட்டுமே கிடைக்கும். வார நாட்களில் முன்கூட்டியே சொல்லி வைத்தோ அல்லது சேலத்திற்கு சென்றோ வாங்கலாம்.இதுதவிர பெண்கள் மட்டும் தங்க என்றால் ஏற்காட்டில் அருமையான இடம் உள்ளது கிறித்துவ சிஸ்டர்ஸ் கான்வெண்டில் தங்கலாம். உணவும் அவர்களே கொடுத்துவிடுவார்கள்.குடும்பத்துடனும் தங்கலாம். தங்க மற்றும் உணவும் சேர்த்து ஒருநாளை ஒரு நபருக்கு மிகக்குறைந்த கட்டணமே. எனக்கு தெரிந்து ரு 500 இருந்தது.தற்போது எவ்வளவு என்று தெரியவில்லை.நன்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான அழகான இடம். இது தவிர கண்ணாடி பங்களா என்ற இடமும் குறைந்த விலையில் தங்கலாம். உணவு சமைத்துதருகிறார்கள். இன்னும் சிற்ப்பாக வேண்டும் என்றால் நம்பகமான ஒரு டிரவல் ஏஜென்சியோ அல்லது நபரோ இருந்தால் அவர் மூலம் தனி வீடுகள் அல்லது அறைகளை முன்பதிவு செய்வது சாலச்சிறந்தது.
ஞாயிறு அன்று ஏரியை ஒட்டிய பகுதியில் சந்தை நடக்கும் .அருமையான உள்ளூர் காய் கறிகள் பிரஷாக கிடைக்கும். சில மலை சார்ந்த பொருட்களும் இருக்கும்…கொஞ்சம் பார்த்து வாங்குங்கள். சிறப்பாக கிடைக்கும். இதுதவிர ஏற்காடில் புகழ்பெற்றது காபி மற்று மிளகும் தான். இரண்டையுமே ஜாக்கிரதையாக வாங்குங்கள். மிளகை விரலில் வைத்து  நன்கு அழுத்தினால் மிளகு பொறு பொறு என்று போககூடாது. உடையக்கூடாது கடினமாக இருந்தால் மட்டுமே நல்ல மிளகு. இது தவிர பச்சை மிளகும் இருக்கும் இது ஊருகாய்க்கு அருமையாக இருக்கும் . தாராளமாக வாங்கலாம்.

பழவகையில் ஏற்காடில் மலை வாழப்பழம் .மலை சீத்தாப்பழம் மற்றும் பெரிய அத்திப்பழம் கிடைக்கும் இது இங்கே விளைவது .அதுவும் மலை வாழப்பழம் பார்க்க சின்னதாக இருந்தாலும் ருசியில் அடித்துக்கொள்ள முடியாது இது கிடைப்பது அரிது.
சீத்தாப்பழத்தை பொருத்தவரை இதில் கொட்டைகள் குறைவாக சதைப்பகுதி அதிகமாக இருக்கும் ருசியில் பக்கத்தில் நெருங்க இயலாது எந்த பழமும்.. அத்திப்பழத்தை பொருத்தவரை வாங்கி போய் தேனில் ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். எனக்கு என்னமோ இது அவ்வளவுக்கு பிடிக்கவில்லை. என் நன்பரின் தோட்டத்தில் சும்மா தரையில் கிடக்கும் அவ்வளவு பழங்கள்.
சுமார் மூன்று வருடத்திற்கும் மேல் ஏற்காடில் வாழ்ந்திருக்கிறேன். இந்த பகுதியில் இரண்டு தொழில் துறைதான்  காப்பி எஸ்டேட்கள் மற்றும் விடுதிகள் .இரண்டு துறையிலும் சம்பளம் என்பது இங்கு வெகு  குறைவுதான்.வேறு எந்த துறையும் இங்கே இல்லை.அதனால் வளர்ச்சி என்பது வெகு சொற்பம். பள்ளிகள் இங்கு அதிகம்.மாண்ட்போர்ட் மற்றும் சேக்கரட் ஹார் என்ற புகழ்பெற்ற பள்ளிகள். இது தவிர பல பள்ளிகளும் உண்டு. வெளியூரில் இருந்து இங்கு வந்து பள்ளியில் தங்கி படிப்பவர்கள் தான் அதிகம். அதுவும் பள்ளி விடுமூறை விடும் தினத்தன்று மட்டும் ஏற்காட்டுக்கு பயனப்படாதீர்கள். மலை ரோட்டில் பயங்கரமான போக்குவரத்து நெரிசல் இருக்கும் .அதுதவிர எல்லா கார்களும் பறக்கும். குறைந்த அன்று இரண்டு விபத்தாவது மலைப்பாதையில் இருக்கும்.பெரும்பாலும் இந்தியாவின் சினிமா நட்சத்திரங்கள் அரசியல்வாதிகள் மற்றும் பெரும் வணிக நிருவனங்களின் வாரிசுகள் தான் இங்கே படிக்கின்றனர்.லல்லு பிரசாத்தின் வாரிசுகள் கூட இங்கே படித்தாக கேள்விப்பட்டேன். நடிகர் விக்ரம் உடபட பலர் மாண்ட்போர்ட் பள்ளி தயாரிப்புகளே!!

ஊருக்கு நடுவே உள்ள இமாலய குப்பை 
இப்படி பல நன்மையும் குறைக:ளும் இருக்கும் ஏற்காடு சுற்றுளாகான எந்த வசதியும் செய்யவில்லை. ஊரின் நடுவில் இருக்கும் இமாலாய அளவு குப்பையே இதற்கு தகுந்த உதாரனம்.அதே போல் நகரின் மத்தியில் ஒரு பக்கம் முழுவது குடிசை பகுதிபோல சுத்தமே இல்லாமல் இருக்கிறது. இந்த மலைவாஸ்தளத்தை மிகச்சிறப்பாக பராமரித்தால் வருடம் முழுக்க வருமானம் வரும் அளவுக்கு மிகச்சிறந்த வணிக வாய்ப்பு உண்டு.மக்களின் வாழ்வு ஆதாரமும் வளப்படும். இதுதவிர தற்போது இப்பகுதியில்பூர்வ குடிகளின் கைகளில் இருந்த நிலங்கள் எல்லாம் சூவாக செய்யப்பட்டு எல்லாம் கான்கிரிட் காடுகளாக மாறிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் ஏற்காடு…….குப்பை காடாக மட்டுமே இருக்கும்….அதுக்குள் ரசித்து விடுங்கள்!!


குறிப்பு: இதன் இறுதிப்பகுதி இன்னும் எழுதவில்லை.எப்போது எழுதுவேன் என்றும் தெரியவில்லை.

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP