கருப்பு தினம்-செப்.10

>> செவ்வாய், 11 செப்டம்பர், 2012




கருப்பு தினம்-செப்.10
செப்டம்பர் 10 ..இனி தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு தினம்.வரலாற்றில் எத்தனையோ அத்துமீறள்களை மனித இனம் சந்தித்துள்ளது. அத்தனையும் மீறித்தான் தழைத்துள்ளது மனித இனம்.கூடங்குளம் அணு உலைக்கு எதிராக காந்திய வழியில் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக போராடி வந்தார்கள் இடிந்தகரையை சேர்ந்த மக்கள் . உதயகுமார் தலைமையில்.

கட்ந்த சில நாட்களுக்கு முன் அணு உலைக்கு எதிராக வாழக்காடு மன்றத்தில் தொடுத்த அனைத்து வழக்குகளும் தள்ளூபடி செய்யப்பட்ட்து.அப்போதே இது தீவிர கவனத்துக்கு உள்ளாக்கப்பட்ட்து.ஆனால அரசு மவுனமாக அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.அவை இன்று உலகளவில் இன்று தமிழ்நாட்டிற்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.அப்போதே இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இப்படிப்பட்ட கலவரங்கள் ஏற்பட்டிருக்காது..
செப்.9 முதலே மக்கள் கூடி விட்டனர் கடற்கரையோரம் .ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடனே அரசு உசராகி இவ்வளவு பெரிய பிரச்சனை நடக்காமல் தடுத்திருக்கலாம். இதில் அரசுக்கு மிகப்பெரிய தோல்வியே.
அணு உலைக்கு ஆதரவாக அரசும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் எதிரானவர்களோ அதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இங்கே இருக்கும் முரணபாடுகளை அரசு களைய வேண்டியது பொறுப்பு.ஆனால் அதை கலையாமல் தொடர்ந்து குரல் எழுப்புவது ஒரு மோசமான சூழலே!!
அணு உலையை பொருத்தவரை வெளியேற்றும் கழிவு நீர் என்பது கடல்வளத்தை பாதிக்க போவது நிதர்சனம் தான். அந்த கடல் வளத்தை பயன்படுத்தும் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.இதற்கு விலக்கோ அல்லது முடிவோ கண்டிப்பாக இல்லை.

அணு உலையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு எவ்வளவு கொடுமையானது என்பது உலகில் நடந்த பல சமப்வங்களே சாட்சி. அப்படி இருக்கும் போது அணு உலை தேவையா என்பது பலத்த கேள்வியே!
எதிர்பாளர்கள் சொல்லும் மற்றொரு குற்றச்சாட்டு அணு உலை அமைப்பதின் முக்கிய நோக்கம் மின்சாரம் அல்ல. அது அணுகுண்டிற்கான மூலப்பொருள் எடுப்பதே என்பது. அதற்கான விளக்கம் கேட்கிறார்கள். அப்படி ஒருவேளை இருக்கும் படசத்தில் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயங்களை எல்லோருக்கும் பகிர்வது என்பது மிகவும் அபத்தம்.இது எதிர்பாளர்களை பற்றி அரசு வைக்கும் குற்றசாட்டிற்கு வலுசேர்க்கிறது.
அரசு சொல்லும் அந்நிய நாட்டு சதி.. அதற்கு உடந்தை உதயகுமார் என்பதை சின்ன குழந்தை மாதிரி சொல்வது அபத்தமாக இருக்கிறது. ஒரு வேளை அப்படி இருக்கும் படசத்தில் அதற்கான சான்றுகளை மக்களிடம் தந்தாலே மக்கள் உதயகுமாரை புறக்கணித்துவிடுவார்கள். போராட்டமும் பிசுபிசுத்து விடும். ஆனால் அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறது தவிர ஒன்றையும் சான்றாக தரவில்லை.
அணு உலை பகுதிக்கு 500  கோடி வளர்ச்சி பணிக்கு ஒதுக்கியது மிக்க்கேவலமான அரசியல் செயல். உண்மையாக அணு உலை எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்கும் படசத்தில் எதற்கு அரசு 500 கோடி ஆசை வார்த்தை காட்டனும்??தமிழகத்தில் மட்டுமே இத்தகைய பணம் கொடுக்கும் மோசமான சூழல் .இது கலையப்பட வேண்டிய விசயம்.
எதிர்பாளர்கள் தீர்ப்பு வந்தவுடன் போராட்ட்த்தில் குதித்து இருந்தால் அவர்களுக்கு இன்னும் அதிக அளவுக்கு ஆதரவு இருந்திருக்கும்.அதை விட்டு விட்டு திட்டம் இட்டு போராட்டம் செய்வது இந்த போராட்ட்த்தின் பின்பலம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.
குறிப்பாக போராட்ட்த்தில் குழந்தைகளை முன்வைப்பது பலத்த கண்ட்னத்தை பல இட்த்திலும் இருந்து சந்தித்து வருகிறது. இது குறித்து உதயகுமார் கூட கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். ஒரு வேளை  போராட்ட்த்தில் குழந்தைகளுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் இப்போராட்டம் வேறு தளத்திற்கு பயனித்து இருக்கும்.அதற்க்கு தான் திட்டமிட்டாரோ உதயகுமார் என்கிற சந்தேகமும் இப்போது உரத்து எழுகிறது.
இதுபத்தாது என்று விஞ்ஞானிகளும் கூடங்குளம் சார்ந்து அரசியல் பேசுவதால் தேவையில்லாத பதட்ட்த்தை உருவாக்குகிறது.இது எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊத்துகிர கதை.ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் பேசிய கருத்துகள் ஜனநாயகத்தையே கேள்விக்குரியாக்குகிறது.
இது இப்போதைய நிலைக்கு முடியப் போவதில்லை. இது வெளியில் பேசுகின்ற பொது தளத்தில் கையாளும் பிரச்சனை அல்ல. இப்பிரச்சனை இருதரப்பும் அமர்ந்து உண்மையான நிலையை தங்களின் ஈகோவை விட்டுவிட்டு புரிந்து பேசினாலே முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடும்.விஞ்ஞான வளர்ச்சியை காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது நிதர்சனம். ஆனால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரின் மேல் தான் நவீனத்திற்கு மாறவேண்டும் என்றால் அந்த நவீனமே தேவையில்லை என்பது பெரும்பாலோரின் எண்ணம்.

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP