உலகம் பெரியவர்களால் நிரம்பியிருக்கிறது!!

>> வியாழன், 19 ஜூலை, 2012


உலகம் பெரியவர்களால் நிரம்பியிருக்கிறது!!

வாழ்க்கை நிகழ்வுகளால் நிறைந்தது.சலிப்புகளுக்கும் சந்தோசத்திற்க்கும் இடையில். வெற்றி தோல்வி என்னும் சம்பவங்கள் கலந்த கலவை.வாழ்வின் சமுக கடைமைகளை முடித்த பின் மிஞ்சி இருப்பவை காலத்தின் நினைவுகள் மட்டுமே. வாழ்வின் இறுதியில் துணை நிற்க்கும் பால்ய கால நினைவலைகள் கொஞ்சம் தனித்துவமானவை.

அமெரிக்க இலக்கியத்தில் ஹெமிங்வேக்கு நிகரானவர் ராபர்ட் ருவாக். சமகாலத்தவர்கள்.இருவரும் பத்திரிக்கையாளராக எழுத துவங்கி எழுத்தாளர்கள் ஆனவர்கள்.ருவாக் நிறைய கட்டுரைகள் நாவல்கள் எழுதியுள்ளார்.இவரது பகடி கலந்த  அரசியல் கட்டூரைகள் அன்றைய அரசியல்வாதிகளுக்கு தூக்கத்தை குறைத்தது.இவர் ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையை பற்றி இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார்.ராபர்ட் ருவாக்கின் ‘கிழவனும் சிறுவனும்,தாத்தாவிற்க்கும் பேரனுக்கும் உள்ள உறவையும், பால்ய கால நினைவுகளையும் பற்றிய உலகின் மிக சிறப்பான புத்தகம்.

கோடைகாலம் என்பது குழந்தைகளின் வசந்த காலம்.வீடு தங்கமாட்டார்கள். எப்பொழுதும் விலையாட்டு.மீன்,கிளி,ஓனான்,குருவி.கொக்கு பிடிக்க போவது, தெருநாயை துரத்துவது,கிணற்றில் குளிப்பது,திருடன் போலீஸ் விளையாட்டு, பம்பரம்,கிட்டி,கபடி,தீப்பட்டி லேபிள்,சிகரட் அட்டை வைத்து விளையாடுவது,ரயில் தண்டவாளத்தில் காசு வைப்பது,காற்றாடி விடுவது,தட்டான், வண்ணத்து பூச்சி, பொன்வண்டு பிடிப்பது,ரயில் விளையாட்டு,கோலிக்குண்டு விளையாட்டு, பல்லாங்குழி, பல்லிமுட்டையை எடுப்பது,சைக்கிளிலில் சுற்றுவது, உப்புக்குதிரை, ஏறுவது,கல்லா  மண்ணா ஆட்டம்,பேய்கதை கேட்பது,நட்ச்த்திரங்களை எண்ணுவது, மரப் பிசின் எடுப்பது,பசை காய்ச்சுவது,மயில் இறகு சேமிப்பது,காகிததில் ஏரோபிலையின்,கத்திக்கப்பல் கேமரா செய்வது,குச்சி ஜஸ் சாப்பிடுவது,எழந்தை , நாவல் பழம் பறிப்பது,நண்டு ,நத்தை சுட்டு சாப்பிடுவது...இப்படி ஏராளமான விளையாட்டுக்கள்.விளையாடி களைத்து வீடு திரும்பும் குழைந்தைகள் சாப்பிட்டும் சாப்பிடாமல் மீண்டும் விலையாட ஓடிவிடுவார்கள்.பெரியவர்கள் திட்டும் வாச்ம் எல்லா இல்லங்களிலிலும் வசித்தது.
இன்று இந்த விளையாட்டுக்கள் இல்லை.இல்லங்களிலில் வாசம் இல்லை. கொண்டாங்கள் இல்லாத வாழ்க்கை.இப்பொழுது அவர்களுக்கு தெரிந்த்து எல்லாம் கிரிக்கெட் ,வீடியோ கேம்,குட்டிசாத்தான் என்னும் தொலைக்காட்சி பெட்டி.இதை விட்டால் சம்மர் கிளாஸ்.சிறுவர்கள் சேர்ந்து விலையாடும் காட்சி மறைந்தே போய்விட்ட்து.
தாத்தாக்களிடம் கதை கேட்கும் பழக்கம் காணாமல் போய்விட்ட்து.தாத்தாகளும் டிவி பார்க்கிறார்கள் ,பேரன்களும் டிவி பார்க்கிறார்கள்.தாத்தாக்கள் வாய் இருந்தும் ஊமையாகி போய் நெடுநாள் ஆகிவிட்ட்து.தாத்தாக்களை முட்டாளாக பார்க்கும் பார்வை சமுகத்தில் புரையோடி போய்விட்ட்து.பேரப்பிள்ளைகளின் கேலிகளுக்கு மத்தியில் தாத்தாக்கள் தலைகவிழ்ந்து போகிறார்கள்.பின்னாளில் யோசித்து பார்க்க பால்ய நினைவுகள் இல்லா தலைமுறை.

ராபர்ட் ருவாக் தனது தாத்தாவை பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.தாத்தா என்ன கற்றுக்கொடுத்தார்,எப்படி கற்றுக்கொடுத்தார் என்பதே கிழவனும் சிறுவனும் புத்தகம். ருவாக்கின் தாத்தா கேப்டன் எட்வர்ட் ஹால் அட்ஹின்ஸ்.தன் பேரன் கோடை விடுமுறையில் வீட்டில் அடைந்து கிடப்பதை விரும்பாமல் அருகில் உள்ள ஏரி, குளம்,காடு,மலை என்று அழைத்து செல்கிறார்.

ருவாக் இயற்கையை தன் தாத்தா வழியாக புரிந்துகொள்ளுகிறார்.தாத்தா மீன்பிடித்தலின் வழியாக தண்ணீரை புரிந்து கொள்வது எப்படி என்று கற்றுதருகிறார். மீன்பிடிப்பவன் மிக பொருமையாக இருக்கவேண்டும்.அது தியானம் என்று புரியவைக்கிறார்.மீன்குஞ்சு மாட்டினால் அதை தண்னீரில் மீண்டும் விட்டு விடவேண்டும் என்கிறார்.மீனுக்கு பதிலாக தவளை மாட்டும்போது இப்படித்தான் பலரும் தங்களுக்குத் தேவையில்லாத இட்த்தில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள் என்று கேலி செய்கிறார்.ருவாக் மீன்பிடித்த்லை மட்டும்மல்லாமல் அதன்பின் உள்ள வாழ்க்கை பற்றிய் புரிதலையும்,த்த்துவத்தையும் அறிந்துகொள்கிறார் சிறுவனாக இருக்கும் ருவாக் புத்தகம் முழுவதும் தானும் பெரிய ஆளாக வேண்டும் என்று பேசியும், ஆடையும் அணிகிறார்.

சிறுவர்கள் எப்போதும் உடனடியாக பெரியவர்களாக ஆசைபடுகிறார்கள்.ஆனால் பால்ய வயதை கடந்த பிறகே அதன் சிறப்பு புரியும்..ருவாக்கின் புத்தகத்தை வாசிக்கும் போது நாமும் நம் பால்ய நினைவுகளிலில் முழ்குவது இனிய அனுபவம். வெற்று மாயத்தோற்றங்களை துணையாக கொண்டுள்ள சிறுவர்களின் உலகை நினைத்து பார்க்கையில் இப்புத்தகம் ஒவ்வொருவரும் வாசிக்கப் படவேண்டிய புத்தகம். உலகம் பெரியவர்களால் நிரம்பியிருக்கிறது.ஆனால் அது சிறுவர்களால் மட்டுமே ருசிக்கப்படுகிறது.
                                                                 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP