வணக்கம் துயரமே...!

>> வியாழன், 19 ஜூலை, 2012


வணக்கம் துயரமே...!

1851 ,மார்ச் 27 ,அமெரிக்க ஜக்கிய நாடுகளைச சேர்ந்த மேஜர் ஜேம்ஸ் சேவேஜ் என்பவர் தனது படையினருடன், அவானீசே என்ற செவ்விந்திய பழங்குடியினத்தின் தலைவனான டென்யா என்பவரையும் அவரது இனத்தையும் அழிப்பதற்காக இப்போது யோசெமைட் பள்ளத்தாக்கு எனப்படும் பகுதியின் மீது படைதொடுத்தார்.இது செவ்விந்தியர்களை ஒழித்துக் கட்டுவதற்காக கலிபோர்னியா மாநிலம் தொடுத்த போரின் ஒருபகுதி. பல ஆதீகுடிகள் கொல்லப்பட மற்றவர்கள் சரணடைந்தனர்.. அவர்கள் காட்டின் ஒருபுறம் வாழ அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் உரிமைகள் அடியோடு ஒழிக்கப்பட்டன.வெள்ளை விஞ்ஞானிகள் யோசெமைட் பள்ளத்தாக்கு மனித சஞ்சரமற்றது..பழங்குடிகள் அங்கு நிரந்திரமாக வாழ்வில்லை.அதன் வழியாக மேலும் கீழும் சென்று வந்து கொண்டிருந்தனர் அவ்வளவுதான் என்று எழுதினர்.

ஏரளமான பழங்குடிகள் வாழ்ந்த நிலையில் இந்தக் காடு கன்னிநிலம்.....இங்கே மனிதன் காலடிபடவே இல்லை என்று வெள்ளையர்களின் புகைபட நிபுனர்களும் மற்ற கைத்தடிகளும் கூசாமல் புளுகினர்.ஒட்டல் உரிமையாளர்களும் சாலை அமைப்பவர்களும் உயிரியல் தொடர்பான வணிகத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து குவிந்தனர்..யோசோமைட் அவானீ ஹோட்டல் அதன் அடையாளமாக மாறிப்போனது.அற்பமான பழங்குடி குடிசைகள் இருந்த இட்த்தில் இந்த நான்கு மாடி ஓட்டல் பிரம்மாண்டமாக எழுந்தது சுற்றுச்சூழலைக் காக்க!!

செவ்விந்தியர்கள் காட்டின் நிசப்பதை குலைக்கின்றனர்.அசிங்கமாகவும் அழுக்காகவும் உள்ள அவர்களைப்பார்க்க அருவருப்பாக உள்ளது என்று வெள்ளையர்கள் கூறினர்.காட்டைப்பாதுகாக்க அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.அடுத்த 80 ஆண்டுகளில் காட்டிலிருந்து பழங்குடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டனர். 1969 ல் அவர்களது இறுதிக் குடியிறுப்பும் தீயணைப்புப் பயிற்சி என்ற பெயரில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு காடு தூய்மைபடுத்தப்பட்டது!.

இந்த யோசெமைட் தேசிய பூங்காதான் இன்றுள்ள ஏரளமான வனவிலங்கு சரணலாயங்களுக்கு முன்னுதரணமாக அமைந்தது.உலகம் முழுவதும் கோடிக்கனக்கான பழங்குடி மக்கள் உள்நாட்டு அகதிகளாக்கப்படவும் இந்தப் பூங்கதான் கோட்பாடு அடிப்படையை அளித்தது.மனிதர்களற்ற காடு என்ற கோட்பாடு இந்த யோசெமைட் பூங்காவிலிருந்துதான் உருப்பெற்றது.

அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனப்பாதுகாப்பு என்ற கோஷங்களின் அடிப்படையில் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.சின்னஞ்சிறிய ஆப்பிரிக்க நாடான சாட்டில் 6 லட்சம் மக்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்திய அரசு 1 லடசம் மக்கள் வனப்பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது. இது மிகவும் குறைக்கப்பட்ட எண்ணிக்கை என்பது சந்தேகமில்லை.

 “மனிதர்களற்ற காடுகள் என்ற பிரச்சாரத்தை உலகின் மிகப்பெரிய 5 தன்னார்வ தொண்டு நிருவனங்கள் முன்னெடுத்துச் செலகின்றன. இந்நிருவனங்கள் மேற்கு உலக நாடுகளைக் குறிப்பாக அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது.இவை சுற்றுச்சூழலை காக்க செலவழிக்கும் தொகை ஒரு சிறிய நாட்டின் மொத்த வருமானத்திற்க்கு நிகராகும்!!.உலகில் எந்த இடத்திலிருந்து மக்கள் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டாலும் இந்த நிருவனங்களின் ஏதோனும் ஒன்றின் பங்களிப்பு அதில் கட்டாயம் இருக்கும்.இருந்தே தீரும்!!

உகாண்டாவில் உள்ள பிவாண்டி தேசிய பூங்காவில் பட்வா  என்ற பழங்குடி இன மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.கூடவே மனிதக் குரங்களும்!!.இந்த மக்கள் காடுகளோடு ஒன்றிப்போன வாழ்க்கை முறையின் காரணமாக காடுகளின் ஒருபகுதி என்றே கருதப்பட்டனர்.1994 லில் பிவாண்டி தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.விரைவிலேயே பட்வா பழங்குடிகள் கொரில்லாக குரங்குகளை வேட்டையாடி உண்கிறார்கள் என்ற வதந்தி பரவியது.இந்த கொரில்லாக் குரங்கு அருகி வரும் இனம் மட்டும்மல்ல, ஜரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் மிகப்பெரிய அளவில் சுற்றுலாப் பயனிகளை ஈர்ப்பதுமாகும். விளைவு 3000 பட்வாக்கள் ஊடுருவல்காரர்கள் என்று காடுகளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.நஷ்ட ஈடாக கொடுப்பதற்க்கு ஒதுக்கப்பட்ட தொகை பங்குச சந்தையில் தொலைந்துவிட்டதாம்!!
அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் காட்டெருமைகளைக் கொன்று குவித்தது உலகமறிந்த செயதி .ஆனால் 19 ம் நூற்றாண்டில் செவ்விந்தியர்கள்  தேசியப்பூங்காக்க்ளில் காட்டெருமைகளை கொன்று குவிக்கின்றனர்  என்று கூசாமல் புளுகினர்.
அமெரிக்காவுக்கு காட்டெருமை! ஆப்பிரிக்காவுக்கு கொரில்லாக் குரங்கு!!
இந்தியாவுக்கு ..................புலி.!!

1972 ல் புலிகள் அழிவதை தடுக்க புராஜெக்ட் டைகர் என்ற திட்டம் செயலபடுத்தப்பட்டது.அப்போது 1827 புலிகள் இருந்தன.இப்போது புலிகளின் எண்ணிக்கை 1500 ஆக குறைந்துவிட்டது.நாற்பது ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாய் செலவிற்க்கு பிறகு புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது!. இது இப்போது திடீரென்று தொண்டு நிருவனங்களின் கவனத்துக்கு வந்துதது. உடனே புலிகளைக் காக்க தனிகாப்பகங்கள் தேவைப்படுகின்றன என்றார்கள்..ஆனால் விஷயம் அவ்வளவு எளிமையானது அல்ல!!.
தற்போது புலிகளுக்குத் தனி காப்பகங்கள் அமைப்பதுதான் புலிகளைக் காக்க சிறந்த வழி என்று அதிகாரபூர்வமாக முடிவு செய்யப்பட்டு அரசு செயல்படுத்தி வருகிறது.இந்தியா முழுவதும் 37 புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று தமிழ்நாட்டில்!.களக்காடு முண்டாந்துறை ,ஆனைமலை,முதுமலை தவிர சத்தியமங்கலத்தில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

புலிகள் காப்பகம் என்பது இரண்டு அடுக்குகள் கொண்டது.காப்பகத்தின் மையப்பகுதி கோர் ஜோன் (core zone) என்றும் வெளிப்பகுதி ப்பபர் ஜோன்(Buffer Zone) எனவும் அழைக்கப்படுகிறது.புலிகள் காப்பகம் செயலபடும் போது கோர் ஜோனில் மக்கள் வாழ்வது தடைசெய்யப்படும்.வெளிப்பகுதிகளில் வரையறுக்கப்பட்ட அளவில் மக்கள் நடமாட்டம் அனுமதிக்கப்படும்.இங்கு சாலை அமைத்தல்,புதிய மின்சார இணைப்புகள் வழங்குதல்  உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பணிகளும் நிறுத்தப்படும். வனத்துறை அனுமதிக்கும் அளவில்தான் விவசாயம் செய்யவேண்டும். கால்நடைகளை மேய்ப்பது முற்றிலும் தடை செய்யப்படும்..இந்த நிலையில் புலிகள் காப்பகங்களை ஆதரிக்கும் என்.ஜி.ஓக்கள் ப்பபர் ஜோன் உட்பட புலிகள் காப்பகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்களை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் திரும்ப திரும்ப கூறுவது ஒன்றைத்தான். விலங்குகளும் மனிதர்களும் ஒன்றாக வாழ்வது சாத்தியமே இல்லை. எனவே புலிகள் சரணாலயங்களில் உள்ள மனிதர்கள் அனைவரும் வெளியேற்றப் படவேண்டும்.தவிர காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

தமிழகத்தின் மலைகளில் 50% பகுதிகளை பெரும் நிருவனங்களும் அரசுக்கும் சொந்தமான டீ,காபி,ரப்பர்,தேக்கு ,யூக்கலிப்பட்டஸ் தோட்டங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவற்றில் எந்த மிருகங்களும் வாழமுடியாது.இது தவிர பல பகுதிகளில் அணைகளும் அரசுக்கு சொந்தமான சுரங்கங்களும் உள்ளன. இங்கும் புலி உட்பட எந்த மிருகமும் வாழு வழியில்லை.பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் தான் வனவிலங்குகள் வாழ்கினறன..
புலியை காப்பாற்ற வனத்தின் ஒருபகுதியை ஒதுக்கி வைத்துத் தான் ஆகவேண்டும் என்றால் வனநில உரிமைச் சட்டத்திலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியை critical wildlife habitat என்று அறிவிக்கப் பிரிவு 4(2)(f) வழிவகை செய்கிறது.ஆனால் அதற்குப் பிறகு அந்தப்பகுதியை வேறு எந்த பணிக்கும் பயன்படுத்துவதை இச்சட்டம் கண்டிப்பாக த்டைசெய்கிறது.உண்மையிலேயே புலிகளை காப்பதுதான் நோக்கம் என்றால் இப்பிரிவின் கீழ் புலிகள் காப்பகங்களை அறிவித்திருப்பார்கள்.ஆனால் அரசு wild life (protection)Act  ஒரு திருத்தம் கொண்டுவந்து புலிகள் காப்பகங்கள் அமைக்க வழிவகை செயதது.இது டைகர் திருத்தம் எனப்படுகிறது.இத்திருத்ததில் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்த தடை இல்லை.எனவே அரசின் நோக்கம் தெளிவாகிறது.இதை புலிகளின் ந்லவாழவையே தங்கள் நோக்கமாக கொண்ட தன்னார்வ தொண்டு நிருவன்ங்களும் கண்டு கொள்ளவில்லை என்பதை புலிகளின் காதர்கள் தான் தெளிவு படுத்தவேண்டும்.

வன உரிமை சட்டம் செயல்படுத்தப்படுவதைத் தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட வழிதான் புலிகள் காப்பகம்.புலி நாட்டின் பெரும்பாலான் காடுகளில் உள்ளது எனவே இந்த ஒரே காரணத்தைச் சொல்லி எல்லாப் பகுதிகளில் இருந்தும் பழங்குடிகளை வெளியேற்றி விடலாம்.வன உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களின் மிது உரிமை பெறுவதற்க்கு முன் அவர்கள் வாழும் பகுதிகளை புலிகள் காப்பகங்களுக்குள் கொண்டு வந்து மொத்தமாக வெளியேற்றி விட வேண்டும் என்பதே இப்புலிக்காதலர்களின் உண்மை நோக்கம்.புலிகள் காப்பகம் என்பது மிகவும் லாபகரமான ஒரு வணிகமாகும்.பல்லாயிரம் கோடி ரூபாய் புலிகளை காக்க கொட்டிக் கொடுக்கப்படுகிறது.இது தவிர மக்களோடு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையிலிருந்து தப்பித்து கொள்ள வனத்துறைக்கும் வன அதிகார வர்க்கத்திற்க்கும் வாய்ப்பளிக்கிறது.வன உரிமைச் சட்டம் காடுகளில் மக்கள் கொளரவமாக வாழ வாய்ப்பளிக்கிறது.புலிகள் காப்பகம் அவர்களை விரட்டியடுக்க வழி செய்கிறது.வனத்துறை இரண்டாவதையே விரும்புகிறது
வன உரிமைச் சட்டம் செயல்படுவதை தடை செய்ய வேண்டும்.காடுகளில் மக்கள் இருக்கும் வரை இச்சட்டப்படி மக்களது நில உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து கொண்டுதான் இருக்கும் அதை முறியடிக்க காடுகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதுதான் ஒரே வழி.அதோடு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதியை பின்பு சுரங்கம் போன்ற வெறு நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்க்கு சட்ட ரீதியலான தடை ஒன்றும் வந்துவிடக்கூடாது!!

சரிக்ஸா மற்றும் பானா வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் முற்றிலும் அழிந்துவிட்டன.ஆனால் அதைப் புலிகள் காப்பகமாக தக்கவைத்துக்கொள்ள வேறிட்த்திலிருந்து அங்கு புலிகள் கொண்டுவந்துவிடப்பட்டன.எனவே புலிகள் காப்பகங்கள் என்பவை புலிகளை காக்க அல்ல. அதனால் கிடைக்கும் வேறு நலன்களுக்குகாகவே தூக்கிப் பிடிக்கப்படுகின்றது.

முதுமலை வனவிலங்கு சரணாலயம் சுமார் 350 சதுர கில்மீட்டர் பரப்பளவு கொண்டது.இது புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டதும் இந்தப்பகுதி காப்பகத்தின் மையப்பகுதியாக மாற்றப்பட்டது.இதைச் சுற்றிலுமுள்ள 9 பஞ்சாயத்துக்கள் பப்பர் ஜோன் என்படும் சுற்றுப்பகுதியாக அறிவிக்கப்பட்ட்து.கோர் ஜோனில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன.இவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்.கடந்த 60 ஆண்டுகளில் முதுமலை சரணாலயத்தில் இருந்து வெளியேற்றப்பட பழங்குடிகள் ஒரு தனி இனக்குழுவாகவே மாறி சுற்றியுள்ள பகுதிகளில் கொடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.அவர்களோடு இந்த மக்களும் சேரத்தான் போகிறார்கள்.



பப்பர் ஜோன் பகுதியில் இரண்டு லடச்ம் பேர் வசிக்கிறார்கள்.இந்தப் பகுதி பப்பர் ஜோன் ஆக அறிவிக்கப்பட்ட்தும் கற்பனை செய்ய முடியாத அளவிற்க்கு கெடுபிடிகள் மக்கள் மீது திணிக்கப்படன.இன்னின்ன பயிர்களை விளைவிக்கலாம் விளைவிக்க கூடாது என்று வனத்துறை உத்திரவிட்டது.புதிய சாலைகள் அமைப்பது தடை செய்யப்பட்டது.புதிய கட்டங்கள் கட்ட தடை செய்யப்பட்டது.புதிய மின் இணைப்புகள் தரப்படவில்லை.இன்னும் எத்தனையோ கட்டுப்பாடுகள்...மக்கள் வாழ்க்கை தலைகுப்பற போடப்பட்டது.அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் வனத்துறையின் திட்டம் என்று மக்கள் கருதினர்.

கொதித்துப் போன மக்கள் ஒரு லட்சம் பேர் கூடலுரில் திரண்டு ஊர்வலம் நடத்தினர். தற்காலிகமாக வனத்துறை பின்வாங்கியுள்ளது. எவ்வளவு நாட்களுக்கு என்பது கேள்விக்குறி.??

ஆனால் கோர் ஜோன் என்படும் மையப்பகுதியில் என்ன நடக்கிறது ....சீசன் நேரத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 6000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.குறைந்த்து 50000 சதுர அடியில் கட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன.பல புதிய வாகனங்களை வனத்துறை வாங்கியுள்ளது இன்னும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்க்காகவும் அவர்கள் தங்குவதற்க்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியில் மனித நடமாட்டம் இருந்தால் புலிகளின் இனப்பெருக்க்ம் பாதிக்கப்ப்டும் என்று கூறித்தான் அரசு மக்களை வெளியேற்றுகிறது.ஒருவேளை ..ஒசை புலிகளுக்கு சங்கீதமாக இருக்கும் போலும்!!

நகர்ப்புற மக்களுக்கு உள்ள இயற்கை மீதான அதீத ஈர்ப்பை திட்டமிட்டு கார்ப்பரேட் நலன்களுக்குப் பயன்படுத்துவதே இவர்களது நோக்கம்.இதற்கும் நூற்றாண்டு காலமாக மக்கள் மீது அதிகாரம் செலுத்திப்  பழகிப்போய் அதைக் கைவிட விரும்பாத வன அதிகாரவர்க்கமும் நாட்டின் எல்லாச் செல்வ வளங்களையும் மூலதனத்தின் லாப வெறிக்குத் திறந்துவிட வேண்டும் என்று துடிக்கும் அரசுகளும் துணைபோகின்றன.
புலிகள் காப்பகம் ,வனங்களை பெருக்குவது, வனப்பாதுகாப்பு ,லாபகரமாக்க் காடுகளை பயன்படுத்துவது என்ற பல முகமூடிகளணிந்து அரசும் தன்னார்வ தொண்டு நிருவனங்களும் வருகின்றன.எந்த முகமூடி அணிந்து வந்தாலும் அடிப்படை நோக்கம் என்னவோ காடுகளைவிட்டு மக்களை விரட்டிவிட்டு அவற்றை பணத்திற்க்காக பிழிந்து எடுப்பதுதான்!

இதுவரை பழங்குடி மக்கள் சந்தித்து வரும் வேதனைகளைவிட மாபெரும் அவலத்திற்க்கு அவர்களை உள்ளாக்கப் போகின்றன இந்தப் புலிகள் காப்பகங்கள்.இவற்றிற்க்கு எதிராகப் போராடி வரும் மக்களை ஆதரிப்பதும் இரவு பகலாக ஓய்வின்றி நடந்துவரும் பொய் பிரச்சாரத்திற்க்கு மாற்றாக உண்மைகளை முன்னிருத்துவதும் நமது கடமையாகும்.
நன்றி

தலைப்பு:பிரஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பிரான்சுவாஸ் சுகன் எழுதிய நாவலின் தலைப்பு.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP