வரம் தா வனம் காக்க!!

>> வியாழன், 19 ஜூலை, 2012


வரம் தா வனம் காக்க


                           "ஏலி,ஏலி லெமா சபக்தானி"
                                                             ---பைபிள்


 அன்று 2000 வருடங்கலுக்கு முன் இயேசு கல்வா¡¢மலையில் சொன்ன வார்த்தைகள் "என் கடவுளே,என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்" .மனித நேயத்தை போதித்தவர். அன்பின் அவசியத்தை சொன்னவருக்கு பா¢சு அவலமான சிலுவை மரணம்.இன்று மனிதகுலம் வாழ தன்னையே அர்பனிக்கும் வனம் மற்றும் வன விலங்குகளுக்கும் இதே வார்த்தைகள் சால பொருந்தும்.


வனம் பல்வேறு காரணங்களால் அழிந்து வரும் சூழ்னிலையில் தற்போது காட்டு தீயினாலும் அழிவது  வருத்தமுறும் நிகழ்வு.குறைவாக உள்ள வனம் வருடந்தோரும் இந்தியாவில் மட்டும் 56 விழுக்காடு பாதிக்கப்படுகிற்து .நம்மிடம் அதிகமாக இருப்பது வறண்ட் இலையுதிர்காடுகள் தான்.இவை கோடைகாலத்தில் இலைகள் உதிர்ந்து காய்ந்து ,எளிதில் பற்றிக்கொள்ளும். சில வருடங்களுக்குமுன் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 200 க்கும் அதிகமானோர் இறந்தது  வரலாறே சாட்சி.வீடு ,பொருள் இழந்தோர் ஆயிரக்கனக்கில்,!!தற்போது காட்டுத்தீயை கண்கானிக்க  செயற்கை கோள் வசதி இருந்தாலும் அதனால் ஏற்படும் இழப்பு அதிகம். அதை அனைப்பதும் கடினம்.பருவனிலை மாற்றம் குறித்து விழிப்புனர்வு அதிகா¢த்து வரும் சூழ்நிலையில் தற்போது ஏற்படும் காட்டுத்தீ தமிழ்நாட்டில் தீவிர விவதத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிற்து.

காட்டுத்தீ பெரும்பாலும் மனிதர்களாலேயே ஏற்படுகிறது.மின்னல் தாக்கி ,மூங்கில்கள் உராயவ்தின் மூலம் ஏற்படும் காட்டுத் தீ வெகு குறைவு. மின்னல் தாக்கும் போது அதை தொடர்ந்து வரும் மழையால் தீ அனைந்து விடுகிறது. காட்டிற்குள்  ஆடு மாடு மேய்பவர்கள் புல்வெளிகளில் செழுமையாக வளரும் என்ற தவறான நம்பிக்கையில் தீ வைத்து விடுகிறார்கள். அவை பல ஏக்கர்களிலில் பரவி பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன.பாதுகாக்கப் பட்ட வன பகுதிக்குள் கால்நடைகள் மேய்ப்பது தடைசெய்யப் பட்ட சட்டம் பின்பற்றப் படாதது வருத்தமூட்டும் செயல்.இதே போல் இயற்கை செல்வங்களை எடுத்து விற்போறாலும் ஆபத்து ஏற்படுகிறது.புள்ளி மான் ,கடம்பை மான் போன்ற மானினங்கள் வருடத்திற்கு  ஒரு முறை கொம்புகளை உதிர்க்கும்.பிறகு அவை முலைத்து விடும்.இவை வீட்டு அழகு சாதனாங்களாகவும், கத்தி பிடியாகவும் பயன் படுகிறது.புதா¢லும் ,காய்ந்த இலை சருகுகளிலும் மறைந்து இருக்கும் மான் கொம்புகளை கண்டுபிடிபதற்காக தீ வைத்து விடுவார்கள்.மற்றவைகள் எரிந்த பிறகு கொம்புகள் மட்டும் எளிதாக கண்ணில் படும்.இவர்களை போல தேன் எடுக்க செலுவர்களாலும் தேனீக்களை விரட்ட புகை போடுவார்கள் .அதிலிருந்தும் தீ பரவி விடும்.வனபகுதிக்குள் இருக்கும் கோவில்களுக்கு  வருபவர்கள் சமையல் செய்வது மூலமும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அழையா விருந்தாளிகளாக வரும் சுற்றுலாவாசிகள் சுண்டிவிடும் அனையா பீடி, சிகரெட் தொடரும் காட்டுத் தீக்கு  முக்கிய காரணம். இவை தவிர காட்டுக்குள் போகும் மின்சார கம்பிகள் உராய்வதாலும் ,காடுகளை கிழித்து போகும் போக்குவரத்து வாகனங்களான கார்,பஸ்,இரயில் போன்றவற்றில் இருந்து வரும் நெருப்பு பொ¡¢களும் மிக பொ¢ய ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.


இவை தவிர வனத் துறையினரே வைக்கும் தீ தனி ரகம்.காடுகளிலில் உள்ள களை செடிகளை அழிக்கும் நோக்கில் வைக்கும் தீ பல சமயங்களில் மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அரசு தொடர்ந்து அறிவித்து வரும் புலிகளின் சரனாலய திட்டம் ஒர் புதிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் வசித்து வரும் மக்களை கட்டாயாமாக வெளியேற்ற படும் போது அந்த மக்களின் கோபம் அந்த வனத்தின் மீது திரும்புவது இயற்கையே என்கிறார்கள் இயற்கையாளர்கள். தற்போது .சில நாட்களுக்கு முன்  சத்தியமங்களம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பாதிப்பு தொ¢யாமல் இயற்கை ஆர்வளர்கள் பா¢தவிக்கிறார்கள்.


காட்டுத்தீ ஏற்பட்டால் மீண்டும் காடு வளர்ந்து விடாத? என்று கேட்களாம்.காட்டில் தரையில் இருக்கும் விதைகளும் கிழங்குகளும் தீயால் அழித்து வனதின் தன்மையே மாற்றிவிடும்.  மயில், காட்டுக்கோழி, உடும்பு, பாம்பு,கீ¡¢ போன்ற பல உயி¡¢னங்களை அழித்து விடும்.பல உயி¡¢னங்கள் தரையில் தான் முட்டையிட்டு குஞ்சு பொ¡¢க்கின்றன. இதுமட்டுமில்லாமல் தனது குட்டிகளை வளைகளுக்குள்ளும் புதர்களிலும் தான் மறைத்து  வைத்திருக்கும்.ஒரு காட்டின் பல்லுயிர்வளத்தையே பாதித்து விடும். ஆப்பி¡¢க்க  நாடான சாம்பியா வனம் இதற்க்கு சா¢யான உதாரனம். அங்கு தொடர்ந்து ஏற்பட்ட காட்டுத் தீயால் மென்மையான மரங்கள் அழிந்து கடினமான முப்பேன்  என்ற மரம் மட்டுமே உள்ளது .வன விலங்குகளும் மிகவும் குறைந்து விட்டது. 


வேதாளம் மீண்டும் சாத்துக்குடி மரம் ஏறிய கதையாய் தொடரும் காட்டுத் தீயை அனைக்க நாம் இன்னும் பாரம்பா¢ய முறைகளையே கடைபிடிகிறோம். மேலைநாடுகளில் வனத்தில் செல்லும் இரயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். வானுர்திகளை  தீ அனைக்க பயன்படுத்துகிறார்கள்.  நம் நாட்டில் fire line எனப்படும் சாலையளவு இடைவெளிகல்ளை வனத்தின்  குருக்கே ஏற்படுத்துகின்றனர். தற்போது பார்வை கோபுரங்களையேம் உள்ளுர் மக்களை தீ ஏற்பட்டால் தகவல் தரவும் ஏற்படுத்திருக்கின்றனர்.நமது சரணாலயங்களில் தீஅனைப்பு வாகனங்கள் இல்லை. பெரும்பாலான சரணாலயங்களில் அதை பயன்படுத்தவும் முடியாது. ஆதலால் தீ ஏற்படாமல்  தடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.இதற்கு உள்ளுர் மக்களின் உதவி மிக முக்கியம் .அவர்களை இந்த பணியில் ஈடுபட வைக்கும் போது வன பாதுகாப்பு மட்டுமின்றி அவர்களின் வாழ்வும் பாதுகாக்க படுகிறது.தற்போது சரணாலாயங்கள் முடுவதும் வரவேற்க படவேண்டியது.


மலோ¢யாவால் மன்னாகி போகவேண்டிய மனித இனம் குயினைன் மருந்தை சிங்கோனா மரத்தில் இருந்து பெற்றதை மறந்து போனர்கள்.பூச்சாண்டி விளையாட்டு காட்டும் புற்றுநோய்க்கு பட்டிப்பூவில்லிருந்து வின்பிளாஸ்ரீன்,வின் கிறிஸ் ¡¢ன் மருந்து தந்த வனத்தை இன்னும் அழிக்கிறார்கள். வனம் அழித்ததின் முக்கிய விளைவான பருவநிலை மாற்றம் உலகையே பற்றி எ¡¢கிறது.இழந்து வரும் நீர் ஆதாரம்,உயர்ந்து வரும் வெப்பம்,உருகும் பனிகட்டி மாசுபடிந்த காற்று  போன்ற என்னற்ற  சவால்களுக்கு மத்தியில் மனித இனம். இன்னும் பிறக்காத தலைமுறைக்காக உன்னிடம் கேட்கிறேன்  இறைவா   


                  "வரம் தா வனம் காக்க".                         



0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP