தாருமாறான தயிர்வடை!!

>> ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

இன்னும் கொஞ்சம்....சாம்பார் வடையை பொறுத்த வரை ஈரோட்டில் பெரும்பாலும் எல்லா உணவகங்களிலும் கிடைக்கும்.எனக்கு பன்னீர் செலவம் பார்க் அருகில் இருக்கும் சுகுணாவில் சாம்பார் வடை பிடிக்கும். இங்கே காலையில் சின்ன வெங்காய பிளைன் சாம்பார்.அது வடைக்கு செம காம்ப்னேசனாக இருக்கும்.
இதுதவிர ஈஸ்வரன் கோவில் வீதியில் கேகேபி அலுவலகம் திரும்பும் முனையில் மாலை வேளையில் பல ஆண்டுகளாக போண்ட பஜ்ஜிக்கு என்றே ஒரு வண்டிக்கடை இயங்குகிறது. இங்கு மாலை வேளையில் சாம்பார் மற்றும் தயிர் வடை கிடைக்கும்.இங்கே எனது சிறப்பு தயிர் வடைதான். ஆனால் சேட்களுக்கும் அங்கு வரும் பலருக்கும் சாம்பார் வடை தான் ஆஸ்தான அயிட்டம்!!! இங்கு கொடுக்கப்படும் சாம்பார் அரைத்து வைத்த குழம்பு போல இருக்கும்..ஆனால்  வடை போண்டா பஜ்ஜி அருமையாக இருக்கும். இரண்டு வகை சட்னி தருவார்கள். அதில் என் பேவரிட் புளியும் தக்காளியும் கலந்த சட்னிதான் \. மற்றொன்றை வாங்கே மாட்டேன். இங்கே கிடைக்கும் ஆனியன் பஜ்ஜி என்னைப்பொருத்த வரை அருமையான பஜ்ஜி. நல்ல பதமாக மாவு கலப்பாரக்ள்.
ஈரோட்டி இருப்பவர்கள் மறக்காமல் ருசிக்க வேண்டிய இடம்

தயிர் வடை.... வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கும் உணவு வகைமைகள் என்பது வெகு சில தான். அதில் ஒன்று தயிர் வடை.அவ்வளவு எளிதானது அல்ல.....மக்களின் நாக்கை வெல்வது!!.
பொதுவாக  தயிர் வடை இரண்டு வகையான உளுந்து வடை பயன்படுத்தப்படுகிறது.ஒன்று வட்ட வடிவில் பெரிய அளவிளான நடுவில் ஒட்டைபோட்ட ஆனால் வெங்காயம் போன்ற இத்யாதிகள் போடாதது. மற்றொன்று மைசூர் போண்டா போல உளுந்துவில் செய்யப்பட்ட போண்டா வடிவத்தில்.
உணவகங்கள் பெரும்பாலும் வட்ட வடிவில் தான். காரணம் இவர்கள் தயிர் வடைக்கு என்று தனியாக வடை சுடுவதில்லை. ஒட்டு மொத்தமாக உளுந்து வடையை சுட்டு சாம்பார் வடை தயிர் வடை எல்லாம் அதிலிருந்து போட்டுக்கொள்கிறார்கள். வடையை தயிரில் ஊற வைக்கிறார்கள்.கூடவே அதன் மேல் கேரட் மற்றும் கொத்தமல்லி தூவி ஆட்டைய போடுவார்கள். உண்மையில் தயிர் வடைக்கு நீரில் ஊற வைக்கனும் .அப்பதான் நன்றாக இருக்கும்.இந்த வகை தயிர் வடை முதலில் நீலகீரிஸில் அருமையாக இருக்கும் .இப்போது இல்லை. பகல் பொழுதுகளில் கடுக்கன் கம்மங்கூழ் கடையில் நன்றாக இருக்கும். வடை அளவும் நன்றாக இருக்கும்.தயிரின் அளவும் சிறப்பாக இருக்கும். அதுவும் மேலே கார பூந்தி போட்டு சாப்பிடுவது பெரும்பாலோரின் விருப்பம்.இது பாசாந்தியின் எதிரொலி. எனக்கு பூந்தி போடாமல் ஆனியன் போட்டு சாப்பிடுவது உகந்தது.மாலை வேளையில் ஈஸ்வரன் கோயில் வண்டிக்கடையிலும் நன்றாக இருக்கும்.
எக்ஸ்க்குளூஸிவ் தயிர் வ்டை ... மைசூர் போண்டா ஸ்டையில் உருண்டையாக வடையாக போட்டு மோரில் ஊற வைத்து பிறகு தயிரில் போட்டு ஊற வைப்பது. இது தான் அல்வா போல இருக்கும்.இந்த வகை தயிர் வடை சனிக்கிழமை காலையில் ரயில்வே காலானி மைதானத்தில் ஒருவர்  கொண்டு வந்து தருகிறார். கிலாசிக்.அந்த வடையை சாப்பிடரதே தனித்த அனுபவம்.சுண்டா காய்ச்சிய  பாலில் முந்தின நாளிலே புரை போட்டு வீட்டில் தயாரிக்கும் தயிர்.அதில் சின்ன வெங்காய்ம் பச்சை மிளகாய் போட்டு தாளித்தது....அதுவும் சும்மாவே சின்ன வெங்காயம் பட்டைய கிளப்பும்...பற்றாதற்கு தாளித்த வெங்காயம்...சொல்லவா வேனும் ருசி ..நாக்கில் பரதநாட்டியம் ஆடும்.
இதே போல சிவரஞ்சனி எதிர்புறம் உள்ள தெருவில் இரண்டு கடைகள் தாண்டிய பிறகு ஒரு வடை போண்ட போடும் கடை இருக்கும். இங்கே தயிர் கொஞ்சம் லிக்வுயூடு இருக்கும்.ஆனால் வடை நன்றாக ஊறி இருக்கும். இவர் ஸ்டேட் பாங்க் ரோட்டில் வண்டி கடை போட்டு இருந்தார். வடை போண்டா கடை மட்டும் சிறப்பாக அமைந்து விட்டால் வாழ்க்கையில் எப்படி முன்னேறலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். மனிதர் இன்று எங்கையோ போய்ட்டார்.இவரிடம் தயிர் வடை சாப்பிடும் போது தயிர் வ்டைசாப்பிட்ட பிறகு கொஞ்சம் தயிரை மிச்சம் வைத்து அதில் இவரிடம் கிடைக்கும் கீரை வடையை ஒன்றை பிச்சுப்போட்டு சாப்பிட்டுப்பாருங்கள்.....ஒரத்தில் விருப்ப பட்டால் கொஞ்சம் தக்காளி சட்னியுடன்.....மனுசன் ...வாழ்க்கையை வாழுவீங்க பாஸ் ..அந்த நிமிடத்தில்!!!

தயிர் வடை தான் நம்முடைய உண்மையான டெசர்ட். ஆம் இரவு உணவுக்கு பின் தயிர் வடை சாப்பிட்டுப்பாருங்கள். அதுவும் கொஞ்சம் ஜில் என்று. உணவுப்பின்பு தயிர் வடை சாப்பிடும் போது அதன் மேலே கொஞ்சம் தேன் டாப்பிங்கஸ்….அசத்தும்…இன்னும் பிளவர் ஏத்தனுமா…. கொஞ்சம் ஏலக்காய் தூள்…பாதம் பருப்பை தூளாக மேலே தூவி ருசித்துப்பாருங்கள்…. ஆளை அசத்தும்… உடலுக்கும் நல்லது..குழந்தைகளுக்கு ஐஸ் கீரீம் போன்ற செயற்கை பொருட்களை கொடுப்பதை விட இப்படி போட்டுப்பாருங்க ஒரு கூக்ளி!!சாப்பிட்டால்…கிளீன் போல்டு!!

.....தயிர் வடையை பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம்... கொஞ்சம் சுருக்குவோம்..... ஒருவேளை இத்தொடர் விலாவாரியாக புத்தகமாக வெளி வரும் போது..இன்னும் ஆழமாக தயிர் வடையை ருசிப்போம்

...........

தொடரும்...

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP