சொல்லுதல் கடமை!

>> வியாழன், 19 ஜூலை, 2012


சொல்லுதல் கடமை!

சேலத்துக்கு மாம்பலம்,பூட்டுக்கு திண்டுக்கல்,மஞ்சலுக்கு ஈரோடு ...இந்த வரிசையில் மலை சரிவுக்கு உதகை என்றாகிவிட்டது.மழை என்றவுடன் உதையில் மலை சரிவு.இந்த கொண்டாடம் கொடைக்கானலுக்கும் தொடர்கிறது.இந்த நிலையில் தர்போது ஏர்காட்டிலும் நிலசரிவு என்பது சூழலியர்களை கவலை கொண்ட நிகழ்வு.
பெங்களுர்,ஆந்திர ,சென்னை பகுதி மக்களின் மலை  சுற்றலா பகுதி ஏர்காடு.இங்கு வருபவர்கள் பெரும்பாலோர் இவர்களே.10 சதவீதம் இயற்கை காடாகவும் 90 சதவீதம் தோட்ட பயிர்களாகவும் நிரம்பிய பகுதி. காபி, மிளகு, ஆரன்ஞ்ச் இங்கு விளையும் முக்கிய பயிர்கள். வருடம் முழுவதும் மிதமான கால நிலை இதன் சிறப்பு.சுற்றுலாவிற்கான கவர்ச்சியான சுற்றுலா இடங்கள் குறைவு.ஓய்வு எடுப்பத்றக்கும் குடும்பத்திர்க்கு நேரம் செல்விடதிர்க்கும் மிக சிறப்பான இடம்.சுற்றுலா இடங்களும் அனைத்தும் வெகு அருகிலே இருப்பதும் சிறப்பு.பயன செலவும் குறைவு.

ஏர்காடு என்றவுடன் பலருக்கும் நினைவு வருவது 'ஏழைகளின் ஊட்டி' என்பது.அது மலை ஏறி பலகாலம் ஆகிவிட்டது.இன்று அது கருப்பு பணத்தின் சொந்த நிலம்.தனியர்களின் சொர்க்கபுரி.ஒரு பக்கம் அதிகரிக்கும் தங்கும் விடுதிகள்,மறுபுறம் அதிகரிக்கும் தோட்டங்கள்.இதன் பாதிப்பு இப்பொழுது நிலச்சரிவு முலம் தலை காட்டியிருக்கிறது.காற்றில் கரைந்து போகிறது கட்டிட விதிமுறைகள்.இப்பொழுது எங்கு பாத்தாலும் தங்கும் விடுதிகள்.சுற்றுலாவாசிகளின் கழிவுகள் வெளியேற முறையான வசதிகள் இல்லை.இவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்படியே கிடக்கிறது நகரெங்கும்.

சேலத்தில் இருந்து சுமார் 30 கி.மீ துரத்தில் மேற்கு மலைத் தொடரில் உள்ள மலைவாஸ்தலம் ஏர்காடு.அதிகபட்ச உயரம் 5326.சேர்வராயன் மலை என்று அழைக்கப்படுகிறது.சேர்வராயன் என்பவர் தமிழகத்தின் பிறபகுதியில் இருந்து இங்கு குடியேரியவர்.இந்த பகுதி மலை மக்களின் தலைவனாக இருந்தாதால் இந்த மலையின் பெயராகி விட்டது.இப்பகுதி மக்களின் தெய்வமாகவும் போற்றப் படுகிறார்.
ஏர்காடின் பெயர் காரனமாக சொல்லும் 'ரி மற்றும் "காடு ' இருந்தால் என்பது தவறு என்கிறார் திரு .தியோடர்  பாஸ்கரன்.இந்த ஏரி செயற்கையாக அமைக்கப் பட்ட்து.அதற்க்கு முன்னே சேலம் கெஜட்டில் ஏர்காடு என்னும் பெயர் இருக்கிறது என்கிறார் .வரலாறு திருத்தப் படுவது காலத்தின் கடமை .

சேர்வராயன் மலை 385 சதுர மைலும்,67 கிரமங்களையும் உள்ளடக்கியது. மக்கள் தொகை சுமார் 40,000.இதில் 15.000 பழங்குடிகள் அடங்குவர்.இந்த பழங்குடிகள் பெரியன்னன் என்பவரின் வழித்தோன்றலகளாக கருதபடுகின்றனர். இவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர். இவர்களின் வாழ்வு முறைகளிலில் நடுகல் பழக்கம் இருந்துள்ளது.இவர்கள் வழிபட்டது கரி ராமன் என்னும் சேர்வராயன்.7ஆம் நூற்றாண்டு அளவில் இது நடந்திருக்கிறது என்று குறிப்புகள் தொ¢விக்கிறது.
ஏர்காடு 1790லில் தான் ஆங்கிலேயர் வசம் வந்தது.இதற்க்கு முன் பாண்டிய,பல்லவா ,ஆட்சியில் இருந்தது.14ம் நூற்றாண்டில் இது மாலிக் கப்பூரின் பிடிக்கு வந்து 55 வருடங்க்களுக்கு பிறகு இது விஜய நகர பேரரசின் கைக்கு மாறியது. 18 ம் நூற்றாண்டில் முதலில் இது ஹைதர் அலி, பின் திப்பு சுல்தான் என்று கைமாரி 1972 பிரிட்டிசாரின் கைக்கு வந்தது.

ஸ்காட்லாந்து காரான டேவிட் காக்பெர்ன் என்பவர் சேலத்தின் கலக்ட்ராக 1820 முத்ல் 1829 வரை இருந்தார்.இவர் தான் "ஏர்காட்டின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.இவர் தான் ஏர்காட்டில் காபி,பேரிக்காய் மற்றும் ஆப்பிள் பயிர்களை ஆரம்பித்து வைத்தவர். உதகை மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் இங்கு இருந்து தான் காபி இடமாறியது.
1827 லில் முதல் சர்வே சேர்வராயன் மலையில் எடுக்கப் பட்டுள்ளது.அப்போது இருந்த யானைகள் 19 ம் நூற்றாண்டில் இருதியில் அழிந்து விட்டதின் மர்மம் புரியவில்லை.!

1936 லில் இப்பகுதி சுமார் 1,25,000 ஏக்கர் ஜி.எப் பிஷ்ர் என்பவரால் சேலம் ஜமிந்தாரிடம் இருந்து வாங்கப்பட்டது.இவர் தான் முதல் மற்றும் ஒரே ஆங்கிலேயே ஜமிந்தார்.இப்பகுதி சேலனாடு,முத்தானாடு,மோகனாடு என்று பிரிக்கப்பட்டது.
1842லில் பட்டக்கார்ரின் மரணம் மலைவாழ் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.இது மீண்டும் ஆங்கிலேயரின் ஆட்சிப்பிடிக்கு வர முக்கியகாரனம்.இதை தொடர்ந்து 1866லில் டேவிட் அர்பந்து என்பவரால் இப்பகுதி காப்பி பயிருடவதற்க்காக ஆங்கிலேயருக்கு பிரித்து தரப்பட்டது.இவர்களின் வியபார வசதிக்காக பொம்மடி ரயில் நிலையம் உருவாக்கப் பட்டது.சூரமங்களம் ரயில் நிலையம் பல வருட்ங்க்களுக்கு பின் தான் வந்தது.
ஏர்காட்டில் ஆங்கிலேய்ருக்கு வாகனம் என்பது மாட்டுவண்டி தான்.மலைகளிலில் நடந்தும் 'டோலி' எனப்ப்டும் மனிதர்களால் தூக்கியும் பயன்ப்பட்டுள்ளனர்.1920லில் இதற்க்கான கூலி ஆறு ரூபாய்.!

சாலைபோடும் பணிகள்1872லில் தொடங்கப்பட்டு 1903லில் முடிவடைந்துள்ளது. போக்குவரத்து ஆரம்பித்தது 1920லில். காலை 8 மணி அளவில் சேலத்தில் தொடங்கும் மாட்டு வண்டி பயணம் மாலை 3 மணி அளவில் ஏர்காடு ஏரியை அடையும்.அங்கிருந்து 'டோலி' மூலம் அவர்களின் இருப்பிடத்தை அடைவார்கள்.
1925லில் சிட்னி டையர் லாரி சர்வீஸ் என்கிற நிருவனத்தால் பொது போக்குவரத்து ஆரம்பிக்கப் பட்டது.பெரியவர்களுக்கு மலை ஏறும்போது 6 ரூபாயும்.இறங்கும் போது 5 ரூபாயும் ,குழைந்தைகளுக்கு 3 ரூபாயும் சவாரி கட்டணம்.மின்சார வசதி 1929லில் மேட்டூர் அணை கட்டப்பட்ட்தின் விளைவாக 1930 லில் ஏர்காட்டிர்க்கு கிடைத்தது.


சுற்றுலா இன்று தேசத்தின் வளர்ச்சியின் அறிகுரி மட்டும் அன்று.அது நாட்டின் உள்ளடக்கிய பாரம்பரியம்,வரலாறு போன்ற்வற்றை பதுகாக்கும் கடைமையை வெளிக்காட்டும் அளவுகோள்.
சுற்றுலாவின் முக்கிய நோக்கம் புதியன அறிதல் மற்றும் காலத்தினை அறிதல் .ஆனால் இன்றைய நிலைமை மதுபான போத்தில்களில் சுற்றுலா கரைந்து போகிற்து.மறைக்கப்பட்ட வரலாறும் மறைந்து போன செய்திகளும் சொல்லப்பட வேண்டியவை மட்டும் அல்ல சொல்லுதல் கடைமை!!

2 பின்னூட்டங்கள்:

பெயரில்லா,  22 செப்டம்பர், 2012 அன்று PM 8:17  

நிறைய எழுத்துப் பிழைகள் தவிருங்கள் .தரம் இன்னும் உயரும். கட்டுரை அருமை. வரலாறு அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. என் கல்லூரி நாட்களில் சென்ற முதல் சுற்றுலா இடம் இது.

Unknown 22 செப்டம்பர், 2012 அன்று PM 8:26  

விரைவில் சரி செய்துவிடுகிறேன்

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP