லைப் ஆப் பை-ஒரு காட்டுயிர் –மனித உறவு திரைப்படம்

>> சனி, 24 நவம்பர், 2012





லைப் ஆப் பை-ஒரு காட்டுயிர் –மனித உறவு திரைப்படம்

கடந்த 100 ஆண்டுகளில் சாதி மத மேதமின்றி மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அசைக்க முடியாத சகதியாக இருப்பது திரைப்படம் என்னும் கலை.1967 முதல் 5 முதல்வர்களை தமிழகத்திற்கு தாரை வார்த்த அற்புதவிளக்கு.முதல் இருவர் வசனகர்த்தாக்கள் மற்ற மூவரும் நட்சத்திரங்கள்.திரைப்படத்தின் வலிமை அப்படி.
 
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெறவேண்டுமானால்,பெருவாரியான மக்களின் விருப்பங்களையும் ரசனைகளையும் எதிர்கொள்பவைகளாக இருக்கவேண்டும்..100 ஆண்டுகள் வ்ரலாற்றில் காட்டுயிர் குறித்த திரைப்படம் என்றால் விரல்களின் எண்ணிக்கையில் அடங்கிவிடும். விலங்குரிமை அமைபுகள் போன்ற பல அமைப்புகளின் கடும் கட்டுப்பாடுகளால் இத்த்கைய திரைப்படங்கள் விளிம்புநிலையில் உள்ளன என்றால் மிகையில்லை. அத்தகைய எண்ணத்திற்கு மருந்தளிக்கும் விதமாக தற்போது வந்திருக்கும் திரைப்படம் தான் “லைப் ஆப் பை 

இத்திரைப்படம் இரண்டு விதத்தில் முக்கிய கவனம் ஏற்படுத்துகிறது.ஒன்று கட்டுயிர் குறித்த திரைப்படம்  மற்றொன்று இது ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.கனடாவை சேர்ந்த யான் மார்டல் என்பவர் எழுதி 2001 லில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.புக்கர் பரிசு உட்பட பல விருதுகளை அள்ளியது.இக்கதை யார்ன் மார்டலின் சொந்தக் கதையும் அல்ல. பிரேசில் எழுத்தாளர் சிக்லியர் என்பவரின் “மேக்ஸ் அண்ட் தி கேட்ஸ்என்ற கதையின் பிரதிபலிப்பு.தற்ப்போது ஆங் லீ என்பவரின் இயக்கத்தில் டேவிட் மேகி என்பவரின் திரைக்கதையில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

படத்தின் மையக் கரு காட்டுயிருக்கும் மனிதருக்கும் உள்ள உறவு. அதாவது காட்டுயிருக்கு ஆன்மா உள்ளதா இல்லையா என்பது தான்.ஆனால் இதை சரியாக திரைபடமாக மாற்றினார்களா ...அந்த கருத்தை பார்வையாளரை வசிகரிக்கும் வகையில் தந்தார்களா என்பதை பார்ப்போம்.
திரைப்படத்தின் கதையை அப்படி விமர்சனம் என்ற போர்வையில் சொல்வது இதன் நோக்கம் அல்ல. ஆதலால் கதையை சொல்லப்போவது இல்லை
.
கதைப்படி ஒரு குறிப்பிட்ட காரணத்தால் ஒரு சிறுவனும் வங்காளப் புலியும் நடுக்கடலில் ஒரு படகில் உயிரை காப்பாற்றிக்கொள்ள தத்தளிக்கிறார்கள்.இரு உயிருக்கும் நடக்கும் அந்த சுவரசியமான சம்பவங்களின் கோர்வையே இத்திரைப்படம்.அந்த காட்சிகள் சாதரன திரையிலேயே அபாரமாக செய்திருக்கிறார்கள். நான் இந்தப்படத்தை 3 dயில் பார்க்க இயலவில்லை. உண்மையில் அந்த காட்சிகளை 3-Dயில் பார்க்க வாய்த்திருந்தால் இன்னும் அருமையாக் இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த குறிப்பிட்ட காட்சிகளின் மேக்கிங் வெகு சிறப்பு.. 

ஒரு வழியாக இருவரும் கரையை அடைந்த பிறகு அந்த சிறுவனும் புலியும் பிரியும் இடத்தில் ஒரு முக்கியமான விசயத்தை காட்சி வடிவில் பார்வையாளனுக்கு உணர்த்துகிறார்கள். நான் தியேட்டரில் பார்த்தவரை அது பார்வையாளனுக்கு சென்று சேரவில்லை. பெரும்பாலோர் எப்படா படம் முடியும் என்ற நிலையில் தியேட்டரில் கமெண்ட் அடித்துக்கொண்டே இருந்தார்கள். சிலர் படம் முடியும் முன்னே எழுந்து சென்றுவிட்டார்கள்.

படத்தை அத்துடன் முடித்து இருந்தால் உண்மையில் நன்றாக இருந்திருக்கும் .ஆனால் அதற்குப் பிறகும் சில சீன்களை வைத்துள்ளார்கள் . அது இந்த ப்டத்தின் போக்கையே மாற்றிவிடுவது மட்டும் அல்லாமல் கருப்பொருளை பார்வையாளனுக்கு புரியாமல் செய்து விடும் என்பதை எப்படி இவர்கள் இத்தனை செலவு செய்து எடுத்தபிறகும் யோசிக்காமல் விடுகிறார்கள் என்று இன்னும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!!.

இது என் பார்வை மட்டுமே. நீங்கள் படம் பார்க்க செல்லும் போது தியேட்டர் ஆப்ரேட்டர் இந்த சீன்களை கத்திரி போட்டு விடலாம்.கண்டிப்பாக குழந்தைகளுக்கு குதுகலமான திரைப்படம்.ஆனால் கண்டிப்பாக 3-D யில் பார்க்க அழைத்துச்செல்லுங்கள். அது முக்கியம்.
பெரும்பாலான விமர்சகர்கள் லைப் ஆப் பை திரப்படத்தை விஸுவல் ட்ரீட் என்கிறர்ர்கள். விஸூவல் ட்ரீட்க்கு சினிமா எடுக்க தேவையில்லை.சினிமாவின் மொழி என்பது வேறு. அது ஒரு கலை. ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கனுமே தவிர டெக்கனிக்கல் விசயங்களை மக்களிடம் கொண்டு செல்ல திரைப்ப்டம் அதற்கான மீடியம் இல்லை.

காட்டுயிர்களை பழக்குவது எனபது ஒருவகையில் மனித மணத்தின் 
வக்கிரம் . இது அதை ஒருவகையில் மனிதனுக்கு அடிமைப்படுத்தி, தான் மட்டுமே இந்த பூவுலகில் உய்ர்ந்தவன என்பதின் அடையாளம்.அதை இந்த படத்தில் காட்டிவிட்டு அதற்கு பிறகு மனிதனும் காட்டுயிர்களும் ஒரு சமரச ஒப்பந்ததில் வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழமுடியும் என்ற உண்மையை காட்சி படுத்தியிருப்பது ஆகச் சிறப்பு. ஆனால் இந்த விசயம் எத்தனை பார்வையாளர்களை சென்றடையும் என்பது கேள்விக்குரியே!!

இப்படி சில தத்துவார்த்த கேள்விகளை இந்த படம் முன்வைக்கிறது. ஆனால் அவை சாதரன பார்வையாளனை அந்த அளவுக்கு சிந்திக்க வைக்குமா எனபது கடலில் கரைத்த பெருங்காயம் கதை தான்.

இதுபோன்ற காட்டுயிர் மனித உறவுகள் குரித்த திரைப்படம் வரவேற்க்கப்படவேண்டியது. இந்த பூவுலகின் மிகப்பெரிய பிரச்சனையாய் உருவெடுத்து மனித குலத்தையே ஆட்டிப்படைத்திருக்கும் சூழல் குறித்த பிரச்சனையை முன்னிட்டு வந்திருப்பதால் இவை நம் வருங்கால் சந்ததினருக்கு அவசியம் காட்டப்பட வேண்டும். இத்திரைப்படம் காட்டுயிர் குறித்த சொல்லாடல்களை பெருமளவில் உருவாக்கும் போது சூழல் குறித்த அக்கறை இன்னும் மெருகேரும்..

ஆனால் குத்துப்பாட்டு ,மஞ்சல் பாட்டு ,ரத்த சிதறல்கள் ,என்று கற்பனையில் இருக்கும் தமிழக சம்கால ரசிகர்களுக்கு இப்ப்டம்

லைப் ஆப் பை...... ஓட்டை பை!!




Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP