தித்திக்கும் தீபாவளி

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


ஜப்பசி மாத்த்தில் தேய்பிறையின் 14 வது நாளில் கொண்டாடப்படும் தீபாவளிப்பண்டிகை “நரக சதுர்ஸி ஸ்நானம் “என்றும் அழைக்கப்படுகிறது.இதற்க்கு காரணம் அன்று சூரிய உதயத்திற்க்கு முன்பாக்வே மக்கள் எழுந்து குளித்துவிடுவதாகும்.இந்த நாளன்று நரகாசுரனை கிருஷ்னர் வதம் செய்த்தை கொண்டாடும் வித்த்தில் அமைந்துள்ளது.
தீபாவளி என்னும் சொல்லின் பொருள் வரிசையாக வைக்கப்பட்ட தீபங்கள் என்பதாகும்.இந்நாளில் கிராமங்களில் தீபங்களை ஏற்றி வைப்பது வழகமாக இருந்தது.காலபோக்கில் தீபங்களை ஏற்றுவது குறைந்து ,பட்டாசுகளை கொளுத்தி மகிழும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.அதிகாலையில் இருட்டு விலகுமுன்பே குழந்தைகளும் பெரியவர்களும் பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியை கொண்டாடுகின்றனர்.புத்தாடைகள் அணிவதும் ப்ட்டாசுகள் வெடிப்பதும் நன்மைகள் ஏற்படுவதன் அடையாளம் எனக் கருதப்படுவதால் மக்கள் புனித நீராடி புத்தாடைகள் அணிந்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
தீபாவளிக்கு அடுத்துவரும் நாள் தீபாவளி அமாவாசை தினமாகும்.அன்று மறைந்த பித்ருக்களை திருப்தி படுத்த மிகவும் உகந்த நாள் எனக் கருத்ப்படுவதால் எள்ளும் நீரும் கொண்டு உறியமுறையில் மந்திரங்களை கூறி தர்ப்பணம் செய்யப்படுகிறது.இதனை தகப்பனார் இல்லாதவர்கள் பிரதி அமாவாசை தினத்தன்றும் செய்கின்றனர்.முன்னோர்களை திருப்தி படுத்துதல் எனும் பொருள் கொண்ட பிதரு தர்ப்பணம் இது.உண்மையில் பிரதி தினம் நீரைப பயனபடுத்தி தேவர்கள்,ரிஷிகள் மற்றும் மறைந்த முன்னோர்களை திருப்திப் ப்டுத்தி அவர்களது ஆசிக்ளைப் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரபஞசத்தின் பிரும்மாண்டாமான ஆண்மீக சக்தி “அதிகாரிக புருஷர்கள்” என்றழைக்கப்படும் இறையறிதல் நிலையை அடைந்து விட்டவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக இந்துக்கள் ந்ம்புகின்றனர்.இவர்களே மனிதர்களின் ஆன்மீக வளர்ச்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பவர்கள்.இவர்கள் இச்சக்தியின் ஒரு பகுதியை மொத்த்திலிருந்து  விடுவித்து குறிப்பிட்ட விசேஷ தினங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் கூடும் பக்தர்கள் மீது பொழிவதாக கருதப்படுகிறது.அத்துடன் அவ்விடங்கள் ,பொருட்களின் உள்ளீர்க்கும் நிலை அனுகூலமாக இருக்கும்போது பொழியப்படும் சக்தியின் ஒரு பகுதியை ஏற்று சிறிதுகாலத்திற்க்கு தக்க வைத்துக் கொள்கின்றன.
எள், சனி அல்லது சாடர்கின் விருப்பத்திற்க்குகந்த விதையாகும். தீபாவளியன்று அதிகாலை பொழுதில்,பல கிரக்ங்களின் பல்வேறு நிலைகளின் காரணமாக சனியானது தனது விதையான எள்ளில் விசேஷ குணங்களை உட்புகுத்துவதாக இருக்க்கூடும்.என்வேதான் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணையை அன்று உச்சந்தலையில் தேய்த்து குளிப்பதால் மக்களுக்கு ஆரோக்கியமும் வளமையும் ஆன்மீக வளர்ச்சியும் ஏற்படும் என நம்ப்ப்படுகிறது.அத்துடன் எல்லா இடங்களிலுமுள்ள நீர் தீபாவளியன்று புனித இறைசக்தியை கொண்ட்தாக விளங்கிறது.தீபாவளியன்று அதிகாலை பொழுதில் சூரிய உதயத்திற்க்கு முன்னரே புனித நீராடுவது என்பது இயற்கை மூலிகைகளாலும் கங்கை ந்திக்கரையில் வாழும் பல உன்னத ரிஷிகள் தினசரி அதிகாலை பொழுதில் அதில் நீராடுவதற்க்கு சம்ம்.தீபாவளியன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்தும் போது முதலில் கேடபது”கங்கை ஸ்நானம் ஆயிற்றா?” என்பதாகும்.இந்த தினத்தில் பழம், வெற்றிலைபாக்கு ,சந்தனம்,குங்கும்ம் ஆகியவை விருந்தாளிகளுக்கு வழங்க்ப்படுவது ஒடு முக்கிய வழக்கமாகும்.சிலர் பணமும் கொடுப்பதுண்டு.இதே வழக்கம் புனித நதிகளில் நீராடுவோரால் அதன் முழு புண்ணிய பலனையும் அடைவதற்காக மேற்கொள்ளப்படுவது குறிப்பிட்த்தக்கது.இவ்வாறு தீபாவளியன்று எஅத இட்த்தில் நீராடினாலும் அது கங்கையில் புனித நீராடியதற்க்கு சம்மாக கருதப்படுகிரது.
தீபாவளியன்று துவங்கப்படும் ஏந்தக் காரியமும் சுபமாகவும் வெற்றிகரமாகவும் ந்டைபெறும் என்பதை இந்துக்கள் தீவிரமாக நம்புகின்றனர்.எனவே வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில் வாழும் வணிக மக்கள் தீபாவளியன்று லஷ்மி பூஜை செது விருந்தினரை அழைத்து அவர்களுக்கு இனிப்பும் பரிசுகளும் வழங்கி புதுக்கணக்கினை தொடங்குனின்ற்னர்.அவர்கள் இரவு முழுவதும் கண்விழித்து,சதுரங்கம் போன்ற அதிர்ஷ்ட்த்தை அடிப்படையாக கொண்ட விலையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.விருந்தாளிகளும் இவ்விளையாட்டுகளில் பந்தையம் கட்டி பங்கேற்க்கின்றனர்.பந்தய் விலையாட்டுகளில் ஜெய்ப்பவர்கள் ஒரு பகுதியை அவ்வப்போது ஏழைகளுக்கு என் ஒதுக்கி வைப்பதும் வழக்கம். .

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP