ஓரு நாள் கழிந்தது...

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


                     

                           இனிப்பு,குத்து பாடல்,தொலைக்காட்சி,தலைவர்களின் உரை,அயன் பாக்ஸ் உதவி,சமபந்தி ,பள்ளி குழந்தைகளின்  கலைநிகழ்ச்சி .சடங்காகி விட்டது சுதந்திர தினம்.சிந்திக்க வேண்டிய தினம் சிருத்து விட்டது .காலத்தில் அழியாத தினம் வெற்று கடைமையாகி விட்டது.சிட்டுக்குருவின் வீழ்ச்சியை போழ் வீழ்ந்துவிட்டது..அடுத்த தலைமுறை பற்றி அச்சம் இல்லாமல்  அறிவிப்பு செய்ய தலைவர்கள் மட்டும் அதிகம்.மேண்டிஸ் பூச்சியின் வேட்டையில் மாட்டிய இரையாய் மக்கள்.மக்களின் எதிர்கால வாழ்வை சிந்திக்க வேண்டிய தினத்தில் தன் இருப்பை தக்கவைக்க தலைவர்களுக்கு வரமாய் வாய்த்தது சுதந்திர தினம்.

                       மனித குலத்தின் மிகப்பொ¢ய அச்சுருத்தும் காரனி எது ?உங்கள் பதில் பயங்கரவாதம் என்றால் சத்தமில்லாமல் குப்பற படுத்து தூங்குங்கள் அல்லது இமய மலைக்கு செல்லாம்.உலகமயமாக்கல் என்னும் பணம் பன்னும் உத்தியை  உலகம் முழுக்க ஊடுரவிய மேலைநாடுகள் அடிவைத்தில் அடித்துக் கொண்டு அழுகின்றன சூழலியல் குறித்து.இங்கே வந்த வரை லாபம் என்று வனத்தை வாடகைகு விட்டாகி விட்டது.மரத்து போன இதயங்களின் கொள்கை மரக்கொள்ளை .யாசகம் செய்ய யானை வேட்டை.சிக்கும் வரை லாபம் என்று சிறுத்தை வேட்டை.வேண்டிய மட்டும் வேங்கை வேட்டை.வரம்பில்லாத வனக் கொள்ளையால் இயற்கை சீற்றங்கள்.பாதிப்பு என்னவோ சாதரன மக்களுக்குத் தான்.

                                                                                                                                                              வருடம்தோரும் தவறாமல் ஊட்டிக்கு வரும் அழையா விருந்தாளி மழைச்சா¢வு.கூடவே அழைத்து செல்லும் பல உயிர்களுக்கு யார் பொறுப்பு.தடுக்க என்ன செய்தோம்?தொடர்ந்து தேயிலையை வளர்த்து வனத்தை அழித்து மலையை கரைத்தோம்.பட்டும் திருந்த்தாத, பணம் செய்யும்  பாணி.காற்றில் கரையும் கர்ப்பூரம் போல் ஆகிவிட்டது அந்த கருப்பு நிகழ்வு.வீட்டுக்கு ஒரு குழந்தை மாறி மனிதர்க்கு ஒரு மரம் .மரம் வனம் ஆகாது மனிதா!ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளிலில் உருவான அபூர்வம் ,வனம்.மனிதர்களின் ஜீவ நாடி. காரணம் ஏட்டில் இருக்க வேண்டிய சூழல் கல்வி, இருட்டில் இருக்கிறது.அடித்தளம் போட மறந்த மெத்தனம்.

                    சுரண்டப் படும் வனத்தின் விளைவு  வனவிலங்குக்ளின் உணவு சங்கிலி துண்டாடப் படுகிறது.விளைவு வெளியேரும் விலங்கினால் மனித வன விலங்கு மோதல்.இதற்க்கு அடிப்படை காரனம் மனிதனே.ஆனால் சொல்லுவது என்னவோ "விலங்குகளின் அட்டகாசம்".கோவையில் ரெயிலில் பலியான யானைகளின் என்னிக்கை 6.இரு நாள் முன் கூட் ஒன்று.பத்தி¡¢க்கை படத்திற்க்கு முகம் கான்பித்தவர்கலை கான்வில்லை.!   வன அழிவதால் அரசுக்கு மட்டும் கோடிக்கனக்கில் இழப்பு.மனிதர்களுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பு.ஆறுகள் வறண்டு கானமல் போய்விடும்.உணவுப்பஞ்சம்,கொள்ளை நோய்கள் இப்படிப் பல.ஊருக்கு புத்தக திருவிழாக்கள் கலை கட்டும் காலம் இது.ஆனால் கடந்த நூற்றாண்டில் நாம் பெற்ற சூழலியல் எழத்தாளர்கள் இருவர் தான்.ம.கிருஷ்னனும் தியோடர் பாஸ்கரும்.இது தான் தமிழ்சூழல்.

                                                                  கடந்த வாரம் ஒ¡¢சாவில் 14 யானைகள் வேட்டையால் கொல்லப்பட்டது.அமைச்சர் அறிவிக்கிறார் பிஸ்த்த பிஸ்கட்டின் ருசியில் கரைந்து விடும் "கமிட்டி"யை.வனத்தை காக்க வேண்டிய வனத்துறை பணத்துறையானதின் விளைவு.சிங்கம் சிங்கிளா தான் வரும்னு தவறா சொன்னார் சினிமா ஸ்டார்.ஆனா போகும் போது டபுளா தான் போகும்னாங்க வண்டலுர் மிருகாட்சி சாலையினர்.மும்பையில் கப்பல்கள் மோதியது அன்னிய நாட்டு சதியல்ல  என்று அமைதியாய் அறிவிக்கிராற் அமைச்சர். நோய்க்கு தேவை மருந்தே தவிர மருந்துசீட்டு அல்ல.  

                                                                  காஷ்மீ¡¢ன் லே மேக வெடிப்பின் ஈரம் காயவில்லை.அந்த மனித உள்ளங்களின் ரணம் ஆறாது.மாத்தி மாத்தி பார்வையிடும் தலைவர்கள் மறந்துபோனது.சுதந்திர தினம் சிந்திக்க வெண்டிய நாள்.நாளைய சமுகத்தை பற்றி முடிவெடுக்கும் நன்னாள்.அதிகா¢த்து வரும் மனநல மருத்துவர்கள் தேசத்தின் உன்மையின் உரைகல்.ஒரு காலில் நிக்கும் கொக்கு போல நாம் இருக்கிறோம்.உறக்கம் கலைய வேண்டிய நேரம்.ஒரு நாள் கழிந்தது என்றில்லாமல் கழிவுகளை அகற்றி விடியலுக்கு வித்திடுவோம். ஆம்,விடியல் என்பது விடிவதில் இல்லை-நீ விழிப்பதில் இருக்கிறது.

                                                                                                                                                      
                     

                                                                                                                               

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP