அவன் காட்டை வென்றான்.... குருநாவல்

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


அவன் காட்டை வென்றான்.... குருநாவல்



எனக்கு நள தமயந்திகளின் கதை ரொம்ப பிடிக்கும் அதில் தேவர்கள் நால்வரின் வரத்தால் நளன் தமயந்தியின் அந்தப்புரத்திற்க்கு வருகிறான்.அவன் யார் கண்ணிலும் தெரியமாட்டான்.ஆனால் அவனுக்கு அனைத்தும் தென்படுகிறது.இதே போல் எனக்கும் விருப்பமுண்டு.இது நாவலாசிரியருக்கு  மட்டுமே சாத்தியப்படும்.ஒரு நல்ல நாவலாசிரியர் வாசகனுக்கு தன் இறக்கைகளைத் தந்து காடுகள் ,மலைகள், பாலவன்ங்களிடையே அழைத்து செல்ல முடியும்.
வாழ்க்கை முரன்பாட்டையும் ,போரையும் த்த்துவத்தையும் ஒரு விருவுரையாளர் போல் த்த்துவ ஞானி போல் பற்ற்ற்று உறுதியுடன் சொலவது “அவன் காட்டை வென்றான்” குரு நாவல்.படித்த பின்னர் வாழ்கை நீதி இப்படி இருக்கிறதா, இவ்வளவு கொடுமையானதாக இருக்கிறதா என நாம் திடுக்கிட்டு போவோம்!!

இந்த படைப்பில் மனிதப் பாத்திரம் ஒன்றுதான். அந்தப் பாத்திரத்திற்க்கும் பெயரில்லை. ‘கிழவன்” என்ற பெயர் மட்டுமே.!! அவன் இருப்பிடம் எந்த ஊரோ தெரியாது. இதிலுள்ள மற்ற பாத்திரங்கள் விலங்குகள்,மலைகள்,மடுக்கள்,நீரோடைகள்,பள்ளத்தாக்குகள்,கல மண்!!

கதை முழுவதும் கிழவனை சுற்றியே நடக்கிறது.இதில் முக்கிய பாத்திரம் கிழவன் என்றால் மனிதல்லாத முக்கியப் பாத்திரம் தாய்ப்பன்றி.இப்படைப்பு முழுவதும் கிழவனும் தாய்பன்றியும் சம்பந்தப்பட்டதே .காடே இக்கிழவனின் விளையாட்டுத்தளம்.மிருகங்களும் செடிகொடிகளுமே கிழவனின் நன்பர்கள்.அபயங்கள் அவனுக்கு வெல்லம் போல! இந்த உலக்மே தன் காலகளுக்கு இடையில் இருப்பது போலவும் தான் நினைத்தால் தன் கல்தூண்களைப் போன்ற காலகளால் இந்த உலகையே தூளாக்கிட முடியும் என்ற உறுதியும் அவனுடையது.
ஒரு நூலைப் படித்த பிறகு வாசகனின் எண்ணங்களில் கருத்துகளில் மாற்றத்தை தெரிவிக்கும் அசைவுகள் தோன்ற வேண்டும். நூல் படித்த அனுபவம் பெற்ற பிறகு அந்த நபர் மாற வேண்டும்.இந்த நூலைப்படித்த பிரகு அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

காட்டையும் அதன் விசூரூபத்தையும் நமக்கு காட்டும் அற்புதமான படைப்பு!!

வெளீயீடு:நேஷன்ல் புக ட்ரஸ்ட்,எழுதியவர்:முனைவர். கேசவரெட்டி, தமிழில்:ஏ.ஜி.எத்திராஜிலு.விலை ரூ.25/-

4 பின்னூட்டங்கள்:

Avineni Bhaskar / అవినేని భాస్కర్ / அவினேனி பாஸ்கர் 12 பிப்ரவரி, 2013 அன்று PM 3:50  

இந்த புத்தகத்தை தெலுங்கிலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரேயொரு பாத்திரத்தின் வாயிலாக வாசகனின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார் ஆசிரியர்.

அருமையான புதினம்!

Unknown 14 பிப்ரவரி, 2013 அன்று PM 12:18  

மிக்க மகிழ்ச்சி உங்கள் பதில் கண்டு.

Unknown 29 ஜனவரி, 2015 அன்று PM 1:41  

Sir, இந்த புத்தகம் "அவன் காட்டை வென்றான்" தெலுங்கு. ஆர் கேசவ ரெட்டி, தமிழாக்கம் எதிராஜுலுசென்னையில் எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா..? pls

Unknown 29 ஜனவரி, 2015 அன்று PM 1:44  

Sir, அவன் காட்டை வென்றான், தமிழாக்கம் எதிராஜுலு சென்னையில் எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா..? தங்களிடம் இருந்தால் கொடுத்துதவ முடியுமா...?? pls,8344460212

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP