மீறலின் புனித பிரதி- அம்மா வந்தாள்...

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


வாசித்து மாளாத தமிழ் படைப்புகளின் வரிசையில் ஒன்று தி.ஜானகிராமனின் “அம்மா வந்தாள்”

பெண் வாழும் சூழ்நிலையில் வெறும் பிள்ளைபெறும் கருவியாகவும் வீட்டைப் பராமரிக்கும் தாதியாகவும் கணவ்னுக்கு சயன் சுகம் தரும் சரீராமாகவும் குருக்கிப்போக விரும்பாமல் தனது பாலூணர்வைத் தனக்குத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டு தேடிப்பார்க்கும் வேடகை கொண்டவளாக இருப்பதை களமாக கொண்ட ப்டைப்புதான் “அம்மா வந்தாள்”. தி.ஜானகிராமன் எழுதிய நாவலின் முதல் பதிப்பு 1966 இல் வெளிவந்தது.ஒரு நாவலாகவே கச்சித்மான வடிவத்தில் எழுதப்பட்ட படைப்பு.
நுட்பமான விவரங்களால் பின்னப்பட்ட தளம் இந்த நாவலின் வலு.ஒவ்வொரு வாசிப்பிலும் அந்த்த் தளங்கள் வெளிப்படுவது வாசிப்பின் தீவிரத்தை கூட்டுக்கிறது.

தாய் என்ற நிலையில் போற்றப்படும் அலங்காரத்தின்  “பிறழ் உறவே” நாவலின் மையப் பிரச்சனை..அவள் பிற ஆடவனின் உறவில் தோய்ந்திருப்பதையும் அந்த உறவின் சாட்சியங்களாக மூன்று பிள்ளைகளைப் பெற்றிருப்பதையும்  கனவ்ர் தண்டபாணி அறிந்திருக்கிறார்.ஆனால் அவரால் அதை “ என்ன பண்றது?” என்ற மழுங்கிய கேள்வியுடன் சகித்துக்கொள்ளத்தான் முடிகிறது.

அலங்காரத்தை உந்துவது காம்ம் மட்டுமல்ல்.தன் உடல்மீதான உரிமையைத் தானே நிர்ணயிக்கும் உரிமை.அதை அவளே எடுத்துக்கொள்கிறாள்.

”அம்மா வந்தாளை” மீறலின் புனிதப் பிரதியாக்க் கொண்டாடலாம்.சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபை கேள்விக்குட்படுத்துகிறது. நாவலின் மையம்..
ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாக சொல்வதில் தி.ஜான்கிராமனுக்கு நிகர் அவரே தான்

தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பு..

வெளியீடு.காலச்சுவடு.விலை.ரூ.130

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP