தலைகீழ் விகிதங்கள்.

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


ஒவ்வொரு வாசகனும் அவனது வாசக அனுபவத்தில் எதிர்கொள்ளும் ஒரு வித இறுக்கத்தின் போது அல்லது சலிப்பின் போது அவன் தன் வாசக நிலையைப் புதுப்பித்துக்கொள்ள  செவ்வியல் ஆக்கங்களே கைகொடுக்கின்றன.சமகால இலக்கிய வடிவங்களோ ஆக்கங்களோ அவனது வாசக அனுபவத்திற்க்கு ருசிக்காதபோது அவன் மனம் இயலபாகவே செவ்வியல் ஆக்கங்களை நாடுகிறது.ஒரு வகையில் ஒரு மொழியின் இலக்கியத் தடத்தை அல்லது போக்கை இத்தகையச் சுழற்சிகளே தீர்மாணிக்கின்றன.

மனிதனுக்கு எப்போதும் தனது முதல் படைப்பு என்பது மிக முக்கியமானது.அதன் மேல் எப்போதும் அவனுக்கு ஒர் காதலுண்டு.இதை நமது இல்லங்களில் கூட காணலாம். தலைச்சான் பிள்ளைக்கு எப்போதும் பெற்றோரிடைய தனித்த ஒர் ஈர்ப்பு இருப்பதை.அவ்வகையில் படைப்பாளிக்கும் சாலப் பெருந்து.உலகிற்க்கு தன்னை முதலில் வெளிக்காட்டிய படைப்பு என்பதால் அதில் தனித்த காதல் அவனுக்கும் உண்டு.

தமிழில் மிக முக்கியமான எழுத்தாளமைகளில் குறிப்பிடத்தக்கவர் க.சுப்பரமணியம் என்னும் நாஞ்சில் நாட்டில் பிறந்த நாஞ்சில் நாடன். இவரின் மொழி ஆளுமை மலைக்க வைக்ககூடியது.இவரின் கட்டூரைகள் முதலில் அறிமுகமாயின எனக்கு. முதல் சந்திப்பிலேயே பற்றிக்கொள்ளும் காதல் போல முதல் வாசிப்பிலேயே இவரின் வாசகனானேன்.அவரின் முதல் நாவல் தான் தலைகீழ் விகிதங்கள்.(1977)

மனிதனின் அகவேட்கைக்கும் யதார்த்ததுக்குமான இடைவெளிகளை சமன்செய்வதே வாழ்வின் சவால். 70 களில் கிராமப்புற பட்டதாரி இளைஞர்கள் உறவுகள் சார்ந்தும் நிலம் சார்ந்தும் எழுந்த நிர்பந்தங்களுக்குத் தமது சுயத்தை இழக்க நேரிட்டது.ஆனால் இன்றைய கணினியுக இளைஞ்ரக்ள் தனி அடையாளங்களை இழந்து பொது அடையாளங்களுக்குள் தங்களது இருப்பை பத்திரப்படுத்திகொள்கினறனர்.கூடவே நவீன வாழ்வின் அபத்தங்களையும் அதன் இலக்கறியா பயணங்களையும்.

நாவலில் திருமனமான ஒரு இருபத்து மூன்று வயதான இளைஞனின் மன அவசங்களை மட்டுமே பிரதானப்படுத்தியிருக்கிறார்.இயல்பான அங்கதம் ,தீர்க்கமான நாஞ்சில் வட்டார மொழி,சமையல் மனம்,கொதிக்கும் சமூக விமர்சனங்கள் என்று நாஞ்சில் நாடனின் தனிப்பட்ட அடையாளங்கள் அவரது முதல் நாவலிலேயே இயலபாக உறுப்பெற்றுள்ளன.

நாவலில் நான் உணரும் தலைகீழ் விகிதங்கள் இத்தனை காலத்துக்குப் பிறகும் பெரிதாய் ஒன்றும் மாறிப்போய் விடவில்லை என்ற கசப்பான ,மரத்துப்போன யதார்த்தமே இந்த நாவலின் இன்றைய தனமையை அடிக்கோடிட்டு, காலம் கடந்தும் செவ்வியல் படைப்பாக நிற்கிறது.

ஒவ்வொரு மனிதர்களும் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP