விடியலை நோக்கி...!

>> வெள்ளி, 20 ஜூலை, 2012



எழுத்து:செ.பிரதீப்

“தயவுசெய்து இந்த குரங்கு தொல்லையில் இருந்து காப்பாத்துங்க?..குன்னுரை சேர்ந்த ரோஸ் மேரியின் குரலுக்கு எப்படி பதில் சொல்வது?? “இந்த யானைகளிடம் இருந்து எங்களை காப்பாத்துங்க”  ராமசாமி சத்தியமங்களம் இவரின் கேள்விக்கும் பதில் உண்டா ??
காட்டுயிர் –மனித மோதல், தமிழ்நாட்டில் மேற்கு மலைத்தொடரை ஒட்டியுள்ள ஊர்களில் எழும் குரல்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.இவைகளுக்கு நிரந்திரமான முடிவு இல்லையா?தவிர்க்க தான் என்ன வழி என்று பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறது வனத்துறை.
காட்டுயிர் –மனிதமோதலில் செய்திகளில் அடிபடுவது  குரங்கு,மயில் ,காட்டுப்பன்றி மற்றும் யானை. இதில் யானையை தவிர மற்றவையால் உயிர் இழப்போ அல்லது பெரிய அளவு பொருள் இழப்போ ஏற்படுவதில்லை.
குரங்கு பெரும்பாலும் ஊட்டி குன்னுர் பகுதிகளில் அதிக அளவு வீட்டுப் பகுதியில் காணப்படுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை ஆள் இல்லாத சமயத்தில் கதவுகள் ,,ஜன்னல்கள் திறந்திருக்கும் வேளையில் உணவுப் பொருட்களில் கைவைக்கின்றன. மற்றபடி வேறு எதுவும் இதனால் ஆபத்து ஏற்படுவதில்லை.
குரங்குகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் வருவதற்க்கு முக்கிய காரணம் வனப்பகுதியில் பழமரங்கள் குறைந்தது தான். கொய்யா ,பேரிக்கா ,ஆரஞ்சு போன்ற மரங்கள் இன்று இப்பகுதியில் பெருமளவு குறைந்துவிட்ட்து .உணவுக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டதும் நகர்பகுதியில் வந்த இவைகள் சுற்றுளாவாசிகள் கொடுத்த உனவுப் பொருட்களால் அங்கயே தங்கிவிட்டது. இக்கொடுமைக்கு முதல் காரணம் சுற்றுளாவாசிகள். இதை முதலில் கட்டுக்குள் கொண்டுவந்தாலே இப்பிரச்சனை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிடும். மேலும் வனத்துறை யூக்கலிப்படஸ் மரங்களை வனப்பகுதியில் வளர்ப்பதற்கு பதில் பழமரங்களை நடலாம். பிரச்சனை தானாக முடிவு வந்துவிடும்
மயில்பிரச்சனை குறிப்பாக அதிகம் இருப்பது கொங்குப்பகுதியில் .இவை விவாசாய நிலத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன என்பது குற்றச்சாட்டு. இவை வாழும் இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாலும்  உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் இவை விவசாய நிலங்களில் உட்புகுகின்றன.இதனால் மயில்களுக்கு விஷம்வைத்து கொல்லப்படும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன் .இப்பகுதியில் சோளம் ,கம்பு போன்ற பயிர்களை தவிர்ப்பதன் மூலம் இப்பிரச்சனையை ஒரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரலாம்.மேலும் இப்பகுதியில் மயிலகளுக்கான சரணாலாயம் அமைப்பதன் மூலம் மயில்களை காப்பதோடு மட்டும் இல்லாமல் இப்பகுதி மக்களுக்கு ஒர் வருமானத்திற்கும் வழி செய்யலாம். இம்மக்களின்  நீண்டகால கோரிக்கை இது.
காட்டுபன்றி பிரச்சனை அதிகளவில் நடைபெறுவது மேற்குமலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ள கோவை புறநகர் மற்றும் சத்தியமங்களம் பகுதி. இவை குறிப்பாக விவசாய நிலங்களில் பயிர்களின் கிழங்கை சேதப்படுத்துகின்றன என்பதே பொதுவான் குற்றச்சாட்டு. இப்பகுதியில் பெரும்பாலோர் மின்சாரவேலி அமைத்துள்ளனர். இவை இப்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள் அபகுதியில் மஞ்சள் ,கிழங்கு வகைகளை பயிர் செய்வதை தவிர்க்கலாம்.இதுதவிர மின்வேலிக்கு இரவில் அதிக அழுத்தமுள்ள மின்சாரம் பாய்ச்சுவதால் இதில் சிக்கி இறக்கும் காட்டுப்பன்றிகள் சத்தமில்லாமல் அகற்றப்படுகிறது இவற்றின் இனப்பெருக்க திறன். அதிகமாக இருப்பதால் வனத்துறையும் கண்டும்காணமல் இருக்கிறது.
நாள்தோறும் செய்தியில் அடிபடுகிறது யானை-மனித மோதல். இதில் உயிர்சேதம் ஏற்படுவது வருந்த தக்கதே. ஆனால் உள் நுழைந்தால் மனிதர்களின் அதிகபடச அத்துமீறல் நன்குபுரியும்.
யானைகளின் பாதைகளை ஆக்கிரமித்து  விவசாய நிலங்கள். குடியிறுப்புகள் என்று மனிதர்கள் விளையாடியது அதிகம். யானைகளின் பாதைகளை மனிதர்கள் அபகரித்துவிட்டு அவை அத்துமீறுகின்றன என்பது எவ்வகையில் நியாயம்? கிருஷ்ணகிரி பகுதியில் புகுந்த யானைகள் வெளியேற வழியில்லாமல் கடந்த இருமாதங்களாக சேலம் ,ஏர்காடு என்று அகதிகளாக சுற்றித்திரிகின்ற்ன.இந்நிலையில் அந்த யானைகளை வனத்துறையினர் செய்யும் கொடுரூம் உச்சம் .பட்டாசுகளை பற்றவைத்து அதன் மேல் எறிந்தும் அதனை தொடர்ந்து ஓரிட்த்தில் நிலையில்லாமல் துரத்தி கொடுமை புரிந்துள்ளனர். கருவுற்று இருந்த யானை கூட என்று பாரமல் இவர்கள் செய்த கொடுமையால் அந்த யானை குட்டியை ஈன்றதும் குட்டி இறந்த்து மட்டும் அல்லாமல் தாயும் மரித்துப்போனது.இதுமட்டும் அல்லாமல் அந்த யானை குழுவில் இருந்த ஆண் யானையின் ஒரு தந்த்த்தையும் காணவில்லையாம். என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லையாம் வனத்துறைக்கு???அந்தோ பரிதாபம்!!இந்த கதையை கேட்டு சேலமே சிரித்தது தனிக்கதை!
வன ஆக்கிரமிப்பை அகற்றினாலே பெரும்பாலான யானை-மனித மோதலை தவிர்த்துவிடலாம்.வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழை ,கரும்பு போன்ற பயிர்களை வேளான் செய்யாமல் மாற்றுப் பயிர்களில் விவசாயிகள் கவனம் செலுத்தினாலே இப்பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.
நல்ல மனிதனைக் கடித்த பாம்பு நிச்சயம் நரகத்துக்குத்தான் போகும் என்பது மனம் ஆறுதல் கொள்ளக்கூடிய பிரமை.கடிபட்ட மனிதன் இன்னும் சற்று நேரத்தில் சாகப் போகிறான் என்பது தைரியமாய் எதிர் கொள்ளவேண்டிய புரிதல்.
அர்த்தமற்றவை நிறைந்த அவையில் உண்மையானதைத தேட வேண்டியிருக்கிறது. அர்த்தமற்றதும் உண்மையானது போலத்தான் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது.
கள்ளியிலும் சோறு! கத்தாழையிலும் சோறு!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP